தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாபிரிக்கா அணி தெம்பா பௌவுமாவின் 70 ஓட்டங்களின் உதவியுடன் 191 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்க்க, பிரபாத் ஜயசூரிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்
சுற்றுலா பங்களாதேஷ் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும், ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. >>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணியானது இங்கே முதல் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போ
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்த, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா – அவுஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், குறித்த டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளத
பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்தனர். உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டியொன்றில் இலங்கை வீரர்கள் இரட்டையர் பெட்மிண்டன் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக பெட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசையில் 72ஆவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் ஏமி அக்கர்மன் மற்றும் டெய்ட்ரே லோரன்ஸ் ஜோடியை 21-18 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் வீ
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனன்ஜய டி சில்வா (தமிழில்) The post WATCH – முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் தனன்ஜய டி சில்வா! appeared first on ThePapare. ...
தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆரம்பித்துள்ள முதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. டர்பன் கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க தீர்மானித்துள்ளது. இலங்கை வீரர்களுக்கு 2025 IPL தொடரில் அதிக வாய்ப்பு போட்டியின் முதல் 2 நாட்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் சாதகத்தன்மையை ஆடுகளம் கொடுக்கும் என்பதால் இந்த தீர்மானத்தை இலங்கை அணி மேற்கொண்டுள்ளது. இலங்க
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சற்று முன்னர் டர்பனில் ஆரம்பமாகியிருக்கின்றது. இலங்கை வீரர்களுக்கு 2025 IPL தொடரில் அதிக வாய்ப்பு போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்துள்ளார். இப்போட்டிக்கான இலங்கை வீரர்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்க ஆடுகளத்தில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளனர். இலங்கை பதினொருவர் திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந
நேற்று (25) நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் மெகா ஏலத்தில் ஆறு இலங்கை வீரர்கள் மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர். >>ஹஸரங்க, தீக்ஷனவை வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!<< இரண்டு நாட்களாக சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல். தொடர் மெகா வீரர்கள் ஏலத்தில், அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக வனிந்து ஹஸரங்க மாறியிருந்தார். ஹஸரங்கவினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய நாணயப்படி 5.25 கோடி (இலங்கை நாணயப்படி 18.13 கோடி) ரூபாய்களுக்கு கொள்வனவு செய்திருந்தது. எனினும் ஹஸரங
இந்தியன் பிரீமியர் லீக் (LPL) வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் ஏலத்தில் இலங்கை அணியின் இரண்டு முன்னணி வீரர்கள் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளனர். >>பங்களாதேஷினை பந்துவீச்சில் மிரட்டிய யாழ். மண்ணின் ஆகாஷ்<< ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய ரூபாயில் 5.25 கோடிக்கு (18.09 கோடி இலங்கை ரூபாய்) வனிந்து ஹஸரங்கவை வாங்கியுள்ளதுடன், ம
சுற்றுலா பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது. 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட முதல்தரப் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடுகின்றது. இந்த நிலையில் இலங்கை – பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் ...
அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) ஆரம்பமாகவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. >>ஆசியக் கிண்ண ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற Sony<< மொத்தம் 15 பேர் அடங்கிய இந்தக்குழாத்தின் தலைவராக கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி வீரரான விஹாஸ் தேவ்மிக்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் இந்தக் குழாத்தில் தமிழ் பேசும் வீரர்களான சாருஜன் சண்முகநாதன், யாழ். மாவட்ட வீரர்களான மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மா
2024-2031 வரை நடைபெற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாவின் Sony Pictures Networks India (SPNI) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முந்தைய ஒளிப்பு உரிமை ஒப்பந்தத்தை விட புதிய ஒப்பந்தத்தின் மதிப்பானது 70% ஆல் அதிகரித்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, 2031 ஆம் ஆண்டு வரை நடைபெறவிருக்கும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள், 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர்கள், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆடவர் மற்றும் ...
பங்களாதேஷ் 17 வயதின் கீழ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை 17 வயதின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை 17 வயதின் கீழ் அணியில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் இணைக்கப்பட்டுள்ளார். ஆகாஸ் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் தம்புள்ள அணிக்காக விளையாடி பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார். >>தேசிய இளையோர் கிரிக்கெட் அணிகளில் யாழ். வீரர்கள் மூவர்<< தமிழ்பேசும் வ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது 2025ஆம் ஆண்டு இந்திய பிரிமீயர் லீக் ஐ.பி.எல். தொடருக்கான திகதிகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல். தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றன. >>விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்;ன நியமனம்<< அதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது 2026ஆம் மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடைபெறும் திகதிகளையும் உறுதி செய்திருக்கின்றது. இதன்படி
இலங்கையின் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக முன்னாள் ஒலிம்பிக் வீரரும், நட்சத்திர மெய்வல்லுனர் வீரருமான சுகத் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இலங்கையின் முன்னாள் மெய்வல்லுனர் வீரரா
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மஹீஷ் தீக்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ஆறு இடங்கள் முன்னேறி 650 புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். >>இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள தென்னாபிரிக்கா டெஸ்ட் குழாம் அறிவிப்பு<< அதேநேரம் நியூசிலாந்து தொடரில் வி
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க குழாத்தில் உபாதையினால் அணியிலிருந்து வெளியேறியிருந்த அணித்தலைவர் தெம்பா பௌவுமா மீண்டும் அழைக்ககப்பட்டுள்ளார். >>தென்னாபிரிக்க தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு<< தெம்பா பௌவுமாவுடன் இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடாவும் அண
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் தேசிய கனிஷ்ட கிரிக்கெட் அணிகளில் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. >>இலங்கை வரும் பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<< அந்தவகையில் யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ரஞ்சித் குமார் நியூட்டன், மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரரான மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கட் அணிக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த இரண்டு வீரர
ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிளுக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது. 20 நாடுகள் பங்குபற்றலுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் கடந்த முறை சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை ஆடவர் அணி, இந்தியாவிற்கு பலத்த போட்டியைக் ...
பங்களாதேஷின் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை (17 வயதின் கீழ்) வீரர்களுடன் ஒருநாள் மற்றும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம் இரு அணிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகுவதோடு, ஒருநாள் தொடரின் பின்னர் இரு போட்டிகள் கொண்ட மூன்று நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டித் தொடர் டிசம்பர் .