நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட ஆப்கானிஸ்தான் குழாத்தில் அனுபவ சகலதுறை வீரர் குல்பதீன் நயீப் இணைக்கப்படவில்லை என்பதுடன், கடைசியாக நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் போட்டியில் விக்கெட்காப்பாளராக செயற்பட்ட ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். >>மீண்டும் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் ரங்கன ஹேரத் இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் நவீன் ஷர்டான் உபாதை கா
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலைய
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கையின் முன்னாள் சுழல்பந்து வீச்சு ஜாம்பவான் ரங்கன ஹேரத் மற்றும் முன்னாள் இந்திய வீரரான விக்ரம் ரத்தோர் ஆகிய இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வ
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளது. >> நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு லண்டன் ஓவல் அரங்கில் நேற்று (07) தொடக்கம் ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் இங்கிலாந்தை இலங்கை அணியானது துடுப்பாடப் பணித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட் ஒன்றினைப் பறிகொடுத்த போதும் தொடக்க துடுப்பாட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T20i தொடரிலிருந்து இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் அந்த அணியின் சிரேஷ்ட வீரர்களான மொயின் அலி, ஜொனி பேர்ஸ்டோவ், கிறிஸ் ஜோர்
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. >>திட்டமிடல் நிலையத்தினை (Brain Center) வேறு இடத்திற்கு மாற்றிய இலங்கை கிரிக்கெட்<< இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றிருக்க, மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் அரங்கில் ஆரம்பமாகுகின்றது. அந்தவகையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்க்கும் இலங்கை வீரர்கள் இப்போட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக மொயின் அலி அறிமுகமானார். இடது கை ஆட்டக்காரரான இவர் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்ச மூலமாக இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சேர்த்து இதுவரை 6678 ஓட்டங்களையும், 366 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக குமார் சங்கக்கார தொடர்ந்து செயற்படுவார் என கூறியுள்ள அந்த அணி நிர்வாகம், இருவரும் இணைந்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ம
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சரித் அசலன்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரது சதங்களோடு கொழும்பு அணியானது, கண்டி அணிக்கு எதிராக அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்தருக்கின்றது. >>இங்கிலாந்து ஒருநாள், T20I அணியின் பயிற்றுவிப்பாளராகும் மெக்கலம்! கொழும்பு எதிர் கண்டி கொழும்பு, கண்டி அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் கொழும்பு அணியானது 8 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்கள் எடுத்தது. கொழும
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் சபை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கென இரண்டு தனித்தனி பயிற்றுவிப்பாளர்களை நியமித்திருந்தது. >>நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு! அதன்படி பிரெண்டன் மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வர
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நிறைவடைந்தன. மூன்றாம் நாள் ஆதிக்கத்தினை முழுமையாக கைப்பற்றிய இலங்கை தம்புள்ளை எதிர் கண்டி தம்புள்ளை, கண்டி அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணியை சாமிக்க கருணாரட்னவின் அதிரடி பந்துவீச்சில் 182 ஓட்டங்களோடு கண்டி மடக்கியதோடு, பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்
இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) திட்டமிடல் நிலையத்தினை (Brain Center) இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >>பெடிங்கமின் அதிரடி ஆட்டத்துடன் வெற்றியீட்டிய தென்னாபிரிக்கா A அணி<< அதன்படி திட்டமிடல் நிலையமானது தற்போது இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இருந்து ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்திற்கு (High Perfomance Center) மாற்றப்பட்டிருக்கின்றது. இதேநேரம் புதிதாக கிரிக்கெட் உயர் செயற்த
தென்னாபிரிக்கா A அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ஓட்டங்களை விளாசியிருந்த லஹிரு உதார, இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடினார். இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 90 ஓட்டங்களை பெற்ற போதும் சதத்தை தவறவிட்டார். >>அபார சதங்களை விளாசிய சரித் அசலன்க, தசுன் ஷான
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியானது முழுமையான அதிக்கத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது. >> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மொயின் அலி லண்டன் ஓவல் அரங்கில் இந்த வெள்ளிக்கிழமை (06) தொடக்கம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்ட போது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை (325) அடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணியானது 211 ஓட்ட
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான ஏழு அணிகளுக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் படைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியானது துடுப்பாட்ட சரிவில் இருந்து மீள போராடி வருகின்றது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த ஒல்லி போப் லண்டன் ஓவல் அரங்கில் இந்த வெள்ளிக்கிழமை (06) தொடக்கம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் மழையின் தாக்கம் ஏற்பட்டதனால் 44.1 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்டநிறைவில் குறிப்பிட்ட ஓவர்கள் அனைத்திற்கும் முதல் இன்னிங்ஸில் ...
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி இருந்தார். மேசையில் சிவப்புக்கலரில் `கோலாவும்’, மஞ
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F44 பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் சமித்த துலான் கொடிதுவக்கு, புதிய உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது. இம்முறை பராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர். இந்த நிலையில், நேற்று (02) இரவு நடைபெற்ற ஆண்களுக
அடுத்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் தொடர்பிலும், அதற்கான காலப்பகுதி தொடர்பிலும் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு! அந்தவகையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை, லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் மழை நிலைமைகளைக் கருத்திற் க
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய விரைவு (பிளிட்ஸ்) செஸ் போட்டியில் இலங்கை வீரர்கள் 4 தங்கம், 7 வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை வென்றெடுத்தனர். இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டித் தொடரானது வஸ்கடுவை, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி சந்துலா தஹம்தி, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரியின் அமீஷா ஷெனாலி விஜேசிங்க, 12 வயதுக்குட்பட்ட பெண