அவன் மரங்களை வாசிக்கிறான்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வெளியே முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருந்தது. கொஞ்சம் இருட்டு, அவன் அறைக்குள் சென்று வெளிச்சத்திற்குப் பயத்தில் ஒளிந்து கொண்டது. அடிக்கடி அவன் அறை வழியாகச் செல்லும் காற்று, அவன் அறையின் யன்னலின் திரைச்சீலையை விலக்கி, வெளிச்சத்திற்கு உதவிக் கொண்டிருந்தது. ஆனாலும், கொஞ்சமாய் ஒளித்திருந்த இருட்டை திரைச்சீலையை விலக்கி வந்த வெளிச்சத்தால் பிடிக்க முடியவில்லை. வெளிச்சம் முயன்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோற்றுக் கொண்டுமிருந்தது. யன்னல
ஆன்மாக்களின் வானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 42 செக்கன்கள் தேவைப்படும்.) [?] கோடை காலத்தின் வெயிலைக் கண்ட போதுதான், மறைந்திருக்கும் கோடை காலத்தின் குளிரையும் கண்டு கொள்கிறேன். கோடை காலத்தின் குணாதிசயங்கள் எமக்குள் இருப்பது போல், தோற்கடிக்க முடியாத குளிர் காலத்தின் குணாதிசயங்களும் எம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன. நமக்குள்ளே பருவங்கள் மாறுகின்ற நிலைக்கு இதுகூட காரணமாகலாம். “வெறும் கோடை காலத்தை மட்டும் நீ கொண்டிருக்கவில்லை.உனக்குள் ஒரு பிரபஞ்சத்தையே கொண்டிருக்கிறாய்” என்று கோபாலு எப்போதும் திடமாகச் சொல்வான். பிர
எதுவாகப் போகிறாய்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 44 செக்கன்கள் தேவைப்படும்.) [?] பட்டாம்பூச்சியானால் பறக்க வானவில்லை நீ பார்ப்பதில்லை மாறாக உருவாக்குகிறாய் என்பதைப் பற்றி நிறத்தில் ஏற்கனவே நீயல்லாத நிலைகள் என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். உன் பிரபஞ்சத்தில் நீ இருப்பதாகக் காண்பவை மாத்திரமே இருக்கின்றன. மற்ற எதுவும் இருப்பதாக யார் சொன்ன போதிலும், நீ இருப்பதாக உணர்ந்தால் மாத்திரமே அது இருக்கும். நீ இந்தப் பதிவை வாசிக்கும் கணினியோ, கையடக்கச் சாதனமோ நீ இருக்கிறதென எண்ணுவதால் மாத்திரமே அது இருக்கிறது. இந்த நிலை எல்லா நிலைகளுக்கும் .
அன்புள்ள மகனுக்கு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 33 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடிதங்கள் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். கடிதங்கள் எப்போதும் பொக்கிசங்கள். பெற்றோரின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்தல் மிகப் பெரிய பொறுப்பு. கடினமான வாழ்வின் அத்தியாயம் என்றும் சொல்லலாம். சுகமான சுமை என்றும் சொல்லலாம். பெற்றோர்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை. அல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி அறியாதவர் யாருமில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆளுமை அவர். அவர் பற்றி நிறத்தில் ஏற்கனவே பதிவ
யாருக்குக் கோளாறு?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] தனது மனைவிக்கு தான் கதைப்பதெல்லாம் கேட்கின்றதில்லை என்று இனங் கண்டு கொண்ட கணவன், தன் மனைவிக்கு கேட்டலில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதனை நிவர்த்திக்க சிகிச்சை செய்ய வேண்டுமென எண்ணம் கொண்டான். இந்த விடயத்தை மனைவிக்கு பக்குவமாக எடுத்தும் சொல்லவும் வேண்டும். அதேவேளை, மனைவியின் கேட்டல் நிலைக் கோளாறை நிவர்த்தியும் செய்ய வேண்டும் என்கின்ற தேவை கணவனுக்கு இருந்தது. தனது குடும்ப வைத்தியரிடம் சென்று, இது பற்றி கலந்தாலோசித்தான். வைத்தியர் ...
அழும் வரை சிரிப்பதன் விஞ்ஞானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஆவணப்படங்கள் எனப்படுகின்ற documentary films பார்ப்பதன் பாலான எனது பிரியம் அலாதியானது. PBS இனால், ஒளிபரப்பட்ட 5 பாகங்களைக் கொண்ட The Secret Life of the Brain என்ற மூளை பற்றிய ஆவணப்படத்தை கடந்த வருடம் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த விவரணப்படம் மனித மூளை தொடர்பான பல விடயங்களையும் சொல்லி நின்றது. அதில் கலந்தாலோசிக்கப்பட்ட மூளையின் இயல்புகளுக்குள் அழுகை, சிரிப்பு ஆகிய நிலைகளில் மூளையின் பங்கு பற்றிய ...
