அகில உலக சுப்பர் ஸ்டார் ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நேற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் எது மாறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறா... குறிப்பாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள், பதவியேற்பு முறைகள், ஆட்சிக்கான வரம்புகளில் எந்தக் கொம்பன் வந்தாலும் மாற்றங்களைத் தன் இஷ்டப்படி செய்ய முடியாது. மூன்றில் இரண்டு என்ன மூன்றில் மூன்று வந்தாலும் இப்படி யாப்பு, சட்டவாக்கங்களில் ...
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். சர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த ...
கண்ணுக்குள் உன்னை வைத்து இமைகளை மூடுகிறேன், என் இரவின் கனாக்களிலும் நீ வர வேண்டும் என்று.. இதயத்துக்குள் நினைவுகளாய் நிரம்பிவிட்ட உன் ஞாபகங்கள், அத்துணை அணுக்களிலும் இரத்த ஓட்டமாய் கலந்து.. என் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே பிரதிபலிக்கிறது. அழகிய நினைவுகளும் நீ. அழகிய நிகழ்வுகளும் நீ. அழகிய என் நிதர்சனமும் நீ. என் காதோடு உன் குரல் கைபேசி வழியே ஊடுருவ.. உலகையே மறந்து போகிறேன், உனக்குள் என்னை புதைத்தவனாய். வழிகளில் விழி வருடி நீ செல்கின்ற நேரம்.. உன் மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன், ...
சிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்? இரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான். ஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக. மணிகண்டன் ...
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (Bukahari Volume:6 Book:78)இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று. இதை ...
சில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும். இயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை. இந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம ...
Cinema is needed to help us reflect on life. An interview with director Asoka Handagama about his latest movie Ini Avan (Him, Here, After / இனி அவன்). Charles and Jenny would sit opposite each other in the shade of the porch outside the kitchen, their legs spread out in front of them, bare feet touching. The food would be in ...
இசைப்புயலுக்கு எனதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். (ஒன்பதாம் திகதி இன்றைத் தலைகீழாக ஆறாக எண்ணிவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள்) எங்களோடு சேர்ந்து வளர்ந்த ஒருவர் இப்போது உலகத்தின் உச்சங்களில் ஒருவராக இருக்கும்போது வரும் ஒரு உரிமை கலந்த பெருமை எனக்கு எப்போதும் ரஹ்மானில் உள்ளது. அவர் இன்னும் எம்மவராகவே இருப்பதாலும்.... அவரது முதல் பாடல் வெளிவந்த நாளில் இருந்து படிப்படியான வளர்ச்சியும், ...
காதலே யார் நீ?ஆணையும், பெண்ணையும் இணைக்கும் பாலமா?அல்லது அவர்களைப் பிடித்த சாபமா?வாழ்வில் ஒளியூடுகிறாய் சில நேரம்.. வாழ்கையை எரிக்கிறாய் பல நேரம்.. மாறி மாறி உருவெடுக்கிராயே.. பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?உன்னை வெறுத்தவர்கள் மணமேடையில் உறவாட, உன்னை அணைத்தவர்கள் பின மேடையில் வாடுவதா??உன் நியாயம் புரியாப் புதிராகிறதே..கனவுக்குள் கற்கண்டாய் இருக்கிறாய். பல கவிதைக்கும் கருவாய் இருக்கிறாய். செல்லாக் காசுகளையும் தங்கமாக்கி ஜொலிக்கிறாய். தோழனாய் சில நேரம் தோள் கொடுக்கிறாய்.கல்லறைக்குள் முதற் கல்லாய் இருக்கிறாய். கண
கடந்த வருடம் தந்த இனிய அனுபவங்களோடு இந்த வருடமும் வெற்றிக்கதைகள் தொடரவும் சாதனைகள் குவியவும் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது குளிர்காலம். விண்வெளிக்கு செல்வது போன்று, உடையணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும். மழைபெய்யும் மத்தியானத்தில் போர்வைக்குள் போர்த்தி கிடந்திருப்பது எப்படியோ, பனிவிழும் இரவில் மெளனமாய், பனி விழும் மௌனத்தைக் கேட்பதும் அற்புதம் தான். புகைகள் நிரம்பிய கனவு. பூராய் மழைபொழியும் காட்சி. தடுக்கிவிழுவதாய் நெஞ்சு கணத்து திடுக்கிட்டு நினைவுக்கு வரும் கனவின் விளிம்பு. மறந்து போகும் முக்கியமான கனவின் முகவரி. ஞ
பிறந்திருக்கும் இந்த 2013ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்லதைக் கொண்டுவரட்டும்; நிம்மதி, சந்தோசம், சமாதானத்தைக் கொண்டுவரட்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று ஒரு சந்தோசம், உற்சாகம், நிம்மதி எல்லாவற்றையும் உணர்ந்தேன்... கடந்த வருடங்கள் போலவே நண்பர்கள், நேயர்களின் வாழ்த்துக்கள், இரு மாத கால ஓய்வுக்கு இனி வரும் சில நாட்களில் விடை கொடுத்து மீண்டும் நேரமேயில்லாமல் பம்பரமாக ஓடக் கூடிய காலம் ...
கும்கி மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம். காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன. ஒரு படத்தின் அத்தனை ...
இன்று காலையிலே சற்றுத் தாமதமாகத் துயில் எழுந்தது மூன்று மரணச் செய்திகளுடன்... இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் உபாலி செல்வசேகரன் டெல்லியில் ஆறு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு பல நாட்களாக வாழ்க்கைக்காகப் போராடி வந்த டெல்லி மாணவி கிரிக்கெட்டின் ஆங்கில நேர்முக வர்ணனையின் ஆளுமையாக விளங்கிய டோனி கிரெய்க் இந்த மூன்று மரணங்களுமே வெவ்வேறு தாக்கங்களை எனது மனதில் ஏற்படுத்தியவை; பல்வேறு தடங்களை ...
கொஞ்சம் (என்ன கொஞ்சம் முழுமையாகவே என்பது தான் பொருத்தம் என்று நீங்கள் சொன்னா சரிதானுங்கோ) ஓய்வாக இருப்பதால் சில தெரிவு செய்யப்பட புதிய படங்களை - திரையரங்குக்கு வராதவற்றை - வீட்டிலே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த பின்பு மீண்டும் திரையரங்கில் பார்த்த படங்கள் கும்கி & பிட்சா. இவை வெளிவந்து சில பல நாட்கள் ஆனதால் விமர்சனம் என்று ...
என் கண்கள் பார்க்க வெறுத்தது இவன் முகமே..ஒரு கொடூரச் சம்பவம் சுமந்து பதை பதைக்கிறது என் மனமே..சிந்தனைச் செல்களுக்குள் ஒரு சோகக் கீற்று துளிர் விடுகிறது..நானும்,அவனும் நல்ல நண்பர்கள் தான். அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..அப்பா.. அறிமுகப்படுத்தியவன் இவனோடு விளையாட விலைகள் இல்லை.எனக்கு காதலைக் காட்டியவன். என் காதலியாய், அவளை அவனுக்குத்தான் முதலில் காட்டினேன்.இன்று.. பல கோடி உயிர்களைப் பறித்தவன் இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு தெரியவில்லை..அன்றில் இருந்து இவனோடு உறவாடுவதில்லை நான்...அதன் பின்பு இன்று தான் என்
சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு... இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு... இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன். உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் ...
V for Vendetta படத்தை நண்பர் ஒருவரின் கடுமையான சிபாரிசு காரணமாக பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். இரும்புக்கரம் கொண்டு மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் அரசாங்கத்துக்கு எதிராக முகமூடி அணிந்த ஒருவன் புரட்சி செய்கிறான் என்பதை காட்டியிருப்பார்கள். என்னதான் வழமையான உப்புமா கதை மாதிரியாக இருந்தாலும் வழமையாக பயணிக்கும் பாதைகளில் அல்லாமல் வெவ்வேறான பாதைகளில் கதை பயணிக்கும். குறிப்பாக படத்தின் கதாநாயகன் V, அதில் வரும் பெண்ணை ஒரு முழுமையான போராளியாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள்தான் படத்த
இந்த டிசம்பர் 21இல் உலகம் அழியாவிட்டாலும், இது இன்னுமொரு Winter Solstice நாளாக இருக்கும். Winter Solstice என்பது நண்பகல் நேரத்தில் சூரியன் பூமியின் 0 பாகை அகலாங்கிலிருந்து மிகக் குறைந்த தூரத்திலிருக்கும் அகலாங்குக்கு மேலே வருதல். தெளிவான விளக்கத்துக்கு விக்கிப்பீடியா லிங்கை பார்க்கவும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அதன் படி ஒரு வருடத்தின் நான்காவது நிகழ்வு டிசம்பர் 21 அல்லது 22 இல் வழக்கமாக வரும். இந்த முறை டிசம்பர் 21 இல் வருகிறது.சில கேள்விகள் நாசா விஞ்ஞானிகளிடம் ...
உலகம் நாளைக்கு அழியப்போகுதாம்... இன்று தான் இறுதியாக ஒரு முழு நாளும் என்று வரும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. தற்செயலாக அழிந்தாலும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு கிரிக்கெட் இடுகை போடலாமே னு தான்..... ;) கடந்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் முடிவுக்கு வந்திருந்தன. நாக்பூரில் இந்தியா வென்றால் தொடர் சமப்படும் என்ற நிலையில் ஆரம்பித்த இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி , ...