குருவியின் தோல்வியால் மூன்று வருஷம் ரூம் போட்டு யோசித்து, ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற சல்மான் கானின் டபாங்கைத் தமிழில் தந்திருக்கிறார். லொஜிக்கே இப்படியான படத்தில் தேடக் கூடாது என்பது ஹிந்தி டபாங் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் சாதாரண தமிழ் ரசிகர்களுக்கு? ஹிந்தியில் அந்தக் கால போலீஸ்கார கதாநாயகர்களையும், சில பல சென்டிமென்ட்களையும் போட்டுக் கலாய்த்திருப்பார்கள். தமிழில் இது அந்தக் ...
இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்ததினம்... தமிழை நேசிக்கும் எவருக்கும் பாரதியைப் பிடிக்காமல் போகாது. தமிழின் சுவையையும், எளிமையையும், வீரியத்தையும், பல்வகைமையையும் எடுத்துக்காட்டும் கவிதைகள், பாடல்களை பாரதியை விட இந்த நவீன காலத்தில் தந்த 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' இன்னொரு கவிஞனைக் காண்பதும் அரிது. அந்த மாபெரும் மகாகவிக்கு மீண்டும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்.. கவிதைகளில் ஈடுபாடும், தமிழில் ...
இந்தூர் மைதானத்தில் விரேந்தர் செவாக் படைத்த 219 ஓட்ட ஒருநாள் சர்வதேச சாதனை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்.. 3223 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ள நிலையில் இதுவே இரண்டாவது இரட்டை சதம். (ஆண்களுக்கான போட்டிகளில்.. ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க் 1997ஆம் ஆண்டு டென்மார்க் மகளிர் அணிக்கு எதிராகப் பெற்ற ஆட்டம் இழக்காத 229 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக ...
நேற்று விடியல் நிகழ்ச்சியில் நேயர்கள் கருத்து சொல்வதற்காக நான் கொடுத்திருந்த தலைப்பு - நீங்கள் வாழும் சமூகத்தில் ஒழிக்கப்படவேண்டிய/ தடுக்கப்படவேண்டிய சில பழக்க வழக்கங்கள்.. இதன் மூலம் இந்தக் காலகட்டத்தில் எம் சமூகத்தில் என்னென்ன விஷயங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். எல்லோரும் தொலை பேசி, sms , மின்னஞ்சல், facebook மூலமாக சொன்ன ...
தனுஷை ஒரு நடிகராக நிறுத்துவதற்கும், அவரை ஒரு ஆற்றலுள்ளவர் என்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் இயக்குனர் செல்வராகவன் பட்ட பாடு மிக முக்கியமானது. செல்வா இல்லாவிட்டால் இன்றைய தனுஷ் இல்லை. தனுஷின் மார்க்கெட் எழுவதற்கு செல்வா அவசியப்பட்டார். ஆனால் மயக்கம் என்ன வரும்போது நிலை வேறு. தனுஷ் தேசிய விருது பெற்ற நடிகர். செல்வாவுக்கு மீண்டும் தன் மார்க்கெட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். வழமையான செல்வா ...
இன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி.... இலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ.... நான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை) அண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை. தலைவராக ...
டெஸ்ட் போட்டிகள் வர வர மந்தமாகின்றன; ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் வெறுத்து விட்டன; டெஸ்ட் போட்டிகளை நேரடியாப் பார்க்க வரும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று சொல்பவர்களில் ஒருவரா நீங்கள்? நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - தென் ஆபிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடர் பார்த்தால் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் உடனடியாக. ஆனால் இரண்டே போட்டிகளுடன் ...
பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான நவம்பர் 20 மாலை, சந்தோஷக் களைப்புடன் அன்று தான் அணிந்த புத்தம் புதிய இளம் பச்சை ஷேர்ட்டுடன், அதற்கு மட்சிங்காக என் முதல் கிடைத்த சம்பளத்தில் வாங்கிய டையையும் கழற்றாமல் 138ஆம் இலக்க பஸ்ஸில் வந்திறங்கி அப்போது நம் இருந்த வீட்டுக்கு வழியான மயூரா பிளேஸ் ஊடாக நடந்து வரும்போது மனதெல்லாம் ஒரு நிம்மதி, பெருமிதம்; அத்துடன் இன்னும் செல்லும் பாதை நீளமாக ...
பத்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் மும்முரமாக டெஸ்ட் போட்டிகள் விளையாடி வந்த வேளையில் ஒரு கிரிக்கெட் பதிவு கூட என்னிடம் இருந்து இலையே என்று உங்களில் எத்தனை பேர் ஆச்சரியப்பட்டீர்களோ? அது தான் வாழ்க்கை போலும்.. எழுதவேண்டும் என்று யோசிப்பேன் ஆனால் ஏதாவது ஒரு வேலை.. அல்லது அலுப்பு.. மற்றும் அதிகரித்த கிரிக்கெட்.. இந்த இரு மாத காலங்களில் கிரிக்கெட் உலகை அவதானித்தால் சில முக்கிய விடயங்கள் ...
நடிகர் கலைஞானி கமல்ஹாசனின் பிறந்தநாளுக்காக இட்ட பதிவின் தொடர்ச்சி இது... கமல் - இந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்கு (உங்களில் பலருக்கும் கூட இருக்கலாம்) மனதில் ஞாபகம் வரும் சில விஷயங்கள் - கலை, காதல், புதுமை, தேடல், அறிவுஜீவித்தனம், துணிச்சல், நாத்திகம், வெளிப்படை... இன்னும் பல பல... இவற்றுள் எல்லாமே வரம்புகள் மீறியவையாகவும், மரபுகள் தாண்டியவையாகவும், இதனால் சர்ச்சைக்குரியவையாகவும் ...
பதிவுலக பச்சிளம் பாலகன்... இருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்.. பாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா.. எங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத ...
எனது ஆதர்ச நாயகன்.. . எனது அபிமானத் திரை நாயகன்.. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு role modelகள், முன்மாதிரிகள் இருப்பார்களே.. எனக்கு அது போல இருக்கும் பல role modelகளில் சிறுவயது முதல் மாறாமல் ஆழப் பதிந்து தாக்கத்தை உருவாக்கிய ஒருவர் கமல்.(ஒவ்வொரு துறைகளில் ஒரு பிடித்தவர் இருப்பாரே அதைச் சொன்னேன்.. அவர்கள் என் மானசீக வழிகாட்டிகள்/குருக்கள்) எனக்கு(ம்) பிடித்த கமலுக்கு இனிய பிறந்த நாள் ...
சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தினால் ஒவ்வொரு மாதத்தின் முழு நோன்மதி (பூரணை) தினத்தில் பாடிப்பறை என்ற பெயரில் ஒரு கவியரங்கம் + கலந்துரையாடல் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.(பாடிப்பறை என்ற பெயரை முதல் தரம் கேட்டதில் இருந்து ஒரு ஈர்ப்பு + ரசனை. அழகான தமிழ்ப் பெயரில் தமிழை அழகாகத் தரும் நிகழ்வு என்றால் கேட்கவும் வேண்டுமா) எமது சமூக வாழ்வோடும், தமிழோடும் இணைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதத்திலும் ...
படத்துக்கான கதையை முடிவு செய்தபோது ஆரம்பித்த பரபரப்பு, விளம்பரங்கள், ஏக பில்ட் அப்புகள் வெளிவந்த பின்னரும் இந்தப் பதிவை எழுதும் வரைய தொடர்கின்றன. A.R.முருகதாஸ் என்ற அற்புதமான திரைக்கதை சிற்பியை, ரசிக்கக் கூடியதாக மசாலாக் கதைகளை விறுவிறுப்பாக த் தந்த திறமையான இயக்குனர் என்று A.R.முருகதாஸ் மீது ஒரு தனி விருப்பம் + நம்பிக்கை இருந்தது. தமிழில் இருந்து அகில இந்தியாவுக்கு அவர் செல்லக் காரணமாக அமைந்த ...
நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :) எனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது?? மங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்.. ஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது. ...
அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராந்த நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார்கள். நான் எடுத்துக் கொண்டு உரையாற்றிய தலைப்பு - நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள். கட்டுரை வடிவில் அந்த உரையை இங்கே பதிவிட முடியாமல் இருந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிவடிவில் தரவேற்றியுள்ளேன். கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள், ...
மயக்கம் என்ன பாடல்களைக் கேட்ட முதலாவதாக மனதில் தோன்றிய எண்ணம் - இதென்ன இழவெடுத்து ஒப்பாரி பாடி இருக்கிறாங்கள்.. அப்போது கேட்ட பாடல்கள் மூன்று.. ஹரிஷ் ராகவேந்திரா பாடும் - என்னென்ன செய்தோம்.. ஒரு தோத்திரம் மாதிரி மற்றும் சகோதரர்கள் பாடியுள்ள ஓட ஓட & காதல் என் காதல்.... உடனடியாக Twitterஇல் நான் இட்டது - தனுஷும் அவரின் அண்ணன் செல்வராகவனும் பாடிப் படுத்தி எடுக்கிறாங்கள். ஏண்டா நீங்க இப்படி? ...
நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல். இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாரா
எனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.. வானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்.. அதிகமாக சினிமா இசை தான்.. அந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள
எங்கேயும் எப்போதும் படம் அண்மையில் வெளிவந்த புதிய திரைப்படங்களில் மிக அருமை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் திரைக்கதை அசத்தல் என்றும் அறிந்திருப்பீர்கள்... ஆனால் அருமையான அந்தப் படம் பார்த்தும், மனம் உருகி, படத்தால் பாதிக்கப்பட்டும் கூட, விமர்சனப் பதிவு போட முடியாமல் நேரம் இடம் கொடுக்