வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்
நிறம்“நான் வாசித்த அனைத்தினதும் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார். இன்று உலக புத்தக தினம். உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக முக்கியமானது. வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள். உங்கள் யோசனைகளின் தோற்றுவாயாக மனச்சித்திரங்கள் வரும். அந்த மனச்சித்திரங்களின் விசித்திரம், வாசிக்கின்ற நூல்கள் மூலமே நெறியாள்கை செய்யப்படுகிறது. உங்களின் வாழ்க்கையின் வருங்கால பெறுமதியை நிர்ணயிக்கும் கூறுகளாக நீங்கள் வாசிக்கும் நூல்கள் இருக்கின்றன. உடலுக்கு உடற்பயிற்ச
விவேக்: மனங்களையும் மரங்களையும் வளர்த்தவர்
நிறம்“நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி” என்ற ஒற்றை வசனத்தில் அரசியல் பேசியவர். “நீங்க நம்பர் பிளேட் என்ன கலரென்று முடிவு பண்ணுங்க. அப்புறம் நான் மாட்டுறன்” என்ற வசனம் மூலம், தான் வாழும் சூழலின் ஆட்சி மாற்றத்தின் அலப்பறைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்தவர்.சினிமாக் கலையில், தான் பயணிக்கும் காலத்தைப் பிரதிபலிப்பதாய் அவரின் வசனங்களை அமைத்தவர்.“எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்” என்ற வசனத்தை நீங்கள் பாவிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.சமூகத்தின் அறியாமையை கண்டு, “ஆயி
புறக்கணிக்கும் கலை
நிறம்கவனக்குவிப்பு கட்டாயம் தேவை மனத்தை கவனக்குவிப்பு அடையச் செய்வது கடினம். பலதும் பலவாறு உங்களின் கவனத்தை பெறப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கத்திலிருந்து தப்பித்து, உங்கள் கவனத்தை குவிக்கச் செய்வது சுலபமில்லை. புறக்கணித்தலில் தேர்ச்சி பெறுவதே கவனக்குவிப்பின் ஆதாரம். புறக்கணித்தலா? புறக்கணிப்பு என்பது கூடாத பண்பல்லவா? எதைப் புறக்கணிக்கிறோம் என்பதிலேயே அதன் நன்மை, தீமை பற்றிய விலாசம் கிடைக்கிறது. தேர்ந்து புறக்கணிப்பதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். உங்கள் நேரத்தை வீணாக்கும் செயல்களைப் புறக்கணி
வாழ்வைக் கொண்டாடும் பாடம்
நிறம்பூமி, வாழ்க்கை, பூர்வகுடிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறது எஞ்சாய் எஞ்சாமி! அறிவின் வரிகளில் அடர்த்தியும் ஆழமும் உச்சமாக அமைந்துள்ளது. நாலடிகளில் நாகரிகம், பூமி வரலாறு, விவசாயிகளின் வாழ்வின் துயர் என பலதையும் விபரிக்கும் விதம் – கவிதை. அன்னக்கிளி அன்னக்கிளிஅடி ஆலமரக்கிளை வண்ணக்கிளிநல்லபடி வாழச்சொல்லி இந்தமண்ணைக் கொடுத்தானே பூர்வகுடி!கம்மங்கரை காணியெல்லாம்பாடி திரிஞ்சானே ஆதிக்குடிநாய் நரி பூனைக்கெல்லாம்இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி!நான் அஞ்சு மரம் வளர்த்தேன்அழகான தோட்டம் வெச்சேன்தோட்டம் செழிச்சாலும்என் தொண
என்ன செய்யப் போகிறீர்கள்?
நிறம்நாளையுடன் பெப்ரவரி மாதம் நிறைவடைகிறது. 2021இன் இரண்டு மாதங்கள் நிறைவாகி, 10 மாதங்கள் எஞ்சியிருக்கின்றன. கடந்து முடிகின்ற இரண்டு மாதங்களில் எதையெல்லாம் உருவாக்கியுள்ளீர்கள்? எவற்றையெல்லாம் சாதித்துள்ளீர்கள்? புதிதாகக் எவற்றைப் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்? இலக்குகள் இருந்தாலும், அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பொறிமுறைகளை தயார் செய்தீர்களா? தயார் செய்த பொறிமுறைகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய அறிதல் தோன்றியதா? முறைப்பட்டுக் கொண்டிருக்காமல், படைத்தலின் மூலம் பரவசம் அடைந்து கொள்ள
பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட திருப்புமுனை: அறிவோம் தெளிவோம்
நிறம்என்னதான் நடக்கிறது? வீடியோ விளையாட்டுக்களை டீவீடீயாக விற்பனை செய்து வந்த நிறுவனம்தான் GameStop. இணையத்தின் ஆதிக்கம் இருக்கும் இக்காலத்தில் டீவீடீகளை விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா என்ன? பெருந்தொற்றுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி GameStop மிகப்பெரும் நட்டத்தில் இயங்கியது. ஆனால், இந்த வாரம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் அதீத விலையுயர்ச்சியால் நியுயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் பங்குசந்தை கதிகலங்கியுள்ளது. நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதியுச்சமானது எப்படிச் சாத்தியமாகியது? இந்தச் சம்பவம
கவனத்தை ஆளுவது எப்படி?
