நல்ல கவிதை எது?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர். நாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவம
இருளை மெல்லக் கழற்றிய காலை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அது ஒரு காலைப் பொழுது. விடிந்திருக்கவில்லை. நேரம் போயிருப்பதாக தலையணைக்கருகே இருந்த திறன்பேசி சொல்லியது. காகம் கரைகின்ற சத்தமும் சேவல் கூவும் சத்தமும் காதோடு கவிபாட, நானோ மாறி மாறிப் பெய்கின்ற மாரி மழையை எதிர்பார்த்தவனாய் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள விளைகிறேன். நான் மழையை வேண்டி நிற்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பூமியின் பூட்டைத் திறந்து, அதற்குளுள்ள வாசனையைப் பிரபஞ்சம் நுகரச் செய்கின்ற மழையின் வித்தை பற்றி நான் எப்போதும் ...
வெல்டன்ஸ்வாங்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 4 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் விடிகின்ற பொழுதோடு ஆரம்பிக்கிறது. வாழ்வின் அற்புதம், அதனை நினைத்த போதெல்லாம் புதிதாகக் தொடங்க முடிவதுதான். வாழ்க்கையை ஒரு தனிநபர் காண்கின்ற கோலத்திற்கு ஜேர்மன் மொழியில் ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் வெல்டன்ஸ்வாங் (Weltanschauung). நீ உன் வாழ்வின் எல்லையை உன் மனதின் எல்லையோடு மட்டுப்படுத்திக் கொள்கிறாய். அது சாதாரணமானது தான். உன் நம்பிக்கையின் பெறுதியாகவே, உனது உலகம் பற்றியதான் பார்வை இருந்து விடுகிறது.
புழுதிச் சிக்கல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] விடிகின்ற காலையில் உன் பார்வைப் புலத்திற்குள் தோன்றுகின்ற காட்சிகளில் மனிதர்களும் வந்துவிடுவது வழக்கம் தான். அவர்கள் உன் பார்வையில், புதியவராய் இருக்கலாம். பழையவராய் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அலர்கள் உனக்கு எப்படித் தோன்றினாலும், அவர்களின் பார்வையில் நீ எப்படித் தோன்றினாலும் — ஒரேயொரு உண்மைதான் மிக மிக உண்மையானது. நீ வாசிக்கின்ற இந்தக் கணம் இனி எப்போதுமே திரும்பி வராது. உடைந்த கண்ணாடிக் கோப்பைகளை துண்டு துண்டங்
எட்டும் வானமும் எட்டாவது வருடமும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவதற்கு உசிதமான நேரம் வரவேண்டுமென காத்திருத்தல் என்பதன் வருவிளைவு, எதுவுமே எழுதாமல் வெற்றுத்தாளோடு இருக்கின்ற நிலையைத் தான் தோற்றுவிக்கும். எழுத வேண்டுமென்ற உத்வேகம் வருகின்ற போதுதான் எழுதலாம் என்று இருந்தால், நீ இருப்பாய் — எழுத வேண்டிய சொற்கள் அந்த நேரத்திற்காகக் காத்திருக்காது. எழுதுவதற்கு இதுதான் தருணம். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். எழுதுவதெல்லாம் அகிலம் முழுக்க காண்பிக்க வேண்டுமென்பதில
நாளை என்பது என்றும் வராது!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எதிர்காலம் என்பது ஒரு எண்ணக்கரு மாத்திரம். அது எங்கும் இல்லை. அப்படி எதுவும் இல்லை யாரும் எதிர்காலத்தைக் கண்டதாய் வரலாறும் இல்லை. இல்லாத ஒன்று பற்றியதான உன் ஆயத்தங்கள் பலவேளைகளில் புதிரையும் இன்னும் சில வேளைகளில், கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. நாளை என்பது நம் கையில் இல்லை என்பது நாமறிந்த உண்மைதான். நாளை என்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா? இன்று என்பது மட்டுந்தான் உண்மையானது. நாளை என்பது கூட, ...
