எதை நீ துரத்துகின்றாய்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 42 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நாம் அன்றாடம் சந்திக்கின்ற மனிதர்களில் எப்போதுமே, புதுமையான விடயங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் உலகைக் காணும் விதம், வித்தியாசமும் தனித்துவமும் உடையதனால், இந்த அழகிய நிலை எய்தப்படுகின்றது. இதுதான் இயல்பானது. உண்மையுமானது. பதிவிற்குள் செல்ல முன்னர் உங்களுக்காக ஒரு குட்டிக் கதை, “ஒரு ஊரில ஒரு நரி. அதோட கதை சரி.“ அண்மையில் நான் கேள்வியுற்ற கதையொன்றை — நாய்க் கதை — [...]
உணர்விழக்கும் மொழியாடல்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாகரிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் அளவு கோளாகவே இருந்து வருகிறது. கருவியை மனிதன் கண்டுபிடித்து அதன் வாயிலாகக் கண்டு கொண்ட விசித்திரங்களை பகிர்ந்து கொள்ள, ஆவணப்படுத்த இன்னொரு கருவி தேவையென உணர்ந்து அதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினான். அவனின் கண்டுபிடிப்பின் வருவிளைவுதான் மொழி. கருவிக் கையாட்சியும் மொழியின் பயன்பாடும் தான் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஆணிவேராகத் திளைத்தது. இந்த மொழியின் தயவால் இலக்கியம்
நீ தோற்றுப் போவாய்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அதைச் செய்தால், பிழையாகிவிடும் என்ற கற்பனைக்கு விடுப்புக் கொடுத்து, அது சரியாக நடந்தேறும் என்ற உவகையான எண்ணத்திற்கு சுவாசம் கொடு. அது உன் மனவானில் வாசம் வீசட்டும். அந்த அற்புதமான விடயத்தை முயற்சி செய்வதால், அதில் தோற்றுப் போய்விடுவோம் என்பதை, அதை ஒரு சொட்டும் முயற்சிக்காமல், அதனைப் பற்றி வியாக்கினம் கூறுகின்ற பழக்கம் என்பது சாதாரண வழக்கமாகியுள்ளது. அந்த விடயம் அற்புதமானது என்பதை அறிந்து கொண்ட, உன்னுடைய அதே மூளைதான், ...
கவலை பற்றியதான கவலைகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மனிதனின் இருப்பின் அழகியலாகத்தான் கவலையைக் காண வேண்டியுள்ளது. கவலைகளின் வகைகள் பலவாறாக விரிந்து சென்றாலும், மனிதன் கவலைப்படுகின்ற நிலைக்குள் எப்போதோ ஒரு தடவை வந்துவிடுகிறான். மீள்கிறான். மீண்டும் வருகின்றான். இப்படியே கவலைகளும் சக்கரமாய் சுழல்கின்றன. மனிதன், கவலையே இல்லாமலிருக்க அவன் மூளைக் கலங்களில் பாதிப்பு ஏற்பட்ட புத்திசுவாதினமற்றவனாக இருக்க வேண்டுமென விஞ்ஞானம் சொல்கின்றது. ஆக, மனிதனை — இயல்பான மனிதனாக அடையாளப்படுத்தி நிற்ப
உண்டியலும் காதலும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?] உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான். நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு
பத்தாயிரம் மணிநேர விதி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன். அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwel
முப்பத்தொன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இன்றோடு இந்த மாதம் நிறைவு காண்கிறது. நாளை புதிய மாதம் தொடங்குகிறது. சரியாக முப்பது நாட்களுக்கு முந்தி, நான் நிறத்தில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புதிய பதிவொன்றை வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டு கொண்டேன். ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. நானும் ஒவ்வொரு நாளும் நிறத்தில் புதிய பதிவுகளை வெளியிட்டு வந்தேன். இந்தத் திடசங்கல்பம் அற்புதமாய் இன்றோடு நிறைவைக் காண்கிறது. ஆனாலும், இந்த திடசங்கல்பம் பூண்டு கொண்டதன் பின்னர், அதனை ...
என் மகனே!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] என் மகனே! திண்மம். திரவம். வாயு. நீ. உன் கனவுகள் அத்தனையும் உன் எண்ணங்களுக்குள் படர்ந்திருக்கிறது. உன் நம்பிக்கை தன் கால்களை நிலைநிறுத்திக் கொள்ளும். உன் ஆசைகள் விலாசம் பெறவுள்ளன. நீ எதிர்பார்த்தவையெல்லாம் உன்னை எட்டித்தொட பாய்ந்து கொண்டும்வரும். உன் பயத்தைக் கூட பயமறியாது. மனவுளைச்சல் என்பதைப் பற்றி உனக்கு எண்ணங்கள் சொல்லித்தரக்கூடும். ஆனாலும், இது எல்லாமும் தான் நீ. உன்னைப் போல உலகத்தில் வேறொன்றும் கிடையாது. உனக்கும் தனித்துவமாய் .
நீயல்லாத நிலைகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மின்காந்த நிழற்பட்டையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கண்டு கொள்ள முடிகிறது. ஒலித் திருசியத்தில் காணப்படும் ஒலியின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கேட்க முடியும். இதனை நீ வாசித்துக் கொண்டிருக்கும் போது, விண்மீன் மண்டலத்தினூடாக மணிக்கு 220 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். உன் உடலின் 90 சதவீதமான கலங்கள் — “நீயல்லாத” — தங்களுக்கே உரித்தான பரம்பரையலகோடு காணப்படுகின்றன. உன் உடலிலுள்ள மொத்த
மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் - 19.10.2011] #8
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று. ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, “யாருக்கு இந்த 100 ரூபா நோட்டு ..
ஏந்தாத வரைக்கும் இனிமைதான்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கோபாலு கேள்விப்பட்டுச் சொன்ன ஒரு குட்டிக்கதை இன்றைய பதிவாகிறது. ஒரு பேராசிரியர், குவளையொன்றினுள் நீரை நிரப்பி, மாணவர்களை நோக்கி, “இந்தக் குவளை எத்தனை கிராம் நிறை இருக்கும்?” என வினவினார். மாணவர் பக்கமாக, “200 கிராம்கள், 250 கிராம்கள், 300 கிராம்கள்” என பதில்கள் ஒலித்தன. “ஆனால், உண்மையில் இது என்ன நிறை என்று எனக்கும் சரியாகத் தெரியாது,” என்று கூறிய பேராசியர், “உங்களுக்கான எனது கேள்வி என்னவென்
யாரைத்தான் நம்புவது?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு பொழுதும் வித்தியாசமாகவே விடியும். விடிகின்ற பொழுது கொண்டு வரும் நிகழ்வுகளின் அனுபவங்கள் தான் அடுத்த வினாடியின் உணர்வின் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலை உலகின்பால் வாழும் அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், தலைவன் என்பவன், பின்தொடர்பவர்களைக் கொண்டவன். பின்தொடரும் தேட்டத்தைப் பலர், ஒருவன் சார்பாகக் கொண்டதனாலேயே அவன் தலைவன் ஆகிவிடுகிறான். தலைமைத்துவம் என்பது ஒரு கலை. அதை ஒரு மாயாஜால வித்தையென்றோ,
உதவி: அளவுகளைத் தாண்டியது [புதன் பந்தல் - 21.09.2011] #4
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 41 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மாறுதல்கள் ஏற்படுத்துதல் பற்றிய விடயத்தை நட்சத்திரமீன்களின் கதையோடு ஆய்கிறது. காலை நேரத்தின் கடற்கரைக்கு அற்புதமான தோற்றச்சூழல் கிடைக்கும். அப்படியொரு காலைப்பொழுதில் கடற்கரை வழியாக உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நடந்து செல்கின்ற
கூச்சமா? யாருக்கு?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எனக்கு அலாதியான கூச்சமிருப்பதாகச் சொல்கிறாய். நீ சொல்லும் போதெல்லாம் உன் தோளை ஒரு குலுக்குக் குலுக்கி, எனக்கு அப்படியொரு கூச்சமும் இல்லை என்று எனக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கும். நீ என் முன் தோன்றி இப்படிச் சொல்கையில், என் உணர்வுகளின் ஒரு பாதி, முதுகெலும்பின் வழியே வழிந்து கொண்டிருப்பதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். இத்தனையும் சொல்ல நினைக்கும் எனக்கோ, எப்படி இவற்றையெல்லாம் சொல்வதென்று இன்னும் தெரியாதிருப்பதையும் உன்னிட
சாத்தியமற்ற சாத்தியங்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இயல்பான வாழ்க்கையின் பாதையாக இருப்பது, சாத்தியமான விடயங்கள் — சாத்தியமான விடயங்களை மட்டும் செய்தல் சாதாரண வாழ்வு பற்றிய அடிப்படையையே தரும் என அதை இன்னொரு வகையில் சொல்லலாம். இது உண்மையாகும். சாதாரண வாழ்க்கை என்பது எல்லோராலும் எய்திக் கொள்ள முடியும். தனித்துவமானவர்கள் என்ற பிறவியின் அழகிய தன்மையை இது ஒழித்துவிடுகிறது. கொஞ்சம் நாம் சேர்ந்து சிந்திப்போம். ஆளியொன்றை அழுத்துவதால் மின்குமிழ் ஒளிரும் என்பது சாத்தியமற்றது. நிலவில் நடந்த
மரங்கொத்தியானோம்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மரங்கொத்தி பற்றிய நினைவுகள் எனக்கு அதிகமிருக்கிறது. தென்னை மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, எல்லோரும் “என்ன சத்தம் கேட்கிறது?” என்றளவிற்கு அதனை பார்க்கும் அளவிற்கு வசீகரமான வலிமை கொண்டது. ஒவ்வொரு நாளும், மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, அதனைக் கொத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அது வழக்கமாக்கிக் கொள்ளும். சிலசமயங்களில், மொத்த மரமுமே அதிர்ந்து போகுமளவில், அதன் வேலை அங்கு அபாரமாகவிருக்கும். மரங்கொத்தி, கொத்தியதனால் இந்த மரம்
இது தண்ணீர்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீருக்குள் உல்லாசமாக உலா வந்து கொண்டிருந்தன இரண்டு வாலிப மீன்கள். இவை இடையில் எதிர்த்திசையில் வந்தவொரு வயோதிப மீனைச் சந்தித்தன. வாலிப மீன்களை நோக்கி, “வணக்கம் பசங்களே, எப்படி இந்தத் தண்ணீர் இருக்கிறது?” என வயோதிப மீன் கேட்டது. இதைக் கேட்ட வாலிப மீன்கள், கொஞ்சம் தூரம் நீந்திச் சென்று, ஒரு வாலிப மீன், மற்றைய வாலிப மீனைப் பார்த்து “தண்ணீர் என்றால் என்னடா?” என்று கேட்டது. நாம் வாழ்கின்ற ...
அன்புள்ள மகனுக்கு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 33 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடிதங்கள் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். கடிதங்கள் எப்போதும் பொக்கிசங்கள். பெற்றோரின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்தல் மிகப் பெரிய பொறுப்பு. கடினமான வாழ்வின் அத்தியாயம் என்றும் சொல்லலாம். சுகமான சுமை என்றும் சொல்லலாம். பெற்றோர்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை. அல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி அறியாதவர் யாருமில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆளுமை அவர். அவர் பற்றி நிறத்தில் ஏற்கனவே பதிவ
அனுபவங்களைத் துழாவுகிறான்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மனிதன் கண்டுபிடித்த நேரம் பலதையும் செய்யக்கூடியது. ஒருவன், தன்னைப் புரிந்து கொள்வதற்கு அவகாசம் கொடுப்பது இந்த நேரந்தான். அனுபவத்தின் அளவுகோலும் காலம் தான். தன்னை தான் எண்ணும் நிலைகொண்ட சிலையாகச் செதுக்கிவிட காலமும் அது கூடக்கடத்தப்படும் அனுபவங்களும் தான் ஒருவனுக்கு வழி செய்கிறது. ஆன்மாவின் குரலோடு சேர்ந்தாற் போல், வாழ்வின் செயல்களை ஆக்கும் நிலையை கொண்டு தருவது காலந்தான். நேரம், காலம் என்கின்ற போது, நீங்கள் வெறும் காலம் கொண்டுள்ள நேரத்தை மட்டும் ..
நீலம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 42 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வானத்தைக் காட்டி மட்டுந்தான் நீ, நீல நிறம் பற்றிக் கதைக்கிறாய். ஆகாயம் தொலைக்கின்ற நிறமும் நீலம் தான். பரந்து விரிந்து வானம் தாண்டி நீலத்தைச் சொல்லும் வேறு நிலைகள் இல்லையா? நள்ளிரவின் நிழலுக்கும் நீலம் தான் நிறம். ராச்சாப்பாடு சமைக்கும் போது, அடுக்களையில் எரியும் அடுப்பின் மையத்தை மையல் கொண்டுள்ளதும் நீலம் தான். எல்லோரும் நீலம் என்றால் எதைச் சொல்லிக் காட்டுகிறாரோ, அவை மட்டுந்தான் உனக்கும் நீலமா? நீ காண்கின்ற ...