சங்கீரணமாகும் சாமான்யங்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இங்கு எல்லாமும் இருக்கிறது. ஆனால், எதுவுமில்லை என்றாகிவிடுகிறது. நம்மிடம் மாடமாளிகைகள் போல் வீடுகள் உள்ளன. ஆனால், அதில் வசிக்க மனிதர்கள் இல்லை. நிறைய சௌகரியங்களை எம்மிடம் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது, ஆனால், அவற்றை அனுபவித்துப் பெற்றுக் கொள்ள நேரமில்லை. பலருக்கும் பல பட்டங்கள் பெயரின் பின்னால் இருக்கின்றன. ஆனால், அவர்களிடம் சாமான்யமான பொதுவான அறிவே இல்லை. நிறைய நிபுணர்கள் இருக்கின்றனர். ஆனால், இன்னும் இங்கே நிறைய பிரச்சனைகள் ஓங்கியே
ஏந்தாத வரைக்கும் இனிமைதான்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கோபாலு கேள்விப்பட்டுச் சொன்ன ஒரு குட்டிக்கதை இன்றைய பதிவாகிறது. ஒரு பேராசிரியர், குவளையொன்றினுள் நீரை நிரப்பி, மாணவர்களை நோக்கி, “இந்தக் குவளை எத்தனை கிராம் நிறை இருக்கும்?” என வினவினார். மாணவர் பக்கமாக, “200 கிராம்கள், 250 கிராம்கள், 300 கிராம்கள்” என பதில்கள் ஒலித்தன. “ஆனால், உண்மையில் இது என்ன நிறை என்று எனக்கும் சரியாகத் தெரியாது,” என்று கூறிய பேராசியர், “உங்களுக்கான எனது கேள்வி என்னவென்
உன்னால் முடியாதா?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] சின்னஞ் சிறிய சில தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் குழுமியிருந்தனர். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். முதலில் தொடுபவர் வெற்றியாளர் — அவ்வளவு தான் போட்டி விதி. போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் குழுமியிருந்தோரில் பலரும் இது லேசுபட்ட வேலையில்லை. இந்தச் சின்னத் தவளைகளால்
நங்கூரமா நீ?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளின் பிரதியென கழிந்து கொண்டு, அது களிப்பைத் தந்தாலும், சிலவேளைகளில் சலிப்பையும் உனக்கு தந்துவிடுகிறது. புதிய மாற்றங்களை உன்னால் ஜீரணித்துக் கொள்வதற்குள், என்னதான் நடக்கிறது என்ற கேள்வியோடு, உனக்குள் பயமும் தொற்றிக் கொள்கிறது. உனக்கு, மாற்றங்களோடு சேர்ந்து இன்னும் புதிய அற்புதங்களைச் செய்யக் கூட ஆர்வம் தோன்றாமலிருக்கிறது. நிலையில்லாத் தன்மை உன்னை பலமிழக்கச் செய்துவிட்டதை உன்னால் உணர முடியாவிட்டாலும், அனுபவசால
நீ யார்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ வாழ்கின்ற உலகத்தில் யாருக்கும் நிழலில்லை. உன் உருவத்தைப் பார்த்துக் கொள்ள கண்ணாடி போன்றதொரு பொருளில்லை. உன் தோற்றத்தைப் பார்க்க முடியுமான ஒரே கருவி உன் எண்ணம் மட்டுந்தான் என கற்பனை செய்து கொள். உன் தோற்றம் பற்றி, உனக்கு இருக்கும் எண்ணங்கள் எப்படியாயிருக்கும்? யாருமே உன் தோற்றம் பற்றி சொல்லப்போவதுமில்லை என்றும் எண்ணிக் கொள். உன் தோற்றம் பற்றிய உன் கனவின் உருவகம், நீ எதுவாக எண்ணிகிறாயோ அதுவாகவே ...
நீ அறியாத அடுத்த விநாடி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். நீங்கள் நினைத்த அத்தனை விடயங்களையும் உங்களுக்காக அது செவ்வனே செய்து விடுகிறது என்றும் நம்பிக் கொள்வோம். அந்தச் சாதனத்தை வாங்குவதும், கையடக்கத் தொலைபேசிகள் போன்று மலிவான நிலையாகவுள்ளது என்றும் எண்ணிக் கொள்வோம். இனி என்ன? நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்துவிடும். வாங்க வேண்டிய பொருளை நினைத்துச் சொன்னால், அது உங்கள் காலடிக்கு வந்துவிடும். எல்லாமே உன்னதமாக நடைபெற்றுவிடுகிறது. இது நீடி
அக்கரை பற்றிய அக்கறை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] காட்சி ஒன்று: விடிகின்ற ஒவ்வொரு காலைப் பொழுதின் தொடக்கத்தின் முனையில், அவனால் தன்னைத் தவிர தன் சூழலில் வாழும் அனைவரும் ஏதோவொரு வகையில் அற்புதமாக இருக்கின்றனர் என அனுமானித்துக் கொள்கிறான். காலைத்தேநீரின் சுகந்தம் கூட அவன் உணர்வுகளைத் தொட துடித்துக் கொண்டு பறக்கும். ஆனால், பக்கத்து வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கையின் அற்புதம், பக்கத்து ஊரிலுள்ள சொந்தக்காரரின் புதிய வாகனம் என அவனின் உணர்வுகளுக்குப் பொறாமையாய் நிறம் பூசிக் கொண்டிருக்கும்.
