இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டவீரரான விராட் கோலிக்கு அவுஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. >>பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதலுடன் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பம் இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி இன்று (26) அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆரம்பமாகியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் பெற்ற 19 வயது வீரரான சேம் கொன்ஸ்டாஸினை வே
இலங்கை கிரிக்கெட் சபை “ஸ்ரீலங்கா கிரிக்கெட் லைவ்” (Sri Lanka Cricket Live) என்ற பெயரில் தங்களுடைய உத்தியோகபூர்வமான செயலி (App) ஒன்றிணை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலியினை பயன்படுத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டாவது T20 போட்டியில் இலங்கை U19 மகளிர் அபார வெற்றி இந்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன்
பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்குட்டோருக்கான அகில இலங்கை கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கு தொடர்ச்சியாக 13ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்க CBL சமபோஷ நிறுவனம் பெருமையுடன் முன்வந்துள்ளது. இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தினால் (SSFA) ஏற்பாடு செய்யப்படும் ‘CBL சமபோஷ 14 வயதுக்குட்பட்டோருக்கான பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடர் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தனது வழிகாட்டல்களையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. இந்தப
மிலானின் ரொசோநேரி அணியும் கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகமும் இணைந்து, AC மிலான் அணியின் பயிற்சி நெறியாள்கையை புதிய பகுதிகளில் பரப்ப முடிவெடுத்துள்ளன. எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று நகரங்களில் மிலான் இளையோர் முகாம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதை AC மிலான் பெருமையுடன் அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் அக்கழகத்தினால் நடத்தும் முதல் முயற்சி ஆகும். இந்த நல்லெண்ண முயற்சி கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டதுடன், உலகளாவிய வளர்ச்ச
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >>அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் சம்பியன்களாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்<< இலங்கை கிரிக்கெட் யாப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களுக்கு இன்று (20) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக பொதுக்கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யாப்பு மாற்றங்களில் முக்கிய விடயமாக தீர்மா
நியூசிலாந்து பதினொருவர் அணியுடன் நடைபெற்ற T20 மற்றும் T10 பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் இலங்கை கிரிக்கெட் அணியானது முறையே 32 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. >>கௌண்டி தொடரில் விளையாடவுள்ள அசித்த பெர்னாண்டோ நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இந்த நிலையில் இந்த தொடர்களுக்கு முன்னதாக இன்று (23) இலங்கை வீரர்கள் நியூசிலாந்து பதினொருவர் அணியினை T10 மற்றும்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் வழிகாட்டுதலுடன் (FFSL) மான்செஸ்டர் கால்பந்து அகடமியானது (MSA) அங்குரார்ப்பண Youth President’s Cup 2025 கால்பந்து தொடரினை ஒழுங்கு செய்திருக்கின்றது. >>2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில் நடந்தவை!<< அந்தவகையில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்த கால்பந்து தொடரில் மொத்தமாக இலங்கையின் 8 பிரபல கால்பந்து அகடமிகளின் அணிகள் பங்கேற்கவிருக்கின்றன. இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கும் இந்த கால்பந்து தொடரின் போட்டிகள் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வரையில்
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மஞ்சி சுப்பர் லீக் தேசிய கரப்பந்தாட்டப் சம்பியன்ஷிப்பின் ஆடவர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும், மகளிர் பிரிவில் இலங்கை விமானப்படை அணியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. இலங்கையின் முன்னணி 17 அணிகள் பங்குகொண்ட இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை வென்னப்புவ, சேர் அல்பர்ட் எப். பீரிஸ் உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை மின்சார சபை அணியை எதிர்கொண்ட துறைமுக அதிகாரசபை அணி 3–0 என ...
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 140 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-1 என ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி முன்னதாக ஒக்லேண்டில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட தீர்மானித்தன
சுற்றுலா அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் கொண்ட ஆஸி. வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியானது அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் பேட் கம்மின்ஸிற்கு அவரது குழந்தையின் பிறப்பு காரணமாக ஓய்வு வழங்கியிருக்கின்றது. >>ஒருநாள் தொடரினையும் பறிகொடுத்த இலங்கை வீரர்கள்<< மறுமுனையில் ஆஸி. அணியானது 21 வயது நிரம்பிய கூப்பர் கொன்னொலியினை முதல் தடவையாக இலங்கை தொடரில் இணைத்திரு
லங்கா T10 சுப்பர் லீக் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா டைடன்ஸ் அணியினை ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் வீரர்கள் 26 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக்கின் சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றனர். லங்கா T10 சுப்பர் லீக்கில் தோல்வியுறாத ஜப்னா டைடன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகள் இடையிலான இறுதிப் போட்டியானது நேற்று (19) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. >>லங்கா T10 சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜப்னா, ஹம்பாந்தோட்டை அணிகள்&
ஜப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post தசுன் ஷானக தலைமையில் சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்! appeared first on ThePapare. ...
இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் கிளாமோர்கன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 27 வயதான இவர், இலங்கை கிரிக்கெட்டின் தடையில்லா சான்றிதழுக்கு (NOC) உட்பட்டு, 2025 பருவகாலத்தின் ஆரம்பத்தில் டிவிஷன் 2 பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற முதல் 7 கௌண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடவுள்ளார். கிளாமோர்கன் அணிக்காக 3 வடிவங்களிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளது அந்த அண
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமப்படுத்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதும், மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடர் தோல்வியை தவிர்த்திருந்தது. >>மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் U19 மகளிர் அணிக்கு வெற்றி<< இந்த நிலையில் கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் ...
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்தின் 15 பேர்கொண்ட குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் சென்ட்னர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் வில்லியம் ஓ ரோர்க் மற்றும் பென் சீர்ஸ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். >>ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி<< இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், லொக்கி பேர்குஸன் மற்றும் டெவன் கொன்வே ஆகியோர் சம்பியன்ஷ் கிண்ணத
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதின் கீழ் அணி பந்துவீச தீர்மானித்ததுடன், அற்புதமாக செயற்பட்டு பங்களாதேஷ் அணியை 109 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. >>ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?<< லிம்மி திலகரட்ன, பிரமுதி மெத்சரா மற்றும் ரஷ்மிகா செவ்வந்தி ஆகியோர் பந்துவீச்சில் ச
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது T20i போட்டியில் நியூசிலாந்து 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. >>முதல் T20I போட்டியில் இலங்கை அணி எதிர்பாரா தோல்வி<< நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது T20i போட்டி முன்னதாக மெளன்ட் மெங்னாயில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர். இப்போட்டிக்கான இலங்கை குழாம
அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள் தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி. 15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000. ...