நிறம்நீங்கள் புதிய மொழியொன்றில் பிழையில்லாமல் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க முடிவுசெய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எழுதுவதற்கு ஒரு குறிப்புப் புத்தகம் தேவைப்படுகிறது. புத்தகக் கடைக்கு செல்கிறீர்கள். புது வகையான அழகழகான குறிப்பபுப் புத்தகங்களைக் காண்கிறீர்கள். அவற்றில் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறக் குறிப்புப் புத்தகங்கள் உங்களைக் கவர்ந்துள்ளன. இதில் எதைத் தெரிவு செய்வது என்று உங்களுக்குள்ளேயே விவாவதம் செய்கிறீர்கள். அப்போது, எதிரே கண்ணுக்கு அழகான பேனாவொன்று தெரிகிறது. இறுதியில் பேனாவை வாங்கிக் கொண்டு வீட்
உன்னை ஒன்று கேட்பேன்
நிறம்உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில், உலக சனத்தொகையில், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் தொகையின் விகிதம் எந்தளவு மாறியுள்ளது? உங்களுக்கான தெரிவுகள் இவைதாம். மாறவில்லை.அரைவாசியாகக் குறைந்துள்ளதுஇரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றுள், உங்கள் தெரிவு என்ன? இலகுவானதுதான். இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை தெரிவு செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்தக் கேள்வி, உலகின் பல இடங்களிலும் பல்வேறுபட்ட மக்கள் குழுக்களிடமும் கேட்ட போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதையே அவர்களும
வட்டத்திற்குள் வாழ்வதா?
நிறம்என் கருத்துகளோடு எல்லோரும் உடன்படுகிறார்கள். யாரும் என்னோடு விவாதிக்க எண்ணவில்லை. ஏன், என் கருத்துக்களையே ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இப்படி யாருக்கும் தோன்றமுடியுமா? முடியும். இன்று இணையத்தில் இணைந்து இருக்கின்ற அனைவரினதும் எண்ணவோட்டமும் இதுதான். இது எப்படிச் சாத்தியமாகிறது? சமூக ஊடகங்களில் நாம் சொல்கின்ற கருத்துகள், போடுகின்ற லைக்குகள், பகிர்கின்ற பதிவுகள் ஆகியன நாம் யார் என்பதை இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. இதனைக் கொண்டு இயந்திரமோ, நீங்கள் யாரென்பதை உணர்ந்து நீங்கள் விரும்
ஒப்பிடும் கலை
நிறம்உங்கள் நண்பர்கள் பகிரும் நிழற்படங்கள், செய்திகள், மகிழ்ச்சிகள் என பலதையும் சமூக ஊடகங்களில் நாளாந்தம் காண்கிறீர்கள். அவர்களோடு, உங்களை ஒப்பிடத் தொடங்கும் போது, உங்கள் மகிழ்ச்சியை நீங்களே தொலைக்க தொடங்குகிறீர்கள். நீங்கள் காண்பதெல்லாம், அவர்களின் ஒரு கணத்தின் வெளிப்பாடு மட்டுந்தான். அந்த இடத்தை அவர்கள் அடையச் செய்த விடாமுயற்சி, உழைப்பு என எதுவுமே பார்வைக்கு வராது. உங்களின் ஆரம்பத்தை இன்னொருவரின் நிறைவான சாதனையில் நின்று ஒப்பிடுவது எந்த வகையில் முறையாகும்? அப்படி நீங்கள் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், நேற்
இலக்குகள் வேண்டாம்
நிறம்இலக்குகள் என்பவை மாயைகள் என்றே எண்ணுகிறேன். நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பாதைதான் இலக்குக்கு முகவரி கொடுக்கிறது. இலக்கை அடைந்தேனா, அதை நோக்கி நகர்ந்தேனா, அதை விலக்கி நடந்தேனா என்பதை உங்கள் பயணமே தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் செய்கின்ற சின்னச் சின்ன செயல்கள், நாளடைவில் பிரமாண்டமாய் உருவாவதே உண்மை. இலக்குகளை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறைமையே உங்களுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்பவைதான் உங்களுக்கு முகவரி தருகிறது. செல்வத்தைத் தருகிறது.
