நிச்சயமாக Samsung மற்றும் Android விசிறிகளுக்கு Samsung Galaxy S7 மற்றும் S7 edge இன் வெளியீடு பெரும் கிளுகிளுப்பைக் கொடுத்து இருக்கும். என்னதான் இருந்தாலும் S6 மற்றும் S6 edge போல தான் இதுவும் உலோக உடலுடனும் விலையுயர்ந்த கண்ணாடியுடனும் வந்துள்ளது. ஆனாலும் S6 இல் இருந்து Samsung தூக்கிய இரு முக்கிய அம்சங்கள் மீண்டும் வந்துள்ளது. Micro SD card slot நீரிற்கு தாக்குப்பிடித்தல் சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பது போல, Apple ஐ போல தானும் ...
5 வருடங்களுக்கு முன்னர், பெரும்பாலும் முதலீட்டாளர்களும் வங்கிகளுமே யாழ் மண்ணை நோக்கிவந்தன. ஆனால், அம்மண்ணில் வாழும் இளம் சமூத்தினரிடம் காணப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆற்றல் வௌிப்படுத்தபட வேண்டும், யாழ் மண் இன்னொரு சிலிக்கன் பள்ளதாக்காக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்ப்பிக்கப்பட்டு யாழ் மண்ணை நோக்கிய முதல் காலடியை வைத்தது Yarl IT Hub. எந்த இலாப நோக்கமுமின்றி இளம் தலைமுறையினரிடையே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அவர்களிடம் அத்துறையில் காணப்படும் படைப்பாற்றலுக்கான ஒரு மேடையா
Mobile World Congress ஒன்றும் CES அளவிற்கு மிகப்பெரியதாக நடக்காவிடினும், சில கண்ணைக்கவரும் அறிமுகங்கள் இருக்கத் தான் செய்தன. 1. Samsung Galaxy S7 மற்றும் S7 edge Samsung இன் தலைமைப் படைப்பான S7 மற்றும் edge இம்முறை அனைத்து பார்வையாளர்களையுமே தன் பக்கம் இழுப்பதற்கு தவறவில்லை. அதன் கணக்கச்சிதமான உலோக உடலும் துல்லியத் திரையும் அதற்குத் தனி அந்தஸ்த்தைத் தருகிறது. அதுமட்டுமா, இதன் வேகமும் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரிற்கு தாக்குப்பிடிக்கும் திறனும் S6 இற்கு முன்னைய கருவிகள் போல microSD ...
உங்கள் கைபேசியை தொடாமலே மொபைல் பண செலுத்துகைகளை மேற்கொள்ளவென கூகுள் தனது புதிய பரிசோதனைக்குள்ளாகும் மொபைல் செலுத்துகை சேவையை ஆரம்பித்துள்ளது. Bay Area இல் உள்ள சில விற்பனைக்கூடங்களில் தமது Hands Free பயன்பாட்டை பரிசோதனை செய்து வருகின்றது. இப்பயன்பாடானது குரல் கட்டளைகளை வைத்துக்கொண்டே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கின்றது. வழமையாக Android Pay மற்றும் Apple Pay போன்ற “தொட்டு செலுத்துங்கள்” தளங்களுக்காக பாவிக்கப்படும் Near Field Communication (NFC) chip ஐ பயன்படுத்தாமல் Bluetooth, Wi-Fi மற்றும
வளர்ந்து வரும் புதிய Startupsகளுடன் கைகோர்த்து அவற்றை மேலும் வளர்க்க 1 மில்லியன் டொலர் முதலீட்டை வழங்கும் நிறுவனமே Seedstars. இது சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் என்ற போதிலும் உலகளாவிய ரீதியில் சுமார் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் இலங்கையில் புதிய startups ஐ கண்டறிந்து அவற்றிக்கு முதலீடு வழங்கவென இந்த வருடமும் Seedstar Colombo 2017ஆகா வருகிறது. Seedstar கொழும்பு 2016 மீதான மீள்பார்வை Startup Sri Lankaவின் ஏற்பாட்டில் ICTA மற்றும் MAS இன் உதவியுடன் 2016 ...
Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...
புதிது புதிதாக தொழில்நுட்பம் வளர்ந்து செல்லும் அதே நேரம், நமக்கு தெரியாமல் பல தொழில்நுட்ப சாதனங்கள் நம் மத்தியில் உலா வருவது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தொழில்நுட்ப ஊடகம் என்ற வகையில் எமது மத்தியில் இருக்கும் சில சிறந்த, பலரும் அறியாத, சாதனங்களை மக்களிடம் கொண்டு வருவது எமது கடமையாகும். அந்த வகையில் இந்த பதிவானது 1௦ ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இலங்கையில் பெறக் கூடிய சில அருமையான கேஜெட்களை பற்றியதாகும். சாம்சுங் AFC பட்டெரி பாக் (EB-PN920) சாம்சுங்க்கான பவர் பேங்க் உடன் எமது ...
என்னதான் இந்தியா Facebook Free Basics இற்கு தன் கதவுகளை இழுத்து மூடினாலும் மற்றைய முன்னேற்றமடையும் நாடுகளில் எப்படியும் இதை கொண்டு வருவோம் என்று Facebook இன் CEO மார்க் ஸுகெர்பெர்க் உறுதியாக கடந்த 21ஆம் திகதி நடந்த Mobile World Congress இல் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் facebook free basics அவர்களுடைய internet.org இல் ஒரு பகுதி மட்டுமேயாகும் எனவும், மற்றைய ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார். Facebook இன் அறிக்கைப்படி சுமார் 4.1 பில்லியன் மக்களுக்கு இந்த உலகில் ...
ஒரு காலத்தில் Swiss கைக்கடிகாரங்களை வைத்திருப்பதென்பதே தனி கெத்து. ஆனால் அது 2015 உடன் மாறிவிட்டது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் சுமார் 7.9 மில்லியன் Swiss கைக்கடிகாரங்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் அதை உடைத்துத் தள்ளிக் கொண்டு 8.1 மில்லியன் Smart கைக்கடிகாரங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 2014 Q4 அறிக்கைகளின் படி வெறும் 1.4 மில்லியன் Smart கைக்கடிகாரங்கள் மட்டுமே ஏற்றுமதியாகின. ஆனால், 2015 Q4 இல் Smart கைக்கடிகாரங்களின் விற்பனை 316% அதிகரித்து உள்ளது. அதுவும் Apple மட்டுமே அதில் 63% சந்தைப்பங்கைக் கொண்டு ...
AppSpace ஆல் வடிவமைக்கப்பட்ட, hSenid Outsourcing ஆல் முன்னெடுக்கபட்ட ஒரு முயற்சியே FlipBeats எனப்படும் திறன்பேசி application ஆகும். பயனர் இலகுவில் பயன்படுத்தக்கூடிய இசைக்கான app அன இது, அப்பிள் அப்ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் முதாலாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த app அனது தனித்துவமிக்கதும் (இல்லாவிடில் எப்படி தரப்படுத்தலில் முன்னனி வகிகமுடியும்?) ஸ்டூடியோவில் இருந்து கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் மேம்பட்ட ஆடியோ கட்டமைப்புடன் இது வடிவமைக்கபட்டுள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப
இந்த வாரயிறுதியில் அனைத்து Pokémonகளையும் பிடிக்கும் நோக்கினில் பல்லாயிரக்கணக்கான Pokémon இரசிகர்கள் காத்திருந்திருப்பர். ஆனால் பலர் ஏமாற்றத்திற்குள்ளாயிருந்தனர். சனிக்கிழமை மாலை பலர் Pokémonக்குள் உள்நுழையும் பிரச்சனைகளைக் கொண்டிருந்தனர், அது தொடர்பாக பலரும் அறிக்கையிட்டிருந்தனர்,மேலும் இது தொடர்பாக உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அறிக்கைகள் வௌிவந்து கொண்டிருந்தன. OurMine என தம்மை அழைத்துக்கொள்ளும் ஹக்கர் குழுவால் POKEMON GO உள்நுழையும் வழங்கிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சேவை மறுப்புத தாக்குதலின் விளைவாக பலர
இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட் போன் வர்த்தக நாமமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த Huawei P9 என்ற பிரதான ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்துவதற்காக இலங்கையின் மிகப் பாரிய தொலைதொடர்பாடல்கள் சேவை வழங்கல் நிறுவனமான டயலொக் Axiata உடன் பங்குடமையொன்றை அண்மையில் ஏற்படுத்தியுள்ளது. டயலொக் நிறுவனத்தின் தனித்துவமான டிஜிட்டல் அனுபவ மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையில் Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியா
ஒருவரின் பிறந்தநாளுக்கு பேஸ்புக்கில் அவரது பக்கத்திற்கு சென்று பதிவிடுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒன்றாக காணப்படுகிறது. அதை இன்னும் மெருகூட்டும் வகையில் நேற்றைய தினம் iOS இல் பேஸ்புக் தனது புதிய அம்சமான Birthday Cam ஐ ஸ்தாபித்துள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் நபரின் profile இல் காணப்படும் வீடியோ எடுக்கும் செய்தியானது உங்களை 15 செக்கன் வீடியோ ஒன்றை எடுக்க அனுமதிக்கும். அதை பதிவு செய்த பின்னர் அதற்கு தேவையான விசேட பிறந்தநாள் அமைப்புகளை பகிர முதல் சேர்த்துக்ககொள்ளலாம். கடந்த சில வருடங்களாக எல்லா இடத்திலும் ..
தற்போது மாற்றம் அடைந்துவரும் உலக பொருளாதாரத்தில் தொடக்கநிலை நிறுவனங்கள் (Startups) பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் கடந்த 3 வருடகாலமாக இலங்கையில் தொடக்கநிலை வணிகம் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள தொடக்கநிலை நிறுவனங்களின் சுற்றுசூழலை மையப்படுத்தி, அவர்களை ஒரு இடத்தில் ஒரு நிகழ்வில் சந்திக்கவைக்கவென ICTA (Information and Communication Technology Agency) ஆல் நடாத்தப்படும் மாபெரும் நிகழ்வு, Disrupt
இன்னொருவர் உங்களை வேவு பார்ப்பது யாருக்கும் பிடிக்காத விடையம் தான். ஆனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமே உங்களை வேவு பார்க்கிறது என்றால் எவ்வாறு நீங்கள் அதை கண்டுபிடிப்பீர்கள்? ஆனால் உங்கள் iPhone iOS 9.3 இல் இயங்குமானால், அது உங்களுக்குக் காட்டிக்கொடுக்கும். அண்மையில் வெளிவந்த iOS 9.3 Beta வை பயன்படுத்தியவர்களின் கூற்றுப்படி அது உங்கள் கையடக்கத்தொலைபேசியின் Lockscreen இலே தெட்டத்தெளிவாக notification கொடுக்குமாம். “This iPhone is managed by your organisation,” இப்படி கொட்டை எழுத்தில் தெரியும்.
எல்லா Apple கருவிகளின் பெயர்களுடனும் பெரும்பாலும் “i” என்ற எழுத்து தொத்திக்கொள்ளும். அந்த “i” என்ற எழுத்தைக் கொண்ட கருவிகளை வைத்திருப்பதே தனி பந்தாவாக மக்கள் நினைப்பது ஏன்? உண்மையாகவே 1998 இல் முதன் முதலாக ஸ்டீவ் ஜொப்ஸ் iMac ஐ அறிமுகப்படுத்தும் போது இதற்கான தனி விளக்கம் கொடுத்தார். அவர் கூறியது, iMac comes from the marriage of the excitement of the Internet with the simplicity of Macintosh மேலும் அவர் குறிப்பிட்டார், “மக்களிடம் தங்களுக்கு கணினி ...
யாழ் மண்ணை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக உருவாக்கும் நோக்கில் தொழிற்பட்டும் இலாப நோக்கமற்ற Yarl IT Hub நிறுவனம் எமது வாசகர்களுக்கு புதிதல்ல. கடந்த வாரம் அவர்களால் நடத்தப்படவுள்ள இவ்வருடத்திற்கான முதலாவது ஒன்றுகூடல் தொடர்பாக குறிப்பிட்டிருந்தோம். அச்செய்தியை அறிந்த மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஆர்வல்கள் மற்றும் சுயதொழிலாளர்கள் என பலர் இந்நிகழ்விற்காக பதிவு செய்து, நேற்றைய தினம் இடம் பெற்ற இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட புதிய முகங்களுக்காக நிகழ்வு ஒழுங்கமைப
உடற்பயிற்சி செய்யவும் சரி உடைகளை கழுவவும் சரி பலருக்கு நேரம் இருப்பதில்லை, ஏன்னெறால் ஒன்றிற்கு நேரம் இருந்தால் இன்னொன்றுக்கு நேரமிருப்பதில்லை. இது தீர்வி தருவதுபோல புதிதாக ஒரு அசையாத சைக்கிள் ஒன்று சீனாவின் டேலியந் தேசிய இனங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இந்த சைக்கிளை ஓடும்போது நீங்கள் மிதிப்பதால் அது உங்கள் சலவையிந்திரத்தை சுழல செய்யும்,” என இந்த சாதனத்திற்கு BWM என்று பெயரிட்டுள்ள மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “அதே நேரத்தில் மிதைமிஞ்சிய மின்சக்தி உற்பத்திச
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் பறக்கவிடப்பட்ட கூகுள் Loon பலூன் விழுந்துவிட்டது என்ற செய்தி காட்டுதீயை போல பரவியது குறிப்பிடத்தக்கது. அது பரிசோதனையின் ஒரு கட்டம் என ICTA குறிப்பிட்டிருந்த போதும் அவர்களது கருத்து ஏதோ மழுப்பல் என்று ஏளனமாகவே பலரது கருத்திருந்தது. ஆனால் ICTA கூறியது போல பலூன் உண்மையிலே தரையிறக்கப்பட்டது என்று இத்திட்டத்தின் தலைவரான Mike Cassidy முகுந்தன் கனகேக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். தரைக்கும் பலூனுக்கும் இடையிலான இனைத்தொடர்பை உறுதி செய்த பின்னர் இது வெற்றிகரமாக தரையிறக
கடந்த வருடம் “Dislike” பொத்தன் வரப்போவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். அந்த திட்டத்திற்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை அதுக்கு பதிலாக 6 உணர்வுகளை வௌிப்படுத்தும் பொத்தங்கள் இரண்டு தினத்திற்கு முதல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதில் “like” “love” “haha” “wow” “sad” மற்றும் “angry” உணர்வுகளை வெளிப்படுத்தம் பொத்தங்கள் உள்ளது. இதை நீங்கள் பார்க்கும் பதிவுகளுக்கு பயன்படுத்தலாம். அறிமுகம் செய்யப்பட்ட இந்த