உள்ளூர் கழக மட்டத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்துள்ள முதல்தர கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது நாளான இன்று (05) எட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், NCC கழகத்துக்காக லஹிரு உதார அரைச்சதம் அடித்து அசத்த, நீர்கொழும்பு கழகத்துக்காக ரொஸ்கோ டட்டில் ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து மிரள வைத்தார். NCC கழகம் எதிர் துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் இலங்கை துறைமுக அதிககார சபை அணிக்கு எதிராக CCC மைதானத்தில் நடைபெற்ற ...
இலங்கையில் உள்ள திறமையான வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்கின்ற பாரிய வேலைத்திட்டமொன்றை விளையாட்டுப் பேரவையுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையினால் இந்த வேலைத்திட்டம் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தவணைகள் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்படி, தேசிய விளையாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களை தெள
இலங்கை T20 அணியின் தலைவரான தசுன் ஷானக்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகி அங்கிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் இலங்கை அணியின்
இலங்கை மக்களின் மனம்கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜெட் ஹோல்டிங்ஸ் (JAT HOLDINGS) நிறுவனம் 2020/2021 பருவகாலத்துக்காக எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக செயற்படவுள்ளது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான JAT HOLDINGS நிறுவனம், இறுதியாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம்
உள்ளூர் கழக மட்டத்தில் திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 26 முதல்தர கழகங்கள் பங்குபற்றுகின்ற T20 கிரிக்கெட் தொடர் இன்று (04) ஆரம்பமாகியது. முதலாவது வாரத்துக்காக நிறைவடைந்த எட்டு போட்டிகளில் SSC, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், NCC, நுகெகொட விளையாட்டுக் கழகம், ராகம கிரிக்கெட் கழகம் உள்ளிட்ட அணிகள் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருந்தன. இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் த
பாகிஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடரில் விளையாடி வருகின்ற ஆறு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொடரை ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெற்று வந்தன. இதன்படி, ஒட்டுமொத்தமாக நடைபெறவுள்ள 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் இதுவரை
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டி நேற்று (04) என்டிகுவா நகரில் நிறைவுக்கு வந்திருந்தது. அகில ஹெட்ரிக்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட் இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஒரு அங்கமாக அமையும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரின் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்ததுடன் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இப்போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கீய்ரோன் பொலார்ட், T20 சர்வதேச ...
5 & 6 மற்றும் 9 & 10 ஆம் திகதிகளில் Amazon kindle இல் இலவசம்கார் காலம் MONSOON (Tamil Edition) eBook: கே.எஸ்.சுதாகர்: Amazon.in: Kindle Storeநாவல் - அவுஸ்ரேலியாவில் உள்ள கதைக்களத்தையும், அங்கே உள்ள பாத்திரப்படைப்புக்களையும் கொண்டது. மெல்பேர்ன் நகரின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு கார்த்தொழிற்சாலையில் கதை ஆரம்பமாகிறது. நந்தன், ஆலின், புங், மாயா, ஒகாரா, அல்பேற்றோ, ஆச்சிமா, குலம், மக்காறியோ போன்ற பாத்திரங்கள் மட்டுமல்ல நீங்காத நினைவில் நிற்கும் மாதவி போன்றவர்களின் பாத்திரங்களும் இந்த நாவலுக்கு உயிர்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி பல திருப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. போட்டியின் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி, இலங்கை அணியின் பெதும் நிசங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சர்வதேச அறிமுகத்தை பெற்றதுடன், மேற்கிந்திய தீவுகள் அணியில் கெவின் சென்கிலையர் அறிமுகத்தை பெற்றார். இலங்கை அணி நிரோஷன் ட
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகம் செய்துள்ள மாதத்தின் சிறந்த வீரர் விருதில் பெப்ரவரி மாதத்திற்கு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கைல் மேயர்ஸ் ஆகிய மூவரது பெயர்களை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஐசிசி ஒவ்வொரு மாதத்திற்கான சர்வதேச அளவில் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான விருதை இந்திய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் தட்டிச் சென்றார். ஜனவரி மாதத்துக்கான
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான குழாத்தில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளார். பெதும் நிஸ்ஸங்கவின் திறமை தொடர்பில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டுவந்த போதும், அவர் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமை அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக பெதும் நிஸ்ஸங்க உபாதையில் இருந்த காரணத்தால், அவரால் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங
இலங்கை அணியின் இளம் வீரர்களான பெதும் நிசங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோரின் திறமைகள் மற்றும் லசித் மாலிங்கவிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் கூறும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் (தமிழில்) The post Video – பெதும் நிசங்க, அஷேன் பண்டார ஆகியோரை புகழும் மிக்கி ஆர்தர் appeared first on ThePapare.com. ...
இலங்கை T20 அணித் தலைவராகச் செயற்பட்டு வந்த நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இந்தியாவில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து காொணொளி ஊடாக பேசியபோதே மிக்கி ஆர்த்தர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் மால
தசுன் ஷானக்கவின் பொறுப்பை மெதிவ்ஸுக்கு வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை, வீதியோர பாதுகாப்பு உலக இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க இந்தியா சென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி, 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரில் எஸ்.எஸ்.சி.யை வீழ்த்தி சம்பியனானது லங்கன் சிசி கழகம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பால் மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ள ஆசிய கிண்ணம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. >>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<< The post Video – தலைவராக மீண்டும் சாத
மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது தடவையாக T20 உலகக் கிண்ண தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கு தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கிறிஸ் கெயில் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த கிறிஸ் கெயிலுக்கு இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. >> கெய்ல் இலங்கைக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு! 13 வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் இடம்பெறும் நான்கு ஆரம்ப வீரர்களில
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நடைபெற்று வரும் மகளிருக்கான மஞ்சி மகளிர் சுப்பர் லீக் இறுதிப்போட்டிக்கு, இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் என்பன முன்னேறியுள்ளன. மகளிருக்கான முதல் அரையிறுதிப்போட்டியில், இலங்கை விமானப்படை அணி மற்றும் இலங்கை கடற்படை அணிகள் மோதியிருந்தன. போட்டியில் முதல் இரண்டு செட்களையும் இலங்கை விமானப்படை அணி 25-20 மற்றும் 25-22 என கைப்பற்றியது. மூன்றாவது செட்டை இலங்கை கடற்படை அணி 25-20 என கைப்பற்றியது. தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறு
இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், முகாமையாளராக சாதனை படைத்துள்ள PEP GUARDIOLA, கோல்டன் பூட்டுக்காக முன்னாள் சக வீரருடன் போட்டி போடும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் கோலால் போட்டியை சமன் செய்த ஜுவென்டஸ் போன்ற தகவல்களை பார்ப்போம். The post Video – தொடர்ச்சியாக அடுத்த பருவகாலமும் GOLDEN BOOTஐ வெல்வாரா மெஸ்ஸி? | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மஞ்சியின் அனுசரணையில் நடைபெற்று வரும், மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான இறுதிப்போட்டிக்கு Bitu Link மற்றும் இலங்கை மின்சார சபை அணிகள் தகுதிபெற்றுள்ளன. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகங்களுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில் மோதியிருந்தன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இலங்கை மின்சார சபை அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது. மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட அரையிறுதியில் முன்னணி அணிகள்! போட
கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட, இஸ்லாமபாத் யுனைடட் மற்றும் குயெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரின் குழுநிலைப் போட்டி இன்று (2) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம் இஸ்லாமபாத் யுனைடட் அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பவாட் அஹ்மட், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டதனை அடுத்து திங்கட்கிழமை (1) நடைபெறவிருந்த இஸ்லாமபாத் யுனைடட் மற்றும் குயெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இவ்வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த வருடம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. >&g