"யார் பிரிந்த துயரமிது?இப்படியழுகிறது இந்த வானம்"வினவினேன், மேகத்தில் இருந்துவிடைபெற்று வந்த மழைத்துளியடம்."பூமாதேவியின் அசுத்தம் துடைக்க அனுப்பியிருக்கிறது எங்களை மேகம்"என்று சொல்லி கண்சிமிட்டிப் புதைந்தது,பூமிக்குள் அச் சிறு மழைத்துளி.அடுத்து வந்த துளியிடம் வினவினேன்"அசுத்தமா? என்ன அது?"வந்த ஒவ்வொரு துளிகளும், ஒவ்வொன்றாய்சொல்லிச் சொல்லி பூமிக்குள் ஒழிந்து கொண்டன."போரால் படிந்த இரத்தம் கழுவ, வேற்றுமையை மறக்கடிக்க,உதவாக்கரங்களையும் உசுப்பிவிட,ஊமையான மனிதத்தை பேசவைக்க,மறந்த இறைவனை நினைவில்வைக்க,மனிதனை புனிதன
"பிறக்கவில்லை புது வருடம்",எதுவும் மாறவில்லை, அதுதான் காரணம்.வானில் வேட்டு வேடிக்கை,வாழ்வில் சோக வாசனை,இது புது வருடம் அல்ல,நேற்றய வருடங்களின் தொடர்சி.பசி தீரவில்லை,பஞ்சம் அகலவில்லை,கண்ணீர் குறையவில்லை,அகதிகள் அழியவில்லை,வாழ்வில் பசுமையில்லை,வாழவும் தெரியவில்லை,மனிதரில் மனிதம் இல்லை,மன்னிக்கத் தெரியவில்லை,தாயின் பாசத்திலும் ஒரு கலக்கம்,தந்தையின் அரவணைப்பிலும் ஒரு குழப்பம்,பிள்ளையின் ஆதரவிலும் சில திருத்தம்,கணவனின் காதலிலும் ஒரு காயம்,மனைவியின் நேசத்திலும் ஒரு மாயம்,நண்பனின் நட்பிலும் சில நடுக்கம்,சொந்தங்களி
வாழ்க்கை என்ற புத்தகத்தில் வருடப் பக்கங்கள் புரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் காலம் அப் பக்கத்தை புரட்டும் போது நாம் அந்தப் பக்கத்தை முழுமையாக படித்து முடித்து விட்டோமா? என்பது தான், இன்று நாம் புது வருடத்தை வரவேற்பதற்கு மிகவும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்தை நம் வாழ்கையின் பயணத்தில் இழந்து விட்டோமே என யாரும் வருத்தப் படுவதில்லை. அவற்றில் நாம் திட்டமிட்டிருந்த விடயங்களை செய்து முடித்தோமா எனவும் சிந்திப்பதில்லை. இப்படியே நம் வாழ்க்கை நம்மை விட்டு கொஞ்சம்
அம்மா...........!!!!!!!!!!!!!!!!!!!!!!! என் அதிசயமே..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!என் ஆசானே..........என் இதயமே..........என் உயிரே.......... உனக்காக நான் எழுதும் ஒரு முடிவின் முற்றுறை, நீ வாழ வேண்டும் பல்லாண்டு.............. அம்மா........,நீ தந்த நினைவுகளை மறக்கவில்லை நான்,என் இனிய பருவமாம் இளம் பருவத்தை தவிர,நீ தந்த முத்தம் எனக்கு நினைவில்லை,நீ என்னை கட்டித் தழுவியதும் நினைவில்லை,ஆனால் நினைவிருக்கறது நீ எனக்காக தந்த உன் பாசம். அம்மா..........,எனக்குள் உன்னை விதைத்தாய்,ஆனால் இன்று நான் ஒரு தனி மரம்,இன்று
என் இனியவளே,என் இதயத்தின் இருப்பிடமே,கற்பனைக் கவிகொண்டுகரைகிறேன் உன்னுல்...என் சிந்தனையின் சிநேகிதி நீதான்,என் எழுத்துக்களின் இருப்பிடம் நீதான்,காவியங்கள் பாடும் ஓவியம் நீதான்,காகிதத்தில் தீட்டிய கவியும் நீதான்...இளம் பூக்களின் மென்மை உன் தேகம்,பசும் பாலின் நிறம் உன் வண்ணம்,ஒளி புகா ஒரு இருட்டுக் கல்லரை உன் கூந்தல்,நான் தடுக்கி விழுந்த கற்கள் உன் கண்கள்...யார் இவள்????? - எனக்காய்,நிலவின் உருவாய், பூமிக்கு வந்த மகள்...சிக்கனச் சிற்பி, சிறப்பாய் செதுக்கிய, சிறந்த சிற்பம் இவள்...கற்பனையில் மனைவியாய்,கனவுகளில்
அவமானமும் அடக்கமும் ஒட்டி உறவாடியதுஎன்னோடுபரிதாபம் எனும் கண்கள் என்னை பார்க்காத நாட்களே இல்லை நிலவின் அழகை ரசிக்க கூட நிமிர்த்த வில்லைஎன் பூமி பார்த்த தலையைவானம் பார்த்தே பல வருடம் ஆயிற்றுமூன்று தசாப்தங்கள் கழிந்ததாம்நான் பிறந்து நேற்றுடன்யாரோ சொன்னார்கள்இன்று என் காதுடன்முன் வீட்டு முருகேஷ் அண்ணாவின் குழந்தைஎன்னை பார்த்துதான் சோறுன்பான்வெள்ளாடை அணிந்த நான் பேய் என்ற கிலியில்அவனுக்குத் தெரியாது நான் ஒரு துணையற்ற கிளி என்றுகணவன் இறந்த நாளோடுகருகி விட்டது என் இதயமும்மனிதரில் நான் தான் அதிசயப் பிறவிஇதயமே மரித்
மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எமது தளம் உங்களுக்காக பகிர கொண்டு வந்திருக்கும் தகவல் 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு தகவலாகும்... சில தனிப்பட்ட வேளைகள் காரணமாக எம்மால் இந்த தகவலை உரிய நேரத்துக்கு வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு அதற்கான மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு விடயத்துக்குள் நுழைவோம்.அதாவது உலகின் சனத்தொகை பற்றி நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். இச் சனத் தொகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான இரு விடயங்கள் சம்பந்தமாக நாம்
மடியில் கிடந்த மலரின் கூந்தல் வருடி,காமக் கண்களால் கடலை உற்று நோக்கி,கவி பாடிக் கொண்டிருந்தான் கடல் அன்னையைகபிலன் எனும் மலரின் காதலன்."காதல் கொண்டது என்னையா? கடலையா?"மலரின் இதழ் சற்று விரிந்தது"உன்னைத்தான்டி என் செல்லம்,கடல் என்ன கடல்????உனக்காகவே என் உயிருடன் உடல்""கோபத்தால் சிவந்து விட்டதா உன் தேகம்இதோ உனக்காய் என் கவியின் பாகம்."கபிலனின் கற்பனை கடல்சுனாமியாய் மாறியது..."என்ன சூரியன் செத்து விட்டதா?இன்னும் விடியவில்லைஓ.. உன் கருங் கூந்தல் கொண்டு என் கண்னை மறைத்தாயா?பகலில் இப்படியொரு பளிச்சிடும் மின்னலா?ஓ.
இன்றய இந்தப் பகுதியில் மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சியில் களம் இறங்கியிருக்கிறோம். இந்த தகவல்கள் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறட்டப்பட்ட தாயினும் சற்று வித்தியாசமான தகவல் என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.என்ன அந்த தகவல் என்று யோசிக்கிறீங்களா???????ஆமாங்க இந்தப் பகுதியில் நாம் உங்களோடு பகிர நினைக்கும் விடயம்உலகில் அதிகளாவான பணக்காரர்களை(பில்லியனர்ஸ்) உள்ளடக்கியிருக்கும் நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்..வாங்க பார்க்கலாம்....எண்ணிக்கைகள் ஒவ்வொறு தலை வீதம் எண்ணிக்கையிடப்பட்ட
நாற்கம்பிக்குள் அடைக்கப்பட்ட பறவைகளின் வாழ் நாள் போல்,ஏக்கங்களாகிப்போனது என் வாழ்நாளும்.என்னை தனியாய் விட்டு நீ பிரிந்து சென்ற நாள் முதல்...கண்ணை மூடித்தூங்கும் வேளையிலும்,இருண்ட கனவுக்குள் ஒளிரும் தீபமாய் உன் முகம்.என்னைப் பார்த்து நீ முதல் பூத்த புன்முறுவல் மறைந்து,பிரியும் வேளை நீ நடிப்பாய் சிரித்த அந்த ரணங்களின் வினாடிகள்,சூடாய் ஒட்டிக் கொண்டது என் கண்களில்....,பச்சை மரத்தானிபோல் பதிந்து போனது என் மனதில்.நீ விளையாடிய மணல்வெளிகள்,நீ தூங்கிய அறைகள்,நீ வாழ்ந்த இடங்கள்,இவற்றை பார்க்கும் வேளை ஊசி கொண்டு குத்
மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதியினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அறியாத சில விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்...இந்தப் பதிப்பின் மூலம் உங்களுக்கு நாம் கொண்டு வரும் தகவல்... இந்தப் பூமியில் முதல் 10 இடங்களைப் பிடித்த கூடுதலான நிலப் பரப்பை கொண்டுள்ள நாடுகள் பற்றியதாகும்... (மில்லியன் சதுர கிலோ மீட்டறில் அளவுகள் தரப்பபடுகிறது)1. ரஷ்யா 17.12. கனடா 10.0 ...
நம் பார்வைகள் சந்தித்து பல வருடங்கள் உருண்டோடிட்டு.இருந்தும் பத்திரமாய் சிறைவைத்திருக்கிறேன்,உங்கள் நினைவு ஏடுகளையும், நினைவுகளையும்.அன்று இருந்த நான் இன்றில்லை,நீங்களும் இன்று அவ்வாறில்லை.நாலு பக்க வகுப்பறைச் சுவருக்குள்ளயேநசுக்கப்பட்டு விட்டது நம் நட்பு.பட்சிகள் கூட்டம் போல் பாசத்தால் இனைந்து,பட்டாம் பூச்சிகள் போல் கவலையின்றி திரிந்து,நாம் இட்ட சண்டைகள், கனவுகள்,ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள்,விளையாட்டுக்கள், சேட்டைகள்,இன்று எதுவுமே அற்று மௌனியாகிவிட்டோம்.ஆளுக்கொரு திசையில், கூட்டுக்குள் இருந்த