வாழத் தெரிதல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ வாழ்க்கையை ஒரு பிரசினமாகவும், அதனைத் தீர்ப்பதில்தான் வாழ்க்கை உயிர்ப்புக் கொள்கிறது எனவும் எண்ணிக் கொண்டு, காரியங்கள் செய்கிறாய். வாழ்க்கை உண்மையில், பிரசினங்களைத் தீர்க்கும் அமைப்பா? கொஞ்சம் யோசி. பிரசினங்களைத் தீர்ப்பதான வாழ்வின் ஏற்பாடு எல்லாம், நீ, உன் மனத்தை தொலைத்து நடந்து கொள்கின்றதான விடயமாகும். நீ பிரசினம் என நம்பி, அதனைத் தீர்க்க நினைக்கின்ற போது, வாழ்க்கை கடந்து போயிருக்கும். வாழ்க்கை ரம்மியமானது. அனுபவங்களின் மூலம் ஆக
ஏமாளியா நீ?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒரு கல்லூரியின் மாணவன் ஒருவன் அவன் நம்புகின்ற ஒரு விடயத்தை ஆய்வின் மூலம் கண்டு கொள்ள முனைந்தான். அதற்காக அவன் தயார் செய்த ஆய்வின் வடிவம் இதுதான். “ஈரைதரசன் ஓரக்சைட்” என்ற ரசாயனத்தை சூழலில் பாவிப்பதை கட்டுப்படுத்த அல்லது முற்றாக அகற்றிவிட வேண்டுமென்ற யோசனைக்கு மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்பது தான். இந்த ரசாயனத்தை தடுக்கவிரும்புவோர் தங்கள் கையொப்பத்தையிட்டு உறுதி செய்யலாம். ஏன் இந்த ரசாயனம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்கான க
அக்கரை பற்றிய அக்கறை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] காட்சி ஒன்று: விடிகின்ற ஒவ்வொரு காலைப் பொழுதின் தொடக்கத்தின் முனையில், அவனால் தன்னைத் தவிர தன் சூழலில் வாழும் அனைவரும் ஏதோவொரு வகையில் அற்புதமாக இருக்கின்றனர் என அனுமானித்துக் கொள்கிறான். காலைத்தேநீரின் சுகந்தம் கூட அவன் உணர்வுகளைத் தொட துடித்துக் கொண்டு பறக்கும். ஆனால், பக்கத்து வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கையின் அற்புதம், பக்கத்து ஊரிலுள்ள சொந்தக்காரரின் புதிய வாகனம் என அவனின் உணர்வுகளுக்குப் பொறாமையாய் நிறம் பூசிக் கொண்டிருக்கும்.
எதுவாகப் போகிறாய்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 44 செக்கன்கள் தேவைப்படும்.) [?] பட்டாம்பூச்சியானால் பறக்க வானவில்லை நீ பார்ப்பதில்லை மாறாக உருவாக்குகிறாய் என்பதைப் பற்றி நிறத்தில் ஏற்கனவே நீயல்லாத நிலைகள் என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். உன் பிரபஞ்சத்தில் நீ இருப்பதாகக் காண்பவை மாத்திரமே இருக்கின்றன. மற்ற எதுவும் இருப்பதாக யார் சொன்ன போதிலும், நீ இருப்பதாக உணர்ந்தால் மாத்திரமே அது இருக்கும். நீ இந்தப் பதிவை வாசிக்கும் கணினியோ, கையடக்கச் சாதனமோ நீ இருக்கிறதென எண்ணுவதால் மாத்திரமே அது இருக்கிறது. இந்த நிலை எல்லா நிலைகளுக்கும் .