என்ன செய்யப் போகிறாய்?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த வாரம் முழுக்க, பேருந்து பயணங்களின் போதும் தூக்கத்திற்கு முன்னதான நேரத்தின் போதும் வாசிப்புத் துணையாகவிருந்தது The Icarus Deception என்ற நூல் தான். இந்த நூலாசியர் என்னைக் கவர்ந்தவர். செத் கொடின் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். படைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென பறைசாற்றுவதாய் அந்த நூலின் உள்ளடக்கங்கள் விரிந்து செல்லும். வாசிக்க வாசிக்க உத்வேகம் தொடர்ச்சியாகக் கூடிக் கொண்டேயிருக்கும். வாசகனை நேரடியாக விழித்துப் ப
நேரமில்லை நீயோடு!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “அந்த அலம்பல பார்க்க எனக்கு நேரமில்ல” — பழம் வாங்கச் சென்ற கடையில் காதோரம் கேட்ட ஒரு சம்பாஷனை. இந்த உரையாடல்கள் பல வடிவங்களில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருப்பொருள் மட்டும் மாறுவதில்லை. அந்தக் கருப்பொருள் நேரமில்லை என்பதுதான். நேரம் பற்றிய நினைப்பே இல்லாமல் உங்களின் வாழ்வின் ஒரு கட்டத்தை வாழ முயற்சிக்க முடியுமா? காலம், கட்டம், கணம் என எல்லாமே நேரத்தின் வருவிளைவுகள். நேரம் தவிர்த்த ...
நீ காணாத அழகு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 53 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இங்கு பலதுமே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அழகு என்றால் எம் தோற்றங்களுக்குச் செய்யும் ஒப்பனைகளால் உருவாவது என்ற பொய்யே பல நேரங்களில் மெய்யென நம்பப்பட்டிருக்கிறது. இந்தப் பிழை எங்கு நடந்தது? எப்படித் தோன்றியது? என்பது மிக முக்கியமான கேள்விகள் தான். அக்கரையில் இருப்பதெல்லாம் அழகானவை தான் என்று உலகம் உறுதிமொழி எடுத்தாகிவிட்டது. தேகங்களில் பூசப்படும் பளிங்குத் துகள்கள் தான் அழகைத் தந்துவிடுகின்ற அற்புதமான பொருள்கள் என்ற அறிவிப்பும் எல்லோரு
நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] விரிகின்ற ஒவ்வொரு பொழுதும் நீ நினைத்ததைக் கொண்டு தராத போதும், காத்திருப்புகளுக்கு, உன்னால் நேரவிரயம் என்ற புனைப்பெயர் மட்டுந்தான் சூட்டிக் கொள்ள முடிந்த போதும், கசப்பானவை மட்டுந்தான் இனிமைகளை இம்சிக்க துடித்துக் கொண்டிருக்கின்ற போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும். சுபமான விடயம் எனத் தொடங்கிய காரியம், சுகமே தராததாய் தொடர்ந்த போதும், இதயத்துடிப்பின் அழகிய ஆவர்த்தன இசை, சற்றே குழம்பிப் போய் ஒலிக்கின்ற போதும், உன் மனதின் கிடக்க
அனுமானவியல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இங்கு எல்லாமுமே வினோதமாகவே பார்க்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், எல்லா விடயங்களுக்குள்ளும் அனுமானம் என்ற அடிப்படையொன்று தொற்றிக் கொண்டுவிடுகிறது என்று சொல்லி விடலாம். அனுமானத்தின் அடியார்களாக அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் அனுமானத்தின் தோன்றலை மற்றவருக்கும் கற்றுத்தர முனைகின்றனர். “அனுமானவியல்” என்றொரு கற்கைநெறியின் சிறப்புத் தேர்ச்சி பெற்றதான அமைவை தங்களின்
ஆதலால், படைப்பீர்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “நீ நினைத்த எதுவும், நினைத்தபடியே நடக்காதிருக்கும். நீ விளையாட மைதானத்திற்குச் சென்றால் மழை பெய்யும். நேரத்திற்கு நீ புகையிரத நிலையத்திற்கு சென்றாலும், புகையிரதம் சமிஞ்சைக் கோளாறால் தாமதமாகும். நீ நினைத்த எதுவும், அப்படியே நடந்துவிடாது. ஆனாலும், நீ நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும்.” நீல் கெய்மேன் ஒரு சிறந்த எழுத்தாளர். கடந்த வருடம் கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவரின் சொற்பொழிவின
பறப்பது ஒரு நோய்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாளாந்தம் நாம் பலரைக் காண்கிறோம். சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் சொல்லுகின்ற கதைகளோடு பயணிக்கிறோம். அவர்களின் கதைகளை கடத்த நம் காதுகளை இரவல் தருகிறோம். இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சொல்லும், கதை கேட்கும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அத்தனை பேரும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைப் படிக்கிறார்கள். அல்லது பழைய விடயங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள் சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள