இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா? என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு... எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. ...
#Vivegam பெரிதாக ஆச்சரியமோ, ஏமாற்றமோ இல்லை.விவேகம் பற்றிய எக்கச்சக்க build up கள் வந்துகொண்டிருந்தபோதே எனது நண்பர்களிடம் "இது அடுத்த பில்லா 2, அசல் மாதிரி தான் வரும் போல கிடக்கு" என்று சொல்லியிருந்தேன். படம் பார்த்தவுடன் கடுப்பு + ஏமாற்றத்தின் எரிச்சலில் ஒரு status போட்டாலும் அடுத்த நாள் கொஞ்சம் சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் விவேகத்தை விடவும் மோசமான படங்கள் வந்திருக்கே.. இது ஒன்றும் ...
ஒரு இந்திய - பாகிஸ்தான் மோதல்.. எனினும் முன்னைய ஷார்ஜா, டொரொண்டோ, ஏன் ஆசியக் கிண்ண மோதல் அளவுக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை. காரணம் அண்மைக்கால இந்தியாவின் எழுச்சி + ஆதிக்கம் & பாகிஸ்தானின் சரிவும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சரணாகதியாகும் அளவுக்கான தடுமாற்றம். எனினும் இந்தப் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது எதிர்பார்க்க வைக்கிறது. காரணம் கறுப்புப் பக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில ...
நேற்று பாகிஸ்தான்.. இன்று? ஒரு மாதிரி ஆனானப்பட்ட இங்கிலாந்தையே வீட்டுக்கு அனுப்பீட்டிங்கள்ள என்று தகவல் அனுப்பி, கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு நன்றிகள் ;) நம்ம விக்கி - (அச்சச்சோ விக்கிரமாதித்தன் என்று சொல்வதே இந்தக் காலகட்டத்தில் நல்லது. ) யின் ஆற்றல் இப்படித்தான் சில நேரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. பாகிஸ்தானின் அசத்தல் அப்படி.. வாழ்த்துக்கள். அவர்களால் எதுவும் முடியும்.. ...
இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது.. (மெல்லிய கோடாக மட்டுமே இருந்த நம்பிக்கைக்கு இந்தியாவுக்கு எதிரான வெற்றியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கட்டங்களும் சின்னதொரு ஆசையை ஊட்டியது காலத்தின் கோலம் தான் ) *இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம், குறிப்பாக தடுமாறும் பந்துவீச்சு பற்றி விரிவான ஒரு இடுகையை Champions Trophy தொடர் முடியும் நேரம் தரலாம் என்று நம்பியிருக்கிறேன். ஆனால் மூன்று ...
#DhoniQuits "தோனியின் ஓய்வு - தவறான நேரத்தில் ஒரு சரியான முடிவு !!! " 2014இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் செய்தி தெரிந்தவுடன் எழுத ஆரம்பித்த கட்டுரையின் தலைப்பாக நான் எழுதிய வரிகள். இப்போது ஒருநாள் + T20 தலைமையை விட்டு தோனி விலகியிருக்கும் நிலையில் - தக்க நேரத்தில் சாதுரியமான முடிவு என்று சொல்லவேண்டியுள்ளது. கோலியின் அமர்க்களமான ஓட்டக் குவிப்பும், ...
இத்தனை விஷயம் வாசிக்கும் ஹர்ஷு இன்னுமா வருவார், நல்ல பிள்ளையாக வருடம் முழுவதும் இருந்தால் கடிதம் எழுதிக் கேட்கும் பரிசுகள் தருவார் என்பதை நம்புகிறான் என்பதை நானும் ஆச்சரியத்தோடு தான் நோக்குகிறேன். ஒருவேளை, கள்ளப்பயல் எப்படியாவது தான் விரும்பும் பரிசுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம்புகிற மாதிரி நடித்து எம்மை நம்பவைக்கிறானோ என்றும் சந்தேகம் வருவதுண்டு. சிலவேளை, "அப்பா தான் ...
