குசினிக்குள் ஒரு கூக்குரல் - கதை
சுருதிவரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி 'ஷொப்பிங்' முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்."பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!""சரி... இனி அக்கவுண்டன் வந்திட்டார்."வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது."ஐஞ்சு கிலோ உருளைக்கிழங்கு இரண்டு டொலர் எண்டு எங்கையோ கிடந்தது. நீர் என்னடாவெண்டால் ஐஞ்சு டொலருக்கு வாங்கியந்திருக்கிறீர்
மறைவில் ஐந்து முகங்கள் - நாவல் - கதிர் பாலசுந்தரம்
சுருதிஅணிந்துரை - பேராசிரியர் க.பஞ்சாங்கம்யாருக்காகவோ வாழ்வதற்காக இங்கே வாழ்கிறோம்...மறைவில் ஐந்து முகங்கள் நாவலை முன்வைத்து...27 – அத்தியாயங்களில் 336 பக்கங்களில் விரிந்து கிடக்கும் இந்த மறைவில் ஐந்து முகங்கள் என்ற யாழ்ப்பாணத்துக் கதிர்.பாலசுந்தரம் அவர்களின் நாவலை வாசிக்கின்ற ஓர் இந்தியத் தமிழன். எந்த அளவிற்கு இந்நாவல் கட்டமைக்கும் எடுத்துரைப்பு உலகிற்குள் பயணம் செய்யச் சாத்தியப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்களப் பேரினவாதத்தின் வெறித்தனமான தாக்குதலினாலும், ஓர்
விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்
சுருதிஒரு மனிதனின் வாழ்க்கையானது அவன் முன்பு செய்துகொண்ட நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அமையும். அவனுடைய பிராரத்துவ வினைகளின் பயனை அடைவதற்கு ஏற்ற விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கைமுறைகள், வாழ்க்கைவசதிகள், கல்வி, செல்வம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சுற்றம் சூழல் முதலிய யாவும் ஏலவே அமைக்கப்பட்டிருக்கும். மனிதன் தன் வாழ்க்கையைத் தன்னிஸ்டப்படி நடத்துவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அது அவனுடைய அறியாத்தனமாகும். ஏற்கனவே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது. ஓடும் ரயில் அத்தண்டவாளத்தில்தான் போகலாம். தான் விரும்பியவாறு பாதையை மாற்றிப் ப
அப்பாக்கள் இருவர் – சிறுகதை
சுருதிவவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக் காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள். இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.நாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில் போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்க
TWO EPISODES - short story
சுருதிWritten by- K.S.SUTHAKARTranslated into English by KATHIR BALASUNDARAMHuman rights activist and writer Kathir Balasundaram, B.A., S.L.E.A.S., is a former Principal of celebrated Union College in Jaffna, Sri Lanka and now living in Canada.INCIDENT ONEIt all took place in the month of May, 1983.Those of us selected by the Engineering Faculty to attend the celebrated Peradeniya University found rooms in either ...
