சிம்பு ரசிகரா நீங்கள்? நடனம், குத்து, இடைவிடாமல் காட்சிக்கொரு பாடல், படம் முழுக்கத் தூவி விடப்படும் கவர்ச்சி என்கிற பெயரிலான ஆபாசம், லண்டன் காட்சிகள் இதெல்லாம் பார்க்க விருப்பமா? அப்படியென்றால் 'போடா போடி' உங்களுக்கான படம்... பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.. கல்யாணம் பண்ணிய பிறகு இப்படித் தான் நடக்கவேண்டும்... குழந்தை பெறுவது இதற்காகத் தான்.. லண்டன் / வெளிநாட்டு தமிழர் வாழ்க்கை ...
ஊடக, இணையப் பேட்டிகளில் அடிக்கடி இயக்குனர் A.R.முருகதாசும், இளைய தளபதி விஜயும் "இது வழக்கத்திலிருந்து வித்தியாசம்; ஒரு முற்றிலும் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்... 'என்னத்த வித்தியாசமா' என்று ஆயாசப் பட்டவர்கள் ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். ஆனால் சொன்னது போலவே செய்து காட்டியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள். வழமையான தமிழ்க் ...
குடை - மழை - குளிர் காய்தல் இல்லாத நேரம் இருக்கிறதைத் தேடிப்பிடித்து கிடைக்கிறதைப் பெற்றுய்ந்து பாவம், புண்ணியம் துரோகம் பாராது அது மாறாது இது மாறாது என்பது.. மாற்றம் ஒன்றே மாறாதது இதுவே கடைசி - அன்று சொன்னது இன்று??? ஆழ் மனது அறிவிப்பது அப்படியே நடக்கிறது அவன் - இவன் அப்பிடித் தான் - இப்பிடித் தான் எல்லாம் அப்படியே தான்... மனதுகளை முகம் பார்த்தோ, முகங்கள் ...
இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம். ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஓட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் ...
உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்.... கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே என்று கேட்டு ...
இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்) அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty ...
அரையிறுதிகளுக்கு மூன்று அணிகள் தெரிவாகியுள்ளன. அரையிறுதிகளுக்குத் தெரிவான முதல் அணியாக நேற்று இலங்கை மூன்று வெற்றிகளுடன் பள்ளேக்கலையிலிருந்து கொழும்பு வருகிறது. இலங்கையின் லசித் மாலிங்க சுருட்டிய ஐந்து விக்கெட்டுக்களால் நடப்புச் சாம்பியன்கள் இங்கிலாந்து அரையிறுதியே காணாமல் வெளியேறி, தொடர்ச்சியாக ஒரு அணி இரு உலக T20 கிண்ணங்களைத் தொடர்ச்சியாக வென்றதில்லை என்பது மீண்டும் நியதியாகி உள்ளது. ...
இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விறுவிறு போட்டி... ஒரு தீவுக்குள்ளே ஒரு தீவுடன், பல தீவுகள் சேர்ந்த கூட்டணியின் மோதல் இன்றைய இரவின் சுவாரஸ்ய மோதல். இரண்டு அணிகளுமே இம்முறை ICC உலக Twenty 20 வெல்வதற்கான பெரிய வாய்ப்புடைய அணிகள். இரண்டுமே மந்திரவாதிகள் என்று சொல்லப்படும் சுழல்பந்துவீச்சாளர்களையும், ...
27 போட்டிகள் கொண்ட உலக T20 கிண்ணத்தின் பன்னிரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்று பிற்பகல் முதல் Super 8 சுற்று ஆரம்பிக்கிறது. இதிலும் பன்னிரண்டு போட்டிகள். ஆனால் இரு பிரிவுகள்... இந்தப் போட்டிகள் பற்றியும், நடந்து முடிந்த முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாக தமிழ் மிரரில் எழுதியுள்ளேன். 'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் ...
இந்தியாவின் அண்மைக்கால நம்பிக்கை விராட் கோஹ்லி... இவர் அடித்தால் தான் இந்தியா ஜெயிக்கும் என்ற நிலை. தனது சிறப்பான, தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகள், அணிக்கான அர்ப்பணிப்பு என்பவற்றால் நிரந்தர இடத்தை மூன்று வகை கிரிக்கெட் அணிகளிலும் (டெஸ்ட், ODI, T20) பெற்றுக் கொண்டதோடு அணியின் உப தலைவராகவும் உயர்ந்திருக்கிறார். அண்மையில் ICC விருதுகளில் கடந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் வீரருக்கான ...
நேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது. இலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை. அஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த ...
19 நாள் திருவிழா.. பரபரப்புக்குக் குறைவில்லை. ESPN-STAR ஒளிபரப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி இம்முறை நடைபெறும் இத்தொடரானது ஒளிபரப்பு, பார்வையாளர் சாதனைகளைஎல்லாம் முரியடித்துவிடுமாம். ஆமாம் நாளை ஆரம்பமாகவுள்ள ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் பற்றித் தான் சொல்கிறேன். SLPL வணிகரீதியில் வெற்றியைத் தந்த பின்னர் இன்னுமொரு வசூல் வெற்றியைத் ...
மு - முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரசின் முடிவு என்ன என்ன என்று எதிர்பார்த்தே மூன்று நாட்கள் கசிந்துள்ள நிலையில்.. கடன்காரர்களை நேரடியாக சந்திக்காமல் வீட்டில் மனைவி, பிள்ளைகளை அனுப்பி "அவர் வீட்டில் இல்லை" என்று அனுப்பும் குடும்பத் தலைவர் போல இரவும் ஹக்கீமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டிருக்கும் நிலையை இன்று மாலையில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதில் ஸ்ரீ.ல.மு.கா வை தமிழ்த் ...
இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாகாண சபைத் தேர்தல்கள்.. இதிலே தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைவான வடமத்திய மாகாணத்தை விட்டுவிடலாம்.. ஆளும் கட்சி நிச்சயம் வெல்லப் போகின்ற ஒரே மாகாணம் இதுவாகத் தான் இருக்கும். யாருக்கு வாக்களிப்பது? எப்படிப்பட்டவரைத் தெரிவு செய்வது? யாரோ சொல்லி எப்பவோ கேட்டது - வேட்பாளர் தெரிவும் வாக்குத் தெரிவும் காதல் போன்றது என்று.. நாம் தெரிவு/முடிவு செய்தபிறகு ...
முன்பொரு நாள் விடியலில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா பற்றி பேசும்போது 'எம் எல்லோருக்குமே.. மூன்றாம் உலக நாட்டவருக்கு முக்கியமாக, அமெரிக்கா ஒரு கனவு தேசம்' என்று வர்ணித்திருந்தேன். காரணம் அவர்களின் முயற்சியும் வளர்ச்சியும். 1776ஆம் ஆண்டு எந்த பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றார்களோ அவர்களையே இன்று தம் சொல் கேட்க வைத்திருக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியும், ...
"எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே!ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே!" இது வைரமுத்து படையப்பாவுக்காக எழுதிய பாடல் வரிகள்.. இது சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமல்ல எம்மைப் போல சாதாரணர்களுக்கும் பொருத்தமே. எமக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு அசாதாரண சக்தி அபரிதமாக வெளிப்படுவதற்கு ஒரு காலமும், அதற்கான களமும் அமையவேண்டும். தூண்டல்களும், சரியான ...
தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன ...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி. ...
அண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும். எதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால். எப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ...
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு.... ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனி என்று எதிர்வு கூறியிருந்த நான் உட்பட ஏராளமானோருக்கு விக்கிரமாதித்தன் மாபெரும் அதிர்ச்சியை இத்தாலியின் மரியோ பலோடேல்லி கொடுத்திருந்தார். ஜெர்மனியின் வெளியேற்றம் ஒரு மிக வித்தியாசமான இறுதிப் போட்டியைக் கொடுத்துள்ளது. இதுவரை முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டிகள் எவற்றிலும் ஒன்றையொன்று சந்தித்திராத இரு அணிகள் ...