"நல்லவனில்லை"
கனவுகளின் உலகம்
காதலே யார் நீ?ஆணையும், பெண்ணையும் இணைக்கும் பாலமா?அல்லது அவர்களைப் பிடித்த சாபமா?வாழ்வில் ஒளியூடுகிறாய் சில நேரம்.. வாழ்கையை எரிக்கிறாய் பல நேரம்.. மாறி மாறி உருவெடுக்கிராயே.. பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?உன்னை வெறுத்தவர்கள் மணமேடையில் உறவாட, உன்னை அணைத்தவர்கள் பின மேடையில் வாடுவதா??உன் நியாயம் புரியாப் புதிராகிறதே..கனவுக்குள் கற்கண்டாய் இருக்கிறாய். பல கவிதைக்கும் கருவாய் இருக்கிறாய். செல்லாக் காசுகளையும் தங்கமாக்கி ஜொலிக்கிறாய். தோழனாய் சில நேரம் தோள் கொடுக்கிறாய்.கல்லறைக்குள் முதற் கல்லாய் இருக்கிறாய். கண
பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு.
கனவுகளின் உலகம்அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (Bukahari Volume:6 Book:78)இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று. இதை ...
தை பிறந்தால் வழி பிறக்கும்?
கனவுகளின் உலகம்
(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..) வலிகள், வதைகள், கொடுமைகள், கொடூரங்கள்...இவர்களின் வாழ்வாகிப் போனது.விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்.. சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில். வறுமையையும், பசியையும் வாங்கிக் கொண்டு இவர்கள் இழந்தது ஏராளம்.கனவுகள் இல்லை,கல்வியில்லை, கருணையில்லை, உடையில்லை, உறவில்லை,உறைவி
"கைகொடுப்போம் வாருங்கள்."
கனவுகளின் உலகம்கனவும், கற்பனையும் கொட்டிக் கிடக்கிறது நிஜங்கள் இன்று எதிலுமே இல்லை. மெய்யும், பொய்யும் கலந்தே உலகை ஆழ்கிறது.உண்மையை உணர்த்த கைகொடுப்போம் வாருங்கள்.பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது மொழியால், ஜாதியால், நிறத்தால்..பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்."அமைதியாய் வாழ்பவனை அடக்க நினைக்கிறான்" அகராதியை விட்டே அடிமையை துரத்த கை கொடுப்போம் வாருங்கள். வாழ்க்கைக்கு வழி காட்டிய பெற்றோர்கள் இன்று அன்றாட உணவுக்காய் வீதிகளில்.. அவர்களின் பசி போக்கி அன்பால் அரவணைக்க கை கொடுப்போம் வாருங்கள்.
கொலைகார நண்பன்..
கனவுகளின் உலகம்என் கண்கள் பார்க்க வெறுத்தது இவன் முகமே..ஒரு கொடூரச் சம்பவம் சுமந்து பதை பதைக்கிறது என் மனமே..சிந்தனைச் செல்களுக்குள் ஒரு சோகக் கீற்று துளிர் விடுகிறது..நானும்,அவனும் நல்ல நண்பர்கள் தான். அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..அப்பா.. அறிமுகப்படுத்தியவன் இவனோடு விளையாட விலைகள் இல்லை.எனக்கு காதலைக் காட்டியவன். என் காதலியாய், அவளை அவனுக்குத்தான் முதலில் காட்டினேன்.இன்று.. பல கோடி உயிர்களைப் பறித்தவன் இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு தெரியவில்லை..அன்றில் இருந்து இவனோடு உறவாடுவதில்லை நான்...அதன் பின்பு இன்று தான் என்
விஸ்வரூபம்+முஸ்லிம்=???? (சுவைக்க ஒரு சூடான பகுதி)
கனவுகளின் உலகம்
இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி. விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் ..
என்னைக் கொன்று விடு..
கனவுகளின் உலகம்சுவாசமாய் நினைத்து உன்னை சுவைத்து சுடுபட்டுப் போன நாட்கள் போதும் அன்பே.. காதல் தீயில் கருகிப்போன இதயத்துக்கு மருந்து போட்டே நகர்கிறது என் மற்றைய வினாடிகள்..தொடரும் நிழல் போன்று உன் நினைவும்.. உளி செதுக்கிய சிற்பமாய் உன் நாமமும்.. என்னோடு ஒட்டிக்கொண்டன.பாலைவனத்தில் பட்டமரமாய் உன்னை சுமந்து கொண்டு பரிதவித்து நிற்கிறேன்.. கொடிய வறட்சியிலும் நீ என்னுள் வற்றிப் போகவில்லை.என் கொடிய நிமிடங்களிலும் நான் உன்னை கழட்டி ஏறியவில்லை. ஒருமுறை நிதர்சனமான மரண வலியையும், ஒவ்வொரு வினாடியிலும் தந்து சென்றவள் நீ..பெண்ணே!உன்னிடம
"என் கரமே உன்னைக் கொல்லும்"
கனவுகளின் உலகம்
மரணப் பீதி காற்றோடுமனித தசைகள் அம் மண்ணோடு என் கரமும் கவியின் வரியோடு இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடுநோபல் பரிசுகள் எங்கே?மனித உரிமை குழுக்கள் எங்கே?ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?உலகம் எங்கே? ஊடகம் எங்கே?சுதந்திரம் எங்கே? பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே? பூமிக்குள் புதைந்த மாதுவின் கருகிய தேகத்துடன் கருகிவிட்டது மனிதம் அவள் கருவுக்கும் கல்லறை நிலை கண்டு கரைகிறது என் இதயம்வெள்ளைச் சிரிப்பில் என் உள்ளம் வென்ற ரோஜாக்கள் கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?ஈனப் பிறவியான இதயக் கனிவற்ற கயவனின் வஞ்சகம் ...
அவள்!
கனவுகளின் உலகம்
அவள், அழகிய வினா?என் இரகசியக் கனா!அவள், ஆறாத காயம்,என் வாழ்வின் பாலம்.அவள்,இதயத்தின் ஒலி,என் வறட்சியின் வலி.அவள்,ஈரமான தென்றல்,என் பாதையின் முட்கள்.அவள்,உணர்வுள்ள இசை,என்னை இயக்கும் விசை.அவள்,ஊக்க நதி,என்னை துரத்தும் விதி.அவள்,எளிமையின் உருவம்,என் சுவாசத்தின் துயரம்.அவள்,ஏகாந்தப் பாதை,பனியுடன் பிறந்த காலை.அவள், ஐயத்தின் உடல்,என் துணிச்சலின் நிழல்.அவள்,ஒடுங்கிய இரவு,என் தனிமையில் உறவு.அவள்,ஓவிய வர்ணம்,என் தேடலின் கிண்ணம். ...
"போய் வாறன்"
கனவுகளின் உலகம்
இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,உணர்வைக் கிறுக்கும் ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை, அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை. நினைவோடு வாழ்ந்தால் எங்கிருந்தும் வாழலாம் என்ற என் கருத்துக்கள் எல்லாம் கண்முன்னே கருகிப் போகிறது.. கண்களிடம் இருந்து, கனவுகளை; காலம் கழட்டி எறிந்த வலி இன்னும் தீரவில்லை. வலியினால் விழி நீர் விழுவதை தடுக்க முடியவில்லை. "விமான நிலையம்" என் போன்றோருக்கு கண்ணீரைக் காதலிக்கும் ஒரு கல்லறைக் கட்டடம். பிரிவுகளுக்கு பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது ஏறி இற
அழகிய தருணங்கள்
கனவுகளின் உலகம்அம்மாவின் மடியோடு உறங்கிய இரவுகள்,அப்பா அரவணைத்து தட்டிக் கொடுத்த நேரங்கள்..இருட்டு வானில் ஜன்னல் நட்சத்திரம் எண்ணி மகிழ்ந்த இரவுகள்..எதற்கும் துணியும் இயல்பான வீரனாய் சுற்றித் திரிந்த பள்ளிப் பருவங்கள்.. நட்புக்குள் வாழ்வை சுருக்கி நகைப்புடன் நடந்த தருணங்கள்..கரையை சேர போராடும் அலையில் காதலோடு கால் நனைத்த நாட்கள்.. மனதை திருடிய மங்கையை மண மேடையில் கைப் பிடித்த நிமிடங்கள்..முதல் மோகத் தீயில் வெட்கப் போர்வை எரிய வியர்வையோடு கழிந்த பொழுதுகள்..என் உயிர் சுமந்து புதிதாய் பூத்த பிஞ்சை அள்ளிக் கொஞ்சி விளையாடிய வி
உன்னைப் பிரியமாட்டேன்!!
கனவுகளின் உலகம்
கண்ணுக்குள் உன்னை வைத்து இமைகளை மூடுகிறேன். என் இரவின் கனாக்களிலும் நீதான் வரவேண்டுமென்று.. இதயத்துக்குள் நினைவுகளாய் நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..அத்துணை அணுவிலும் இரத்த ஓட்டமாய் கலந்து என் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே பிரதிபலிக்கிறது. அழகிய நினைவுகளும் நீ,அழகிய நிகழ்வுகளும் நீ,அழகிய எதிர்காலமும் நீ..என் காதோரமாய் கைபேசியில் நீ பேசுகையில்.. உலகையே மறந்து போகிறேன் உன்னை மட்டும் நினைத்தவனாய்.. கூட்டமாய் நீ வருகையில் கண்களால் உன்னோடு கதை பேசி.. மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன் கண்களை மட்டும் அசைத்தவனாய்.. எந் நேர
சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-II
கனவுகளின் உலகம்(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)பகுதி-Iஅதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். அப்படி என்ன பிரச்சினைகள் என நீங்கள் என்னிடம் கேட்க முடியும் நான் வாழ்கையில் சந்தித்த சில அனுபவங்களை இங்கு சுட்டிக்காட்டவது பொருத்தம் என
சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-I
கனவுகளின் உலகம்நம்முடைய வாழ்கையில் நாம் சந்திக்கின்ற விடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனையோ பிரச்சினைகள் எத்தனையோ சந்தோசங்கள் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.பூமி என்ற கோளம் பலவகையான விடயங்களை அதற்குள் உள்ளடக்கியிருக்கிறது. எத்தனையோ அதிசயங்கள்,அபூர்வங்கள் எல்லாம் இந்தப் பூமிக்கு மேலும்/கீழும்,உள்ளேயும்/வெளியேயும் இருந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்தப் பூமியின் மேல் வாழும் மனிதன்தான் இந்த பூமியின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணமானவனாக இருக்கிறான். பிரிக்கப்பட்டே எல்லாவிடயங்களும் இங்கு நோக்கப்படுவதால் நாமும் அதனுடன் ஒட்டி
"அழாதே தாயே.."
கனவுகளின் உலகம்
"அழாதே தாயே.." ஒரு உவமை தேடுகிறேன் உன் கண்ணீர் வலி சொல்ல. ஒன்று கூட கிடைக்கவில்லை இந்த கவிப் பிரியனுக்கு. கோடிக் கண்கள் அழுகிறது உன் நிலை கண்டு. குருதியும் உறைந்து கிடக்கிறது உன் மண்ணின் துயர் கண்டு. "உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"கண்ணீர் நிறுத்திக் கொள். கடைசி வரை நிலைக்கும் அது உன் மனதில் எழுதிக் கொள். "வழியனுப்பி வைத்த மகன் வரவில்லை என்று அழுகிறாயோ?"துயர் துடைத்துக் கொள், பல இலட்சம் உயிர்கள்; இன்று உன் மகனாய், நினைத்துக் கொள். உன் ...
இதமாய் ஓர் ராகம்!
