நேரமில்லை நீயோடு!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “அந்த அலம்பல பார்க்க எனக்கு நேரமில்ல” — பழம் வாங்கச் சென்ற கடையில் காதோரம் கேட்ட ஒரு சம்பாஷனை. இந்த உரையாடல்கள் பல வடிவங்களில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருப்பொருள் மட்டும் மாறுவதில்லை. அந்தக் கருப்பொருள் நேரமில்லை என்பதுதான். நேரம் பற்றிய நினைப்பே இல்லாமல் உங்களின் வாழ்வின் ஒரு கட்டத்தை வாழ முயற்சிக்க முடியுமா? காலம், கட்டம், கணம் என எல்லாமே நேரத்தின் வருவிளைவுகள். நேரம் தவிர்த்த ...
மனத்திற்கு ஒரு மடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ பேசுவதையோ, எழுதுவதையோ இன்னொருவன் புரிந்து கொள்கின்ற விதம் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்க முனையவும் கூடாது. பொதுத்தளத்தில் எழுதப்படுகின்ற எழுத்துக்களாகட்டும், பொதுக்கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளாகட்டும் — ஒவ்வொரு தனிநபரையும் வெவ்வேறு வகையில் சந்திக்கின்றன. உன் எழுத்துக்கள், ஒருவனின் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதன் மடங்குகள் தான், நீ ஆயிரம் பேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவாக இருக்க முடியாது. அது அப
புன்னகைப்பூமி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 35 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இங்கு தன்னை அற்புதமாக எண்ணிக் கொண்டு, வாழ்வை நகர்த்துபவர்களின் தொகை ஏராளம். இது பலரினதும் அடிப்படை ஆசையாகக் கூட இருக்கிறது. இது ஓர் அற்புதமான மனித எண்ணத்தின் வெளிப்பாடுதான். தன்னைப் பற்றிய அற்புதங்கள் சார்பான புரிதல்களை ஒருவன் பெற்றுக் கொள்கின்ற நிலையில், வாழ்க்கை மீதான அவனின் பார்வை தெளிவு கொள்கிறது. உன்னோடு கதைக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகளைக் கேட்க ஆவலாயிருக்கின்றனர். அவர்களின் ஆர்வம் பற்றிய அறிவிப்பு இல்லா
தேர்ந்தெடுத்தல் [புதன் பந்தல் - 09.11.2011] #10
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், எண்ணங்களின் தெரிவு பற்றி சொல்கிறது. “ஒருவன் தனது மனப்பாங்கினை மாற்றிக் கொள்வதன் மூலம், அவனின் வாழ்க்கையையும் மாற்றிவிடக்கூடிய ஆற்றல்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்று 1900களில் எழுதிய நவீன உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் ஒரு தடைவை குறிப்பிட்டார். மனப்பாங்கென்பது, எமது எண்ணங்களின் வடிவம். மனதில் கொண்ட எண்ணங்கள்தான் வாழ்வின் செயல்களாய் வடிவம் பெறுகிறது.
பணமரம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன். நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான். பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன். பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வ
வெளிச்சம் வேண்டாம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த வாரம் முழுக்க, என் பேருந்துப் பயணங்களின் துணையாக Brené Brown இன் The Gifts of Imperfection என்ற நூல் இருந்தது. வெறும் வார்த்தைகளால் உளவியல் பேசாமல் வாழ்க்கையின் நிகழ்வுகளால் விடயங்கள் சொன்ன பாங்கு பிடித்திருந்தது. இந்த நூலை, வெறும் மகிழ்ச்சிக்கான வழிகளைச் சொல்லுகின்ற இன்னொரு நூலாக கண்டு கொள்ள முடியாது. மாறுபட்டதும் சொல்லவந்த விடயத்தை தெளிவாகச் சொல்லிருப்பதும் தான் சுவை. ஒருவன் தன் குறைகளை பற்றிய புரிதல்களோடு, அவற்றை தைரியமாக
உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?] 1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ...
அணைந்தும் அணையாத ஒளி – மாயா என்ஜெலோ
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நிறத்தின் முந்திய பதிவுகளில் ஒரு ஆளுமை பற்றி அடிக்கடி சொல்லியிருப்பேன். நான் நண்பர்களோடு சம்பாஷிக்கின்ற போதும் கூட இந்த ஆளுமை பற்றிச் சொல்லுகின்ற தேவை உண்டாகும். நான் நேசிக்கின்ற, மதிக்கின்ற மிகப்பெரும் ஆளுமை – மாயா என்ஜெலோ. இன்று இவ்வுலகத்தை விட்டு, உயிர் துறந்தார் என்ற செய்தி, சோகத்தை கொண்டு தந்தது. ஒருவனின் வெற்றி என்பது தன்னைப் பற்றிய புரிதலிலேயே தொடங்குகிறது. அந்தப் புரிதல் என்பது, தன்னைத் தானே காதல் ...
பறப்பது ஒரு நோய்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாளாந்தம் நாம் பலரைக் காண்கிறோம். சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் சொல்லுகின்ற கதைகளோடு பயணிக்கிறோம். அவர்களின் கதைகளை கடத்த நம் காதுகளை இரவல் தருகிறோம். இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சொல்லும், கதை கேட்கும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அத்தனை பேரும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைப் படிக்கிறார்கள். அல்லது பழைய விடயங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள் சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள
யாருக்குக் கோளாறு?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] தனது மனைவிக்கு தான் கதைப்பதெல்லாம் கேட்கின்றதில்லை என்று இனங் கண்டு கொண்ட கணவன், தன் மனைவிக்கு கேட்டலில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதனை நிவர்த்திக்க சிகிச்சை செய்ய வேண்டுமென எண்ணம் கொண்டான். இந்த விடயத்தை மனைவிக்கு பக்குவமாக எடுத்தும் சொல்லவும் வேண்டும். அதேவேளை, மனைவியின் கேட்டல் நிலைக் கோளாறை நிவர்த்தியும் செய்ய வேண்டும் என்கின்ற தேவை கணவனுக்கு இருந்தது. தனது குடும்ப வைத்தியரிடம் சென்று, இது பற்றி கலந்தாலோசித்தான். வைத்தியர் ...
நங்கூரமா நீ?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளின் பிரதியென கழிந்து கொண்டு, அது களிப்பைத் தந்தாலும், சிலவேளைகளில் சலிப்பையும் உனக்கு தந்துவிடுகிறது. புதிய மாற்றங்களை உன்னால் ஜீரணித்துக் கொள்வதற்குள், என்னதான் நடக்கிறது என்ற கேள்வியோடு, உனக்குள் பயமும் தொற்றிக் கொள்கிறது. உனக்கு, மாற்றங்களோடு சேர்ந்து இன்னும் புதிய அற்புதங்களைச் செய்யக் கூட ஆர்வம் தோன்றாமலிருக்கிறது. நிலையில்லாத் தன்மை உன்னை பலமிழக்கச் செய்துவிட்டதை உன்னால் உணர முடியாவிட்டாலும், அனுபவசால
ஆதலால், படைப்பீர்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “நீ நினைத்த எதுவும், நினைத்தபடியே நடக்காதிருக்கும். நீ விளையாட மைதானத்திற்குச் சென்றால் மழை பெய்யும். நேரத்திற்கு நீ புகையிரத நிலையத்திற்கு சென்றாலும், புகையிரதம் சமிஞ்சைக் கோளாறால் தாமதமாகும். நீ நினைத்த எதுவும், அப்படியே நடந்துவிடாது. ஆனாலும், நீ நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும்.” நீல் கெய்மேன் ஒரு சிறந்த எழுத்தாளர். கடந்த வருடம் கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவரின் சொற்பொழிவின
முடிவிலியின் அந்தம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு? ஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது. அடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.
“அழகு” என்ற சொல் என்றும் அழகானதன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?] முகத்தை அழகென்றும் முடியை அழகென்றும் தமிழை அழகென்றும் தன்னை அழகென்றும் சொல்கின்ற உலகப்போக்கு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அழகை ஆராதிக்கும் பழக்கம் ஒவ்வொரு மொழியிலும் ஆழப்பட்டிருக்கும் விதமே தனியழகானதுதான். ஆனால், அழகு என்பது வதனத்தின் முகவரிக்குக் கொடுக்கும் முத்திரைதான் என்றால் இல்லையென்றே சொல்வேன். நகரும் மலைகள், மனதோடு பேசும் சிரசுகள், மரங்களை வெட்டிச்செல்லும் காற்றின் சீற்றம் எல்லாமும்தான் அழகு நிறைந்தவை. வாழ்க்கை என்பதுகூட ஒ
இதை வாசிக்க வேண்டாம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] View story at Medium.com இது ஒரு அன்பான சவால் — கட்டளை என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சவால் பற்றி அறிகின்ற கணத்திலேயே, அதில் தோற்றுப் போவீர்கள். உங்கள் கண்கள், நீங்கள் அறிந்த மொழியின் எழுத்துக்களைக் கண்ட மாத்திரத்திலேயே அதனை வாசித்து உணர்ந்து கொள்ள முந்திக் கொள்ளும். ஆனால், இந்த நிலைமை, மிக இயல்பானது — உலகிலுள்ள கண்களால் பார்க்க கூடிய அத்தனை பேருக்கும் பொதுவான ஆற்றல் என்று நீங்கள் நம்பிவிடக் கூடாது. வாழ்நாள் ...
தீயிற்கான தேடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நெருப்பு பற்றிய கதைகள், அனுபவங்கள் என பல நிலைகள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏதாவதொரு கட்டத்தில் வந்து போகும். போகாமலேயே தங்கி நிற்கும். நெருப்பைப் பற்றி அதன் சுடும் தன்மை பற்றி தன் பேரனுக்கோ, பேத்திக்கோ சொல்லிக் கொடுக்காத பாட்டிகள் இல்லையென்றும் சொல்லிவிடலாம். தீயின் குணாதிசயங்கள் பற்றிய மனிதனின் ஈடுபாட்டுடனான இந்த தகவல் கடத்துகை என்றும் போல் இன்றும் தொடர்கிறது. மெழுகுதிரிக்கு அருகில் செல்லும், சின்னக் குழந்தைக்கு — “அ
சோளக்காட்டுச் சொக்கன் [புதன் பந்தல் #11]
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களின் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும். வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான
கலையக ஒலி [புதன் பந்தல் - 28.09.2011] #5
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 12 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், ஒலி என்கின்ற சத்தத்தைப் பற்றி விசாரிக்கின்றது. நிறத்தில் ஏற்கனவே, சத்தங்கள் எல்லாம் இனிமையானதா? என்ற பதிவின் மூலம் சத்தங்களின் வெவ்வேறு வடிவங்களும் அவற்றின் சூழல் விளைவுகளைப் பற்றிப் பேசியிருப்பேன். தொடர்ந்து வரும் காணொளி காணுங
எங்கே போகிறீர்கள்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வாழ்வின் ஒவ்வொரு நொடியினதும் நிகழ்வுகளின் மிச்சங்களை அகத்துள் சேகரித்து அன்போடு அரவணைத்துக் கொள்வதற்குள் அடுத்த நாளும் அதன் நிகழ்வுகளும் உடனேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. இங்கு கனவுகளை இரையாக்கிவிட ஓடுகின்றவர்களாகவே எல்லோரையும் காண வேண்டியுள்ளது. ஒருவனின் கனவு — இன்னொருவனுக்கு ஆச்சரியம் அல்லது நகைப்பு அல்லது கேள்வி என பல தன்மைகளை வழங்கி நிற்கிறது. அந்தச் செம்மறியாட்டை மேய்க்கின்ற இடையனும் கனவுகளைத் தேடுகின்றவன் தான். கனவுகளின் ஈ
மெல்லக் கிழிந்த வானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இன்று மின்னல் வெகுவாய் சாலையோரத்து விளக்குகளையும் தாண்டி, ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சிறுகோட்டுப் போல் தோன்றிய ஒளியின் பிரமிப்பில் அவனிருக்க, அதற்கு விளம்பரம் செய்வதாய் இடி, முரசுகெழுவாய் இருந்தது. நீ பொழிகிறாய். மெல்ல மெல்லப் பொழிகிறாய். அடுக்கடுக்காய் பொழிகிறாய். ஆனந்தமாய் பொழிகிறாய். தளவம் பூவின் மணத்தை என் அறையில் செயற்கையாக சேர்த்து வைத்திருந்தேன். வானம் கிழிந்ததால், அந்த மணத்தைக் கௌவிக் கொள்ள மண்ணின் வாசம் வந்துவிட்டதாக, காற