முப்பத்தொன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இன்றோடு இந்த மாதம் நிறைவு காண்கிறது. நாளை புதிய மாதம் தொடங்குகிறது. சரியாக முப்பது நாட்களுக்கு முந்தி, நான் நிறத்தில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புதிய பதிவொன்றை வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டு கொண்டேன். ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. நானும் ஒவ்வொரு நாளும் நிறத்தில் புதிய பதிவுகளை வெளியிட்டு வந்தேன். இந்தத் திடசங்கல்பம் அற்புதமாய் இன்றோடு நிறைவைக் காண்கிறது. ஆனாலும், இந்த திடசங்கல்பம் பூண்டு கொண்டதன் பின்னர், அதனை ...
உன் அபிலாஷை என்ன?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 57 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கீழைத்தேய தத்துவங்களின் செறிவை, மேலைத்தேயவர்களிடைய பிரபலம் ஆக்கிய பெருமை அலன் வட்ஸ் என்பவரையே சாரும். அலன் வட்ஸ் என்றால் யார் என்ற கேள்வி உனக்குள் எழலாம். அவர் யார் என்று நீ கட்டாயம் அறிய வேண்டும். பிரித்தானிவைச் சேர்ந்த எழுத்தாளர், அத்தோடு தத்துவியலாளரும் கூட. தனது இயல்பான சொற்பொழிவுகளின் மூலம், வாழ்வு பற்றிய பலவகையான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள பலருக்கும் உதவியுள்ளார். இவரின் உரைகள், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை அற்புதமாக ...
ஏமாளியா நீ?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒரு கல்லூரியின் மாணவன் ஒருவன் அவன் நம்புகின்ற ஒரு விடயத்தை ஆய்வின் மூலம் கண்டு கொள்ள முனைந்தான். அதற்காக அவன் தயார் செய்த ஆய்வின் வடிவம் இதுதான். “ஈரைதரசன் ஓரக்சைட்” என்ற ரசாயனத்தை சூழலில் பாவிப்பதை கட்டுப்படுத்த அல்லது முற்றாக அகற்றிவிட வேண்டுமென்ற யோசனைக்கு மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்பது தான். இந்த ரசாயனத்தை தடுக்கவிரும்புவோர் தங்கள் கையொப்பத்தையிட்டு உறுதி செய்யலாம். ஏன் இந்த ரசாயனம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்கான க
இது பூக்கவிதை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அறிவியலின் வழியால் பல புதிர்களை விடுவிக்க துணை நின்ற அறிவியலாளர் தான் ரிசார்ட் பைன்மேன் (Richard Feynman). தனது இயல்பான விவேகத்தின் வாயிலாக அறிவியலை அவர் அணுகிய விதம் அற்புதமானது. புதிதாக விடயங்களை அறிந்து கொள்தல் எந்தளவில் மகிழ்ச்சியைக் கொண்டு தரும் என அற்புதமாகக் எடுத்துக்கூறிய பைன்மேனின் அழகுச்சிந்தை — கவிதை. அழகையும் மர்மத்தையும் அவர் விளக்கிச் சொல்கின்ற அற்புதமான நிலையை நிறத்தின் வாசகர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்ட
பிறக்காத நாள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?] பிறந்த நாளில் முக்கியமான விடயம் ஒன்றைச் செய்ய வேண்டும், புது விடயம் ஒன்றைத் தொடங்க வேண்டும், அந்த நாள் மட்டுந்தான் விஷேடமான நாள் என்றெல்லாம் இங்கு எழுதப்படாத விதிகள் பலவுள்ளன. ஆனால், இந்த நிலையை நீ மெல்ல நின்று நிதானித்து அவதானித்தால், நீ விரும்பித் தொடங்க நினைக்கின்ற காரியத்தை ஆரம்பம் செய்து கொள்ள ஒரு ஆண்டில், ஒரு நாள் மட்டுந்தானா இருக்கிறது? என்ற கேள்வி தோன்றலாம். 52 வாரங்களாய் விரிந்துகிடக்கும் ...
