ஒலிம்பிக் வீரரும், ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சுகத் திலகரத்ன தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும். இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சற்று முன்னர் கண்டி பல்லேகலவில் ஆரம்பமாகியிருக்கின்றது. தற்காலிக பயிற்சியாளரினை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மிச்சல் சான்ட்னர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து ஒருநாள் தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கும் இலங்கை வீரர்கள் இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கியிருக்கின்றனர். அத்துடன் இப்போட்
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பயிற்சியாளராக வழிநடாத்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகீப் ஜாவேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரை ஆகீப் ஜாவேட் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. >>Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம்<< அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளாராகவும் செயற்
தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடர்களிலிருந்து பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. >>மூன்றாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு ; புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!<< கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சுழல் பந்துவீச்சில் அசத்தியிருந்த ல
இலங்கையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பாதை திட்டத்தின் ஓர் அங்கமாக Prima Group Sri Lanka நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகின்ற இந்த ஆண்டுக்கான பிரீமா (Prima) 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட அதி சிறந்த 15 வயதின் கீழ் பாடசாலை வீரர்கள், 5 ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் வெற்றி தொடர்பில் கூறும் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன (தமிழில்) The post WATCH – வெற்றியை நோக்கி செல்வதற்கான திட்டம் என்ன? கூறும் மஹீஷ் தீக்ஷன! appeared first on ThePapare. ...
இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக (Sports and Youth Affair) மாண்புமிகு சுனில் குமார கமகே நியமனம் செய்யப்பட்டுள்ளார். >> சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை கடந்த வாரம் இலங்கையில் நிறைவுக்கு வந்த 10ஆவது பொதுத் தேர்தலினை அடுத்து புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப் பட்டியல் பாராளமன்ற உறுப்பினரான சுனில் குமார கமகே, இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிரு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவந்த இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான ஆயத்தத்தை மேற்கொள்ளும் முகமாக இலங்கை அணியில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். >>சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை<< இவர்களுடன் கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்திலிருந்து விடுவிக்
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – 12 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை! appeared first on ThePapare. ...
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி சற்று முன்னர் கண்டி பல்லேகலவில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ள இலங்கை வீரர்கள் இப்போட்டிக்காக ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். அதன்படி துனித் வெல்லாலகே டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை XI பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக
குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024காந்திமதியின் காதலன் – கல்கி `காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம். இரண்டாம் இடம் – அபிமானி சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண
பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. >>ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த் விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்தில் முன்னணி சகலதுறை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 564 வீரர்களில் 19 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் இடம்பெற்றுள்ளதுடன், அவருக்கான அடிப்படை விலையாக இந்திய பணப்பெறுமதியில் 75 இலட்சம் ரூபா நிரண்யிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய தி
அன்புடன் வாசகர்களுக்கு,பால்வண்ணம் சிறுகதைத்தொகுதி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஐந்து வாசகர்களுக்கு இலவசமாக இந்தப் புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைக்க விரும்புகின்றேன். வாசகர்கள் தங்கள் முகவரியை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் kssutha@hotmail.comதொகுப்பு தொடர்பான எந்தவித விமர்சனமும் எதிர்ப்பார்க்கப்படவில்லை. ...
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடி இலங்கை அணியுடன் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>குஜராத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரானார் பார்த்திவ் படேல் லுங்கி ன்கிடிக்கு ஏற்பட்ட தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை அவர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் போனமைக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனது உபாதைக்காக சிகிச்சைகளை ஆரம்பித்துள்ள லுங்கி ன்கிடி பாகிஸ்தான் அணியுடனான தொடரிலும் பங்கேற்ப
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்டப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் சவுதி அரேபியாவில்; நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமைப் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 45 ஓட்டங்களால் (டக்வத் லூயிஸ் முறையில்) அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் T20I தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றனர். அதன்படி ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. >>ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் நோமான் அலி<< போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (13) வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான புதிய T20i தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த 2 போட்டிகள் கொண்ட T20i தொடரில் 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் வனிந்து ஹசரங்க தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி, 696 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். குறித்த தொடரின் முதலாவது T20i போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், 2ஆவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – மெண்டிஸ் – அசிதவின் அசத்தல் சதங்களுடன் வெற்றியீட்டிய இலங்கை! appeared first on ThePapare. ...
இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் A மற்றும் B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. டிசம்பர் 11ம் திகதி ஆரம்பிக்கவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் தொடர் டிசம்பர் 19ம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்க தொடருக்கு முன்னாயத்தமாக செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அதன்படி 11ம் திகதி