இலங்கை U19 பயிற்சி முகாமில் யாழ். வீரர்கள் இருவர்!

Sri Lanka U19 Cricket

2712

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டு வீரர்கள் தம்புள்ளை அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் U19 சர்வதேச தொடர்கள் மற்றும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள U19 உலகக் கிண்ணத் தொடர்களுக்கான 30 வீரர்களை தெரிவுசெய்யும் முகமாக, எதிர்வரும் 12ம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை பயிற்சி முகாம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தவுள்ளது.

ஐசிசியின் 11 போட்டித் தொடர்களை நடத்த 17 நாடுகள் விருப்பம்

இந்த பயிற்சி முகாம் கண்டி – அஸ்கிரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த பயிற்சி முகாமுக்கான தம்புள்ளை குழாத்தில் யாழ். மத்திய கல்லூரி வீரர் ஸ்ரீதரன் சாரங்கன் மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏ. டெஷ்வின் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

புனித பத்திரிசியார் கல்லூரியின் டெஷ்வின் வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் என்பதுடன், இவர் மாகாணங்களுக்கு இடையிலான U15 மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான U15 அணிகளில் விளையாடியுள்ளதுடன், U15 பாடசாலை அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அதேநேரம், ஸ்ரீதரன் சாரங்கன், யாழ். மத்திய கல்லூரி அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் (வலதுகை) ஆவார். இவர், ஆரம்பத்தில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக இருந்ததுடன், தற்போது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடி வருகின்றார்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் மொத்தமாக 75 வீரர்களை தெரிவுசெய்துள்ளதுடன், இந்த வீரர்கள் 2022ம் ஆண்டு U19 உலகக் கிண்ணத்துக்கு விளையாட தகுதியுள்ளவர்களாவர். இவர்கள் அனைவரும் 21 நாட்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். 

இதேநேரம், இந்த வீரர்கள் 15 வீரர்கள் கொண்ட குழாமாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அணிகள் மேல் மாகாண வடக்கு, மேல் மாகாண தெற்கு, தம்புள்ளை, காலி மற்றும் கண்டி என பெயரிடப்பட்டுள்ளன. இந்த அணிகள் 4 T20 போட்டிகள் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளனர். இந்த அனைத்து போட்டிகளும் கண்டி – அஸ்கிரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளன.

அதேநேரம், கொவிட்-19 தொற்று காரணமாக இவ்வருடத்துக்கான பாடசாலை பருவகாலம் நிறுத்தப்பட்ட நிலையில், U19 சுப்பர் ப்ரொவின்ஸியல் தொடரை விரைவில் நடத்துவதற்கான திட்டங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரட்ன, இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பாடாசலை கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான தம்மிக்க சுதர்ஸன U19 அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்மிக்க சுதர்ஸன இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் மையத்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்ததுடன், ரிச்மண்ட் கல்லூரியில் நீண்ட நாட்களாக மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளராக இருந்தார். இவரின் பயிற்றுவிப்பு காலத்தில் தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, தனன்ஜய லக்ஷான் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் உருவாக்கப்பட்டிருந்தனர். தம்மிக்க சுதர்ஸனவுடன் இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் மையத்தின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளனர்.

குழாம்கள்:

  • மேல் மாகாண வடக்கு: Sahil Dias (Wesley College), Bawantha Jayasinghe (Thurstan College), Sadeesh Jayawardena (St. Joseph’s College), Sithija Hewawitharana (Gurukula College), Shevon Daniel (St. Joseph’s College), Vinuja Ranpul (Nalanda College), Mineth Premaratne (Ananda College), Dunith Wellalage (St. Joseph’s College), Raveen de Silva (Nalanda College), Irosha Silva (De Mazenod College), Nipun Premaratne (Thurstan College), Savindu Perera (Maris Stella College), Lisura Sigera (Nalanda College), Senash Fernando (De Mazenod College, Hansaja Jayasinghe (Ananda College)
  • மேல் மாகாண தெற்கு: Abhishek Liyanaarachchi (D.S. Senanayake College), Sakuna Liyanage (Lumbini College), Ryan Fernando (S. Thomas’ College), Tharindu Amarasinghe (Prince of Wales College), Omesh Mendis (Prince of Wales College), Lahiru Dawatage (St. Peter’s College), Eranga Jayakody (Nalanda College), Induwara de Alwis (St. Sebastian’s College), Gishan Balasooriya (Royal College), Yasiru Rodrigo (S. Thomas’ College), Danal Hemananda (St. Peter’s College), Sadisha Rajapaksa (Royal College), Wanuja Sahan (St. Peter’s College),  Vihanga Dimantha (Lumbini College), Charuka Peiris (Sri Sumangala College)
  • காலி: Pawan Sandesh (Devapathiraja College), Harindu Jayasekara (St. Thomas’ College, Matara), Bhanuka Manohara (Richmond College), Vishara Rashmika (Richmond College), Jeewaka Shasheen (Devapathiraja College), Kavindu Thirimanne (Richmond College), Nipuna Ruviru (St. Thomas’ College, Matara), Sasanka Nirmal (Devapathiraja College), Dulash Samuditha (Weeraketiya Central College), Hansamanna de Silva (Richmond College), Malsha Tharupathi (Madampe Central College), Danuja Jayaweera (Mahinda College), Irushika Thimira (Devapathiraja College)
  • கண்டி: Ranuda Somarathne (Trinity College), Chandimal Herath (St. Anthony’s College, Kandy), Yasiru Gamaarachchi (St. Anthony’s College, Kandy), Pawan Pathiraja (Trinity College), Vibavith Ahelepola (Trinity College), Akram Muthalib (Trinity College), Anjala Bandara (St. Anthony’s College, Kandy), Asitha Wanniarachchi (St. Anthony’s College, Kandy), Maleesha Silva (St. Sylvester’s College), Matheesha Pathirana (Trinity College), Divyesh Ramiah (St. Anthony’s College, Kandy), Chamindu Wickramsinghe (St. Anthony’s College, Kandy), Trevin Mathews (St. Anthony’s College, Kandy), Lahiru Abeysinghe (St. Anthony’s College, Kandy), Maleesha Senanayake (St. Mary’s College, Kegalle)
  • தம்புள்ளை: Prabudda Premalal (Ibbagamuwa Central College), Matheesha Weerasinghe (Maliyadeva College), S. Sarangan (Jaffna Central College), Nethmal de Soyza (St. Joseph Vaz College), Rishi Adishtan (Maliyadeva College), Haritha Kaveeshvara (Royal College, Polonnaruwa), Dilhara Deshabaandu (St. Anne’s College), Sakindu Wijerathne (Maliyadeva College), Manaan Muzammil (St. Anne’s College), Maleesha Thilakaratne (St. Sebastian’s College, Katuneriya), A. Deshvin (St. Patrick’s College, Jaffna), Hasintha Kaushan (St. Joseph Vaz College), Vishva Rajapaksa (Moratu Vidyalaya), Pasindu Thennakoon (Maliyadeva College), Danuka Nirmal (St. Joseph Vaz College, Wennappuwa)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…