இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான 2 போட்டிகள் இன்று (26) ஆரம்பமாகின. இதில் காலி அணிக்கெதிரான போட்டியில் கண்டி அணியின் சந்துன் வீரக்கொடி மற்றும் அஹான் விக்ரமசிங்க ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர். மறுபுறத்தில் ஜப்னா அணியுடனான போட்டியில் தம்புள்ள அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். ஜப்னா எதிர் தம்பு
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் அதிகாரம் 2 : அழகான பெண் வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான். நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வான் மான் ...
பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் வென்றார். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக நடத்தப்பட்ட இந்த தொடரில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மதுமாலி பெரேரா போட்டியை 2 மணித்தியாலம் 48.22 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 48.02 செக்கன்களில் நிறைவு செய்த நேபாளத்தின் புஷ்பா பந்தாரி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, இந்தியாவின் அஸ்வினி மதன் ஜா
இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் இடையில் நடைபெற்றுவரும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (26) நிறைவுக்கு வந்திருக்கின்றது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காக நிஷான் மதுஷ்க அபார சதம் விளாசியிருந்ததோடு இங்கிலாந்து லயன்ஸ் அணியும் நல்ல துடுப்பாட்டத்தோடு வலுப்பெற்றிருக்கின்றது. >> தனது உடல்நலம் குறித்த நம்பிக்கையில் ஜொப்ரா ஆர்ச்சர் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் கிரிக
ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் கிழக்கு மாகாணம் – நிந்தவூரைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை பாடசாலை கபடி சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட குழாத்தில் மேலும் 3 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கபடி சம்மேளனமும், ஈரான் கபடி சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் ...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் சுமார் இரண்டு வருட இடைவெளி ஒன்றின் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள ஜொப்ரா ஆர்ச்சர் தனது உடல்நலம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார். >> ஒருநாள் பந்துவீச்சாளர்கள் முதலிடம் பெற்ற மொஹமட் சிராஜ் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த ஒருநாள் தொடர் நாளை (27) ப்ளூம்பொன்டைன் நகரில் ஆரம்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் முதலிடம் பெற்றிருக்கின்றார். >> கோடிகளை அள்ளிய மகளிர் பிரீமியர் லீக் அணிகள் ; எவ்வளவு தெரியுமா? அதன்படி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்டினை தற்போது பின்தள்ளியிருக்கும் மொஹமட் சிராஜ் தற்போது 729 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார். இந்திய அணி அண்மையில் விளையாடிய நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் பிரகாசித்ததே மொஹமட் சிரா
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக மீண்டும் திலகா ஜினதாசவை நியமிக்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஹயசின்த் விஜேசிங்க கடந்த சில தினங்களுக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கு திலகா ஜினதாச மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனை சோமிதா டி அல்விஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இந்த நிலையில், சி. ரத்னம
இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த 21ஆம் திகதி கொழும்பு கோல்ட்ஸ் கழக மதிவாணன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் லயன்நேஷன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்கின் நிர்வாக இயக்குநர் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவாகினார். இதனிடையே, இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின்
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 5 அணிகள் பங்கேற்கின்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடர் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், முதல் வாரத்தில் நடைபெற்ற 2 போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு The post WATCH – NSL தொடர் மூலம் மீண்டும் போர்முக்கு திரும்பிய இலங்கை வீரர்கள்! appeared first on ThePapare.com. ...
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளின் உரிமையாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து லையன்ஸ் தொடருக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு அதன்படி அணி உரிமையாளர்களுக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ்
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட தொடருக்கான அணித்தலைவராக நிபுன் தனன்ஜய பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடருக்கான தலைவராக கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார். >> பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் சபை இந்த தொடருக்காக அறிவித்துள்ள முதல் 22 பேர்கொண்ட குழாத்தில் நுவனிந்து பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, தனுக தாபரே, ஷெவோன் டேனியல், ஓசத
ஐசிசி U19 மகளிர் உலகக்கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சுபர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் இலங்கை U19 மகளிர் அணி ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சித்தோல்வியை சந்தித்தது. இலங்கை மகளிர் U19 அணி அரையிறுதிக்கான வாய்ப்பை ஏற்கனவே தவறவிட்டிருந்தாலும், இந்தப்போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்தப்போட்டியில் அற்புதமான பிடியெடுப்புகளுடன் சிறந்த களத்தடுப்பு திறமையை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது. ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இந்தியா நாணய சுழற்சிய
ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண்பித்துள்ளது. அவுஸ்திரேலியா செய்தது போல நாம் செய்ய மாட்டோம் – பாகிஸ்தான் நேற்று (24) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா தமது நாட்டில் வைத்து நியூசிலாந்தினை 3-0 என ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்திருந்தது. இந்த தொடர் வெற்றி மற்றும் இதற்கு முன்னர் இலங்கையுடனான ஒருநாள் தொடர் வெற்றி என்பன இந்திய அணி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் காட்ட பிரதான காரணமாக மாறியிருக்கின்றது. ..
அவுஸ்திரேலியா போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்யாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவரான நஜாம் சேத்தி குறிப்பிட்டுள்ளார். பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு தலிபான்கள் மூலம் பெண்களின் உரிமைகள் ஆப்கானிஸ்தானில் மீறப்படுவதாக குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மார்ச் மாதம் விளையாடவிருந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த 12ஆம் திகதி அறிவித்திருந்தது. ஐக்கிய அரபு இ
வனிந்து ஹஸரங்கவுக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள யாழ். வீரர் வியாஸ்காந்த் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க சொன்ன பதில் மற்றும் வியாஸ்காந்த்துக்கு இலங்கை அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு The post WATCH – இலங்கை அணியில் ஆட வியாஸ்காந்த் என்ன செய்ய வேண்டும்? appeared first on ThePapare.com. ...
தற்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA வினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தான் எந்தவித நிபந்தனைகளும் இன்றி யாருடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார் என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த தேர்தல் இடம்பெற இருந்த இறுதித் தருவாயில், தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த ஜஸ்வர் உமர் விளையாட்டுத் துறை அமைச்சினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியின் தலைவராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒருநாள் அணியின் தலைவராக பாகிஸ்தானின் பாபர் அஷாம் பெயரிடப்பட்டுள்ளார் ஐசிசி கடந்த ஆண்டின் சிறந்த T20I அணிகளை நேற்று திங்கட்கிழமை (23) அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் ஆடவருக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் மகளிருக்கான ஒருநாள் அணிகளை அறிவித்திருந்தது. பங்களாதேஷுடன் முதல் டெஸ்டில் விளையாடவுள்ள அயர்லாந்து! வெளியிடப்பட்ட இந்தப்பட்டியலில் இலங்கை வீரர்கள் எவரும் உள்வாங்
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. சுற்றுலா அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி முதல் ஏப்ரல் 8ம் திகதிவரை ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு அயர்லாந்து அணி 2008ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடர் ஒன்றில் பங்கேற்கவுள்ளது. இதில் முக்
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் (SLC XI) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள இந்த குழாத்தின் தலைவராக சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே பெயரிடப்பட்டுள்ளதுடன், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. T20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வஹாப் ரியாஸ் அதுமாத்திரமின்றி இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துப்படுத்திவரும், இளம் வீரர் துனித் வெல்லாலகே இந்த குழாத்தில் இடம்பெற்ற