“நகைகளைத் திருடும்வரை சிலைகள் என்ன செய்து கொண்டிருந்தனவாம்?” நண்பர் கேட்டார். அவர் ஒரு சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, படித்தவர் இறைவன் மேல் அளவு கடந்த பக்தியுடையவர். இந்தக் கேள்வி மூலம் நண்பர் எதனை நாடுகிறார் என்பது எனக்குத் தெரியாமலுமில்லை. இருப்பினும் இது பல விடயங்களை என்னுள் சிந்திக்க வைத்தது. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு நண்பர் “நம் பள்ளியில் தொழுகையாளிகளைச் சாய்க்கும்போதும் அல்லது நம் பள்ளிகள் தகர்க்கப்படும்போதும் நம் இறைவன் எங்கேயிருந்தான்?” என்று இன்னொரு சமூகத்தினன் கேள்வி எழுப்பும்போது எம்மால