கோடுகளைத் தாண்டுதல்
நிறம்ஒரு விடயத்தை, நின்று நிதானமாக அவதானிக்கின்ற போது, அந்த விடயம் பாலான தெளிவு இயல்பாகவே எமக்குள் ஒட்டிக் கொள்கிறது.மேலோட்டமாக விடயங்களை கண்டு கொள்ளுதல், எனது காலக்கோட்டில் எல்லோரும் சொல்கிறார்கள், அதனால், நானும் அதை அப்படியே சொல்ல வேண்டும் அல்லது நம்ப வேண்டும் என்ற “வடிகட்டிய குமிழி” (Filter Bubble) க்குள் அகப்படுதல், நான் நம்பியிருக்கின்ற விடயத்தினூடாக, எல்லாமும் இயைந்து இருக்க வேண்டுமென்ற உறுதியாக்கப்பட்ட பக்கச்சார்பான நிலையில் (Confirmation bias) இருத்தல் என்பவை எல்லாம் உங்களை ஒரு கோட்டையும் தாண
படைப்பதை பகிர்தல் பற்றிய குறிப்புகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்) 2006 ஆம் ஆண்டு தொடக்கம் நிறம் வலைப்பதிவில் பதிவுகளை எழுதி வருகிறேன். இருந்தாலும், பதிவுகளின் நீளத்தைக் கண்டு நண்பர்கள் வாசிக்காமல் கடந்து செல்கிறார்களோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தது. வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், “ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றவாறு வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின
ஆரம்பித்தலின் தொடக்கம்
நிறம்நாளும் மதிநுட்பம் மேலோங்க “புதுநுட்பம்” என்கின்ற YouTube Channelஐ 2013இல் தொடங்கியிருந்தேன். புதிய காணொளிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்மென்ற தேட்டம், ஒரு சில வருடங்களாகத் தொடர்ந்தது. வேறு பல காரியங்கள் எனது கவனத்தை வேண்டி நின்றதால், புதுநுட்பத்தில் புதிய காணொளிகளை தொடர்ச்சியாக உருவாக்கிச் சேர்ப்பதற்கான அவகாசம் எட்டவில்லை. ஆனாலும், நான் ஏற்கனவே உருவாக்கிப் பதிவேற்றிய காணொளிகளை நாளாந்தம் அன்பர்கள் பார்த்து, அதற்கு நன்றி சொல்லி, கருத்துச் சொல்லி அனுப்புகின்ற செய்திகளை வாசிக்கும் போது புளகாங்கிதம் அடைவ
நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்
நிறம் நிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது. வாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்ப
உன்னால் முடியுமா?
நிறம்நாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியாக,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”, “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர். க
நிறத்திற்கு வயது பத்து!
நிறம்நான் எனதிந்த “நிறம்” வலைப்பதிவில் முதற் பதிவிட்டு, இன்றோடு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தொடங்கிய காலமது. எனது எண்ணங்களுக்கு முகவரி கொடுக்க வேண்டும். முகவரியை உலகறியச் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு வெகுவாகப் பொருந்திய ஊடகமாக வலைப்பதிவு தெரிந்தது. அதனை நான் தெரிவு செய்தேன். தொடர்ச்சியாக பத்து வருடங்கள் நிறத்தின் மூலமாக உங்களைச் சந்தித்தேன். பல்வேறு தேசங்களிலிருந்தும் குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக நிறம் பற்றி நீங்கள் சொல்லியனுப்பும் செய்திகள், மட்டிலா மகிழ்ச்ச
ஈற்றில் நீ எதுவோ?
நிறம்பயமில்லாத தன்மைதான் பயங்கரம் கொண்ட திரைப்படங்களைக் காண்பதற்கான தகவை உண்டுபண்ணுமென்பதில்லை. நீ, பயப்படலாம், அதற்கு எல்லைகள் கூட வைத்திருக்கலாம். உன் தெரிவில் தான் அது உயிர்ப்படைகிறது. திறமையானவர்கள் தான் போட்டியில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. நீயும் ஜெயிக்கலாம். அதற்கு திறமை அல்ல, திறமையைத் தக்கவைக்கின்ற விடாமுயற்சியே போதும். வீழ்ந்தாலும் எழுவேன் என்ற வேட்கையை வேண்டும். சங்கீரணமான விடயங்களை அறிந்து கொள்ளவதற்கு நீ விஞ்ஞானியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உன்னால் முடியுமானளவு விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். முய
பத்தாவது வருடத்தில் நிறம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம். ஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன். பாடசாலையில் தரம் நான்கில் கல்வ
பத்தாவது வருடத்தில் நிறம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம். ஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன். பாடசாலையில் தரம் நான்கில் கல்வ