அனுபவங்களைத் துழாவுகிறான்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மனிதன் கண்டுபிடித்த நேரம் பலதையும் செய்யக்கூடியது. ஒருவன், தன்னைப் புரிந்து கொள்வதற்கு அவகாசம் கொடுப்பது இந்த நேரந்தான். அனுபவத்தின் அளவுகோலும் காலம் தான். தன்னை தான் எண்ணும் நிலைகொண்ட சிலையாகச் செதுக்கிவிட காலமும் அது கூடக்கடத்தப்படும் அனுபவங்களும் தான் ஒருவனுக்கு வழி செய்கிறது. ஆன்மாவின் குரலோடு சேர்ந்தாற் போல், வாழ்வின் செயல்களை ஆக்கும் நிலையை கொண்டு தருவது காலந்தான். நேரம், காலம் என்கின்ற போது, நீங்கள் வெறும் காலம் கொண்டுள்ள நேரத்தை மட்டும் ..
அன்புள்ள டயரிக்கு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அன்புள்ள டயரிக்கு, ஒவ்வொரு நாளும் நீ, என்னைச் சந்தித்துக் கொள்ளும் உன் வழக்கத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். விடியும் ஒவ்வொரு பொழுதும் வெற்றிடமானது என்பதையும் உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு போதும் உணர்ந்து கொள்வேன். உனது ஒரு நாளின் வெறுமையைப் போக்கிவிட்டால், அது விஷேடமாகிவிடும் அதிசயத்தையும் கண்டிருக்கிறேன். நீதான் என்னிடம், புலரும் பொழுதுகள் எல்லாமே விஷேடமாக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உனக்கு அதிகம்
புன்னகைப்பூமி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 35 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இங்கு தன்னை அற்புதமாக எண்ணிக் கொண்டு, வாழ்வை நகர்த்துபவர்களின் தொகை ஏராளம். இது பலரினதும் அடிப்படை ஆசையாகக் கூட இருக்கிறது. இது ஓர் அற்புதமான மனித எண்ணத்தின் வெளிப்பாடுதான். தன்னைப் பற்றிய அற்புதங்கள் சார்பான புரிதல்களை ஒருவன் பெற்றுக் கொள்கின்ற நிலையில், வாழ்க்கை மீதான அவனின் பார்வை தெளிவு கொள்கிறது. உன்னோடு கதைக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகளைக் கேட்க ஆவலாயிருக்கின்றனர். அவர்களின் ஆர்வம் பற்றிய அறிவிப்பு இல்லா
மெல்லக் கிழிந்த வானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இன்று மின்னல் வெகுவாய் சாலையோரத்து விளக்குகளையும் தாண்டி, ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சிறுகோட்டுப் போல் தோன்றிய ஒளியின் பிரமிப்பில் அவனிருக்க, அதற்கு விளம்பரம் செய்வதாய் இடி, முரசுகெழுவாய் இருந்தது. நீ பொழிகிறாய். மெல்ல மெல்லப் பொழிகிறாய். அடுக்கடுக்காய் பொழிகிறாய். ஆனந்தமாய் பொழிகிறாய். தளவம் பூவின் மணத்தை என் அறையில் செயற்கையாக சேர்த்து வைத்திருந்தேன். வானம் கிழிந்ததால், அந்த மணத்தைக் கௌவிக் கொள்ள மண்ணின் வாசம் வந்துவிட்டதாக, காற
இது தண்ணீர்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீருக்குள் உல்லாசமாக உலா வந்து கொண்டிருந்தன இரண்டு வாலிப மீன்கள். இவை இடையில் எதிர்த்திசையில் வந்தவொரு வயோதிப மீனைச் சந்தித்தன. வாலிப மீன்களை நோக்கி, “வணக்கம் பசங்களே, எப்படி இந்தத் தண்ணீர் இருக்கிறது?” என வயோதிப மீன் கேட்டது. இதைக் கேட்ட வாலிப மீன்கள், கொஞ்சம் தூரம் நீந்திச் சென்று, ஒரு வாலிப மீன், மற்றைய வாலிப மீனைப் பார்த்து “தண்ணீர் என்றால் என்னடா?” என்று கேட்டது. நாம் வாழ்கின்ற ...