வெற்றுக்கடதாசியின் மனம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவது என்பது ஒரு குழப்பமான குதூகலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுவொரு புரியாத புதிரின் புலன். பலன் என்றும் சொல்லிவிடலாம். உன்னை நீ எழுத்தோடு இணைக்கும் போதுதான் வரிகள் உருவாகும். பந்திகள் உருவாகும். சந்தங்கள் உருவாகும். அது பேனாவாக இருந்தாலும் சரி, கணினியின் விசைப்பலகையாக இருந்தாலும் சரி. எழுதுவது என்பது உன்னோடு இணைந்துவிட்ட ஒரு கூறின் வெளிப்பாடு. உன்னைப் பிரித்துவிட்டு எழுதிவிட முடியாது. நீ சொல்வதைக் கேட்டு, தன்னியக்கமாக எழுதும்
நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] விரிகின்ற ஒவ்வொரு பொழுதும் நீ நினைத்ததைக் கொண்டு தராத போதும், காத்திருப்புகளுக்கு, உன்னால் நேரவிரயம் என்ற புனைப்பெயர் மட்டுந்தான் சூட்டிக் கொள்ள முடிந்த போதும், கசப்பானவை மட்டுந்தான் இனிமைகளை இம்சிக்க துடித்துக் கொண்டிருக்கின்ற போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும். சுபமான விடயம் எனத் தொடங்கிய காரியம், சுகமே தராததாய் தொடர்ந்த போதும், இதயத்துடிப்பின் அழகிய ஆவர்த்தன இசை, சற்றே குழம்பிப் போய் ஒலிக்கின்ற போதும், உன் மனதின் கிடக்க
உச்ச எளிமையியல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] உன்னோடிருக்கும் எல்லாமே, நீயும் உன் உணர்வுகளும் மட்டுந்தான் எனக் கற்பனை செய்து கொள். உன்னிடம் எதுவுமேயில்லை. உன் அயலிலும் எதுவுமேயில்லை. அப்போது, உன் அயல் முழுதும் இடைவெளி, மௌனம், வாய்ப்புகள் என பலதும் அமைந்திருக்கக் காண்பாய். ஓரிடத்தில் அதிகமான பொருள்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள பெறுமதியான பொருளுக்குக் கூட மதிப்புக் கிடைக்காது. அங்கு அமைதி நிலவாது, எல்லாப் பொருளும் தம்நிலையைத் தக்க வைக்க போட்டி போட்டு கொண்டிருக்க, அங்கு எதுவுமே
உன்னைப் பற்றிய எனது கவலைகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) மனம் பற்றிய விந்தைகளைப் பற்றி நாளாந்தம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மனத்தின் ஆளுமை, உத்வேகம் பற்றிய ஆர்வநிலைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த விடயம் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், நமது மனது பற்றிய ஆழமான விசாரிப்புகளில் மட்டுந்தான் நாம் எம்மைப் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. உங்களைச் சூழ்ந்த உலகம் பற்றிய அவதானிப்புகள் தான் இந்தக் கணத்தின் வலிமையையோ, வெறுப்பையோ [...] ...
தேடக்கூடாதது!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அவனுக்கு வயது, எத்தனை என்று வேண்டாம். ஆனால், வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது. போகும் இடமெல்லாம், வண்ணத்துப்பூச்சிகளையே அவன் துரத்திக் கொண்டிருந்தான். அவனால், செய்யப்படுகின்ற காரியங்கள் எப்போதும், வண்ணத்துப்பூச்சியை துரத்திக் கொண்டு அதைப்பிடிக்காமல் போய்விடுகின்ற தோல்வியிலேயே முடிந்து போயின. சிலவேளைகளில், வண்ணத்துப்பூச்சியை பிடிப்பான். அடுத்த கணம் அது அப்படியே அது தப்பித்துப் பறந்து போய்வி
எட்டும் வானமும் எட்டாவது வருடமும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவதற்கு உசிதமான நேரம் வரவேண்டுமென காத்திருத்தல் என்பதன் வருவிளைவு, எதுவுமே எழுதாமல் வெற்றுத்தாளோடு இருக்கின்ற நிலையைத் தான் தோற்றுவிக்கும். எழுத வேண்டுமென்ற உத்வேகம் வருகின்ற போதுதான் எழுதலாம் என்று இருந்தால், நீ இருப்பாய் — எழுத வேண்டிய சொற்கள் அந்த நேரத்திற்காகக் காத்திருக்காது. எழுதுவதற்கு இதுதான் தருணம். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். எழுதுவதெல்லாம் அகிலம் முழுக்க காண்பிக்க வேண்டுமென்பதில
