கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் உள்ள அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நான் முன்னர் போன்று சிறந்த முறையில் செயற்படவில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தமையினால், அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே மாலிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்
பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும், சுதந்திர கிண்ணத் தொடரின் (Independence Cup) மூன்றாவது T-20 போட்டியில் 33 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றியாளராக மாறியுள்ளதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-1 என கைப்பற்றியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் வைத்து தீவிரவாதத் தாக்குதல் நடந்த காரணத்தினால் அதன் பின்னர் அந்நாட்டில் சென்று விளையாடுவதற்கு பல நாடுகள் மறுப்பு தெரிவித்திருந்தன. அந்த வகையில் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டினை மீள கொண்ட
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீச அணியினை வழிநடாத்தியிருந்தார் என்னும் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி இரண்டு போட்டிகளில் விளையாடத் தடைவிதித்துள்ளது. இதனால், வரும் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான சாமர கபுகெதர செயற்படவுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, இந்திய அணியுடனான எஞ்சியிருக்கும் மூன்றுபோட்டிகளுக்குமான இலங்கை குழாத்திற்கு, இலங்க
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் அபார சதத்துடன் இலங்கை அணி தம்முடைய முதல் இன்னிங்சினை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. போட்டியின் முதல் நாளில் ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் அரைச் சதங்களுடன் போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்கள் நிறைவில் ...
இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் 3 வீரர்கள் பெற்ற அரைச் சதங்களுடன் இலங்கை அணி தமது இன்னிங்ஸ் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இறுதியாக இந்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 2000ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி நடைபெற்றிருந்தது. அந்த வகையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக ஒருநாள் போட்டியொன்று இங்கு நடைபெறுகின்றது. சூழல் ...
எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட இலங்கைக் குழாம் தற்போது தெரிவு செய்யப்பட்டு வருகின்றது. இத் தகுதிகாண் போட்டிகள் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இலங்கை அணியானது ஈரான், ஓமான் மற்றும் போட்டிகளை நடாத்தும் கிர்கிஸ்தான் அணிகளுடன் குழு A இல் இடம்பிடித்துள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிக்காண் போட்டிகளில் இலங்கை குழு B யில் எதிர்வரும் 2018ஆம் ...
போர்ட் எலிசபெத் நகரில், ‘பொக்சிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26ஆம் திகதி, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. இதன் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது, தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் இலங்கை அணியினை வலுப்படுத்தியுள்ளார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல். தற்போதைய இலங்கை அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் இவர், இதுவரை அறியப்படாமல் இருக்கும் தன்னைபோன்ற திறமைமிக்க வீரர்களை இனங்கான கிராமப்புற கிரிக்கெட் முன்னேற்றப்பட வேண்டும் என்றும், அதற்குரிய ஆதரவு
Your browser does not support iframes. சம்பியனஸ் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகளில் ஒன்றாக இன்று ஆரம்பமாகியிருக்கும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மோதலின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படவுள்ளதோடு, கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி அவ
இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில காலங்களாக உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற குசல் பெரேரா, அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது தசைப்பிடிப்புக்கு உள்ளாகி குறித்த போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார். தற்போது ஓய்விலிருக்கும் அவர், இம்மாத இறுதியில் ஆரம
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விறுவிறுப்பான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் அவாவை பூர்த்தி செய்யும் நோக்கில் சகல அணிகளும் பல்வேறுப்பட்ட வியூகங்களுடன் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் களம் காணவுள்ளன. அந்த வகையில் பி குழுவில் இடம்பிடித்திருக்கும் இலங்கை அணி, சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினாலும் குழுமட்டப் போட்டிகளுடன் வெளியேறிவிடும் என்று பல்வேறுப்பட்ட கிரிக்கெட் நிபுணர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அண்மைய காலங்களில் அணி வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படை
பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான் அணிகளிடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்களை அந்நாட்டுக்கு அனுப்ப முன்னர் அணியின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து விடயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) குறிப்பிட்டுள்ளது. புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தின்போது லாஹூர் நகரில் உள்ள கடாபி மைதானத்தினை நோக்கிச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியி
மார்ச் 7ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள 15 பேர்கள் கொண்ட வீரர்கள் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இத்தொடரில் விளையாட முடியாதுள்ள இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்சிற்குப் பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC) இன்று மாலை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை – பங்களாதேஷ
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள, ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யார் செயற்படுவார் என்பதை கூறும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக (தமிழில்) The post WATCH – இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை கூறும் தசுன் ஷானக appeared first on ThePapare.com. ...
வண்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதியில் டிபென்டர்ஸ் கால்பந்து கழக அணியை பெனால்டியில் 3-1 என வெற்றிகொண்ட ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், முதல் அணியாக தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. சுகததாச அரங்கில் இன்று (23) மாலை இடம்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாவா லேன் வீரர்களே அதிக நேரம் ஆதிக்கம் செலுத்தினர். முதல் 10 நிமிடங்களுக்குள் ஜாவா லேன் வீரர் நவீன் ஜூட் கோல் நோக்கி எடுத்த முயற்சியை டிபென்டர்ஸ் கோல் காப்பாளர் ரங்கன ஜயசேகர பிடித்தார். ...
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மத்திய மாகாண அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு CCC மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) முடிவடைந்த இறுதிப் போட்டியில் மேற்கு மாகாண வடக்கு அணியை எதிர்கொண்ட மத்திய மாகாண அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளியை வென்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை
தென்னாபிரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் படுதோல்வியடைந்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட பின்னர், பல அழுத்தங்களுடன் இன்று அவ்வணியுடனான T-20 தொடரில் மோதவுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி. ஒரு காலத்தில் T-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, இன்று ஆரம்பமாகும் T-20 போட்டித் தொடரில் களமிறங்குவது குறித்து சிலர் மகிழ்ச்சியடையலாம். எனினும், கடந்த சில போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்தியிருக்கும் முடிவுகளை உற்று நோக்கும்போது குறித்த போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றி குறித்து ஊகிக்க முடியாமலே இருக்க
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கால்பந்து தொடரான ‘லா லீகா‘ போட்டித்தொடரின் பார்சிலோனா அணியுடனான தீர்க்கமான போட்டியில் ரியல் மட்ரிட் அணியின் தலைவர் செர்ஜியோ ரமோஸ் போட்டியின் இறுதித்தருவாயில் ஹெடர் முறையில் பெற்ற கோலினால் 1-1 என்ற கொல்கள் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. சர்வதேச கால்பந்தின் ஜாம்பவான்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் கழகங்கள் மோதும் ‘எல் கிளாசிகோ‘ நேற்று பார்சிலோனாவின் சொந்த மைதானமான ‘கேம்ப் நௌ‘வில் நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ரசிகர
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது. பங்களாதேஷ் அணி விளையாடும் 100 ஆவது இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியினை கடந்த டெஸ்ட் போட்டி போன்று இப் போட்டியிலும் தமதாக்கி கொண்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இம்முறை துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாயிருந்த காரணத்தினாலும், இலங்கை அணி முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் மாத்திரமே இப்போட்டியில் களமிறங்குவதும் ரங்கன ஹேரத்தின
கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி சார்பாக பல்வேறுபட்ட திறமைகள் மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சில வீரர்கள ஒருசில போட்டிகளில் ஏற்பட்ட சரிவுகளின் காரணமாக மீண்டும் அணிக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணி வெளியேறி நாடு திரும்பியுள்ள இத்தருவாயில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறித்து பல தரப்பினரும் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் அணியுடன் இணைந்துகொள்ள எதிர்பார்த்துள்ள சில வீரர்கள் க
இன்று நடைபெற்று முடிந்த, 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் மலேசிய அணியுடனான போட்டியில் சுழல்பந்து வீச்சாளர்களின் துணையுடன், அவ்வணியை குறைவான ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தி இலங்கை அணி 8 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றியை சுவீகரித்தது. இந்த வெற்றியின்மூலம் இத்தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளில் ஒன்றாக இலங்கை அணி மாறுகின்றது. மொரட்டுவையில் ஆரம்பமாகிய குழு A இற்கான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் மலேசிய அணியை