கால்பந்தில் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள ஆர்ஜென்டீன வீரர் லியனல் மெஸ்ஸி, தனது தீவிர ரசிகரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 வயது சிறுவன் முர்தஸா அஹமதியை கட்டாரில் வைத்து சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டு சிறுவன் முர்தாஸா அஹமதி, தான் அதிகம் விரும்பும் கால்பந்து வீரரான மெஸ்ஸியின் டி சேர்ட் (ஜேர்சி) இலக்கமான 10ஆம் இலக்கத்தை ஒரு பொலித்தீன் பையில் எழுதி, அதனை டி-சேர்ட் போன்று அணிந்து எடுத்த புகைப்படம் அண்மைக்காலமாக சர்வதேச அளவில் ஊடகங்களில் அதிகமாகப் பரவி வந்தன. மெஸ்ஸின் தீவிர ரசிகரான ...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 (டிவிஷன் 2) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் சம்பியன் கிண்ணத்தை கெலிஓய கால்பந்து கழகம் சுவீகரித்துக்கொண்டது. இவ்வணி இறுதிப் போட்டியில் ரட்னம் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்தியதன்மூலமே இந்த வெற்றியை அடைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இடம்பெற்று முடிந்த அரையிறுதிப் போட்டியில் ரட்னம் விளையாட்டுக் கழகம், பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோன்று, கெலிஓய கால
இலங்கை கிரிக்கெட் சபை நடத்தவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டு வீரர்கள் தம்புள்ளை அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் U19 சர்வதேச தொடர்கள் மற்றும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள U19 உலகக் கிண்ணத் தொடர்களுக்கான 30 வீரர்களை தெரிவுசெய்யும் முகமாக, எதிர்வரும் 12ம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை பயிற்சி முகாம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தவுள்ளது. ஐசிசியின் 11 போட்டித் தொடர்களை நடத்த 17 நாடுகள் விருப்பம் இந்த பயிற்சி முகாம் கண்டி – அஸ்கிரிய கிரிக்கெட் ...
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக…. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில் முன்னாள் வீரர்களான அநுர தென்னக
இலங்கை A அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதல் இன்னிங்சுக்காக பெற்ற சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்கமால் பெற்ற 39 ஓட்டங்களின் உதவி மற்றும் பந்து வீச்சாளர்களின் சிறந்த திறமை என்பவற்றால் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் A அணிகும் இலங்கை A அணிக்குமிடையிலான நான்கு நாள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று மேற்கிந்திய தீவுகள் A அணியின் ...
கேப்டவுன், நியூலன்ட்ஸில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 4-0 என முன்னிலை வகிக்கிறது ஏற்கனவே, 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இன்றைய தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் தென்னாபிர
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இன்று நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவது T-20 போட்டியில், தமது துல்லியமான பந்து வீச்சினால் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது. எனினும், முன்னர் நடைபெற்ற போட்டிகளின் வெற்றி காரணமாக இலங்கை அணி தொடரை 2-1 என வெற்றி கொண்டு கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. அடிலைட் நகரில் ரம்மியமான மாலைப் பொழுதொன்றில் ஆரம்பாகிய இப்போட்டியில், கடந்த இரண்டு போட்டிகளினையும் போன்று இப்போட்டியின் நாணய சுழற்சியினையும் தனதாக்கிய இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க, இப
இசிபதன கல்லூரி அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 2015/16ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் முதலாவது இரட்டை சதம் அடித்ததன் மூலம் இசிபதன கல்லூரி அணி இலகுவான வெற்றியைப் பதித்தது. கொழும்பு இசிபதன கல்லூரி எதிர் ஜனாதிபதி கல்லூரி ராஜகிரிய கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு இசிபதன கல்லூரி மற்றும் ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இசிபதன கல்லூரி அணி வீரர் பத்தும் நிசங்கவின் அபார இரட்டைச் சதத்தின் உதவியோடு அந்த ...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவுடன் இலங்கை அணி மோதவுள்ள T-20 தொடருக்காக, லசித் மாலிங்க இந்த வாரம் தென்னாபிரிக்கா பயணமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது லசித் மாலிங்க, தனது இரண்டு முழங்கால்களிலும் வலியை உணருவதாக முறையிட்டார். இதனைத் தொடர்ந்தே அவர் குறித்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். லசித் மலிங்கவின் அடுத்த
சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, சிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் சிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் உடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடருக்கு, இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வழமையாக இலங்கை அணியை வழி நடாத்தும் சகலதுறை ஆட்டக்காரர் எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் துணைத் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் காயம் காரணமாக இம்முறை அணியில் இடம் பெறாத காரணத்தினாலேயே, 31 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இலங்கை அணியை வழி நடாத்த தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வத
கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது. கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு ssc சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது, மைதானத்திற்கு வெளியே, சங்கக்காரவை ஒத்த கவர்
தற்பொழுது கடினப் பந்து கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் இலங்கையின் பிரதேசங்கள் என்று குறிப்பிடும்பொழுது, அதில் முதலில் இருப்பது வட மாகாணமே. 30 வருட கால யுத்தத்தின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் அப்பிரதேச வீரர்கள் கிரிக்கெட்டில் காண்பித்து வரும் சிறந்த திறமைகள் இதற்கு சான்றாக உள்ளன. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுசரணையுடன் தற்பொழுது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் வட மாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக குறித்த மாகாணத்தில்
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் நிறைவில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்ற நிலையில், மூன்றாவது போட்டியையும் வென்று, அவுஸ்திரேலிய அணியை 3-0 எனத் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள வேண்டுமென, இலங்கை அணியின் பிரதம தேர்வாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன்னைய தொடர்கள் பலவற்றில் தோல்விகளைச் சந்தித்த இலங்கை, எவரும் எதிர்பாராத விதமாக, அவுஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துள்ளது. இந்நிலையில் கருத
கடந்த சில வாரங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவிய மழை மற்றும் சீரற்ற காலநிலையால் சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன் 140, 000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 545,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியை திணறடித்த இலங்கையின் துடுப்பாட்டம் குறித்த போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்க
இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட T2௦ தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்குபற்ற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜொகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது T2௦ போட்டியில் காயமுற்ற நிலையில், அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடாத்தியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், குறித்த போட்டியின் பின்னர் நாடு திரும்பியிருந்தார். தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநா
ஆக்கம் – ஜோன் ஹென்ரி (சின்னா டெனி) பல சுவாரஷ்யமான ஆட்டங்களுக்கு சொந்தக்கார அணி ரசிகர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பை கொடுக்கும் அணி பல ஆட்டங்களை இறுதி ஓவர் வரை கொண்டு சென்ற அணி தோற்று விடுவோம் என நாம் எதிர்பார்த்த ஆட்டங்களை, சற்றும் எதிர்பாராத வண்ணம் வென்று, சந்தோசத்தின் உச்சத்தில் ரசிகர்களை ஆழ்தும் ஒரே ஒரு அணி இந்தியாவின் ஓர் மாநிலத்தை விட குறுகிய பரப்பைக் கொண்ட எம் தேசம் எனினும், 50 ஓவர்கள், T-20 உலகக் கிண்ணங்களை, கிரிக்கெட்டின் ஜாம்பவான்களே வெல்லாத போதும் ...
முரளி கிண்ண கிரிக்கட் போட்டிகள் நேற்று (21) ஆரம்பமாகின. இந்த நிலையில் முரளி கிண்ணத்தில் இன்றும் சில போட்டிகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் பொலன்னறுவை பெண்கள் அணி எதிர் மொனராகல பெண்கள் எகடமி அணி பொலன்னறுவை பெண்கள் அணி மற்றும் மொனராகல பெண்கள் எகடமி அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொனராகல பெண்கள் எகடமி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. போட்டியின் சுருக்கம் மொனராகல பெண்கள் எகடமி அணி – ...
இலங்கை கால்பந்தில் ஒரு காலம் அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வந்த மன்னார் பிரதேசத்தின் கால்பந்து லீக் தற்போது செயலற்று, முடங்கிக் கிடப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலைமையானது, அப்பிரதேச கால்பந்தின் எதிர்காலம் குறித்து ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக திறமையான கால்பந்து வீரர்களையும், சிறந்த அணிகளையும் கொண்டிருந்த ஒரு பிரதேசமாக மன்னார் மாவட்டம் இருந்தது. கடந்த 3 தசாப்த யுத்தத்தினால் வடக்கின் பல பகுதிகளிலும் விளையாட்டு, குறிப்பாக கால்பந்து சில பாதிப்புக்களை ஏற்படுத்திய போதும், மன்னா
ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாளான இன்று களமிறங்கிய இலங்கை அணி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அசேல குணரத்னவின் அபார துடுப்பாட்டத்தினால் கடும் போராட்டத்துக்குப் பின்னர் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த 377 ஓட்டங்களை எட்டி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தமையே இதுவரையில் இ
கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் பெற்று வருகின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது அதிரடியாக T-10 போட்டிகளை நடாத்த களம் காண ஆயத்தமாகவுள்ளது. இந்திய அணியால் ஒரு நாள் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை 10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடர், கிரிக்கெட் உலகின்