நடைபெற்று வரும், இலங்கை A அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின், இன்றைய இரண்டாம் நாளில், இலங்கை A அணி துடுப்பாட்ட வீரர்களின் அதி வலுவான இணைப்பாட்டத்தின் காரணமாக, இலங்கை A அணி நேற்றைய மோசமான ஆட்டத்திற்கு வலுவான பதிலடி ஒன்றினை இப்போட்டியில் வழங்கியுள்ளது. மலிந்த புஷ்பகுமார 7 விக்கெட்டுகள்: முதல் நாள் இங்கிலாந்து லயன்ஸ் வசம் நேற்று தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், லியாம் லிவிங்ஸ்டனின் சதத்துடன் (105),
தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி, அதன்மூலம் 2016இல் பிரிவு-1 இனுள் நுழைந்த இவர்கள், பிரிவு 1இல் காலிறுதி வரை முன்னேறியிருந்தனர். அதிரடி முன்னேற்றம் கண்டுள்ள இவர்கள் இம்முறை பிரிவு-1 மற்றும் FA கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களிலும் இறுதிக்க
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இன்னிங்சுகளில் பூச்சிய ஓட்டம் (Ducks) பெறாமல் இருந்த முதலாவது வீரராக தன்னை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு திக்வெல்ல அறிமுகமாயிருந்த போதும், அப்போது தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை காட்டத் தவறியதனால் அணியில் தொடர்ந்து நீடித்திருக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லாது போயிருந்தது. மீண்டும் 2016ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தனது கவர்ச்ச
இளையோர், வளர்ந்து வரும் மற்றும் முதுநிலை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக, இலங்கை கிரிக்கெட் சபை 65 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த 65 கிரிக்கெட் வீரர்களுக்குமான இந்த ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கைச்சாத்திடப்படவுள்ளன. முதற்கட்ட ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் கைச்சாத்திடப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி இளையோர், வளர்ந்து வரும் மற்றும் முதுநிலை வீரர்கள் ஆகிய மூன்று பிரிவுகள
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, 298 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதலவாது ஒருநாள் போட்டி மாலிங்கவின் 200ஆவது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளதுடன், இதில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4ஆவது
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், காற்பந்தாட்ட கிண்ணத்தை மீண்டும் ஒரு முறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கைப்பற்றியது. செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினுடனான இறுதிப் போட்டியில் 1-0 என வெற்றிபெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சாம்பியனானது. காற்பந்தாட்ட குழு மட்டத்திலான போட்டிகள் பல சுவாரஸ்யங்களுக்குப் பின்னர் முடிவுபெற்றது. குழு A இல் முன்னால் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியனான சபரகம
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்றுவரும் கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டிகளில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெல்லிப் பதக்கமும் கிடைத்துள்ளன. கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 8 பேர் குறித்த போட்டிகளில் பங்கு கொள்வதற்காக இலங்கையில் இருந்து 8 வீர வீராங்கனைகள் பல பதக்க எதிர்பார்ப்புகளுடன் நேற்று முன்தினம் கிரிகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இரண்டு நாட்களைக் கொண்ட இந்த பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷி
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளருமான ரிக்கி பொன்டிங் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் கடந்த பத்து பருவகாலப் போட்டிகளின் அடிப்படையில், அதில் திறமை காட்டிய வீரர்களை வைத்து எப்போதும் சிறப்பாக செயற்படக்கூடிய (All time best XI) ஒரு கனவு அணியை தெரிவு செய்துள்ளார். இந்த பருவகாலத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போட்டிகள் நிறைவை எட்டிவருகின்ற இத்தருணத்தில் மிக்க அவதானத்துடன் வீரர்களின் செயற்திறன் பொன்டிங்கினால் ஆராயப்பட்டு, பதினொரு வீரர்கள் அடங்கி
இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிய வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடர் 2020 இன் ஆரம்பப் போட்டியில் மொரகஸ்முல்ல அணியை 3 – 1 என வெற்றி கொண்ட புளூ ஸ்டார் அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க, அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான மோதல் 3 – 3 என சமநிலையடைந்தது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்த தொடரில் குழு B இல் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான மோதலாக அமைந்தன. ப்ளூ ஸ்டார் வி.க எதிர் மொரகஸ்முல்ல வி.க ...
கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்ய தற்போது இந்திய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்த இரண்டு வெற்றிகளையும் பெறத் தவறியிருக்கும் இலங்கை அணி, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை இழந்துள்ளது. மெதிவ்சின் போராட்டம் வீண்; நான்காவது போட்டியையும் வென்ற இந்தியா சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, ...
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, இரண்டாவது ஒரு நாள் போட்டி சற்று முன்னர் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, சர்வதேச ஒருநாள் வரலாற்றில் மிக முக்கிய தருணமான தனது 800ஆவது ஒருநாள் போட்டியில் இன்று களம் கண்டுள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கைக்கு வழங்கினார். சுழலிற்கு சாதமான இன்றைய ஆடுகளத்தில் தமது 800ஆவது ஒரு நாள் ..
தமிழர்கள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் ஒன்றாக காணப்படும் கபடி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி விளையாடப்படும் ஒரு விளையாட்டாக மாறியிருக்கின்றது. இவ் விளையாட்டில், சிறப்பாகச் செயற்பட்டு இலங்கை நாட்டிற்கும், மட்டக்களப்பிற்கும் பெருமைகள் பல சேர்த்திருக்கும் மீன்பாடும் தேனாட்டின் சாதனை நாயகன் கணேசராஜா சினோதரனுடன் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com ஒரு நேர்காணலை மேற்கொண்டிருந்தது. கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் அந்த நேர்காணலில
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுபர் 12 சுற்று போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் முதல் சுற்றில் வெற்றிபெற்று, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இதில், இலங்கை அணியை பொருத்தவரை ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகிய சுழல் பந்துவீச்சா
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தற்போதையை தலைவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரருமான சனத் ஜயசூரிய அண்மையில் thepapare.com இற்கு பிரத்யேகமான பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அதன்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றுக்கான சனத் ஜயசூரியவின் பதில்களும் உங்களுக்காக. உங்களது தலைமையின் கீழ் உள்ள தேர்வுக் குழுவின் செயல்முறைகள் பற்றி விளக்கமளிக்க முடியுமா? நான் சிறிது காலத்திற்கு முன்னரே அரவிந்த டி சில்வாவிடம் இருந்து இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனினும் இம்முறையானது எனது முதல் பணிவகுப்புக் க
அனைவராலும் எதிர்பார்க்கப்பட 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தொடர் இந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரின் அட்டவணை, போட்டியிடும் அணிகளின் குழுக்கள் மற்றும் இத்தொடர் நடைபெற இருக்கும் மைதானங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் ஆசிய கிரிக்கெட் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இடம்பெறும். இத்தொடரின் இறுதிப்போட்டியானது மின்னொளி விளக்குகளின் துணையுடன் ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் “வடக்கின் சுப்பர் கிங்-2016” கிண்ணத்திற்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது முறையாகவும் நடாத்தப்படும் இந்த வடக்கின் சுப்பர் கிங் தொடரின் போட்டிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. போட்டித் தொடரில் பங்குபற்
இந்தியாவுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என முழுமையாக தோல்வியை சந்தித்ததோடு கடைசியாக தனது சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி 3-2 என தோல்வியையே எதிர்கொண்டது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரி
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இறுதி 2 வீரர்கள் குழாமில், கிளிநொச்சி வீரரான செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதற்தர உள்ளூர் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், நேரடியாக லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும் முகமாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். Read – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 3 தமிழ் வீரர்கள் இறுதியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்வாகம் வெ
தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இ
இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணியுடனான போட்டியினை முன்னிட்டு இன்றைய (ஜுன் 7) தினம் இடம்பெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த வேளையில், முழங்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இந்திய அணியின் அச்சுறுத்தலுக்கு ஈடு கொடுக்குமா இலங்கை அணி? சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக தற்பொழுது இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ThePapare.com இன் ஊடகவியலாளர் தமித் வீரசிங்க, இலங்கை அணி