ப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கடந்த 2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது. >>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர் 3 வருடகால ஒப்பந்த அடிப்பட
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜூலை மாத பகுதியில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Read : முழுமையாக டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அதன்படி, குறித்த தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி ஜூன் 15ஆம் திகதி இங்கிலாந்தை அடையவுள்ளது.
இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 1359 நாட்களின் பின் ANFIELD இல் முடிவுக்கு வந்த லிவெர்பூலின் வெற்றி நடை, சம்பியன்ஸ் கிண்ணத்தை தவறவிருக்கும் KEVIN DE BRUYN, FA கிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் PSGக்கான 100ஆவது போட்டியில் ஆடிய நெய்மார் போன்ற தகவல்களை பார்ப்போம். The post Video – ANFIELD இல் முடிந்தது LIVERPOOL இன் இராச்சியம் | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருக்கும் இருதரப்பு தொடரில் இலங்கை அணியின் புதிய முகாமையாளராக ஜேரோமி ஜெயரட்ன நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்டு வந்த அசன்த டி மெல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை அடுத்து சொந்தக் காரணங்கள் கருதி முகாமையாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அசன்த டி மெல்லின் இடத்தினை நிரப்பும் நோக்கிலேயே தற்போது பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இந்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும், நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்வதற்கு தீர்மானித்தாக அதன் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம் அத்துடன், கடந்த காலங்களை விட ...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட் மேலும், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி இப்போட்டியின் வெற்றியுடன் சேர்த்து தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த நிலையில