(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&17.03.24 அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன் அறிவிப்பின் படி 1. சங்கரி அப்பன் – முதல் பரிசு – Rs.10000 – உறவின் மொழி2. மைதிலி நாராயணன் (ஷைலஜா ) – Rs. 6000 – இரண்ட
ஒலி வடிவில் கேட்க“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார். அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில், பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாம
பால்வண்ணம் - கே.எஸ்.சுதாகர்: ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 1983ல் இருந்து எழுதி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் ஏற்கனவே வெளியான இவரது படைப்புகள். இது சிறுகதைத் தொகுப்பு. தமிழில் நல்ல சிறுகதைகள் இருபது முதல் இருபத்தைந்து எழுத்தாளர்களாலேயே, இப்போது திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றது என்ற என் கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே எல்லாம் நடக்கிறது. ஒரு நாவல் வாசித்த போது அதே எழுத்தாளரால் இரண்டு வருடங்கள் முன்பு எழுதி
உங்கள் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுதி கிடைக்கப் பெற்றது. படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சுதாகர். முகப்புக் கதை 'பால்வண்ணம்' என்னை மிகவும் கவர்ந்து கொண்டது. யுகதருமத்தின் நூல்வேலியை தகர்க்காமல் நகர்கின்ற கதை மாந்தரை சித்தரிக்கின்ற பாங்கு மிகவும் அழகு. படித்து முடித்ததும், மனதினில் இயல்பாய் சில கேள்விகள். நூல்வேலிகளைத் தகர்த்து, கனவாய் போன அந்தக் காதலின் பாதையில் ஒரு முறை ஏன் அவர்களால் நிஜமாய் பயணிக்க முடியவில்லை? மனதில் வலிமை இல்லையா? அல்லது உடலையும், உள்ளத்தையும் உறுத்தி போலியாக வாழ்ந்தாலும் சமுதாய கட்டுப
இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று சில எழுத்தாளர்களிடம் கேட்கும்போது, அவர்கள் அந்தக்காலங்களில் தாங்கள் இலங்கையில் இருக்கவில்லை என்று உதாசீனமாக அந்தக் கேள்வியைத் தட்டிக் கழிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள், தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சங்ககால இலக்கியங்களிலெல்லாம் மேற்கோள் காட்டுகின்றார்கள். சங்ககாலப் பாத்திரங்களை மீளவும் கொண்டுவந்து படைப்புகளில் முன் வைக்கின்றார்கள். தாங்கள் காணா
இந்த அவசர உலகில் கதையோ நாவலோ வேகமாக நகருவதையே எல்லோரும் விரும்புகின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நாவலோ சிறுகதையோ அதன் போக்கில் விறுவிறுப்புக் காணப்பட வேண்டும். கதைப் போக்கில் இறுக்கம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். வளவளா வாய்க்கியங்கள் வெட்டி எறியப்படல் வேண்டும். நாவலோ சிறுகதையோ பக்க எண்ணிக்கையால் தீர்மானம் செய்யப்படுவதில்லை. ஒரு நாவலை எழுதுபவர், எங்கே இதை யாரேனும் ஒருவர் குறுநாவல் என்று கூறிவிடுவாரோ எனப் பயந்து, தேவையில்லாமல் பக்க எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எப்போதோ யாரோ எழுதிய கவிதைகள், சில ஆவணங்களை இட
வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன. சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே முடியாமல் இருக்கும். சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால் மீளவும் வாசிக்கப்படும். இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்த
நந்தி (செ.சிவஞானசுந்தரம்) ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான். 'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.' சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்க
பவானி ஆழ்வாப்பிள்ளை 'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, ...
