குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் - 14.09.2011] #3
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், சௌகரிய வலயம் பற்றிய விடயத்தை குட்டி யானையொன்றின் இயல்போடு அலசுகிறது. குட்டி யானையை, அதன் பாகன் மிகச் சிறியதொரு அளவான இடத்திலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறான். பூமிக்குள் ஆழமாக பதிக்கப்பட்ட மரத்தாலான மெல்லிய கம்பமொன்றில் யானையின் கால், கயிற்றினால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நீளமோ, குறித்த யானையை வளர்க்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பொருந்தும் வகையிலேயே காணப்படும். அவ்வளவு தூரம் [...]
உன் அபிலாஷை என்ன?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 57 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கீழைத்தேய தத்துவங்களின் செறிவை, மேலைத்தேயவர்களிடைய பிரபலம் ஆக்கிய பெருமை அலன் வட்ஸ் என்பவரையே சாரும். அலன் வட்ஸ் என்றால் யார் என்ற கேள்வி உனக்குள் எழலாம். அவர் யார் என்று நீ கட்டாயம் அறிய வேண்டும். பிரித்தானிவைச் சேர்ந்த எழுத்தாளர், அத்தோடு தத்துவியலாளரும் கூட. தனது இயல்பான சொற்பொழிவுகளின் மூலம், வாழ்வு பற்றிய பலவகையான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள பலருக்கும் உதவியுள்ளார். இவரின் உரைகள், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை அற்புதமாக ...
ஒட்டாத பசை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாறின் அத்தியாயங்கள். அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாள
தும்மலின் விஞ்ஞானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும். அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம். “தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடம
உன்னால் முடியாதா?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] சின்னஞ் சிறிய சில தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் குழுமியிருந்தனர். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். முதலில் தொடுபவர் வெற்றியாளர் — அவ்வளவு தான் போட்டி விதி. போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் குழுமியிருந்தோரில் பலரும் இது லேசுபட்ட வேலையில்லை. இந்தச் சின்னத் தவளைகளால்
மரமேறும் மீன்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போது..” — சின்மயி பாடியிருப்பார். இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள்
நிழலோடு ஒரு நிமிடம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 45 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அண்மையில் நண்பனை சந்திப்பதற்காய் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. கோடை காலம், பிரசன்னமாகத் தொடங்கியிருப்பதால் காலையில் சூரியனின் வருகையில் கூட சுணக்கமும் அன்று இருக்கவில்லை. போகும் வழியில் கோடைக்கு குடை பிடித்தாற் போல், அங்காங்கே நிமிர்ந்து நின்ற கட்டடங்கள் அதன் அளவைத் தாண்டியும் விசாலமாய் நிலத்தில் நிழலாகி நின்று உருவம் கொண்டிருந்தது. இதைக் கண்ட எனக்கோ, நான் வாசித்த கலீல் ஜிப்ரானின் கதையொன்று எண்ணத்திற்குள் நிழலாடத் தொடங்கி
வருடாந்தக் காதல் போட்டி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?] தனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே. ஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும். ஸ்டான்போர
பிறக்காத நாள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] பிறந்த நாளில் முக்கியமான விடயம் ஒன்றைச் செய்ய வேண்டும், புது விடயம் ஒன்றைத் தொடங்க வேண்டும், அந்த நாள் மட்டுந்தான் விஷேடமான நாள் என்றெல்லாம் இங்கு எழுதப்படாத விதிகள் பலவுள்ளன. ஆனால், இந்த நிலையை நீ மெல்ல நின்று நிதானித்து அவதானித்தால், நீ விரும்பித் தொடங்க நினைக்கின்ற காரியத்தை ஆரம்பம் செய்து கொள்ள ஒரு ஆண்டில், ஒரு நாள் மட்டுந்தானா இருக்கிறது? என்ற கேள்வி தோன்றலாம். 52 வாரங்களாய் விரிந்துகிடக்கும் ...
நீ அறியாத அடுத்த விநாடி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். நீங்கள் நினைத்த அத்தனை விடயங்களையும் உங்களுக்காக அது செவ்வனே செய்து விடுகிறது என்றும் நம்பிக் கொள்வோம். அந்தச் சாதனத்தை வாங்குவதும், கையடக்கத் தொலைபேசிகள் போன்று மலிவான நிலையாகவுள்ளது என்றும் எண்ணிக் கொள்வோம். இனி என்ன? நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்துவிடும். வாங்க வேண்டிய பொருளை நினைத்துச் சொன்னால், அது உங்கள் காலடிக்கு வந்துவிடும். எல்லாமே உன்னதமாக நடைபெற்றுவிடுகிறது. இது நீடி
புழுதிச் சிக்கல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] விடிகின்ற காலையில் உன் பார்வைப் புலத்திற்குள் தோன்றுகின்ற காட்சிகளில் மனிதர்களும் வந்துவிடுவது வழக்கம் தான். அவர்கள் உன் பார்வையில், புதியவராய் இருக்கலாம். பழையவராய் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அலர்கள் உனக்கு எப்படித் தோன்றினாலும், அவர்களின் பார்வையில் நீ எப்படித் தோன்றினாலும் — ஒரேயொரு உண்மைதான் மிக மிக உண்மையானது. நீ வாசிக்கின்ற இந்தக் கணம் இனி எப்போதுமே திரும்பி வராது. உடைந்த கண்ணாடிக் கோப்பைகளை துண்டு துண்டங்
அவன் மரங்களை வாசிக்கிறான்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வெளியே முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருந்தது. கொஞ்சம் இருட்டு, அவன் அறைக்குள் சென்று வெளிச்சத்திற்குப் பயத்தில் ஒளிந்து கொண்டது. அடிக்கடி அவன் அறை வழியாகச் செல்லும் காற்று, அவன் அறையின் யன்னலின் திரைச்சீலையை விலக்கி, வெளிச்சத்திற்கு உதவிக் கொண்டிருந்தது. ஆனாலும், கொஞ்சமாய் ஒளித்திருந்த இருட்டை திரைச்சீலையை விலக்கி வந்த வெளிச்சத்தால் பிடிக்க முடியவில்லை. வெளிச்சம் முயன்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோற்றுக் கொண்டுமிருந்தது. யன்னல
உனக்கான பாடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 33 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அதுவொரு செவ்வாய்க்கிழமை. கல்லூரி வளாகத்தின் நூலகத்தில் என்றும் போல், நிறையப் பேர் நூல்களை எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வாசிப்பதற்குமாய் குழுமியிருந்தனர். கோபாலும், வழமைபோலவே நூலொன்றை இரவல் வாங்கிக் கொள்ள அங்கு சென்றிருந்தான். அவனுக்கு தேவையான புத்தகம் இருக்கின்ற பகுதியை நோக்கிச் சென்று பொருத்தமான நூலை தேடலானான். ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க முற்பட்ட போது, அப்புத்தகத்தின் உள்ளே இருந்து காகிதத் துண்டொன்று எட்டிப் பார்த்து, கீழே விழுந்தது.
நெய்தல்: தமிழ் ஒருங்குறி கட்டற்ற எழுத்துரு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நான் சொற்களைப் பொருள்களாகவே பார்க்கின்றேன். ஒவ்வொரு சொற்களும் கொண்டுள்ள குணமும் ஆர்வமும் தெளிவும் எனக்குள் எப்போதும் பரவசம் கொண்டுதரும். சொற்கள் பல கோர்த்துச் செய்யப்படுகின்ற செய்யுள்களும் பேச்சுக்களும் வனப்பிற்குரியவை. பல சொற்களின் தொடர்ச்சியான பிணைப்பால் தோன்றும் பொருள் கொண்ட வாக்கியம் மொழியின் ஆச்சரியம் என்பேன். சொற்களின் மூலக்கூறாய் இருப்பது எழுத்துக்கள். அவை தமக்கேயுரித்தான பண்புகளை, சொற்களோடு சேருகையில், பூசிக் கொள்ளும். ஆக, சொ
அனுமானவியல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இங்கு எல்லாமுமே வினோதமாகவே பார்க்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், எல்லா விடயங்களுக்குள்ளும் அனுமானம் என்ற அடிப்படையொன்று தொற்றிக் கொண்டுவிடுகிறது என்று சொல்லி விடலாம். அனுமானத்தின் அடியார்களாக அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் அனுமானத்தின் தோன்றலை மற்றவருக்கும் கற்றுத்தர முனைகின்றனர். “அனுமானவியல்” என்றொரு கற்கைநெறியின் சிறப்புத் தேர்ச்சி பெற்றதான அமைவை தங்களின்
அவதிகளைக் கொண்டாடு!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ, அவதிகளின் தோற்றமாயிருக்கிறாய். உனக்குள் ஆயிரம் அவதிகள், அவதாரம் கேட்டுச் சண்டை போடுகின்றன. நீ அவற்றில் எதைக் கவனிப்பது என்று தெரியாமல், அவதிகள் தரும் அவதிக்குள் தொலைந்து போகிறாய். மகிழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில், கவலை பற்றிய தேவைகள் உனக்குள் குடிகொள்வதும் அதுவே அவதியாய் ஆகிவிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நல்லதை நேசிக்க வேண்டுமென்ற உன் மனத்தின் ஒப்பாரி, தீயதைப் பற்றி யோசிக்க வைக்கின்ற தேவையையும் உண்டு பண்ணி, உனக்குள் அவதிகளை ப
இது பூக்கவிதை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அறிவியலின் வழியால் பல புதிர்களை விடுவிக்க துணை நின்ற அறிவியலாளர் தான் ரிசார்ட் பைன்மேன் (Richard Feynman). தனது இயல்பான விவேகத்தின் வாயிலாக அறிவியலை அவர் அணுகிய விதம் அற்புதமானது. புதிதாக விடயங்களை அறிந்து கொள்தல் எந்தளவில் மகிழ்ச்சியைக் கொண்டு தரும் என அற்புதமாகக் எடுத்துக்கூறிய பைன்மேனின் அழகுச்சிந்தை — கவிதை. அழகையும் மர்மத்தையும் அவர் விளக்கிச் சொல்கின்ற அற்புதமான நிலையை நிறத்தின் வாசகர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்ட
நாளை என்பது என்றும் வராது!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எதிர்காலம் என்பது ஒரு எண்ணக்கரு மாத்திரம். அது எங்கும் இல்லை. அப்படி எதுவும் இல்லை யாரும் எதிர்காலத்தைக் கண்டதாய் வரலாறும் இல்லை. இல்லாத ஒன்று பற்றியதான உன் ஆயத்தங்கள் பலவேளைகளில் புதிரையும் இன்னும் சில வேளைகளில், கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. நாளை என்பது நம் கையில் இல்லை என்பது நாமறிந்த உண்மைதான். நாளை என்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா? இன்று என்பது மட்டுந்தான் உண்மையானது. நாளை என்பது கூட, ...
கடிதத்திற்கான காத்திருப்பு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்? காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்? சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட. பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல
வாழ்வின் அற்புதமான நாள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ பாடசாலையில் தமிழ்தினப் போட்டியில் வெற்றி பெற்ற நாளா? தொலைபேசியில் குரல் எப்படிக் கேட்குமென எண்ணி நீ முதன் முதலாக தொலைபேசியில் கதைத்த நாளா? புகையிரத வண்டியில் செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தின் உச்சத்தில், பல ஆண்டுகள் காத்திருப்பின் பின், புகைவண்டியில் நீ பயணித்த நாளா? சூரிய கிரகணகத்தை புகைப்படச்சுருளை வைத்து பார்க்க எத்தணித்த நாளா? பரீட்சைகளின் பெறுபேறுகளை மிகச்சிறப்பாகப் பெற்றுக் கொண்ட நாளா? ருசிக்க ருசிக்க சோறும் கரியும் முதன் ...