வாழ்வின் அற்புதமான நாள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ பாடசாலையில் தமிழ்தினப் போட்டியில் வெற்றி பெற்ற நாளா? தொலைபேசியில் குரல் எப்படிக் கேட்குமென எண்ணி நீ முதன் முதலாக தொலைபேசியில் கதைத்த நாளா? புகையிரத வண்டியில் செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தின் உச்சத்தில், பல ஆண்டுகள் காத்திருப்பின் பின், புகைவண்டியில் நீ பயணித்த நாளா? சூரிய கிரகணகத்தை புகைப்படச்சுருளை வைத்து பார்க்க எத்தணித்த நாளா? பரீட்சைகளின் பெறுபேறுகளை மிகச்சிறப்பாகப் பெற்றுக் கொண்ட நாளா? ருசிக்க ருசிக்க சோறும் கரியும் முதன் ...
மரங்கொத்தியானோம்!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மரங்கொத்தி பற்றிய நினைவுகள் எனக்கு அதிகமிருக்கிறது. தென்னை மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, எல்லோரும் “என்ன சத்தம் கேட்கிறது?” என்றளவிற்கு அதனை பார்க்கும் அளவிற்கு வசீகரமான வலிமை கொண்டது. ஒவ்வொரு நாளும், மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, அதனைக் கொத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அது வழக்கமாக்கிக் கொள்ளும். சிலசமயங்களில், மொத்த மரமுமே அதிர்ந்து போகுமளவில், அதன் வேலை அங்கு அபாரமாகவிருக்கும். மரங்கொத்தி, கொத்தியதனால் இந்த மரம்
வெற்றுக்கடதாசியின் மனம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எழுதுவது என்பது ஒரு குழப்பமான குதூகலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுவொரு புரியாத புதிரின் புலன். பலன் என்றும் சொல்லிவிடலாம். உன்னை நீ எழுத்தோடு இணைக்கும் போதுதான் வரிகள் உருவாகும். பந்திகள் உருவாகும். சந்தங்கள் உருவாகும். அது பேனாவாக இருந்தாலும் சரி, கணினியின் விசைப்பலகையாக இருந்தாலும் சரி. எழுதுவது என்பது உன்னோடு இணைந்துவிட்ட ஒரு கூறின் வெளிப்பாடு. உன்னைப் பிரித்துவிட்டு எழுதிவிட முடியாது. நீ சொல்வதைக் கேட்டு, தன்னியக்கமாக எழுதும்
வெயிலில் மழை தேடுகிறான்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 44 செக்கன்களும் தேவைப்படும்.) [?] பேரூந்து நிலையத்தின் வாசலில் அவனின் பயணம் தொடங்குவதற்கான ஏற்பாட்டில் பேரூந்திற்காய் காத்திருந்தான். அவன் கண்களுக்கு எட்டிய தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் நீர் நிற்பதாய் தோன்றியது. சரி, அது நீங்கள் நினைப்பது போன்று கானல் நீர் தான் என்பதைப் புரிந்தும் கொண்டான். சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் மத்தியில் அவனின் எண்ணமெல்லாம், அந்தக் கானல் நீரின் நினைவுகளோடு, மழையைத் தேடிச் செல்லலாயிற்று. “குடை பிடித்து செருப்புமிட்டு, புத்தகம