க. அருள்சுப்பிரமணியம் இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது. இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்க
ஆகா என்ன பொருத்தம்! – ஐந்து நிமிடத் திரைப்பிரதி நான்கு பாத்திரங்கள் : தந்தை (கிருஷ்ணா) தாய் (சாந்தி) மகன் (பிரசாந்) பிரசாந்தின் காதலி (அபிநயா) காட்சி 1 வீடும் வெளிப்புறமும் காலை (பிரசாந்திற்கு 27 வயதாகின்றது. கட்டிளங்காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை. தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். நகரத்தில் ஆர்க்கிட்டெக்காக வேலை பார்க்கின்றான்.) கிருஷ்ணா: மகன் எங்கையோ வெளிக்கிடுறான்போல கிடக்கு. வெளியிலை மோட்டச்சைக்கிளைத் துடைச்சுக் கொண்டு நிக்கிறான். இனிச் சனிக்கிழமை வெளி
நேர்முகம் – சிறுகதைவருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான். அவன் ஏற்கனவே மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் பயோசயன்ஸ் படித்திருந்தான். நேர்முகத்தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு நேரத்திற்குப் போகவேண்டும் என்பதற்காக முதல்நாள் இரவே வந்து, பல்கலைக்கழகத்திற்கு அருகேயிருந்த சிட்னி பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தான். அதிகாலை ஏழுமணிக்கே நகரம் பன்றி கிழறிய கறையான் புற்றாகிவிட்டது. ஒரே சன நெரிசல். வருண் ஹோட்டலில் இருந்து கீழ் இறங்கி ஒரு கோப்பி அருந்த
ஒரு சிறுகதையானது நாம் வாழ்ந்த/வாழுகின்ற இடம், சுற்றுப்புறச்சூழல், நம் மீது ஆதிக்கும் செலுத்தும் சக்திகள் என்பவற்றைப் பொறுத்தே இருக்கும். எனது முதல் சிறுகதையான `ஈழநாடு’ பத்திரிகையில் வெளிவந்த (1983) `இனி ஒரு விதி செய்வோம்’ அப்படிப்பட்ட ஒன்றுதான். முதலாழி, தொழிலாளி, கண் தெரியாதவன், கால் ஊனமாகிப் போனவன், விசரி போன்ற பாத்திரங்கள் கொண்டு பின்னப்பட்டது. அதன் பின்னர், 1995 ஆம் ஆண்டு வரையும் வெளிவந்த எனது படைப்புகள், இலங்கை என்ற வட்டத்திற்குள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தன. அப்புறம் புலம்பெயர்ந்து போன பின்னர
`மண்டைதீவு கலைச்செல்வி’ என அழைக்கப்படும் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள், 1980 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த `அவள் துயில் கொள்கிறாள்’ என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். யுத்த இடம்பெயர்வினால் இவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல கவிதைகளும், நாவலும் அழிந்துவிட்டன என இவர் தனது என்னுரையில் குறிப்பிடுகின்றார். சிலரது முயற்சியினால்---க.பரணீதரன், வ.ந.கிரிதரன், ஆதிலட்சுமி சிவகுமார்---இருப்பவற்றைத் தெரிந்தெடுத்து ஜீவநதி பதிப்பகமாக 2022 இல் வெளிவந்திருக்கின்றது `கற்பாறைகள் கண்ணிர் சிந
“சிந்து…… மேக்கப் போடுற அன்ரி வந்திடுவா. சீக்கிரம் ரெடியாகு” அம்மா குசினிக்குள் நின்று கூக்குரலிட்டார். குசினிக்குள் அம்மாவின் சிநேகிதிகளின் ஆரவாரம் கேட்கின்றது. ஹோலிற்குள் அண்ணா பிரதீபனும், நண்பர்களும் இறுதிக்கட்ட சோடனைகளில் மூழ்கிப் போயிருந்தார்கள். நேற்று இரவு தொடங்கிய இந்த ஆரவாரம் இன்னமும் முடியவில்லை. அப்பா திருமணமண்டபத்தில் நிறைய வேலைகள் இருப்பதாகச் சொல்லிச் சென்றுவிட்டார். நேற்றுக்கூட அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. பொதுவாக காசு விஷயத்தில் தான் இருவருக்குமிடையே சண
எனது `சுருதி’ வலைத்தளம் பற்றியும், அதிலுள்ள படைப்புகள் பற்றியுமான வாசகர்களின் கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.வாசகர்கள் தங்கள் கருத்துகளை எனது வலைத்தளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ...