தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே சுவைக்கும் ஒருவருக்கு இடையே ஒரு தோல்வி கிடைத்தால் தான் தன்னிலையை உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் அடுத்த தோல்வியைத் தவிர்க்க உதவுவதாகவும் இருக்கும். தோதான பாத்திரங்களாலும், கொஞ்சம் அதிர்ஷ்டத்தினாலும் தொடர்ச்சியாக வெற்றியையும் நல்ல பெயரையும் பெற்று வந்த கார்த்திக்கு முதலாவது பெரிய சறுக்கலாக, திருஷ்டி கழிக்க வந்துள்ளது சகுனி. நான் எங்கள் ஒலிபரப்பாளர்கள் ...
பாகிஸ்தான் அணியை இலங்கை காலியில் துவைத்தெடுத்து ஒரு பக்கம்; விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பம் ஒரு பக்கம் என்று நேற்றைய நாள் அமோகமாக இருக்க, கால்பந்தாட்டப் பக்கம் அமைதியாக இருக்கிறது. ஆனால் இன்று முக்கியமான இறுதிக்கட்ட மூன்று போட்டிகளில் முதலாவது போட்டியோடு அமைதி கிழிந்து மீண்டும் கால்பந்தாட்ட ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கிறது. விக்கிரமாதித்தன் கால்பந்தாட்டப் போட்டிகளில் என்னுடன் ...
இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட். ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும். (விக்கிரமாதித்தன் இங்கே ...
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது. அணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் ...
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்.. ஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள். ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர் A பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன. ...
ஒன்று இரண்டு அல்ல, மூன்று முக்கிய விளையாட்டுக்கள் மையம் கொண்டுள்ள ஒரு காலப் பகுதி இது. ஒரு பக்கம் கிரிக்கெட்டில் இலங்கை - பாகிஸ்தான், மறுபக்கம் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள்... டென்னிசில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன.. நாளை உலகக் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் சர்வதேசரீதியில் முக்கியமானதாகக் கருதப்படும் கால்பந்துத் தொடர் ஒன்று ஐரோப்பாவில் ...
ஹர்ஷு "எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்.." சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ...
மீண்டும் ஒரு ஒலிப் பதிவு.. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது. காரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது. இரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் ...
சிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ் வில்லர் இவர்கள் எல்லாரும் எனக்கான கற்பனை உலகத்தின் நாயகர்கள்.. ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத காலத்தில் இவர்கள் கொமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக தமிழ் ...
மீண்டும் ஒரு IPL காலம்..... எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன. Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன.. விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை.... இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது... இதோ ரிப்பீட்டு... பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, ...
பற்றிய ஒலி வடிவ இடுகை ஒரு வாரத்துக்கு முந்திய வாரம் இட்டிருந்தேன்.. இதுவரை IPL 2012 - ஒலி இடுகை நல்ல வரவேற்பும் இருந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியைத் தரமுடியாமல் நேர,கால சூழ்நிலைகள் சதிசெய்திருந்தன.. இதோ கடந்த வெள்ளிக்கிழமை Vettri FMஇன் V for வெற்றி V for விளையாட்டு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறப்புத் தொகுப்பு.. பகுதி 2 & 3 இல் ஏப்ரல் 27முதல் கடந்த வெள்ளிக்கிழமை ...
May 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்.. நாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை நீத்த உண்மையான ஊடகப் போராளிகளையும், உயிரைப் பற்றி அஞ்சாமல் இன்னமும் நேரடியாகும் மறைமுகமாகவும் எழுதிவரும், பேசி வரும் பல நேர்மையான ஊடகவியலாளரையும் நாம் ...
படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன.. எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள். கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்.. அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு ...
உண்மையில் Facebook மதிப்பு என்ன? இது எங்களுக்கு எப்படித் தெரியும் என்று யாருப்பா கேட்கிறது?? Wall Street ஆய்வாளர்கள் மற்றும் தொழிநுட்ப வலைப்பதிவாளர்கள், போன்றோர் இணைந்து Instagramஐ பேஸ்புக் இணையத்தளம் உரித்தாக்குவது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். சமீப காலங்களில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட மிகப்பெரிய கேள்வி,பேஸ்புக்கின் உண்மையான மதிப்பு என்ன என்பது தான். (ஏதோ நானே வாங்கப் ...
இவ்வருடத்துக்கான IPL போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் முன்னோட்டப் பதிவுகள் இட்டதன் பின்னர், ஆரம்பமாகிறது IPL 2012 ஐந்தாவது IPL ஐந்து அணிகள் பற்றி - IPL 2012 அலசல் 2 IPL பற்றி ட்விட்டரில் அலட்டி, அரட்டிக் கொள்வதுடன் ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 16 போட்டிகள், மே மாதம் 27ஆம் திகதிவரை நீடிக்கப் போகின்றன எனும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படுவதனால் இதைப் பற்றி இடுகைகளை இடும் ...
விடுமுறைகள் மலிந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது பெருமையான விஷயமா தெரியவில்லை; ஆனால் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. உடனே தொழில்துறை, ஆக்கபூர்வம், நாட்டின் மொத்த உற்பத்தி எப்படி இப்படி பெரிதாக சிந்தித்து என்னை ரொம்பப் பெரிசா எல்லாம் மாற்றிவிடாதீர்கள். இவ்வளவு விடுமுறை இருந்தும் நீண்ட விடுமுறைகளையோ, மற்றவர்கள் விடுமுறை அனுபவிக்கும் பண்டிகைக்கால ...
இரண்டரை மணித்தியாலம் இடைவிடாமல் சிரித்து (எதையும் பற்றி யோசிக்காமல்) படம் ஒன்றை ரசித்து எவ்வளவு காலம் ஆச்சு.. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது இந்த OKOK . இயக்குனர் ராஜேஷ் + சந்தானம்.. இவர்களின் இணைப்பில் ஹட் ட்ரிக் இது. சிவா மனசுல சக்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை.. ஆனால் கதையும் நகைச்சுவையும் சேர்ந்து கலக்கியது. அந்த வெற்றியையும் பெற்ற நல்ல பெயரையும் தக்கவைத்துக்கொள்ள கொஞ்சமே ...
மார்ச் மாதத்தின் எனது ட்வீட்களின் தொகுப்பு.. ட்விட்டடொயிங் - Twitter Log கிரிக்கெட் சம்பந்தமாக ஆங்கிலத்திலேயே அதிகளவில் அரட்டுவது வழக்கம் என்பதனால் அதையெல்லாம் என் ட்விட்டரைத் தொடர்ந்து அறிந்துகொள்க; அல்லது தொடராமல் கழன்று கொள்க. ;) முற்பகல் செய்ததெல்லாம் பிற்பகலில் விளைகிறது; எந்தவொரு தாக்கத்துக்கும் மறு,எதிர்த் தாக்கம் நிச்சயம் இருக்கிறது. #life #lesson #experience 3 Mar 12 via ...
நானும் அரசியல்வாதியாகிப் போனேனே என்பது தான் கவலை.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியல.. (பதிவுலக வாழ்க்கையில் இதென்ன புதுசா? ) ஆனாலும் என்ன முதல் போட்டி முடியிற நேரம் இடுகை வருதில்ல ;) இதோ IPL 2012 இன் அணிகளின் அலசல் பகுதி 2 முதல் பாகத்தை வாசிப்பதற்கு இங்கே சொடுக்குக..அல்லது கீழே உள்ள சுட்டி வழி செல்க.. ஆரம்பமாகிறது IPL 2012 கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இல் எப்போதுமே பரபரப்பான அணியாக ...
2012ஆம் ஆண்டுக்கான IPL இதோ நாளை ஆரம்பமாகிறது. இன்று இரவு இடம்பெற்ற கோலாகல ஆரம்ப விழாவுடன்... எவ்வளவு தான் திட்டினாலும், விமர்சித்தாலும், ராமராஜன், விஜயகாந்த், S.J.சூர்யா, சிம்பு படங்களைப் பார்க்காமல் இருக்கமாட்டோமோ (இன்னொரு மூன்றெழுத்து ஹீரோவை விட்டதை யாரோ சுட்டிக்காட்டுறது தெரியுது) அதேபோல இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணைகளையும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தாய் நாட்டுக்கான ...