நேற்றைய ஏப்ரல் முட்டாள் தினத்தன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய விஷயங்கள்.. ஆனால் நேற்றைய விடுமுறை நாள் வீட்டில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நாளாக மாறிப்போனதால் ஒரு நாள் தாமதமாக இந்த இடுகை.. அதனால் என்ன.. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி எனது இந்த இடுகை உங்களுக்கு ஞாபகம் வரட்டும்.. அதேபோல எனது வழமையான இடுகைகளை விட இந்த இடுகையில் ஒரு விசேடமும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமும் ...
கொஞ்சக் காலமாக எந்த ஒரு இடுகையும் இடவில்லை; அதைவிட அதிக காலமாக கிரிக்கெட் இடுகைகள் இடவில்லை. ஏன் என்று என்னையே நான் கேட்டுப் பார்த்தேன்.. பிசி? ம்ம் கொஞ்சம்... அலுப்பு.. ம்ம் அதுவும் தான்.. என்னத்தை எழுதி என்னத்தை.. அதான் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் போட்டிகள் நடந்திட்டே இருக்கே.. சச்சினின் சதத்தில் சதங்கள்.. ராகுல் டிராவிடின் ஓய்வு.. விராட் கொஹ்லி, வெர்னம் பிலாண்டர் ஆகியோரின் அமோக ஆட்டங்கள், ...
மற்றும் ஒரு ட்விட்டடொயிங் - Twitter Log பெப்ரவரி மாதத்தின் எனது ட்வீட்களின் தொகுப்பு.. ஜெனீவா செய்திகள், சுஜாதாவின் நினைவுகளுக்காக அந்நியன், சூர்யாவின் not so impressive #NVOK #Monday night 9:47 PM - 27 Feb 12 via Twitter for iPhone அட.. வானம் ஒரு பக்கமா இருட்டிக்கொண்டு வருதே.. 3 மணி ஆர்ப்பாட்டம் அம்போதானா? ;) தமிழரின் கண்ணீர் மழையாக வருதோ? #Nostalgia 2:27 PM - 27 Feb 12 via web இருக்கும் ...
மிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை. வீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது. தரமான, வித்தியாசமான படங்களை தயாரிப்பதில் மற்றவரை ஊக்குவித்து, தானும் பங்கேற்று வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் தடவையாக இயக்கியுள்ள படம். கதை, திரைக்கதை, ...
இதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி.... இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது. இந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ஐக்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான ...
இலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா. இலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன. 80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் ...
மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்பில் இறுதிக் காட்சி. உங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்.. ஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது எழுதவேண்டும். 'மெரீனா' நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு படம்.. 'பசங்க' பாண்டிராஜ், சின்னத்திரையில் மனம் கவர்ந்த சிவ கார்த்திகேயன், பட ...
முற்குறிப்பு - கூகிள் திடீரென எனது வலைப்பதிவுகளை சுருட்டி இரு நாள் ஒளித்து வைத்ததனால் பதறிப்போனேன். என்னுடன் சேர்ந்து தேடிய, கவலைப்பட்டு விசாரித்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள். காணாமல் போன பொக்கிஷம் மீண்டும் வந்த மகிழ்ச்சியோடு, நேற்று வந்திருக்க வேண்டிய இடுகை இன்று.. காதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்... மனது முழுக்கக் காதல் இருக்கையில் எல்லா நாளும் எங்களுக்கு காதலர் ...
2012ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து ஜனவரி மாதம் முடிந்த வரையிலான எனது ட்வீட்களில் தெரிவு செய்யப்பட்டவை.. நான் இதுவரை பார்த்த உலகின் மிகச் சிறந்த காதலர்களின் 34வது திருமணப்பூர்த்தி ஆண்டு நிறைவு இன்று.. வாழ்த்துக்கள் அப்பா & அம்மா 9:48 AM - 31 Jan 12 via web · பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. நினைவெல்லாம் நித்யா.. சிறுவயது முதல் இன்று வரை என் evergreen Favorite. SPB + IR + VM ...
சில படங்களை முதல் நாள்/ முதல் வாரத்தில் பார்க்கத் தவறிவிட்டால் ஒன்றில் மிகத் தாமதமாகப் பார்ப்பேன்; அல்லது பார்க்காமலே தவறிவிடுவேன். வேட்டை பார்க்கும் வாய்ப்பு வெள்ளிக்கிழமை தான் இறுதியாகக் கிடைத்தது.. லிங்குசாமியின் ரன், ஆனந்தம், சண்டைக்கோழி, பையா நான்குதிரைப்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் பிடித்தே இருந்தவை.. தோல்வியுற்ற மற்ற ஜி, பீமா இரண்டும் கூட திரைக்கதை, இயக்கம் என்ற சில அம்சங்களுக்காக ...
சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.. இப்போதெல்லாம் மனதில் எழும் விஷயங்களை சுருக்கமாக சுருக்கென்று Twitterஇல் சொல்லிவிடக் கூடியதாக இருக்கிறது.. இதனால் தான் பதிவு இடல் குறைந்ததோ என்று யாரும் கேட்கக் கூடாது. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடுகைக்காகக் குறைந்தது இரு மணிநேரம் செலவழிக்க நேரம் வாய்ப்பது அபூர்வமாகிவிட்டது...கிடைக்கும் நேரத்தில் சேர்த்து வைத்து ஒட்டுமொத்தமாக Facebook, Twitter, ...
மீண்டும் ஒரு ட்விட்டடொயிங் - Twitter Log :) கடந்து போன வருடத்தின் காலச் சுவடுகளை மீண்டும் மீட்ட 2011ஆம் வருடத்தின் இறுதி நாள் வரையான என் ட்விட்டர், பேஸ்புக் பகிர்வுகளைத் தொகுத்திருக்கிறேன்... கலவை உணர்வுகளும் கலாய்ப்புக்களும் கலந்து வருவதை உங்களில் பலர் முதலிலேயே வாசித்திருக்கலாம்.. உங்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் கூட இருந்திருக்கலாம்.சும்மா வாசியுங்களேன்.. :) பிறக்கும் புது ...
முதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்.. எந்திரன், மங்காத்தா ...
கடந்த வருடம் ஐ போன் - Iphone 4 பயன்படுத்த ஆரம்பித்த நாளில் இருந்து பிடித்துக் கொண்ட/ பீடித்துக் கொண்ட ஒரு புதிய பொழுதுபோக்கு இந்த Instagram. புகைப்படக் கலையில் முன்பிருந்தே ஆர்வம் இருந்தாலும், எனக்கு அதன் நுணுக்கங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.. கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்ததில்லை; ஆனால் எதோ நம்மிடம் உள்ள டப்பா கமெராக்களால் எனது மூஞ்சியை எடுத்த இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் ...
நேற்றைய நாள் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இந்த ஆண்டின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே நான் ஆதரிக்கும் அணிகளுக்கு வெற்றியாக முடிந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம். முதலில் ஆஸ்திரேலியா இந்தியாவை உருட்டித் தள்ளியது. அடுத்து இலங்கை தென் ஆபிரிக்காவை சுருட்டி எடுத்தது. இரண்டுமே ஒரு நாள் மீதம் இருக்கப் பெற்ற வெற்றிகள். நேற்று இலங்கைக்கு தென் ...
சில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மித்திச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்.. ராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு. அழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்.. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் ...
ஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த.. அது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் ...
எங்களில் அனேகரது சின்ன வயது ஹீரோ.. ஆங்கிலம் சரியாக வாசிக்க வராத காலத்திலேயே ஒட்ட வெட்டிய தலை முடியில் ஒரு கற்றை முடி மட்டும் குத்திட்டு நிற்க அப்போதே எமக்கு spike முடியலங்காரத்தை அறிமுகப்படுத்தியிருந்தவர் தன் செல்ல நாயுடன் பல்வேறு துப்பறியும் சாகசங்களில் ஈடுபட்ட டின்டின். அப்போது அம்மா தன் அலுவலகத்தின் நூலகத்திலிருந்து கொண்டுவரும் Adventures of Tintin, Asterix and Obelix படக் கதைகள் தான் பல ...
எதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது; சுவையே இல்லாதது. ஆனால் நண்பர்களே இல்லாத, எதிரிகள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்... ஒரே கொலைவெறியாக இல்லை? எதிரிகள் எப்போதுமே எங்களை மேலும் மேலும் போராட செய்கிறார்கள்; ஓய்வாக இருக்க விடாது தொடர்ந்து சிந்திக்க, செயற்பட செய்கிறார்கள்.. ஆனால் இதே எதிரிகள் தான் எங்கள் நிம்மதியையும் பல நேரங்களில் கெடுத்துவிடுகிறார்கள். உங்களுக்கு எதிரிகளே ...
மீண்டும் ஒரு ட்விட்டடொயிங் - Twitter Log கடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு. பீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்.... இந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..அந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கணங்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் ...