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் - இந்த வருடம் பெற்ற தங்கப் பந்து விருது மூலமாக அதை உறுதிப்படுத்திக்கொண்ட லியொனல் மெஸ்ஸி அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, கால்பந்து ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்திருந்த ஒரு மைல்கல் சாதனையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டியிருக்கிறார். கால்பந்துப் போட்டிகளில் தனது 500வது கோல் பெற்ற சாதனையே அதுவாகும். ஆர்ஜென்டின கால்பந்தாட்ட அணியின் தலைவரும், உலகப் ...
ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒரு மாத காலமாக சுழற்றியடித்த உலக T20 புயல், மேற்கிந்தியத் தீவுகள் பக்கமாகக் கரை ஒதுங்கியவுடன் தான் ரசிகர்கள் வேறுவேறு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால்,இன்னமுமே மேற்கிந்தியத் தீவுகளின் விதவிதமான வெற்றிக் கொண்டாட்டங்கள், அந்த வலி சுமந்த வெற்றியின் பின்னர் அணித் தலைவர் டரன் சமியின் உரை + பேட்டி, ...
அதிரடியால் இறுதிக்கு தகுதி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் !! என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டன் ஆகியவற்றுக்காக இன்று எழுதிய கட்டுரையின் மீள்பதிவு, சிற்சில சேர்க்கைகள் மற்றும் புதிய படங்களுடன்.. மேற்கிந்தியத் தீவுகளின் மும்பாய் வெற்றி பலருக்கும் மாபெரும் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது. இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட அணி என்ற அவமானத்துடன் ...
ரோய் அதிரடியாக நேற்றைய நாள்.. மும்பாயில் இன்று கோலி - கெயில் மோதலா.. கெயில் - அஷ்வின் மோதலா என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, ரோயின் அதிரடியினால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டனுக்கு எழுதியுள்ள கட்டுரையில் சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இந்த இடுகை. --------------- ஆப்கானிஸ்தானுடன் தடுமாறி, ஒரே ஒரு ஓவரில் விளாசப்பட்ட ஓட்டங்களினால் ...
மீண்டும் தொடர்ச்சியாக எழுதும் ஒரு உத்வேகம் கிடைத்திருப்பதால் உலக T 20 - அரையிறுதிகளுக்கு முன்பாக... என்ற தலைப்பில் ஒரு வருட இடைவெளியின் பின் மீண்டும் தமிழ் மிரருக்கும், தமிழ் விஸ்டனுக்கும் எழுதியுள்ள கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட இடுகை. போட்டிகளை நடாத்தும் நாடாகவும், இம்முறை உலக T20 கிண்ணத்தை வெல்லக்கூடிய வாய்ப்பை அதிகளவில் கொண்ட நாடாகவும் கருதப்படும் இந்தியாவுடன், தத்தம் ...
3 நாட்களில் நடந்த ஆறு போட்டிகளில், இப்போது அரையிறுதிக்கான நான்கு அணிகளும் தெரிவாகியிருக்கின்றன. நேற்று நடைபெற்ற இறுதி சூப்பர் 10 போட்டி வெறும் சம்பிரதாயபூர்வமான போட்டியாக மட்டுமே நடைபெற்றது. அதிலும் இலங்கை அணி தோற்று, நடப்பு சம்பியனாகப் போய் , எல்லாவற்றையும் இழந்து நொண்டிக் கொண்டு நாடு திரும்புகிறது. 1996இல் உலக சம்பியனாக இங்கிலாந்து போய், முதற்சுற்றோடு நாடு திரும்பிய 1999 உலகக்கிண்ண ...
ஒரே நாள், இரண்டு போட்டிகள், இரண்டு 'சிறிய'அணிகள் - பெரிய அணிகளை மண் கவ்வ வைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை தங்கள் அவசரம், கவனக்குறைவு, நிதானமின்மை காரணமாகத் தவறவிட்ட ஆச்சரியமான சந்தர்ப்பங்கள். அதிர்ச்சியை(upset) அளித்திருக்கவேண்டிய இரு போட்டிகள், எதிர்பார்த்த 'பெரிய' அணிகளுக்கு வெற்றிகளைக் கொடுத்த வழமையான நாளாக மாறிப்போனது. minnows என்று அழைக்கப்படும் சிறிய அணிகளுக்கு ஆதரவை இப்படியான ...
