சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்ததனை தொடர்ந்து, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் புதன்கிழமை (27) காலி நகரில் ஆரம்பமாகின்றது. >> ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இந்த நிலையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள், T20I தொடர்களில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. இதில் ஒருநாள் தொடரில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்ப
அடுத்த ஆண்டின் (2023) ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று வகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவிருக்கின்றது. WATCH – ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் என்ன? இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகின்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகவுள்ளதோடு, இரண்டாவது டெஸ்ட
இலங்கை A கிரிக்கெட் அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் கடைசி நாளான இன்று (24) 330 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய A அணிக்காக ஜிம்மி பியர்ஸன் மற்றும் ஹென்றி ஹன்ட் ஆகியோர் குவித்த சதங்கள் மற்றும் ஆரோன் ஹார்டியின் அரைச் சதம் என்பன அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. இதன்படி, இரண்டு போட்டிகள் ...
அவுஸ்திரேலிய சுழல் பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னை கௌரவப்படுத்தும் காலி டெஸ்ட், இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த வோர்னர் – நெதன் லையன், சங்கக்கார, மஹேல, டில்ஷானை பின்தள்ளி T20 இல் அதிரடி சாதனை படைத்த சமரி அத்தபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம். The post WATCH – முரளி-வோர்ன் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இலங்கை? |Sports RoundUp –
அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தானின் 18 பேர் அடங்கிய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை – பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது! ஜூலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த டெஸ்ட் குழாத்தில் தனது உடற்தக
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 29ஆவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் (MCA) இடையிலான சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் அணி MODE Engineering அணிக்கு எதிராக 4 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, தொடரின் சம்பியன் பட்டத்தினையும் தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றது. MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள் கொழும்பு MCA மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, MODE Engineering அணி முதலில் துடுப்பெட
இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியானது, பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணியானது இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த தொடரில் விளையாடவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதல்தர ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சம்மேளனம் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளதுடன், தொடரில் பங்கேற்கவுள்ள
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடர் குறித்து இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில். The post WATCH – சாதனைகள் செய்த இலங்கை கிரிக்கெட் அணி | Cricket Galatta Epi 80 appeared first on ThePapare.com. ...
இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (23) நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை A கிரிக்கெட் அணிக்காக மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிபுன் தனன்ஜய மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து வலுச்சேர்த்திருந்தனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இலங்கை A அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. ...
இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவுக்கு வந்தது. இதில் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஜிம்மி பியர்ஸன் அரைச் சதமடித்து அசத்த, இலங்கை அணியின் பந்துவீச்சில் 22 வயது இளம் சுழல் பந்துவீச்சாளரான லக்ஷித மானசிங்க 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். சுற்றுலா அவுஸ்திரேலிய A அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெ
பிக் பேஷ் T20 லீக்கின் (BBL) புதிய பருவத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். அதன்படி உஸ்மான் கவாஜா ஒப்பந்தத்திற்கு அமைய அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடவிருக்கின்றார். வெண்டர்சேவின் டெஸ்ட் அறிமுகத்துடன் களமிறங்கும் இலங்கை! ஏற்கனவே பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஆடியிருந்த கவாஜா, அவ்வணிக்காக இதுவரை கூடுதல் ஓட்டங்கள் பெற்ற துடுப்பா
அர்ஜன்டீனா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மரணத்தினை தடுக்க தவறினர் என்கிற குற்றச்சாட்டில், அவரினை பராமரித்த மருத்துவ அதிகாரிகள் எட்டுப்பேர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு டியாகோ மரடோனா இரத்தக்கசிவு ஒன்றுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை சத்திரசிகிச்சை ஒன்றில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் தன்னுடைய 60ஆவது வயதில் உயிரிழந்தார் WATCH – சம்பியன்ஸ் லீக் மூன்றாம் வாரத்தில் அசத்திய அணிகள் | FOOTBALL ULAGAM அதேநேரம் கொக்கெயின் என்னும் போதைப் பொருள் மற்றும் மதுவிற்கு அடிமையாகியி
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் டிராவிஷ் ஹெட் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவிஷ் ஹெட் இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது தொடை தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இதன்காரணமாகவே, நாளை நடைபெறவுள்ள போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள் குறித்த இந்த விடயத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் உற
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் வெற்றி, துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்பு மற்றும் துனித் வெல்லாலகேவின் எதிர்காலம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக (தமிழில்) The post WATCH – துடுப்பாட்ட வீரர்களின் முன்னேற்றத்துக்கான காரணம் என்ன? – ஷானக appeared first on ThePapare.com. ...
வர்த்த நிறுவனங்கள் (MCA) இடையிலான சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் HNB அணியினை வீழ்த்திய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியும், ஹேய்லிஸ் குழுமத்தினை வீழ்த்திய MODE Engineering அணியும் தெரிவாகியிருக்கின்றன. இலங்கையுடன் மோதும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு HNB எதிர் ஜோன் கீல்ஸ் NCC மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் HNB வங்கி அணிக்கு எதிராக ஜோன் கீல்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய HNB அணி .
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. வோர்ன்-முரளி கிண்ணமாக விளையாடப்படும் இந்த டெஸ்ட் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் திமுத் கருணாரத்ன! இந்த டெஸ்ட் போட்டியானது அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேர்ன் வோர்னின் மறைவை நினைவுகூறும் வகையில்,