எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி கொழும்பு R.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவிருக்கும் இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இலங்கை மண்ணில் முதல் தடவையாக இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படவுள்ள போட்டியாக அமையவுள்ளது. இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான முதல் தர, நான்கு நாள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியில் கொக்கபுரா வகையை சேர்ந்த இளஞ்சிவப்பு பந்தை அறிமுகப்படுத்தி விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எனினும் இப்போட்ட
இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் பேசும் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி, மட்டக்களப்பைச் சேர்ந்த ரத்னராஜ் தேனுரதன், கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் மற்றும் கொழும்பில் இருந்து டெஹான் ஷாப்டர் ஆகிய மூன்று வீரர்களும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். >> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை அத்துடன், இந்த வீரர்கள் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி
இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கனிஷ்ட அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. இதில் நிப்புன் ரன்சிக்க மற்றும் ஏனைய சக பந்து வீச்சாளர்கள் முழு திறமையையும் வெளிக்காட்டி இலங்கை கனிஷ்ட அணி, தென்னாபிரிக்க கனிஷ்ட அணியை குறைவான ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 77 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்துள்ளது. இதன் மூலம், இலங்கை கனிஷ்ட அணி இத்தொடரின் சம்பியனாக முடிசூடிக்கொண்டதுடன் இந்த முக்கோண தொடரில் தென்னாபிரிக்கா உடனான தொடர் தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளியை
விளையாட்டுத்துறை திணைக்களமும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இதில், வழமை போன்று மேல் மாகாணம் கூடுதலான பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் போட்டி நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இம்முறை இடம்பெற்ற போட்டிகளில் 4 தேசிய சாதனைகளும், 2 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி, இலங்கை தரப்பிலான அணியின் துடுப்பாட்ட ஆதிக்கத்துடன் இன்று சமநிலையில் நிறைவுற்றது. தமிம் இக்பாலின் சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணி வலுவான நிலையில் நேற்று மொரட்டுவ டி சொய்ஸா மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், முதல் இன்னிங்சிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றி
தென் ஆபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து ஏபி. டி வில்லியர்ஸ் பதவி விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக டூ ப்ளெஸிஸ் புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை தென் ஆபிரிக்க அணியை, அணித் தலைவராக வழிநடத்திய ஹசிம் அம்லா தலைமை பதவியிலிருந்து விலகியதன் பின்னர், தலைமைப் பொறுப்பெடுத்த ஏபி. டி வில்லியர்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். எனினும், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து ...
அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையில் நடைபெற்று முடிந்த T-20 போட்டியில், தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் பிரதமர் பதினொருவர் அணியை வீழ்த்தி வெற்றியினை சுவீகரித்துள்ளது. தென்னாபிரிக்காவுடனான சுற்றுப் பயணத்தினை நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அவுஸ்ரேலியாவுடன் இடம்பெற இருக்கும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட கடந்த வாரம் அவுஸ்திரேலியா பயணமாகியிருந்தது. T-20 தொடரிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அ
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்ற இலங்கை அணியை வழிநடாத்திய தினேஷ் சந்திமாலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தை பாகிஸ்தான் தமது தாயகமாக தத்தெடுத்துக்கொண்ட பின்னர் டெஸ்ட் தொடரொன்றில் முதற்தடவையாக இலங்கை அணியினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் வரை தமது சொந்த மண்ணில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வியடை
கடந்த 2016ஆம் அண்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் நாட்காட்டியில் குறிப்பிடும் விதத்தில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும் வெற்றிகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். >> கிரிக்கெட் உலகில் பலம் மிக்க டெஸ்ட் அணி என்று கருதப்படும் அவுஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக வெற்றி கொண்டது. இதன்மூலம் இலங்கை அணி வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணியை வைட்வொஷ் செய்த பெறுமையையும் பெற்றது. இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட டி.எம் டில
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்காக வழங்கும் தரம்-II கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பாடநெறியினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் பத்மனாதன் லவேந்திரா ஆகியோர் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளனர். பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இதன் மூலம் இந்த இரண்டு பயிற்சியாளர்களும் இலங்கை கிரிக்கெட் சபை வழங்குகின்ற தரம்-II கிரிக்கெட் பயிற்சியாளர் பாடநெறியி
இன்று நடைபெற்று முடிந்த சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான, 5 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், டக்வத் லூயிஸ் முறையில் 47 ஓட்டங்களால் இலங்கை A அணி வெற்றியினை சுவீகரித்துள்ளது. இந்த ஒரு நாள் தொடர் இலங்கை தேசிய வீரர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், மோசமான காலநிலையினால் சற்று தாமதமாக தொடங்கியது. நாணய சுழற்சியினை தன்வசமாக்கி கொண்ட, இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் முதலில் ...
இறுதிப் பந்து வரை கிரிக்கெட் ரசிகர்களை பதட்டத்தில் வைத்திருந்த இந்த விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. ஜிம்பாவேயில் நடைபெறுகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் என்ற நிலையில் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் கள
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 5,000 அல்லது 10,000 ஓட்டங்கள் பெறுவது என்பது எவ்வாறு ஒரு மைல்கல்லாக அமைகின்றதோ, அதேபோன்றுதான் பாடசாலைகள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் குவிப்பதென்பது பாடசாலை வீரா்களைப் பொறுத்தமட்டில் மிகப்பெரிய ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது. அந்த மகத்தான சாதனையை அல்லது மைல்கல்லை 2013/2014 பாடசாலை கிரிக்கெட் பருவ காலத்தில் எட்டியவர்கள் பட்டியலில் இரண்டாமவராக இணைந்து கொண்டவர்தான் இலங்கையின் கிழக்கில் பிறந்து மேற்கில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் நிக்ஸி அஹமட். பாடசாலை கிரிக்கெட் வரலாற்றி
இன்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. பந்து வீச்சாளர்கள் அபாரம் : மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்? யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 111 ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இன்று.. நேற்றைய தினம் யாழ் மத்திய ...
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர இன்று மாலை கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்த, ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற அபாயகரமான விபத்தொன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளின் மீதே குலசேகரவின் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். பலத்த காயத்துக்கு உள்ளாகிய மோட்டார் வண்டியை செலுத்திய நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு எடுத்து
யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் மாகாண ரீதியில் நடாத்திய பாடசாலை அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளது. தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. இத்தொடரின் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் நேற்று யாழ். துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இறுதிப்
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் 2016, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பாக டி. பி. ஹேரத் முதியான்சேலாகே வெண்கலப் பதக்கத்தை வென்றடுத்தார். இலங்கை நேரப்படி மாலை, 6 மணிக்கு பிரேசிலிலுள்ள ரியோ ஒலிம்பிக்ஸ் ஸ்டேடியத்தில் இப்போட்டி இடம் பெற்றது. இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்துகொண்ட டி. பி. ஹேரத் 58.23 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். இந்தியாவை பிரதிநித்துவப்படுத்திய தேவேந்திரா 63.97 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், குவோ சுன் லியாங் 59.93 புள்ளிகளைப
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி ஆகியவற்றிடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் பயிற்சிப் போட்டியில், மிக நேர்த்தியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை தரப்பு போட்டியில் இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக சென்று வெறும் 2 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி த்ரில்லர் வெற்றியினை பெற்றுக்கொண்டது. இலங்கை சுற்றுப் பயணத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி, எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அணியுடன் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரினை அடுத்து இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதவுள்ளது. இத்தொடரில் இலங்கை அணி சார்பாக விளையாடவுள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை தேசிய அணியின் தேர்வாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். VISIT THE #SLVBAN HUB இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்சிற்கு காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், இம்மாதம் 25ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரிற்கு இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க தொடர்ந்தும் செயற்படவுள்ள
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று முடிவடைந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மொத்தமாக நான்கு தேசிய சாதனைகளும், இரண்டு போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரமும் தேசிய சாதனையொன்றை முறியடித்து யாழ்ப்பாணத்திற்கு மாத்திரமன்றி முழு வடக்கிற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்தார். வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்றிருந்த அனிதா, 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து கோலூன்றி பாய்தலில் புதிய தேசிய சாதனையை நிகழ்தினார். இவரது இந்த சாத