நீ, நீராகவிருக்க வேண்டும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் என்ற பதிவில் நிரம்பி வழிகின்ற கோப்பை பற்றிய கதையொன்றைச் சொல்லியிருப்பேன். இன்றளவில் அதிகமானோர் தாம் கேள்விப்பட்டவையெல்லாம், அவை பற்றிய எந்த ஆய்தலும் இல்லாமல் நிஜமானதென நம்பி செயலிலீடுபடுகின்றனர். ஆய்தறியப்படாத விடயங்களின் தொட்டிகளாக, அவர்களின் மனது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போன்றே தோன்றுகிறது. ஒரு முக்கோணமொன்றை உருவாக்கி, அதனுள்ளே தம்மை பொருத்திக் கொண்டால், உலகமே சுபீட்சம் கண
என்ன செய்யப் போகிறாய்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த வாரம் முழுக்க, பேருந்து பயணங்களின் போதும் தூக்கத்திற்கு முன்னதான நேரத்தின் போதும் வாசிப்புத் துணையாகவிருந்தது The Icarus Deception என்ற நூல் தான். இந்த நூலாசியர் என்னைக் கவர்ந்தவர். செத் கொடின் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். படைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென பறைசாற்றுவதாய் அந்த நூலின் உள்ளடக்கங்கள் விரிந்து செல்லும். வாசிக்க வாசிக்க உத்வேகம் தொடர்ச்சியாகக் கூடிக் கொண்டேயிருக்கும். வாசகனை நேரடியாக விழித்துப் ப
அன்புள்ள டயரிக்கு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அன்புள்ள டயரிக்கு, ஒவ்வொரு நாளும் நீ, என்னைச் சந்தித்துக் கொள்ளும் உன் வழக்கத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். விடியும் ஒவ்வொரு பொழுதும் வெற்றிடமானது என்பதையும் உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு போதும் உணர்ந்து கொள்வேன். உனது ஒரு நாளின் வெறுமையைப் போக்கிவிட்டால், அது விஷேடமாகிவிடும் அதிசயத்தையும் கண்டிருக்கிறேன். நீதான் என்னிடம், புலரும் பொழுதுகள் எல்லாமே விஷேடமாக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உனக்கு அதிகம்
நீ யார்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ வாழ்கின்ற உலகத்தில் யாருக்கும் நிழலில்லை. உன் உருவத்தைப் பார்த்துக் கொள்ள கண்ணாடி போன்றதொரு பொருளில்லை. உன் தோற்றத்தைப் பார்க்க முடியுமான ஒரே கருவி உன் எண்ணம் மட்டுந்தான் என கற்பனை செய்து கொள். உன் தோற்றம் பற்றி, உனக்கு இருக்கும் எண்ணங்கள் எப்படியாயிருக்கும்? யாருமே உன் தோற்றம் பற்றி சொல்லப்போவதுமில்லை என்றும் எண்ணிக் கொள். உன் தோற்றம் பற்றிய உன் கனவின் உருவகம், நீ எதுவாக எண்ணிகிறாயோ அதுவாகவே ...
படிப்பித்தல் [புதன் பந்தல் - 12.10.2011] #7
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 15 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கற்றலையும் கற்பித்தலையும் பொதுவான மனித உணர்வின் வெளிப்பாட்டிலிருந்து நோக்குகிறது. காரிருள் சூழ்ந்த நிலையில், திடீரென பெய்யென பெய்யும் மழைபோலே, நாம் வாழ்கின்ற சூழல் பற்றியதான எமது பார்வைகள் விழித்துக்கொள்தல் நடைபெறுவதுண்டு. அவை எல்லாமும் நாம் சூழல் சார்பாகக் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடாக இருப்பதும் இன்னொரு அழகு. எல்லோரிடமும் “தாங்கள் உயர்வானவர்கள்” என்ற, குறைந்தது மெல்லியதான அல்லது அதிகபட்ச வ
அர்த்தங்கள் புதிது
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 3 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வாழ்வின் அர்த்தம், நம்பிக்கை, தேர்வு என்பன பற்றியெல்லாம் வித்தியாசமாகக் கதைக்கின்ற ஒரு அழகிய காவியமாகவே, நான், ஆன் லெமட் இன் Stitches என்ற நூலைக் காண்கின்றேன். ஒரு மனிதன், தன் சௌகரிய வலயத்தைத் துறக்கின்ற தருணத்திலேயே அவனது நிஜமான வாழ்வின் அழகியலைக் காண்பதற்கான வழியை உருவாக்கிக் கொள்கின்றான் என்கின்ற உண்மையை உறுதிப்படச் சொல்கிறது இந்த நூல். தனது வாழ்வின் உண்மைச் சம்பவங்கள், அனுபவங்கள் மூலமாக, தனது உண்மையான தன்மையை உணர்ந்து ...
கடதாசிப் பெண்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அதுவொரு காலம், அங்கு எல்லாமுமே இருக்கவில்லை. ஆனால் இருந்த எல்லாமுமே வாழ்ந்து கொண்டிருந்தன. அங்கு எல்லோருக்கும் முகவரி இருந்தது. யாரும் மற்றவரின் முகவரியைக் கண்டு குழம்பவுமில்லை, அந்த முகவரியாக தான் மாற வேண்டுமென்ற பேதமையை கொண்டிருக்கவுமில்லை. அங்குதான் அவள் வாழ்ந்தாள். அவள் கடதாசியால் உருவானவள். அவளின் வாழ்விடங்கள் எல்லாமே, வசந்தமாயிருக்கக் கனவு காண்பவள். கடதாசியின் மடிப்புகளாய், முதுகெலும்பு தோன்றி, அவளின் தோற்றத்திற்கு எழில் சேர்த
அறிவில்லாத மொழி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அறிவென்பதை நீ ஒரு மொழி என நினைத்துக் கொண்டால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அறிவைப் பெறுகின்ற ஒரு ஊடகமாகவே மொழியை நான் காண்கிறேன். வெறுமனே மொழிப்புலமை கொண்ட ஒருவரை அறிவுடையார் என்று நீ இனங்காட்ட முடியாது. ஆங்கிலமென்பது, ஆங்கிலக்காரனுக்கு தாய் மொழி. தமிழ் என்பது தமிழனுக்கு தாய் மொழி. ஆங்கிலக்காரனால் சரளமாகக் ஆங்கிலம் கதைக்க முடிவது இயல்பான விடயம். அதேபோல், தமிழனால் தமிழைச் சரளமாகக் கதைக்க முடிவதும் இயல்பான விடயம். ...
இருளை மெல்லக் கழற்றிய காலை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அது ஒரு காலைப் பொழுது. விடிந்திருக்கவில்லை. நேரம் போயிருப்பதாக தலையணைக்கருகே இருந்த திறன்பேசி சொல்லியது. காகம் கரைகின்ற சத்தமும் சேவல் கூவும் சத்தமும் காதோடு கவிபாட, நானோ மாறி மாறிப் பெய்கின்ற மாரி மழையை எதிர்பார்த்தவனாய் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள விளைகிறேன். நான் மழையை வேண்டி நிற்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பூமியின் பூட்டைத் திறந்து, அதற்குளுள்ள வாசனையைப் பிரபஞ்சம் நுகரச் செய்கின்ற மழையின் வித்தை பற்றி நான் எப்போதும் ...
இதுவொரு கமராவின் கதை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 59 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அவனொரு பிரபலமான நிழற்படப்பிடிப்பாளன். உலகப் புகழ் வாய்ந்த பல நிழற்படங்களின் சொந்தக்காரன் என்று கூட சொல்லிவிடலாம். அவனின் அற்புதமான நிழற்படங்களை நேசிப்பவர்கள், அவனோடு கொஞ்சம் பேசிவிட வேண்டுமென ஆர்வம் கொள்வர். அவன் வாழ்ந்த பகுதியில் வசித்த, செல்வந்தன் ஒருவன், அவனை இராப்போசனத்திற்காக அழைத்தான். அழைப்பை ஏற்று, அவனும் செல்வந்தனின் வீடு சென்றான். செல்வந்தனைப் போலவே, செல்வந்தனின் மனைவிக்குக் கூட, இவனின் பிரபலமான நிழற்படங்களை ரொம்பப் பிடித்திருந்தது. அவன்