வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய என் குறிப்புகள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாம் வாழ்கின்ற உலகின் அன்றாட நடவடிக்கைகள் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது. இதன் காரணமாக ஆசையாகப் பாவித்த பொருள்கள் பலவும், வழக்கொழிந்து போவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கொழிந்து செல்கின்ற பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும், அவர்களின் முன்னோர்கள் அன்றாடம் ஆசையோடு பயன்படுத்திய பொருள்கள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதற்கான
ஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி!!
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எனக்கு பிடித்தமான ஆளுமைகளுள் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒருவர் என்பதை நான், நிறத்தில் ஏற்கனவே எழுதிய பசித்திரு, முட்டாளாயிரு மற்றும் ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன் என்ற பதிவுகள் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆளுமைகளை நமக்கு பிடித்துப்போவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லக்கூடியது, அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வை என்று சொல்லிவிடலாம். நீங்கள் அறிந்தது போன்றே, கடந்த புதன்கிழமை (2011.08.24), ஸ்டீவ் ஜொப்ஸ் தான், [...] ...
அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை. தாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே! [...] ...
கெய் செரா செரா
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது. மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், .
அந்தவொரு சொல் என்ன?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கருத்துக்களின் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு முக்கியமானது. எண்ணங்களின் அழகிய நிலைகளைச் சொல்வதற்கு சொற்கள் தன்னகம் கொண்டுள்ள சக்தியை எண்ணி வியக்கத்தான் முடியும். எதிர்பாராத நிலைகளில் நாம் எதிர்நோக்கும் கேள்விகள், வேண்டி நிற்கும் பதில்கள் பற்றிய ஆச்சரியம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. அந்தக் கணத்தில் நாம் கேள்விக்கான விடையைத் தேடி, விடை சொல்ல முடியாமல் இருந்த நிலைகளும் தோன்றியிருக்கலாம். கேள்விக்கான விடை இப்படித்தான் அமைந்திருக்க [...
திருப்தியைத் தொலைத்தவர்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எம்மைச் சூழவுள்ள பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியதாக இருந்தபோதிலும், அந்தப் பெரிய நிலை தாண்டிய அமைவை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை என்றே, நாளுக்கு நாள் நான் கேட்க நேரிடும் முறைப்பாடுகள் எனக்குச் சொல்லிச் செல்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமுமாக வேண்டிய தேவை இருக்கின்றது எனக்குப் புரிகிறது. திருப்தி என்பதன் வரையறுப்பதென்பது, கலாசார தன்மையை ஒட்டியதொரு செயற்பாடென்றே நான் கருதுகிறேன். இங்கு திருப்தியை, [...] ...
கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் - 05.10.2011] #6
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது. இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது. அதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு
ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 56 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த பதிவை ஒலி வடிவில் கேட்க: இசை: A Rose in Haiti by mykleanthony வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி [...] ...
நல்ல கவிதை எது?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர். நாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவம
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 22 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மனிதனின் பொதுமைப்பாடான செம்மையற்ற நிலைகள் அவனின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாய் இருப்பது உண்மையே. இங்கு செம்மையற்ற நிலைகளை (Imperfections) ரசிக்கின்ற அளவில் பலரும் பக்குவமடைந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆனாலும், பின்வரும் இரண்டு காணொளிகளும் நாம் அறிந்த நிலையிலும் கூட, எமது கண்களையும் காதுகளையும் ஏமாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. இதுதான், மனிதனின் அழகிய செம்மையற்ற நிலைகள். கண்களை ஏமாற்றும் காணொளி
புதன் பந்தல் – 31.08.2011
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 20 செக்கன்களும் தேவைப்படும்.) [?] புதன் பந்தல் என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளியிடலாமென ஆர்வங் கொண்டுள்ளேன். குறித்த வாரத்தில் என் கவனத்தை ஈர்த்த மற்றும் நீங்கள் அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டிய விடயங்களை வித்தியாசமான முறையில் தொகுத்துத் தருவதே இந்தப் பதிவுகளின் நோக்கமாகும். வித்தியாசமான முறை என குறிப்பிட்டதற்கான காரணமென்னவெனில், நிழற்படங்கள் ஒன்று சேர நேர்த்தியாக அமைக்கப்பட்டு, தகவல்களும் விடயங்களும் பரிமாறிக் கொள்வதாய் [...] ...
காகமும் முயலும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 34 செக்கன்கள் தேவைப்படும்.) [?] கதையொன்றின் வலிமை என்ற தலைப்பில் ஏற்கனவே, நிறத்தில் கதைகள் எமது வாழ்க்கையில் காட்டும் செல்வாக்கு பற்றி சொல்லியிருந்தேன். இன்றோ கதையொன்று சொல்லப் போகின்றேன். நீதிக்கதைகள் சொல்கின்ற படிப்பினைகள் மிகவும் நேரடியானவை. உணரப்பட வேண்டியவை. இனி கதையென்னவென்றுதான் பார்ப்போம். மரத்தின் மேலே, எதுவுமே செய்யாமல் நாள் முழுதும் சோம்பேறியாக காகமொன்று சும்மா இருந்தது. இதனைக் கண்ட முயலுக்கோ காகத்தைப் போலவே, எதுவுமே செய்யாமல் சும்மா இருந்துவிட வேண்டுமென்ற [...] ...
இது போதாது எனக்கு!! [புதன் பந்தல் - 07.09.2011] #2
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 55 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கொண்டு வருவது ஒரு கதையாகும். ஒரு ஊரில் வாழ்ந்த உழவனொருவனுக்கு அற்புதமான வாய்ப்பொன்றை அந்தவூரில் வாழ்ந்த செல்வந்தன் ஒருவன் வழங்கினான். உழவனால் தனது மிகப்பெரிய காணிக்குள் எவ்வளவு தூரம் நடந்து செல்ல முடிகிறதோ, அத்தனையையும் உழவனுக்கு வழங்கிவிடுவதாக உறுதியளித்தான். ஆனால் ஒரு நிபந்தனை, சூரியன் மறைவதற்கிடையில் ஆரம்பித்த இடத்திற்கே உழவன் வந்துவிட வேண்டுமென்பதாகும் சொல்லப்பட்டது. காலை நேரம், விறுவிறுவென வேகமாக [...]
ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன்.
எது உண்மை?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] பல நாட்களுக்குப் பிறகு, கோபாலுவோடு நிறைய நேரம் கதைப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கதையாடலின் ஒரு பகுதி, உண்மை பற்றியதாய் அமைந்திருந்தது. உண்மையில், உண்மை என்பது என்ன? யாரும் நம்மிடம் நம்பிவிடுமாறு சொல்லுவதுதானா உண்மை? இல்லை. நாம், நம்புகின்றவை மட்டுந்தானா உண்மை. இல்லை. உண்மை என்பது ஒரு மாயைதானா? இல்லை. நாம் நம்பி, மற்றவர்களையும் நம்பிவிடுமாறு கேட்கின்றவைதான் உண்மையா? நீ, சிந்தித்து உணர்ந்ததை மற்றவர்களிடம் சொல்லியதன் பின்,
ஒன்றுமில்லை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 24 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அங்கே வானத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனை உங்களால் பார்க்க முடிகிறதா? “என்ன நடந்தது?” என்று நீங்கள் கேட்டால் — “ஒன்றுமில்லை” என்பதுதான் உச்ச பதிலாகவிருக்கும். ஒன்றுமில்லை என்பதிலேயே எல்லாமே இருக்கிறது — அது தான் நிஜம். “எதை நான் பிழையாகச் செய்து விட்டேன்”.. “அதை அப்படிச் செய்திருக்கலாமே!” “ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை மாற்றி இப்படிச் செய்திருப்பேனே!!
“நான்” என்றால் என்ன?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம், நான் வழமையாக வாசிக்கின்ற Letter of Note வலைப்பதிவை வழமை போலவே வாசித்தேன். நிற்க, முதலில், Letters of Note என்ற தளத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இரண்டு நபர்களிடையே நடக்கின்ற கடித உரையாடல்கள் சில வேளைகளில், ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வைக்கான அல்லது சிந்தனைக்கான களத்தை வழங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு சொல்லித்தந்திருக்கிறது. கடிதத்திற்கான காத்திருப்பில் இது பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கடிதங்கள
எண்ணங்களின் எதிரொலி [புதன் பந்தல் - 26.10.2011] #9
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது. சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன். அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென கீழே விழுந்து விடுகிறான்,
இன்னொன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மாதமொன்று தொடங்கி, நிறைவாகிப் போவதற்கு எடுக்கின்ற காலம் குறைந்து கொண்டு போவது போன்ற உணர்வு எனக்குள் எழுகின்றது. பருவ காலங்கள் மாறி வரும் நிலைகளைக் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைத்திருக்கிறது. மழை பெய்யும் நள்ளிரவில் நான் என்ற பதிவில் பருவ மாற்றங்களின் பார்வையில் உங்களை ஒருதரம் அழைத்துச் சென்ற ஞாபகமெனக்கிருக்கிறது. பருவங்கள் வேகமாக மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். மரத்தின் பாலுள்ள இலைகள் ...
அதோ வானத்தை பார்! பட்டமல்ல, சுப்பர் நிலவு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நிலவின் அழகு பற்றிய கவிதைகளை ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில் கட்டாயம் கேட்டுவிடுகின்றான் என்பது வெளிப்படையான உண்மை. ஒரு பெண்ணின் அழகு பற்றிய வர்னணைகளில் கவிஞனுக்கு நிலவுதான் ஆறுதல் தருகிறது. அடைக்களம் கொடுக்கிறது. நிலவின் வளர்தல், தேய்தல் போன்ற நிகழ்வுகள் வாழ்வின் அனுபவங்களை சொல்லுவதாய் இருக்கவேண்டுமென நான் நினைப்பதுண்டு. நிலவின் தோற்றம் பற்றிய நிலைகளில் அதற்கு அதிகமான பெயர்களும் உண்டு. நிலவில்லாத போது, [...] ...