இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச் சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024. வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச் சிறுகதைப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எ
குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024காந்திமதியின் காதலன் – கல்கி `காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம். இரண்டாம் இடம் – அபிமானி சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண
அன்புடன் வாசகர்களுக்கு,பால்வண்ணம் சிறுகதைத்தொகுதி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஐந்து வாசகர்களுக்கு இலவசமாக இந்தப் புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைக்க விரும்புகின்றேன். வாசகர்கள் தங்கள் முகவரியை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் kssutha@hotmail.comதொகுப்பு தொடர்பான எந்தவித விமர்சனமும் எதிர்ப்பார்க்கப்படவில்லை. ...
சித்தர்கள், சாமிமார்கள், துறவிகள் காடு மலை குகைகளில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். தற்போதும் சிலர் அப்படி வாழ்ந்து வருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவில் க்ரிபித் (Griffith) என்ற நகரில் அப்படியொரு இத்தாலியத் துறவி வாழ்ந்திருக்கின்றார். ஆசாபாசங்களைத் துறந்த அவர் வாழ்ந்த குகையை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன். க்ரிபித், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு பிராந்திய நகரம். அவுஸ்திரேலியாவின் உணவுக்கிண்ணம் என அழைக்கப்படும் இந்த இடம் மெல்பேர்ணிலிருந்து ஐந்தரை மணித்தியாலங்கள் கார் ஓடும் தூரத்த
அப்பொழுதெல்லாம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவோம். ஜெயந்திநகர், உருத்திரபுரத்தில் எனக்கொரு அக்கா முறையானவர் இருந்தார். அவர்களின் பிள்ளைகளும் எங்களின் வயதை ஒத்தவர்களாக இருந்தார்கள்.பத்தாம் வகுப்பு படிப்பிற்குப் பின்னர்தான் தனியவெல்லாம் சுற்றித்திரிவதற்கு வீட்டில் அனுமதி கிடைத்தது. அதற்கு முன்னரெல்லாம் ஆராவது கிளிநொச்சி போனால் அவர்களுடன் கூடிக்கொண்டு போவேன். மாரிகால விடுமுறையில் போவதற்குத்தான் நல்ல விருப்பம். நீண்ட விடுமுறை.அவர்களின் வீடு பெரியதொரு வளவில் இருந்தது. வளவின் முன்புறம் வீடு,
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி இருந்தார். மேசையில் சிவப்புக்கலரில் `கோலாவும்’, மஞ
அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை. காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான். “அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்” என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்பு
நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்பகுதி 2“அப்பா… இஞ்சை பாருங்கோ சீனறியை…” ஆச்சரியத்தால் செளம்யாவின் கண்கள் அகல விரிந்தன. அமலனின் சத்தம் வராது போகவே, “அப்பா சரியான நித்திரை” என்றாள். தாரிணி சீற்றுக்குள்ளால் கையை நுழைத்து அமலனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டினாள். “இந்தாள் இப்பிடியே தூங்கி வழிஞ்சா ரஞ்சனுக்கு நித்திரைதான் வரும். பிள்ளை நீ போய் முன்னுக்கு இரு…” செளம்யாவைப் பார்த்து தாரிணி சொன்னாள். “றைவிங் செய்யேக்கை நான் ஒருநாளும் தூங்க மாட்டன்” என்றான் ரஞ்சன். இவர்களின் கலாட்டாவில் சிந்தனை அறுந்த அமலன், கண்ணைக் ...
நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்பகுதி 1முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மனேஜராகலாம்; திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று பேரப்பிள்ளைகளையும் கண்டடையலாம்; ஒரு அழகான வீடு கட்டி, முன்னே வாகனங்களை நிறுத்தி வைக்கலாம். இப்படி மூச்சு முட்டிக் களைத்து விழும்வரை ஒருவரால் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும் இந்தக் காலப்பகுதியில் எத்தனையே மனிதர்களால் தமது சொந்த ஊரை ஒருதரமேனும் பார்க்க முடிந்ததில்லை. இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டு அமலனுக்கு அந
வாழ்க்கை பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது. 1987 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற்’ தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலைசெய்து கொண்டிருந்தேன். மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான் எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர்’ நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம். வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன. சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன் கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின