வெளிச்சம் வேண்டாம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த வாரம் முழுக்க, என் பேருந்துப் பயணங்களின் துணையாக Brené Brown இன் The Gifts of Imperfection என்ற நூல் இருந்தது. வெறும் வார்த்தைகளால் உளவியல் பேசாமல் வாழ்க்கையின் நிகழ்வுகளால் விடயங்கள் சொன்ன பாங்கு பிடித்திருந்தது. இந்த நூலை, வெறும் மகிழ்ச்சிக்கான வழிகளைச் சொல்லுகின்ற இன்னொரு நூலாக கண்டு கொள்ள முடியாது. மாறுபட்டதும் சொல்லவந்த விடயத்தை தெளிவாகச் சொல்லிருப்பதும் தான் சுவை. ஒருவன் தன் குறைகளை பற்றிய புரிதல்களோடு, அவற்றை தைரியமாக
நீ, நீராகவிருக்க வேண்டும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் என்ற பதிவில் நிரம்பி வழிகின்ற கோப்பை பற்றிய கதையொன்றைச் சொல்லியிருப்பேன். இன்றளவில் அதிகமானோர் தாம் கேள்விப்பட்டவையெல்லாம், அவை பற்றிய எந்த ஆய்தலும் இல்லாமல் நிஜமானதென நம்பி செயலிலீடுபடுகின்றனர். ஆய்தறியப்படாத விடயங்களின் தொட்டிகளாக, அவர்களின் மனது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போன்றே தோன்றுகிறது. ஒரு முக்கோணமொன்றை உருவாக்கி, அதனுள்ளே தம்மை பொருத்திக் கொண்டால், உலகமே சுபீட்சம் கண
என் மகனே!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] என் மகனே! திண்மம். திரவம். வாயு. நீ. உன் கனவுகள் அத்தனையும் உன் எண்ணங்களுக்குள் படர்ந்திருக்கிறது. உன் நம்பிக்கை தன் கால்களை நிலைநிறுத்திக் கொள்ளும். உன் ஆசைகள் விலாசம் பெறவுள்ளன. நீ எதிர்பார்த்தவையெல்லாம் உன்னை எட்டித்தொட பாய்ந்து கொண்டும்வரும். உன் பயத்தைக் கூட பயமறியாது. மனவுளைச்சல் என்பதைப் பற்றி உனக்கு எண்ணங்கள் சொல்லித்தரக்கூடும். ஆனாலும், இது எல்லாமும் தான் நீ. உன்னைப் போல உலகத்தில் வேறொன்றும் கிடையாது. உனக்கும் தனித்துவமாய் .
முடிவிலியின் அந்தம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு? ஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது. அடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.
பணமரம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன். நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான். பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன். பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வ
நிம்மதிகளைச் சேமித்தல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது குளிர்காலம். விண்வெளிக்கு செல்வது போன்று, உடையணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும். மழைபெய்யும் மத்தியானத்தில் போர்வைக்குள் போர்த்தி கிடந்திருப்பது எப்படியோ, பனிவிழும் இரவில் மெளனமாய், பனி விழும் மௌனத்தைக் கேட்பதும் அற்புதம் தான். புகைகள் நிரம்பிய கனவு. பூராய் மழைபொழியும் காட்சி. தடுக்கிவிழுவதாய் நெஞ்சு கணத்து திடுக்கிட்டு நினைவுக்கு வரும் கனவின் விளிம்பு. மறந்து போகும் முக்கியமான கனவின் முகவரி. ஞ
கூச்சமா? யாருக்கு?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எனக்கு அலாதியான கூச்சமிருப்பதாகச் சொல்கிறாய். நீ சொல்லும் போதெல்லாம் உன் தோளை ஒரு குலுக்குக் குலுக்கி, எனக்கு அப்படியொரு கூச்சமும் இல்லை என்று எனக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கும். நீ என் முன் தோன்றி இப்படிச் சொல்கையில், என் உணர்வுகளின் ஒரு பாதி, முதுகெலும்பின் வழியே வழிந்து கொண்டிருப்பதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். இத்தனையும் சொல்ல நினைக்கும் எனக்கோ, எப்படி இவற்றையெல்லாம் சொல்வதென்று இன்னும் தெரியாதிருப்பதையும் உன்னிட
தீயிற்கான தேடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நெருப்பு பற்றிய கதைகள், அனுபவங்கள் என பல நிலைகள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏதாவதொரு கட்டத்தில் வந்து போகும். போகாமலேயே தங்கி நிற்கும். நெருப்பைப் பற்றி அதன் சுடும் தன்மை பற்றி தன் பேரனுக்கோ, பேத்திக்கோ சொல்லிக் கொடுக்காத பாட்டிகள் இல்லையென்றும் சொல்லிவிடலாம். தீயின் குணாதிசயங்கள் பற்றிய மனிதனின் ஈடுபாட்டுடனான இந்த தகவல் கடத்துகை என்றும் போல் இன்றும் தொடர்கிறது. மெழுகுதிரிக்கு அருகில் செல்லும், சின்னக் குழந்தைக்கு — “அ
தேடக்கூடாதது!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அவனுக்கு வயது, எத்தனை என்று வேண்டாம். ஆனால், வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது. போகும் இடமெல்லாம், வண்ணத்துப்பூச்சிகளையே அவன் துரத்திக் கொண்டிருந்தான். அவனால், செய்யப்படுகின்ற காரியங்கள் எப்போதும், வண்ணத்துப்பூச்சியை துரத்திக் கொண்டு அதைப்பிடிக்காமல் போய்விடுகின்ற தோல்வியிலேயே முடிந்து போயின. சிலவேளைகளில், வண்ணத்துப்பூச்சியை பிடிப்பான். அடுத்த கணம் அது அப்படியே அது தப்பித்துப் பறந்து போய்வி
நீலம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 42 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வானத்தைக் காட்டி மட்டுந்தான் நீ, நீல நிறம் பற்றிக் கதைக்கிறாய். ஆகாயம் தொலைக்கின்ற நிறமும் நீலம் தான். பரந்து விரிந்து வானம் தாண்டி நீலத்தைச் சொல்லும் வேறு நிலைகள் இல்லையா? நள்ளிரவின் நிழலுக்கும் நீலம் தான் நிறம். ராச்சாப்பாடு சமைக்கும் போது, அடுக்களையில் எரியும் அடுப்பின் மையத்தை மையல் கொண்டுள்ளதும் நீலம் தான். எல்லோரும் நீலம் என்றால் எதைச் சொல்லிக் காட்டுகிறாரோ, அவை மட்டுந்தான் உனக்கும் நீலமா? நீ காண்கின்ற ...
நிறத்தின் ஏழாம் வருடம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 50 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மண்ணிற்கு வியர்வை உண்டாகின்ற காலம் தொடங்கியிருக்கிறது. காலை நேரத்து யன்னல் கண்ணாடிகளுக்கு முகவரி கிடைக்கும் காலம் வந்திருக்கிறது. நிறம் இன்றோடு தனது ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கிறது. பருவங்கள் மாறி மாறி வருகின்ற அழகு எப்போதுமே எனக்குள் புளகாங்கிதத்தையும் புதிர்களையும் கொண்டு தரும். பருவங்களுக்கு புதிர்கள் தருவதுதான் வழக்கம் — யாரோ சொன்ன ஞாபகம் இருக்கிறது. காலைநேர சூரியனின் குளிர்மையும் மாலை நேர நிலவின் சூட்டையும் கடதாசியில் தக்க
உனக்கான பாடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 33 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அதுவொரு செவ்வாய்க்கிழமை. கல்லூரி வளாகத்தின் நூலகத்தில் என்றும் போல், நிறையப் பேர் நூல்களை எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வாசிப்பதற்குமாய் குழுமியிருந்தனர். கோபாலும், வழமைபோலவே நூலொன்றை இரவல் வாங்கிக் கொள்ள அங்கு சென்றிருந்தான். அவனுக்கு தேவையான புத்தகம் இருக்கின்ற பகுதியை நோக்கிச் சென்று பொருத்தமான நூலை தேடலானான். ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க முற்பட்ட போது, அப்புத்தகத்தின் உள்ளே இருந்து காகிதத் துண்டொன்று எட்டிப் பார்த்து, கீழே விழுந்தது.
கவலை பற்றியதான கவலைகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மனிதனின் இருப்பின் அழகியலாகத்தான் கவலையைக் காண வேண்டியுள்ளது. கவலைகளின் வகைகள் பலவாறாக விரிந்து சென்றாலும், மனிதன் கவலைப்படுகின்ற நிலைக்குள் எப்போதோ ஒரு தடவை வந்துவிடுகிறான். மீள்கிறான். மீண்டும் வருகின்றான். இப்படியே கவலைகளும் சக்கரமாய் சுழல்கின்றன. மனிதன், கவலையே இல்லாமலிருக்க அவன் மூளைக் கலங்களில் பாதிப்பு ஏற்பட்ட புத்திசுவாதினமற்றவனாக இருக்க வேண்டுமென விஞ்ஞானம் சொல்கின்றது. ஆக, மனிதனை — இயல்பான மனிதனாக அடையாளப்படுத்தி நிற்ப
எங்கே போகிறீர்கள்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வாழ்வின் ஒவ்வொரு நொடியினதும் நிகழ்வுகளின் மிச்சங்களை அகத்துள் சேகரித்து அன்போடு அரவணைத்துக் கொள்வதற்குள் அடுத்த நாளும் அதன் நிகழ்வுகளும் உடனேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. இங்கு கனவுகளை இரையாக்கிவிட ஓடுகின்றவர்களாகவே எல்லோரையும் காண வேண்டியுள்ளது. ஒருவனின் கனவு — இன்னொருவனுக்கு ஆச்சரியம் அல்லது நகைப்பு அல்லது கேள்வி என பல தன்மைகளை வழங்கி நிற்கிறது. அந்தச் செம்மறியாட்டை மேய்க்கின்ற இடையனும் கனவுகளைத் தேடுகின்றவன் தான். கனவுகளின் ஈ
உணர்விழக்கும் மொழியாடல்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாகரிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் அளவு கோளாகவே இருந்து வருகிறது. கருவியை மனிதன் கண்டுபிடித்து அதன் வாயிலாகக் கண்டு கொண்ட விசித்திரங்களை பகிர்ந்து கொள்ள, ஆவணப்படுத்த இன்னொரு கருவி தேவையென உணர்ந்து அதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினான். அவனின் கண்டுபிடிப்பின் வருவிளைவுதான் மொழி. கருவிக் கையாட்சியும் மொழியின் பயன்பாடும் தான் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஆணிவேராகத் திளைத்தது. இந்த மொழியின் தயவால் இலக்கியம்
இதுவொரு கமராவின் கதை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 59 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அவனொரு பிரபலமான நிழற்படப்பிடிப்பாளன். உலகப் புகழ் வாய்ந்த பல நிழற்படங்களின் சொந்தக்காரன் என்று கூட சொல்லிவிடலாம். அவனின் அற்புதமான நிழற்படங்களை நேசிப்பவர்கள், அவனோடு கொஞ்சம் பேசிவிட வேண்டுமென ஆர்வம் கொள்வர். அவன் வாழ்ந்த பகுதியில் வசித்த, செல்வந்தன் ஒருவன், அவனை இராப்போசனத்திற்காக அழைத்தான். அழைப்பை ஏற்று, அவனும் செல்வந்தனின் வீடு சென்றான். செல்வந்தனைப் போலவே, செல்வந்தனின் மனைவிக்குக் கூட, இவனின் பிரபலமான நிழற்படங்களை ரொம்பப் பிடித்திருந்தது. அவன்
நிழலோடு ஒரு நிமிடம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 45 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அண்மையில் நண்பனை சந்திப்பதற்காய் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. கோடை காலம், பிரசன்னமாகத் தொடங்கியிருப்பதால் காலையில் சூரியனின் வருகையில் கூட சுணக்கமும் அன்று இருக்கவில்லை. போகும் வழியில் கோடைக்கு குடை பிடித்தாற் போல், அங்காங்கே நிமிர்ந்து நின்ற கட்டடங்கள் அதன் அளவைத் தாண்டியும் விசாலமாய் நிலத்தில் நிழலாகி நின்று உருவம் கொண்டிருந்தது. இதைக் கண்ட எனக்கோ, நான் வாசித்த கலீல் ஜிப்ரானின் கதையொன்று எண்ணத்திற்குள் நிழலாடத் தொடங்கி
நீயல்லாத நிலைகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மின்காந்த நிழற்பட்டையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கண்டு கொள்ள முடிகிறது. ஒலித் திருசியத்தில் காணப்படும் ஒலியின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கேட்க முடியும். இதனை நீ வாசித்துக் கொண்டிருக்கும் போது, விண்மீன் மண்டலத்தினூடாக மணிக்கு 220 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். உன் உடலின் 90 சதவீதமான கலங்கள் — “நீயல்லாத” — தங்களுக்கே உரித்தான பரம்பரையலகோடு காணப்படுகின்றன. உன் உடலிலுள்ள மொத்த
சாத்தியமற்ற சாத்தியங்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இயல்பான வாழ்க்கையின் பாதையாக இருப்பது, சாத்தியமான விடயங்கள் — சாத்தியமான விடயங்களை மட்டும் செய்தல் சாதாரண வாழ்வு பற்றிய அடிப்படையையே தரும் என அதை இன்னொரு வகையில் சொல்லலாம். இது உண்மையாகும். சாதாரண வாழ்க்கை என்பது எல்லோராலும் எய்திக் கொள்ள முடியும். தனித்துவமானவர்கள் என்ற பிறவியின் அழகிய தன்மையை இது ஒழித்துவிடுகிறது. கொஞ்சம் நாம் சேர்ந்து சிந்திப்போம். ஆளியொன்றை அழுத்துவதால் மின்குமிழ் ஒளிரும் என்பது சாத்தியமற்றது. நிலவில் நடந்த
ஒட்டாத பசை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாறின் அத்தியாயங்கள். அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாள