ஆசிய டிவிஷன்-1 ரக்பி தொடர் சம்பியன்களான இலங்கை

54
Kazakhstan vs Sri Lanka

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்று முடிந்த ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கஷகஸ்தானை 45-07 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை ரக்பி அணியானது, ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக நாமம் சூடியிருக்கின்றது.

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை

கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இலங்கை ரக்பி அணியானது தரிந்த ரத்வத்தவின் அபார ஆட்டத்தோடு, போட்டியின் முதல் பாதியில் 31-00 என முன்னிலை அடைந்தது.

பின்னர் தொடரின் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் காட்டிய இலங்கை ரக்பி வீரர்கள் போட்டியின் இரண்டாம் பாதியையினையும் கைப்பற்றி போட்டியில் 45-07 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியினைப் பதிவு செய்தனர்.

அதேநேரம் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மோதியதோடு, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்தியாவை கட்டார் ரக்பி அணியானது 34-25 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<