இலங்கை வீரர்களை ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கு தயார்படுத்தும் நோக்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரொன்றினை இலங்கை கிரிக்கெட் வாரியம் மாகாண ரீதியாக நடாத்தவுள்ளது. “SLC Super Provincial Limited-Over Tournament“ என அழைக்கப்படும் இந்த தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில் கொழும்பு, காலி, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளதோடு, தொடரின் முதற்கட்டப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கிடையே இரு தடவைகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில், புள்ளிகள
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன் – III அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட விலகல் முறையிலான (Knock Out) கிரிக்கெட் சுற்றுத் தொடரின் கிழக்கு மாகாண இறுதிப் போட்டியில் அம்பாறை SSC அணியினரை 178 ஓட்டங்களால் வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மாகாண சம்பியனாக தெரிவாகியுள்ளது. அம்பாறை D.S. சேனநாயக்க கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இப்போட்டியில் விளையாடிய அம்பாறை SSC அணி, முன்னதாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகத்தினையும், ஏறாவூர் யங் ஹீ
2018ஆம் ஆண்டு இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர கிண்ண சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்த இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து வருகின்றது. இதன் காரணமாக 2017/2018 பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் தென்னாபிரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் கைவிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த அதே காலப்பகுதியில் இந்திய அணி தென்னாபிரிக்காவுடன் தொடர் ஒன்றில் விளையாட ஏற்பாடாகியிருப்பதாக இம்மாதத்தின் முற்பகுதியில் தென்னாபிரிக்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட தேசிய மட்ட கால்பந்து சுற்றுப் போட்டியில் பலம் மிக்க கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவாகியுள்ளது. கிண்ணியாவில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், கால்பந்தில் இலங்கையில் முன்னணி அணியாகவும் இந்தப் போட்டியின் நடப்புச் சம்பியனாகவும் உள்ள கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல… பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர
தமது பந்து வீச்சில் முழு திறமையினையும் வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி, சர்வதேச டுவென்டி – 20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கைக்குள் ஒரு அணியினை மடக்கி புதிய உலக சாதனையினை பதிவு செய்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்று வரும், மகளிர் அணிகளிற்கு இடையிலான ஆசிய கிண்ண T20 சம்பியன்சிப் தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் நேபாள மகளிர் அணிகள் மோதின. இதில், 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று இத்தொடரில் தமது முதல் வெற்றியினை ...
காலியில் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாமை, தேசிய அணியின் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாமின் மூலம் மீண்டும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் சந்திமால், நியூமோனியா காய்ச்
கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அதற்கு ஏற்றவாரே, இலங்கை அணி என்றால் துடிப்பு, துணிச்சல், திறமை என்பவற்றை தன்னகத்தே கொண்ட எந்நேரத்திலும் எதிரணியை திணரடிக்கக்கூடிய ஒரு அணி என்ற முத்திரையை பதித்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்னகத்தே வைத்திருந்த ஒரு அணி என்றால் அது மிகையில்லை. மிகப்பெரிய மாற்றங்களுடன் வலுவான நிலையில் இலங்கை ஒரு நாள் குழாம் இந்தியாவுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட … முதன்முறையாக, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், புத்தம் புதிய சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை பெற்றிருந்தார். எமது கிரிக்கெட்டில் அதிகம் மறக்கமுடியாத சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர் அஜந்த மெண்டிஸ். தற்போது, இவர் இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக உள்ளார். தற்போது, அவரின் பயிற்றுவிப்பின் கீழ், அவரைப்போன்றே பந்துவீசக்கூடிய மஹீஷ் தீக்ஷன தன்னுடைய முதல் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். >> சுழ
இன்று, ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரின், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், பங்களாதேஷ் கனிஷ்ட அணியினை டக்வத் லூயிஸ் முறையில் 26 ஓட்டங்களினால் வீழ்த்தி, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரில் முதல் முறையாக இலங்கை கனிஷ்ட அணி இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொள்கின்றது. பங்களாதேஷ் கனிஷ்ட அணியின் தலைவர் செய்ப் ஹஸ்ஸன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி, அணித்தலைவர் செய்ப் ஹஸ்ஸன் மற்றும் மொ
ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவ்வணியுடன் விளையாடிய இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களினால் வெற்றி கொண்டமையினால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் அஞ்செலோ மதிவ்ஸ் பங்குபற்றாத காரணத்தால் தலைமை பொறுப்பு ரங்கன ஹேரத்திற்கு வழங்கப்படது. அவர் இலங்கை அணியை மிக திறமையாக வழிநடத்தியமையினால், தனது முதலாவது தலைமைப் பொறுப்பிலேயே அணியை தொடரில் முழுமையாக வெற்றி பெறச் செய்துள்ளார். ஜி
இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார். புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான
காலியில் நடைபெறும் ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் ஒரு நாள் போட்டிகளில் 1000 ஆவது ஓட்டத்தினைக் கடந்துள்ளார். 17 வருடங்களின் பின்னர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த ஒரு நாள் போட்டியில், குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் முதல் விக்கெட்டினைத் தொடர்ந்து களமிறங்கியிருந்தார். மைதானத்தில் நுழைந்த நேரத்தில் 1000 ஓட்டங்களினை பூர்த்தி செய்ய அவருக்கு மேலதிகமாக 28 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. எனக்கும் மாலிங்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முதல் முறையாக இடம்பெறும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்து சுற்றுத் தொடர் இம்மாதம் 2ஆம் திகதி (நாளை) முதல் 15ஆம் திகதி வரையில் மலேசியாவின் குஷிங் நகரில் இடம்பெறவுள்ளது. இதில் பங்கு கொள்ளும் இலங்கை அணியினர் தாய்நாட்டில் இருந்து வெளியேறி அங்கு சென்றுள்ளனர். Photos: Sri Lanka National Squad Practice Session | Solidarity Cup Sri Lanka National Football Squad Practice Session | Solidarity Cup 2016 குறித்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ...
மேற்கிந்திய தீவுகள் “ஏ” கிரிக்கெட் அணி இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை “ஏ” அணியோடு 3 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் 3 அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இலங்கை “ஏ” அணியின் தலைவராக 28 வயது நிரம்பிய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல் 2 நான்கு நாட்களை கொண்ட ...
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது. ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட
சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC), பலத்த எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்தில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்தில் பங்குகொள்ளும் 8 நாடுகளினதும் வீரர்கள் குழாத்தினை நேற்று (10) ஊர்ஜிதம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம் இத்தொடரில் விளையாட ஒவ்வொரு நாடுகளிலும், ஓய்விலிருந்த சில வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக, தனது ஆறாவது வெற்றிகரமான சம்பியன் கிண்ணத் தொடரில்
இலங்கை அணியின் தேர்வாளர்களான சனத் ஜயசூரிய மற்றும் ஏனைய குழுவினர் இந்திய அணியுடன் இம்மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய இலங்கை குழாமின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இக்குழாமில் T20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமைமிக்க வீரர்களான சீக்குகே பிரசன்ன, தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் காயத்தில் இருந்து மீண்டு தேசிய கடமையைப் பொறுப்பேற்றிருக்கும் பிரசன்ன இறுதியாக ஐ.சி.ச
இலங்கை முழுவதிலும் கிரிக்கட்டை மேம்படுத்தி இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள பாடசாலை கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்க மற்றும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கிரிக்கட் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் முரளி கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று முதல் 25ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம்,போன்ற பகுதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் 16 ஆண்கள் அணிகள் மற்றும் 8 பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளதோடு இந்தப் போட்டியின் இறுதிப் ப
இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் பங்குகொள்ளும் குல்னா டைட்டன்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு BPL டி20 போட்டித் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடிய மஹேல ஜயவர்தன இம்முறை குல்னா டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு பருவகால போட்டிகளுக்காக அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மஹேல ஜயவர்தன அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்குபற்றி வருக