(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 22 செக்கன்கள் தேவைப்படும்.) [?] மனிதனின் பொதுமைப்பாடான செம்மையற்ற நிலைகள் அவனின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாய் இருப்பது உண்மையே. இங்கு செம்மையற்ற நிலைகளை (Imperfections) ரசிக்கின்ற அளவில் பலரும் பக்குவமடைந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆனாலும், பின்வரும் இரண்டு காணொளிகளும் நாம் அறிந்த நிலையிலும் கூட, எமது கண்களையும் காதுகளையும் ஏமாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. இதுதான், மனிதனின் அழகிய செம்மையற்ற நிலைகள். கண்களை ஏமாற்றும் காணொளி
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 41 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மாறுதல்கள் ஏற்படுத்துதல் பற்றிய விடயத்தை நட்சத்திரமீன்களின் கதையோடு ஆய்கிறது. காலை நேரத்தின் கடற்கரைக்கு அற்புதமான தோற்றச்சூழல் கிடைக்கும். அப்படியொரு காலைப்பொழுதில் கடற்கரை வழியாக உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நடந்து செல்கின்ற
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன்.
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 42 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நாம் அன்றாடம் சந்திக்கின்ற மனிதர்களில் எப்போதுமே, புதுமையான விடயங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் உலகைக் காணும் விதம், வித்தியாசமும் தனித்துவமும் உடையதனால், இந்த அழகிய நிலை எய்தப்படுகின்றது. இதுதான் இயல்பானது. உண்மையுமானது. பதிவிற்குள் செல்ல முன்னர் உங்களுக்காக ஒரு குட்டிக் கதை, “ஒரு ஊரில ஒரு நரி. அதோட கதை சரி.“ அண்மையில் நான் கேள்வியுற்ற கதையொன்றை — நாய்க் கதை — [...]
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், சௌகரிய வலயம் பற்றிய விடயத்தை குட்டி யானையொன்றின் இயல்போடு அலசுகிறது. குட்டி யானையை, அதன் பாகன் மிகச் சிறியதொரு அளவான இடத்திலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறான். பூமிக்குள் ஆழமாக பதிக்கப்பட்ட மரத்தாலான மெல்லிய கம்பமொன்றில் யானையின் கால், கயிற்றினால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நீளமோ, குறித்த யானையை வளர்க்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பொருந்தும் வகையிலேயே காணப்படும். அவ்வளவு தூரம் [...]
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 55 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கொண்டு வருவது ஒரு கதையாகும். ஒரு ஊரில் வாழ்ந்த உழவனொருவனுக்கு அற்புதமான வாய்ப்பொன்றை அந்தவூரில் வாழ்ந்த செல்வந்தன் ஒருவன் வழங்கினான். உழவனால் தனது மிகப்பெரிய காணிக்குள் எவ்வளவு தூரம் நடந்து செல்ல முடிகிறதோ, அத்தனையையும் உழவனுக்கு வழங்கிவிடுவதாக உறுதியளித்தான். ஆனால் ஒரு நிபந்தனை, சூரியன் மறைவதற்கிடையில் ஆரம்பித்த இடத்திற்கே உழவன் வந்துவிட வேண்டுமென்பதாகும் சொல்லப்பட்டது. காலை நேரம், விறுவிறுவென வேகமாக [...]
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாம் வாழ்கின்ற உலகின் அன்றாட நடவடிக்கைகள் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது. இதன் காரணமாக ஆசையாகப் பாவித்த பொருள்கள் பலவும், வழக்கொழிந்து போவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கொழிந்து செல்கின்ற பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும், அவர்களின் முன்னோர்கள் அன்றாடம் ஆசையோடு பயன்படுத்திய பொருள்கள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதற்கான
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 20 செக்கன்களும் தேவைப்படும்.) [?] புதன் பந்தல் என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளியிடலாமென ஆர்வங் கொண்டுள்ளேன். குறித்த வாரத்தில் என் கவனத்தை ஈர்த்த மற்றும் நீங்கள் அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டிய விடயங்களை வித்தியாசமான முறையில் தொகுத்துத் தருவதே இந்தப் பதிவுகளின் நோக்கமாகும். வித்தியாசமான முறை என குறிப்பிட்டதற்கான காரணமென்னவெனில், நிழற்படங்கள் ஒன்று சேர நேர்த்தியாக அமைக்கப்பட்டு, தகவல்களும் விடயங்களும் பரிமாறிக் கொள்வதாய் [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எனக்கு பிடித்தமான ஆளுமைகளுள் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒருவர் என்பதை நான், நிறத்தில் ஏற்கனவே எழுதிய பசித்திரு, முட்டாளாயிரு மற்றும் ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன் என்ற பதிவுகள் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆளுமைகளை நமக்கு பிடித்துப்போவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லக்கூடியது, அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வை என்று சொல்லிவிடலாம். நீங்கள் அறிந்தது போன்றே, கடந்த புதன்கிழமை (2011.08.24), ஸ்டீவ் ஜொப்ஸ் தான், [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எம்மைச் சூழவுள்ள பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியதாக இருந்தபோதிலும், அந்தப் பெரிய நிலை தாண்டிய அமைவை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை என்றே, நாளுக்கு நாள் நான் கேட்க நேரிடும் முறைப்பாடுகள் எனக்குச் சொல்லிச் செல்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமுமாக வேண்டிய தேவை இருக்கின்றது எனக்குப் புரிகிறது. திருப்தி என்பதன் வரையறுப்பதென்பது, கலாசார தன்மையை ஒட்டியதொரு செயற்பாடென்றே நான் கருதுகிறேன். இங்கு திருப்தியை, [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கருத்துக்களின் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு முக்கியமானது. எண்ணங்களின் அழகிய நிலைகளைச் சொல்வதற்கு சொற்கள் தன்னகம் கொண்டுள்ள சக்தியை எண்ணி வியக்கத்தான் முடியும். எதிர்பாராத நிலைகளில் நாம் எதிர்நோக்கும் கேள்விகள், வேண்டி நிற்கும் பதில்கள் பற்றிய ஆச்சரியம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. அந்தக் கணத்தில் நாம் கேள்விக்கான விடையைத் தேடி, விடை சொல்ல முடியாமல் இருந்த நிலைகளும் தோன்றியிருக்கலாம். கேள்விக்கான விடை இப்படித்தான் அமைந்திருக்க [...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 34 செக்கன்கள் தேவைப்படும்.) [?] கதையொன்றின் வலிமை என்ற தலைப்பில் ஏற்கனவே, நிறத்தில் கதைகள் எமது வாழ்க்கையில் காட்டும் செல்வாக்கு பற்றி சொல்லியிருந்தேன். இன்றோ கதையொன்று சொல்லப் போகின்றேன். நீதிக்கதைகள் சொல்கின்ற படிப்பினைகள் மிகவும் நேரடியானவை. உணரப்பட வேண்டியவை. இனி கதையென்னவென்றுதான் பார்ப்போம். மரத்தின் மேலே, எதுவுமே செய்யாமல் நாள் முழுதும் சோம்பேறியாக காகமொன்று சும்மா இருந்தது. இதனைக் கண்ட முயலுக்கோ காகத்தைப் போலவே, எதுவுமே செய்யாமல் சும்மா இருந்துவிட வேண்டுமென்ற [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 56 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த பதிவை ஒலி வடிவில் கேட்க: இசை: A Rose in Haiti by mykleanthony வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நிலவின் அழகு பற்றிய கவிதைகளை ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில் கட்டாயம் கேட்டுவிடுகின்றான் என்பது வெளிப்படையான உண்மை. ஒரு பெண்ணின் அழகு பற்றிய வர்னணைகளில் கவிஞனுக்கு நிலவுதான் ஆறுதல் தருகிறது. அடைக்களம் கொடுக்கிறது. நிலவின் வளர்தல், தேய்தல் போன்ற நிகழ்வுகள் வாழ்வின் அனுபவங்களை சொல்லுவதாய் இருக்கவேண்டுமென நான் நினைப்பதுண்டு. நிலவின் தோற்றம் பற்றிய நிலைகளில் அதற்கு அதிகமான பெயர்களும் உண்டு. நிலவில்லாத போது, [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கதைகள் – கதைகள் சொல்லப்படுகின்ற கதைகள் என கதைகள் பற்றிய வரலாறு மிகவும் நீளமானது. சின்ன வயதில் வீட்டில் தொடங்கி பாடசாலை தொடக்கம் கதைகள் பற்றிய எமது நெருக்கம் அலாதியானது. நாம் கேட்கின்ற கதைகளில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டதாய் காணப்பட்ட போதும், அவற்றை எம் மனக்கண் முன்னே அப்படியே கொண்டுவருகின்ற ஆற்றலை ஒவ்வொரு கதையும் கொண்டிருக்கிறது. தெரிந்திருக்கும் விடயங்கள் பற்றிய கதைகள் [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை. தாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே! [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 51 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு வருடத்தின் நகர்வும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகைப்பட்ட தருணங்களில் புரியத் தொடங்குவதுண்டு. அந்தத் தருணங்களில் முதன்மையானது பிறந்த நாட்கள் எனலாம். ஆனால், எல்லோருக்குமே வருடம் நகர்ந்துவிட்டது, புதிய வருடம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவது டிசம்பர் மாதமாகத்தான் இருக்க வேண்டும். “ஐயகோ, டிசம்பர் இப்போதே வந்துவிட்டதா? இனித்தான், இந்த வருடத்தில் நான் செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த 95 சதவீதமான விடயங்களைச் செய்யத் தொடங்க வேண
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) மனம் பற்றிய விந்தைகளைப் பற்றி நாளாந்தம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மனத்தின் ஆளுமை, உத்வேகம் பற்றிய ஆர்வநிலைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த விடயம் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், நமது மனது பற்றிய ஆழமான விசாரிப்புகளில் மட்டுந்தான் நாம் எம்மைப் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. உங்களைச் சூழ்ந்த உலகம் பற்றிய அவதானிப்புகள் தான் இந்தக் கணத்தின் வலிமையையோ, வெறுப்பையோ [...] ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) அறிவியலின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது. விஞ்ஞானம் பற்றிய எதிர்காலத்தின் அமைவை எதிர்கூறுமாய்ப் போல், புனைக் கதைகள் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களால் வெளியிடப்படுவதும், எதிர்வு கூறப்பட்டவை ஒரு கட்டத்தில் அப்படியே நடந்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த எதிர்வு கூறல்கள் பற்றிச் சொல்லும் போது, மிக முக்கியமானவராக விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கை குறிப்பிடலாம். 1964 ஆம் ஆண்டில் அவர் எதிர்வு கூறியவற்றை நாம் இப்போது [...] ...