ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இலங்கை தேசிய அணியை தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. அதற்கமைய இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த வீரர்கள் தெரிவு இம்மாதம் (ஜுன்) 13ஆம் (நாளை) மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில் எதி
இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியுள்ளதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணியினால் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 317 ஓட்டங்களைப் பெற தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 73 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்கள
அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டிகளில் வெளிக்காட்டிய திறமையின் காரணமாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் மற்றும் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர், முறையே துடுப்பாட்ட வீரர்களுக்கான மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக் கொண்ட 124 மற்றும் 4 என்ற ஓட்ட எண்ணிக்கைகளுடன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை பின்தள்ளிய ஜோ ரூட் இரண்டாம்
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரும் அதனைத் தொடர்ந்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரும் சிம்பாப்வே மண்ணில் நடைபெற உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை நேற்று உத்தியோகபூர்வாமாக தெரிவித்துள்ளது. இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளும் ஹராரேயில் நடைபெற உள்ளதோடு 1ஆவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் .
இளம் விளையாட்டு வீரர் ஒருவரின் ஆகாரத்தில் மிகவும் முக்கியமான அங்கம், அவர் உள்ளெடுக்கும் திரவ ஆகாரமே அன்றி, அவர் உண்ணும் உணவு அல்ல என்பது ஆச்சரியமான ஆனால் மறுக்க முடியாத உண்மை. முன் இளம் பருவ விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் நீர்மத் தேவைகளுக்கு ஏற்றவாறு, விளையாட்டுக்களில் ஈடுபடும் முன்னரும் பின்னரும் தண்ணீர் அல்லது விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க பானங்களை அருந்துதல் முக்கியமானதாகும். பெற்றோர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் என்ற வகையில் சிறுவர்களை வெப்பத் தாக்கு (Heat stroke) போன்ற வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்க
நேற்று நடைபெற்று முடிந்த நான்காவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் (BPL) இறுதிப்போட்டியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு என்பவற்றில் தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து ராஜ்சாகி கிங்ஸ் அணியினை வீழ்த்திய டாக்கா டைனமைட்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது. சங்கக்காரவின் நிதான ஆட்டம் அதிகளவில் கைகொடுத்த நிலையில் பெறப்பட்ட இந்த வெற்றியின்மூலம் BPL தொடரில் மூன்றாவது தடவையாகவும் அவ்வணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. எனவே BPL இல் அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையையும் டாக்கா டைன
நாளை (26) ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சிறந்த போட்டியைக் கொடுக்கும் என்று தான் நம்புவமாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடர் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் ஆரம்பமாக உள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், அணிகளும் தமது இறுதி தயார்படுத்தல்களில் உள்ளன. ஜப்னா ஸ்டாலியன்ஸ்
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 17 பேர், இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஒப்புதல் அளித்துள்ளதாக கிரிக்கெட் சபை ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. எனினும் இதில் லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்குரிய கொடுப்பனவுகள் தொடர்பாக வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்குமிடையில் மிக நீண்ட காலமாக சர்ச்சையான நிலைமை காணப்பட்டு வந்த நிலையிலேயே இந்த புதிய ஒப்பந்தத்திற்கு வீரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒரு வருடத
இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் களம் கண்ட குருநகர் பாடும்மீன் அணியை, பலமான பின்களம் துணை புரிய 2-0 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு ரட்னம் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் பெருந்தொகையான யாழ். ரசிகர்கள் முன்னிலையில் மின்விளக்கு வெளிச்சத்தின் கீழ் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகியது. போட்டியின் முன்கள வீரர்களின் சிறந்த பந்துப் பரிமாற்றம்
பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண தொடரின் (Independence Cup) இரண்டாவது T-20 போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமன் செய்துள்ளது. பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீள கொண்டு வரும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த சுதந்திர கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நிலையில், தீர்மானமிக்க தொடரின் இரண்டாவது போட்டி லாஹூர் நகரில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சு
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணியானது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளும் ஏற்கனவ்வே நிறைவடைந்துள்ள நிலையில்
சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஹராரே நகரில் உள்ள ஹராரே விளையாட்டு கழக சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின்புதிய அணித்தலைவர் (14 ஆவது) ரங்கன ஹேரத் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பாக சகலதுறை வீரர் அசேல குணரத்னவும், இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்ட பந்து வீச்சாளர
அண்மைய காலங்களில், தொடர் தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருந்த இலங்கை அணிக்கும், இலங்கை அணியின் இரசிகர்களுக்கும் நடந்து முடிந்த இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெறும் 23 வயதேயான இலங்கை அணியின் சுழல் வீரர் அகில தனன்ஞயவின் அபார பந்துவீச்சாகும். பல்லேகலையில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 231 ஓட்டங்களை 47 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடியிருந்த
2017ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடவிருக்கும் இலங்கை தேசிய அணியானது வியாழக்கிழமை (18) காலை இந்நாட்டு மக்கள் அனைவரினதும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்த வண்ணம் இங்கிலாந்து செல்கின்றது. இதற்கு முன்னதாக, தேசிய அணியினை உத்தியோகபூர்வமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வும், இறுதி ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு மொவென்பிக் (Movenpick) ஹோட்டலில் புதன்கிழமை (17) நடைபெற்றிருந்தது. “கடுமையான முயற்சிகளுடன் அமைந்த சிறந்த மதிப்பீடுகளின் பின்னர் தேர்வு செய்யப்பட்ட திறமைவாய்ந்த குழாம் இம்முறை எனக்கு த
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட், டெக்ஸ்சர்ட் ஜேர்சி, ஜோன் கீல்ஸ், சம்பத் வங்கி அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன. இன்று நடைபெற்ற போட்டிகளின் சுருக்கம் மற்றும் முடிவு டிமோ லங்கா எதிர் கொமர்ஷல் கிரெடிட் மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் டிமோ லங்கா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி கட்டுநாயக்கவில் அமைந்துள்ள சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷ
அசேல குணரத்னவின் அதிரடி துடுப்பாட்டம் நம்ப முடியாத அசாத்திய துடுப்பாட்டம் என ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். மே மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி குறித்த 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும், அந்தப் போட்டியில் ஆரோன் பின்ச் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தது. அதேநேரம் குறித்த
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கடும் போராட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணியானது 21 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது. எனவே, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் ஆடியிருந்த இலங்கை வீரர்கள் 40 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தனர். களத்தில் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும்,
1973ஆம் ஆண்டு – நவீத் நவாஸ் பிறப்பு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நவீத் நவாஸின் பிறந்த தினமாகும். முழுப் பெயர் – முஹமத் நவீத் நவாஸ் பிறப்பு – 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி பிறந்த இடம் – கொழும்பு வயது – 43 விளையாடிய காலப்பகுதி – 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2002 வரையான காலப்பகுதி துடுப்பாட்ட பாணி – இடதுகை துடுப்பாட்டம் விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 03 மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – ...
இன்று நடைபெற்று முடிந்த சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், பந்து வீச்சு துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்திருந்த பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றியினை சுவீகரித்துள்ளது. ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் விருந்தினர் அணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கினார். இந்த ஒரு நாள் தொடரிற்காக வழமையான ஆட்டத்திற்கு இலங்
சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம் ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகளிற்கு இடையில் முதற்தடவையாக நடைபெற்று முடிந்த “வெளி சிங்கங்களின் சமர்” என்னும் வருடாந்த கிரிக்கெட் தொடரில், 3 விக்கெட்டுக்களால் எதிரணியை வீழ்த்திய ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலய அணி சம்பியனாக முடிசூடியது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் கிரிக்கெட்டினை விருத்தி செய்யும் நோக்கோடு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தினாலும், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சபையினாலும் இவ்வருடாந்த சமர் ஒழுங்கு செய்யப்பட