இராஜகாந்தன் கவிதைகள் – 5 நீ சிரித்தால் சின்னதாய் நீ சிரித்தால்சிறு பூக்கள் உன்னழகு.நாணத்தில் நீ சிவந்தால்தீயிலே பொன்னழகு.கிசுகிசுத்து நீ கதைத்தால்தென்றல் காற்றுன்னழகு.அமைதியாய் நீ நடந்தால்அசைந்துவரும் தேரழகு.கால் கொலுசாய் நீ சிரித்தால்கவிதை சொல்லும் உன்னழகுகடலலையாய் நீ சிரித்தால்அப்போதும் பேரழகு.அள்ளிமுடிந்து கொண்டை போட்டால்அது உனக்குத்தான் தனியழகு.பள்ளிச் சிறுமி போலபதறும் பேரழகு. துள்ளி விழுந்து கோபங்கொண்டால் கோடி பெறும் உன்னழகு. வெள்ளி வரும் கிழமைகளில் – நீ ஒப்பில்லா ஓரழகு வெண்ணிலாப் பேரழகு. ...

Previous Page