கனவுகளின் உலகம்
அமைதியைத் தத்தெடுத்து ஆதரிக்கிறது இரவு. மூடப்படாத இமைகளோடு, பின்னிரவில்.. தனிமையாய் நான். இனிமையான இரவில், இதமாய் ஓர் ராகம் தூரத்திலிருந்து,என்னை தொட்டுச் செல்கிறது.காற்றுக்கு வசப்பட்ட அவ்விசை, என் காதுக்கு வந்து போகும் நேரம்... என் மூளையில் புதைந்த உன் நினைவோடு முட்டிச் செல்கிறது. என்றோ தொலைத்த உன்னை இன்று அருகாமையில் தேடுகிறது, என் இதயம். என்னை மோதும் மழைச் சாரலாய், என்னை அணைக்கும் குளிர்த் தென்றலாய், என்னை வருடும் இதமான இசையாய், இன்றும் என்னுள் வசிப்பவள் நீதான்.அழ நினைக்கும் கண்களிடம் இதயம் சொல்கிறது. "வ
#HappyBirthdayThala. (இத லைக் பண்ணி உங்க தன் மானத்தை இழக்காதீங்க)
கனவுகளின் உலகம்
தொழிலாளர்_தினத்தில் தலைக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மாறி மாறி பறக்கிறது. எதுக்கு வம்பு #HappyBirthdayThala. சரி இப்போ விசயத்துக்கு வாறன்.. இந்த தினத்தில் உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகின்றது என்பது தெரியாது. எனக்கு தொழிலாளர் என்ற சொல்லைக் கேட்டாலே என் மைன்ட் அதுவாகவே குழந்தை என்ற சொல்லையும் அதற்க்கு முன்னால் இணைத்துக் கொள்கிறது. #குழந்தைத்_தொழிலாளிகள், நம்ம யாருக்கும் இந்த நாட்களில் கண்ணில் படாத ஒரு கூட்டம் இது. பணத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு பாசத்தைத் தூக்கி வீதிகளில் எறிந்து விட்டோம். கடற் க
இரவுச் சத்தம்.
கனவுகளின் உலகம்"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....."அழகான மௌனத்துக்குள் அலாரமாய் மாறி விட்டது அந்த சத்தம். இரவின் திடீர் விழிப்பு எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்து கொண்டேன். என் அறை திறந்து வெளியே வந்தேன். நடந்தது என்னவென்று தெரியாமல் என் மொத்த குடும்பமும் விழி பிதுங்கி நின்றது. ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வீட்டு வாசல் கதவைத் திறந்தோம். ஒரே ஆச்சரியம்!!! ஊரே ஒன்று கூடி என்ன மாநாடு நடத்துகிறது இந்த நடு இரவில்?? எல்லாரும் எங்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவர்கள் பேச்சோடு பிஸியாகிவிட்டார்கள். அம்மா பெண
"வறுமைக் காற்று"
கனவுகளின் உலகம்
சோகமாய் சொல்லும் கவியிலும் சுவாரஸ்யம் உண்டு.ஏழையவன் வாழ்வைச் சொல்லுகையில் கண்ணீரே உண்டு. வறுமையின் வலையில் வசப்பட்டவனே வாழ்வினில் வலி சுமப்பவன்.தண்ணீரில் விழுந்த கற்கள் போல், வறுமைக் கண்ணீரில் மூழ்கிப் போனவன் அவன்.தீயுடன் உறவாடிய கைக் குழந்தை போல், நிஜத்துடன் உறவாடும் அவனும் என்றும் காயம் கண்டவனே...வறியவன் வாழ்வு பற்றிஇன்று அன்றாட அரசியல்.. நெஞ்சில் வருத்தமின்றிமேடையில் அவன் உணர்வுகள்..வியாபாரம் செய்கிறான் அரசியல்வாதி"ஐயோ..." அவனையே தலைவன் என்கிறான் அந்த அறியாவாதி.பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?பாலைவன ஆபிரிக
உன்னைப் பிரிய மாட்டேன்.
கனவுகளின் உலகம்கண்ணுக்குள் உன்னை வைத்து இமைகளை மூடுகிறேன், என் இரவின் கனாக்களிலும் நீ வர வேண்டும் என்று.. இதயத்துக்குள் நினைவுகளாய் நிரம்பிவிட்ட உன் ஞாபகங்கள், அத்துணை அணுக்களிலும் இரத்த ஓட்டமாய் கலந்து.. என் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே பிரதிபலிக்கிறது. அழகிய நினைவுகளும் நீ. அழகிய நிகழ்வுகளும் நீ. அழகிய என் நிதர்சனமும் நீ. என் காதோடு உன் குரல் கைபேசி வழியே ஊடுருவ.. உலகையே மறந்து போகிறேன், உனக்குள் என்னை புதைத்தவனாய். வழிகளில் விழி வருடி நீ செல்கின்ற நேரம்.. உன் மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன், ...