சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியானது 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் U19 மகளிர் அணிக்கு வெற்றி அத்துடன் இந்த வெற்றியுடன் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கைப்பற்றியுள்ளது. அதேநேரம் இலங்கை தமது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் T20 தொடரிற்கு அடுத்ததாக ஒருநாள் தொடரினையும் இழந்துள்ளது. இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இ
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) விதிமுறைகளுக்கு அமைய சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜேர்சி அமையும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதி செய்துள்ளது. >>இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்! அடுத்த மாதம் ஆரம்பமாகும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை பாகிஸ்தான் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கெடுக்க மறுப்புத் தெரிவித்திருந்ததது. இதனையடுத்து இந்தியா சம்பியன்ஸ் க
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெரும் வென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டில் டெஸ்ட் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் பும்ராவிற்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு அவுஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர்
வணிக சேவைகள் ‘E’ பிரிவு 25 ஓவர் லீக் கிரிக்கெட் தொடருக்கு 22வது ஆண்டாக டேவிட் பீரிஸ் குழுமம் அனுசரணை வழங்கியுள்ளது. இந்த தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான காலிறுதிப் போட்டிகள் நாளை (01) ஆரம்பமாக உள்ளது. இப் போட்டியின் ஆரம்ப சுற்றில் 14 அணிகள் 3 குழுக்களில் போட்டியிட்டதுடன், காலிறுதிச் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகியதுடன், அந்த அணிகள் மூன்று குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளன. இதன்படி, முதலாவது காலிறுதியில் ஜோர்ஜ் ஸ்டீவர்ட் எதிர் ஜோன் கீல்ஸ் குழுமம் அணிகளும், இரண்டாவது காலிறுதியில் ..
ஆஷஸ் தொடர் தவிர்த்து 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இலவசமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் முதல் டெஸ்ட் தொடராக அவுஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமையவுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு உரிமையை Seven Network ஊடக நிறுவனம் பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த த
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையினால் நிறைவடைந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி தடுமாறி வருகின்றது. வர்த்தக சேவைகள் லீக் ‘E’ பிரிவு கிரிக்கெட் தொடருக்கு டேவிட் பீரிஸ் குழுமம் அனுசரணை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அபார முதல் இன்னிங்ஸ் (654) துடுப்பாட்டத்தினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை வீரர்கள் 15 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு ...
லண்டனிலுள்ள மெரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக முன்னாள் இலங்கை வீரரான குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலரும், இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளருமான மெரிலெபோன் கிரிக்கெட் கழகம் (MCC), தற்போதுள்ள உலக கிரிக்கெட் குழுவிற்குப் பதிலாக ஒரு உலகளாவிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (World Cricket Connects Advisory Board) (Connects Board) கடந்த 2024ஆம் ஆண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு
இலங்கையில் நடைபெற்ற மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. ஈரான் மற்றும் கஸகஸ்தான் ஆகிய அணிகள் இலங்கையை வீழ்த்தி முறையே ஆடவர் மற்றும் மகளிர் சம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், இந்த ஆண்டு (2025) தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய கடற்கரை கரப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டது. அதேபோல, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையும் ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பயின்ஷிப்பில் ப
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி இங்கிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென்னாப்பிரிக்கா குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (13) அறிவித்துள்ளது. டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ட்ரிச் நோர்ட்ஜே மற்றும்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் இருந்து நட்சத்திர வீர்ர்களான சகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரானது பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று
பள்ளியில் படிக்கும்போது கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதச் சொல்லித் தருவார்கள். எழுதும்போது ஊக்கம் குடுத்து வரவேற்கவும் செய்தார்கள். வளர்ந்து பெரியவர்களானதும் தொடர்ந்தும் அவற்றை எழுதும்போது - ஏன் எழுதுகின்றீர்கள்? இன்னமும் எழுதுகின்றீர்களா? இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன. சிந்தித்துப் பார்த்தால், இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு பயம் தான் காரணம் என்பது தெரிய வருகின்றது. எங்கே தமது பொட்டுக்கேடுகளை எழுதிவிடுவாரோ என்ற ஒரு பயம். கொஞ்சம் கண்டித்து வைப்போம். குட்டுப் போட்டு வைப்போம் என சிந்திக்கின்றார்கள். நே
முத்தையா முரளிதரன் – ஷேன் வோர்ன் ஆகிய சுழல் ஜாம்பவான்களை கௌரவிக்கும் பதாதை ஒன்று காலி சர்வதேச மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>பதவியினை இராஜினமாச் செய்த ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரி முரளிதரன் – வோர்ன் டெஸ்ட் போட்டி தற்போது காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்தப் போட்டிக்கு மத்தியிலேயே குறிப்பிட்ட நினைவுப்பதாதை வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களினதும் விளையாட்டிற்கு கௌரவம் வழங்கும் வகை
இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்குபற்றும் ‘ஒரே உலகம், ஒரே குடும்பம்’ (One World One Family Cup 2025) கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 8ஆம் திகதி இந்தியாவின் கர்நாடாகாவில் நடத்தப்படவுள்ளது. இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரானது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முத்தேனஹள்ளியில் உள்ள சத்ய சாயி கிராமத்தில் சாயி கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட்டின் மிக குறுகிய வடிவங்களில் ஒன்றாக அனைரும் மிக விரும்புகின்ற T20 வடிவில் இந்தப் போட்டி நடைப
மலேசியாவில் நடைபெற்றுவரும் 19 வயதின் கீழ் மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. முதல் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியிருந்த இலங்கை 19 வயதின் கீழ் அணி இன்று (21) நடைபெற்று முடிந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது. >>மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சகீப் அல் ஹஸன் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட
மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக ரஷ்மிகா செவ்வந்தி உப தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். >>நான்காவது T20 போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்திய பங்களாதேஷ்<< இவர்களுடன் இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய பல வீராங்கனைகளுக்கு T20 உலகக்கிண்
கடந்த ஆண்டு T20 கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி T20 கிரிக்கெட் அணியில் இலங்கையின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆடவர் T20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இந்தியாவின் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில்
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று (12) நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதனை அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 அத்தியாயங்களைக் கடந்து, 18ஆவது அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரு
இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சி அகாடமியான ஏ.சி மிலான் கால்பந்து அகாடமி நடத்தும் கால்பந்து (கனிஷ்ட) பயிற்சிப் பட்டறைகள் மூன்று கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன. 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் இந்த கால்பந்து பயிற்சி பட்டறைகளில் பங்கேற்கலாம். கொழும்பு தடகள மற்றும் கால்பந்து விளையாட்டு கழக அகாடமி இலங்கையில் இந்த கால்பந்து நிகழ்ச்சித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, கொழும்பு பகுதியில் உள்ளவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்றுமுன்தினம் (31) ஆரம்பமாகியது. இது
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முதல் நாள் ஆட்டநிறைவில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்களுடன் அவுஸ்திரேலியா வலுப்பெற்றுள்ளது. கௌண்டி தொடரில் புதிய அணியில் விளையாடவுள்ள விஷ்வ பெர்னாண்டோ காலியில் இன்று (29) ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இப்போட்டிக்கான இலங்கை குழாம் மூன்று பிரதான சுழல்வீரர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என களமிறங்கியது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்ற அணிகளில் ஒன்றான லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இம்முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த கேஎல் ராகுலை விடுவித்ததுடன், நிகோலஸ் பூரனை ...