முதுமை எய்துவது குற்றமா? (பகுதி 2) - சிசு.நாகேந்திரன்
சுருதிதலைமுறை இடைவெளியை நிரப்புவது எப்படி? தலைமுறை இடைவெளி என்னும்போது, புலம்பெயர்ந்திருக்கும் ஒரு தலைமுறை யினருக்கும் அவர்களுடன் வாழும் (புலம்பெயர்ந்த) பெற்றோருக்குமிடையில் ஏற்படும் இடைவெளியிலும் பார்க்க, முதியோருக்கும் அவர்களின் பேரப்பிள்ளைகளுக்குமிடையில் காணும் இடைவெளிதான் முக்கியமானதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இவ்விடைவெளியை அவசியம் நிரப்பியே ஆகவேண்டும். ஆகவே, முதியோர், பெற்றோர், பேரப்பிள்ளைகள் என மூன்று வெவ்வேறு தலைப்புகளின்கீழ் இவற்றை நாம் ஆராய்வோம்.முதியோரின் பங்கு:முதியோரும் அவர்களின
பாதுகை - சிறுகதை
சுருதி'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..." கோவிலில் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டது. நேற்றுத்தான் ஒரு சோடி புதுச்செருப்பு வாங்கியிருந்தேன். நங்கூரம் படம் போட்டது. அதைப் போட்டுக்கொண்டு மடைக்குப் போய் ஒரு 'ஷோக்' காட்டவேணும். போனமுறை மடைக்கு வரேக்கை உமாசுதன் புதுச்செருப்புப் போட்டுக் கொண்டு வந்தவன். அவனை ஒருத்தரும் கண்டுகொள்ளேல்லை. மண்ணை உதறிக் கொட்டுமாப்போல, பத்துப் பதினைஞ்சுதரம் நிலத்தோடை செருப்பைத் தாளம் போட்டு, அடிச்சு அடிச்சுக் காட்டினவன். இந்த முறை நானும் போட்டுக் காட்ட வேணும்.கோவிலிலை செருப்பைச் சும்மா
ANNTENAS GOING UP AND UP - short story
சுருதி Published in the magazine AMIRTHAGANGAI in January 1986. Editor: Chembian Selvan (Rajagopal) Chenkai Aliyan in his book ‘History of Short stories’ says, “This story is one of the best of the year 1986.” Translated by the author: Kathir Balasundaram SITUATION: In the late 1970s, low-income people started going to the Middle-East in the effort to find higher paying jobs. ...
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
சுருதிதொகுப்பில் உள்ள சிறுகதைகளை முன்னிட்டு எழுத்தாளர்கள் / வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள்விளக்கின் இருள்நவீன உலகம் சுயநலமாக மாறிவிட்டதையும், நவீன மனிதன் அதிலும் அதிக சுயநலமிக்கவனாக வாழ்ந்து வருவதையும், ஒரு நவீன நகரப் பின்னணியில் விவரிக்கும் கதை. பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும், எவ்விடத்திலும் அதன் நெடி அடிக்காமல் மனதின் அடிவாரத்தில் கூரான ஊசிகளைச் சொருகிச் செல்கிறது. ஒரு நகரின் பெருந்துயரை இதைவிட அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது என்ற எண்ணம் வருகிறது இறுதியில்.இது ஒரு மிகத் தேர்ந்த கதை சொல
பகடை - சிறுகதை
சுருதிகடைசியில் அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வந்தது.ஒரு கிழமைக்கு முன்பு, கிளாலிக்கடலேரியில் - படகு கவிழ்ந்ததில் அன்னம்மா ஆச்சி உட்பட ஐந்துபேர் மரணமானார்கள்.இருளிற்குள் தலையைச் சுவர்மீது முட்டி மோதி, கால்களை பரப்பிச் சுய நினைவற்றுக் கிடந்தாள் பவானி.உலகம் அழிந்தொழிந்து போனபின் ஏற்பட்டிருக்கும் மயான அமைதியக் குலைத்துக் கொண்டு - புதிதாகப் பிறந்துவிட்ட ஏவாளெனக் குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகுரல் காட்டிற்குள் வழிதவறிப் போய்விட்ட ஒரு குழந்தையின் அழுகுரலென பவானியின் காதில் வி
முகநூல் நண்பர் தங்கேஸ்
சுருதிநேற்றைய தினம் (20.02.2018) வேலை முடித்து வீடு வந்ததும், முகநூலைத் திறந்தபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.தங்கேஸ் இராசையா காலமாகிவிட்டார் என்ற செய்தி. என்னுடைய வயதுதான் அவருக்கும் இருக்கும்.2015 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முகநூலின் மெசஞ்சர் (messenger) மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். கதிர்.பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘வன்னி’ நாவலினால் ஈர்க்கப்பட்டு, அதன் புத்தக வடிவத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அப்போது ‘வன்னி’ நாவல் எனது blog இல் தொடராக வந்துகொண்டிருந்தது.அதிலிருந்து என்னுடன் மெசஞ்சர்
‘Virunthu’ – Party
சுருதி short story Written by - K.S. Suthakar Translation by – Shiyamala Navratnam (Canada) “Oh, Shaanthan! When did you come to Australia?” “Who is it, Kumaran? It is now one and a half years since we came here. How is everything with you? It must be about ten to thirteen years since you left the country, isn’t it?” “It is ...
வெள்ளைப்புகை - சிறுகதை
சுருதிசேகரும் வசந்தியும் வாடகை வீட்டிலிருந்து - சொந்தமாக வீடு ஒன்று வாங்கிப் போனார்கள். இவர்களுக்கு அயலவர்களிடம் வரவேற்பு நன்றாக இருக்கவில்லை. வீட்டின் இடது புறக்காரரான 'அசல்' வெள்ளை மாத்திரம் தோழமையுடன் பழகினார். வலது புற வீட்டுக்காரரை யாரென்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. மதிலை உயர்த்தி தங்களையும் வீட்டையும் மறைத்திருந்தார்கள். எதிர்வீட்டுக்கார கிரேக்க நாட்டவன் (Greek) முகம் சுழித்தான். அவன் மனைவியின் முகம் இவர்களைக் காணும் போதெல்லாம் குதிரை போல நீண்டுவிடும். இவர்களுக்குப் பக்கத்து வீடான சீனாக்காரரின் உதட்டிற்
வன்னி - நாவல் (அதிகாரம் 1)
சுருதிமனித உரிமை ஆர்வலர் கதிர் பாலசுந்தரம். பிரபல தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நாவல் எழுதும் புலம்பெயர்ந்த கனடாவாழ் எழுத்தாளர்.பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்துஇருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்துதமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது வெளியே வரும்மேஜர் சிவகாமி கூறும் குருதி சொட்டும் நவீனம்.புகலிட இலக்கியத் தளத்தில் இதுவரை இத்தகையதொரு சிறந்த வரலாற்று நவீனம் வெளிவரவில்லை என்
கார் காலம் - நாவல்
சுருதிஅதிகாரம் 19- கலாச்சாரம்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன. சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற புங், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்” என்றார் அவர
மணவினைகள் யாருடனோ - மாயவனின் விதி வகைகள்
சுருதிமூன்று முடிச்சு கமல் + ஸ்ரீதேவி + ரஜனிஅப்போது (1976) நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். தியேட்டரின் பெயரை இப்போது மறந்துவிட்டேன்.இப்போது நினைவு மீட்டிப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயது என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வயதுக்கு மீறிய தோரணையில் (1
நீலத் தாமரை (Blue Lotus Water Garden)
சுருதிமெல்பேர்ணில் இருந்து காரில் சென்றால், ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் யாராவலியை (Yarra Junction / Yarra Valley) அடைந்துவிடலாம். அங்கேதான் இந்த இந்த அற்புத தாமரைத் தடாகத்தைக் கண்டு கொண்டேன். மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை (கோடை / இலையுதிர்காலம்) பார்வைக்காகத் திறந்திருக்கின்றார்கள்.2006 ஆம் ஆண்டு Geoff, Yvonne என்பவர்களால் இது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 50,000 சதுர மீற்றர் (14 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த நீர்த் தோட்டத்தில் தாமரை, நீலோற்பலம் மற்றும் அரிய வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்
தெ.நித்திய கீர்த்தி
சுருதி"மெளனமாகக் கண்ணீர் வடிக்கும் சிலரின் மன ஓலங்கள் வலியைத் தரும் வரிகள் ஆகின்றன. அந்த வரிகளுக்குள் உங்கள் வாழ்வின் சில கீறல்களும்....! கீறல்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டுமா? தூண்டல்கள் உலகின் மனச்சாட்சியைத் தீண்டுமா?" - இந்த வரிகளைத் தாங்கிக் கொண்டு வெளிவர இருந்த நாவல் 'தொப்புள் கொடி'.'தொப்புள் கொடி' என்ற தனது நாவலை வெளியிடுவதற்கு மூன்று நாட்கள் முன்பதாக தெ.நித்தியகீர்த்தி அவர்கள் 15-10-2009 அன்று மாரடைப்பால் காலமானார். 1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த இவர், 'கடவுள் கதைப்பாரா?' என்ற சிறுகதை ம
மரத்துடன் மனங்கள் - சிறுகதை
சுருதிஇரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும
’அம்பரய’ – நூல் அறிமுகம்
சுருதி போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை’அம்பரய’ என்றால் என்ன?நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.அதே போல ஆங்கில