ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு (2023) இந்தியாவில் சிக்கல்களின்றி நடைபெறும் எனக் கூறப்பட்ட போதும், ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு ஒரு நாட்டில் நடைபெறுமா என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவுகின்றது. இம்தியாஸ் ஸ்லாஷாவின் பிரகாசிப்புடன் இலங்கைக்கு 2வது வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கான உரிமத்தினை தம்மகத்தே கொண்டிருக்கின்றது. எனவே பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம்
ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் 30 பேர் அடங்கிய ஒருநாள் எதிர்பார்ப்பு குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பூரான், பிரெராக் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய லக்னோ இலங்கை கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு, அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாட வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. இதேவேளை இந்த தகுதிகாண் தொடருக்கு முன்னத
ஜப்பானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ள இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் தீசன் விதுஷன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையினால் அண்மையில் நடத்தப்பட்ட 23 வயதின் கீழ் முன்னணி கழக அணிகளுக்கு இடையிலான 2 நாட்கள் கிரிக்கெட் தொடரில் கொழும்பு முவர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது. முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஒருவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் தீசன் விதுஷன்
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது நாளான இன்று (08) 2 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் யாழ். பருத்தித்துறை, ஹார்ட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், இன்று தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இன்று காலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 38.91 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். முன்னதாக போட்டித் தொடரின் இரண்;டாவது நாளான நேற்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 18 வயதின்கீழ் பிரிவு 1 அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன. சனிக்கிழமை (6) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் யாப்பாணம் மத்திய கல்லூரி அணியை 8-2 என்ற கோல் கணக்கிலும், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் ...
உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் இன்று (06) ஜப்பானில் நடைபெற்ற 10ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் (10th Kinami Michitaka Memorial Athletics Meet) பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் அருண தர்ஷன 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஒசாகாவில் உள்ள நகெய் (யென்மர்) விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, போட்டித் தூரத்தை 45.49 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன்,
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அயர்லாந்து தொடரிலிருந்து இலங்கை அணி பெற்றுக்கொண்ட சாதகங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்குமா அயர்லாந்து தொடர்? appeared first on ThePapare.com. ...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது கள நடுவர் வழங்கும் சொப்ட் சிக்னல் (Soft Signal) ஆட்டமிழப்பு முறைமையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஐசிசி மேற்கொண்டுள்ளது. இவ்வருடம் லண்டனில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, இந்த விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. >> விதுசனின் அபார பந்துவீச்சுடன் மீண்டும் ஜப்பானை வீழ்த்திய இலங்கை! கிரிக்கெட் போட்டியொன்றின்போது ஆட்டமிழப்பு ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டால
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து தொடரான லாலிகா தொடரின் இந்த பருவகாலத்திற்கான (2022/23) சம்பியன்களாக, பிரபல பார்சிலோனா அணி மகுடம் சூடிக்கொண்டுள்ளது. இது அவ்வணி வெல்லும் 27ஆவது லாலிகா சம்பியன் கிண்ணமாகும். லீக் போட்டிகள் முடிவடைய தமக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற 34ஆவது வாரத்திற்கான போட்டியில் ஸ்பான்யோல் கால்பந்து அணியை 4—2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டதன்மூலமே பார்சிலோனா அணியினர் தம்மை சம்பியன்களாக உறுதி செய்துகொண்டுள்ளனர். பார்சிலோனா மீதான ஊழல் குற
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கிண்ணத்துக்கான நேரடி தகுதியை இழந்துள்ள நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு உலகக்கிண்ண தகுதிகாண் சுற்று ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தொடருக்கு முன் ஆயத்தமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக மே.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று T20I மற்றும் 5 ஒருநாள் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் 2023-24ம் ஆண்டுக்கான முதல் தொடராக இந்த தொடர் அமையும் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. IPL தொடரிலிருந்து விலகினார் கேஎல் ராகுல் இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடர் ஆகஸ்ட் 30ம் திகதி முதல் 3ம் திகதிவரை டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இம்மாதம் 29ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ம் திகதி நடைபெறவுள்ளது. KL ராகுலுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ அதனைத்தொடர்ந்து ஜூன் 4ம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், 7ம் திகதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த மூன்று போட்டிகளும் ஹம
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப் பகுதியில் காயத்துக்குள்ளாகிய லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் கேஎல் ராகுல், IPL தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும், ஜுன் மாதம் அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெறவுள்ள ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலிருந்தும் அவர் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL தொடரில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. குறைந்தபட்ச ஓட்ட எண்ண
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சுற்றுத்தொடருக்கான ஆப்கான் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கான் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. >> சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் புதிய மாற்றம் இந்த சுற்றுத் தொடருக்கும் அதனை அடுத்து ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலும் பங்கேற்கும் இலங்கையின் 30 பேர் கொண்ட பூர்வாங்க குழாம் ஞாயிற்
இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றித்தோல்வியின்றி நிறைவுபெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இடைநடுவில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக, போட்டி கைவிடப்பட்டதுடன் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. >>மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த டெல்லி கெபிடல்ஸ் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபட்ட சென்னை சுபர் கிங்ஸ் அணி பந்துவீச்சில் சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. கு
பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடர் 2023 இன் முதல் போட்டியில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணியினர் 2-1 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை விமானப்படை அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளனர். இவ்வருடத்திற்கான பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் ஆரம்பப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் புதன்கிழமை (03) இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் விமானப்படை அணியினர் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களை அதிகமாக மேற்கொண்டாலும், ஆட்டத்தின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் கடற்படை அணியினர்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் ICC இன் டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுழல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தைப் பிடித்த பிரபாத் ஜயசூரிய, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குறித்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 32ஆவது இடத
ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் 30 பேர் அடங்கிய பூர்வாங்க குழாத்தில் இடம்பிடித்த வீரர்கள் யார்? குறித்த விபரங்களை இந்தக் காணொயில் பார்க்கலாம். The post WATCH – ஒருநாள் உலகக் கிண்ண இலங்கை அணியில் இணையும் இளம் வீரர்கள்! appeared first on ThePapare.com. ...
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதீஷ பத்திரன ஏன் ரொனால்டோ போன்று கொண்டாடுகின்றார்? இந்த ஆண்டுக்கான IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதனை அடுத்து ஆர்ச்சரின் பிரதியீட்டு வீரராகவே கிறிஸ் ஜோர்டன் இணைக்கப்பட்டிருக்கின்றார். கிறிஸ் ஜோர்டன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் விடயத்தினை மும்பை அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்திருப்ப
ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி டெலோன் பீரிஸின் சகலதுறை பிரகாசிப்பின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்பான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. >> தசுன் ஷானக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியிருந்த ஜப்பான் அணி ஆரம்பம் முதல் ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறியது. ஓட்டவேகத்தை அதிகரிக்க முடியாமல்