ஒரு வெற்றி, ஒரு தோல்வி எத்தனை மாற்றங்களை செய்துவிடக்கூடும்? நியூ சீலாந்து செவ்வாய் பெற்ற வெற்றி - இந்த உலக T20 இல் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி - அரையிறுதிக்குத் தெரிவான முதலாவது அணி என்ற பெருமையைக் கொடுத்துள்ளது. இந்த உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கும் நேரம் யாரும் நியூ சீலாந்தை இந்தளவு வலிமையான ஒரு அணியாகக் கருதியிருக்க மாட்டார்கள், அதிலும் பிரெண்டன் மக்கலமின் ஓய்வுக்குப் பிறகு. ஆனால் கேன் ...
வெள்ளி இரண்டு போட்டிகள், சனிக்கிழமை ஒரு போட்டி (இன்னோரு போட்டி வைத்திருக்கக்கூடிய நாள்), நேற்று முன்தினம் - ஞாயிறு இன்னும் இரு போட்டிகள், நேற்று இன்னொரு போட்டி.. ஆறு போட்டிகளிலும் சில கதாநாயகர்கள்.. ஆனால் மூன்று பேர் மட்டும் தனியாகத் தெரிந்திருந்தார்கள். தத்தம் அணிகளின் வெற்றிக்கான பங்களிப்பைத் தனித்து நின்று போராடி வழங்கியவர்கள் என்று அவர்களைக் குறிப்பிடலாம். கொல்கொத்தாவில் ...
ஆப்கானிஸ்தானைத் தானே இலங்கை வென்றது? இதையெல்லாம் கொண்டாடவேண்டுமா? டெஸ்ட் அந்தஸ்தே இல்லாத ஒரு அணியை வென்றிட்டு உலகக்கிண்ணம் வென்ற ரேஞ்சுக்கு அளப்பறையைப் பாரு.. இவை இலங்கை அணியைப் பிடிக்காத / இலங்கை ரசிகர்களைக் கலாய்க்கும் பலரின் கேலிகள்.. ஆனால், நேற்றைய வெற்றி பல வகைகளில் கொண்டாடக் கூடிதாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்று. இந்த உலக T20 கிண்ணத் தொடரில் தனது முதல் ...
T20 போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் துரித வேக ஆட்டம் என்பதாலும், ஓட்டக் குவிப்புக்கள், உடன் விக்கெட் எடுக்கும் தேவைகள், களத்தடுப்பில் மேலதிக உற்சாகம் போன்ற காரணிகளால் இவை இளையவருக்கான ஆட்டமாகக் கருதப்பட்டன. ஆனால் IPL , Big Bash League, CPL என்று எல்லாவிதமான லீக் போட்டிகளிலும் ஓய்வுபெற்ற 'முன்னாள்' வீரர்கள் தான் ஆரம்பமுதல் கலக்கி இந்த எண்ணக் கருத்தே தவறானது என்று நிரூபித்து வந்திருந்தார்கள். ...
நாக்பூரில் நேற்று நடந்தது என்ன? தாம் விரிக்கும் வலையில் தாமே மாட்டிக் கொள்வது அடிக்கடி நடப்பதைக் கண்டு வந்திருக்கிறோம். தத்தமக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்து வைத்தும் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு அதே பொறியில் சிக்கி சொந்த செலவில் சூனியம் வைத்த வரலாறுகள் கண்டுள்ளோம். நாக்பூரில் நேற்று சுழல்பந்து வீச்சு வியூகத்தால் நேற்று இந்தியாவை நியூ சீலாந்து சுருட்டியதும் இவ்வாறான ஒன்று தான். சர்வதேச ...
ஒரு அணியின் தோல்வி ஒரே நேரத்தில் கோடிக் கணக்கானோரை கவலை கொள்ளவும், அதேவேளையில் அதேயளவு கணக்கானோரை காத்திருந்து பழிவாங்கிய ஒரு குதூகாலத்தையும் வழங்கியிருக்கின்றதென்றால் அது நேற்றைய நாக்பூர் போட்டி தான். இறுதியாகத் தான் விளையாடிய 11 T20 சர்வதேசப் போட்டிகளில் 10இல் வென்றிருந்த இந்தியா சொந்த மண்ணில் அதுவும் நியூ சீலாந்திடம் அதிலும் அதிகமாக அறியப்படாத அவர்களது சுழல்பந்தில் சிக்கி சின்னா ...