இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை குவித்துள்ளது. கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பித்த இந்தப்போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சவால் கொடுத்த பங்களாதேஷ் இலங்கை அணி திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத ...
T20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் KL ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் 14ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இம்முறை போட்டிகளில் அந்த அணி ஹெட்ரிக் தோல்வியை சநதித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப்
இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டன் திடீரென ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். நீண்ட நாட்கள் பயோ–பபுள் என்றழைக்கப்படுகின்ற பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து உளவியல் ரீதியாக தான் சோர்வடைந்;துள்ளதாக தெரிவித்திருந்த லியாம் லிவிங்ஸ்டனை ஐ.பி.எல் போட்டியிலிருந்து விடுவிக்கப்பதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இதன்படி, 27 வயதான லியாம் லிவிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கனின் போட்டிக்கட்டணத்தில் 12 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. குறித்த இந்தப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 20 ஓவர்களை வீசத்தவறிய குற்றச்சாட்டு காரணமாக இயன் மோர்கனுக்கு 12 இலட்சம் அபராத தொகையாக அ
ஆட்டநிர்ணய சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான காதிர் அஹமட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐந்து வருட (ICC) போட்டித்தடையினை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை கடந்த 2019ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடருடன் சேர்த்து, பல இடங்களில் ஆட்டநிர்ணய சர்ச்சைகளில் சிக்கிய காதிர் அஹமட்டிற்கு, ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு கிரிக்கெட் சார்ந்த விடயங்கள் எதிலும் பங்கேற்ற ஐந்து வருடத் தடையினை வழங்கியிருக்கின
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 100 விளையாட்டு வீரர்களை அடுத்த ஆண்டு முதல் தொழில்சார் ஒப்பந்தங்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்