இவன்தாண்டா Software என்ஜினியரு!
Vimalaharanஅவனுக்கு தலை கலைந்திருந்தது. மூஞ்சியை மூணு நாள் கழுவாத மாதிரி கண்கள் காய்ந்து போயிருந்தது. Armani டீ-சேர்ட் ஜீன்ஸ் போட்டு அரைவாசி இன் பண்ணியிருந்தான். டீ-சேர்ட் அவனுடைய கடைசி தம்பிக்குத்தான் சரியாக பொருந்தும் போல. அவனுக்கு கொஞ்சம் இறுக்கம்தான். ஜீன்ஸ் இரண்டு மூன்று இடங்களில் கிழிந்திருந்தது. பந்தடிக்கப்போற பயல் போடுற மாதிரி ஒரு அழுக்கு sports ஷு அவனது காலில் மாட்டப்பட்டிருந்தது. அவனுக்கு கிட்டே போனால் மூணு நாளைக்கு முன்னர் செத்த நாய்க்கு கிட்டே போன மாதிரி நாற்றம் வந்தது. இவ்வளவு விபரிப்புக்குமுரிய இந்த ...
போர்முலா!!
Vimalaharan"போர்முலாவை கண்டுபிடிச்சிட்டிங்களா" என்றான் சக்கரை. அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம்."இல்லை.. இன்னும் கொஞ்சம் சரிப்படுத்தணும்.. இண்டைக்கு எப்படியும் சரிவரும் எண்டு நினைக்கிறன்" என்றார் மூலவர். மூலவர் ஒரு டைப்பான விஞ்ஞானி.வீட்டுக்கு மூத்தவர் என்பதால் மூலவர் என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. சக்கரை அவருடைய மருமகன்."இது எப்படி சாத்தியம். மூணு வருசமா சோழர் காலத்துக்கு போறதுக்கு மெஷின் கண்டுபிடிக்கிறன் பேர்வழி என்று இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க""கொஞ்சம் விஞ்ஞானம்.. கொஞ்சம் சூனியம்.. கொஞ்சம் நம்பிக்கை போதும். இர
கடைசி இருபது நாட்கள்...!
Vimalaharan"58, 59, 60 அப்பாடா ஒருவழியாக அறுபது நாட்களை இந்த நாசமா போற தேசத்தில் கடத்தியாயிற்று" என்று எனக்கு நானே சந்தோசப்பட்டேன். இலங்கைக்கு திரும்ப இன்னும் இருபது நாட்களே இருந்தன. ஆனால் இப்போது துருவா இல்லை. அவனை இலங்கைக்கு அனுப்பி விட்டார்கள். கார் ஓடத்தெரிந்த புண்ணியவான் அவனும் இப்போது இல்லை. நானும் ஜோவும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். இப்போது Trainஇல்தான் Officeக்கு போக வேண்டிய துரதிஷ்டநிலை. இது பற்றாது என்று Officeஇலிருந்து அண்மையாக இருக்கும் Railway station சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. ஆகவே ஒவ்வொரு ...
யாழ் பயண கட்டுரை
Vimalaharanநானும் தனுஷனும் வெள்ளிக்கிழமை நாலரை மணிக்கே அலுவலகத்தினை விட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம். தனுஷன் சரியா நேரத்துக்கு நிற்பேன் என்று சத்தியம் செய்து விட்டு வெள்ளவத்தையில் இறங்கினார். ஏழு மணிக்கு யாழ்பாணத்துக்கு பஸ் வெளிக்கிடும் என்றார்கள். இரண்டு நாளைக்கு தேவையான துணிகளை ஒரு பயணப்பைக்குள் திணித்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அவசரஅவசரமாக இரவு சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டிருந்தபோது, போன் பாடல் இசைத்தது. வேற யாரு "மதுயிச" மதுதான் போன் பண்ணி பஸ்ஸுக்கு லேட்டாகிறது என்று சொல்லி கிலியை ஏற்படுத்தினார்
Yarl Geek Challenge : முதலாம் நாள் போட்டிகள்
Vimalaharanஅணித்தலைவர்கள்"அரியாலை தபால் பெட்டி சந்தி வந்தா சொல்லுங்கண்ணே.. நித்திரை தூங்கினாலும் பரவாயில்லை அடிச்சு எழுப்புங்க" என்று பஸ் நடத்துனரிடம் சொல்லிவைத்தேன். யாழ்ப்பாண பஸ்களில் இதுதான் பிரச்சனை. இரவு முழுக்க நித்திரை வராது. அதிகாலையில் சரியாக இறங்குவதற்கு முன்னர் ஒரு சூப்பர் நித்திரை வரும் பாருங்க.. "இடம் வந்திட்டுது" என்று யாராவது எழுப்பும்போது எழுப்பிற ஆளை போட்டுத்தள்ளிடலாமா என்று எண்ணம் வரும். "அரியாலை தபால் பெட்டி சந்தி இறக்கம்" என்று சத்தம். நானும் ப்ரீத்திராஜ் அண்ணாவும், நிரோஜனும் இறங்கினோம். நித்திரையி
ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்
Vimalaharanவருடம் 2005. மணி இரவு 2030. யன்னலை திறந்தாலும் காற்று வரமறுக்கின்ற, வழமைக்கு சற்றும் மாறாத வெக்கையான கொழும்பு இரவு. வெளியே பிரதான வீதியில் செல்லும் வாகனங்களின் ஒலிக்கு எனது மூளை இசைவாக்கமடைந்திருந்ததால் எதையுமே கண்டுகொள்ளாது java notesஐ பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஆங்கிலத்தில் இருக்கும் notesஐ தமிழ்ப்படுத்தி மூளையில் ஏற்றும் போராட்டத்தின் நடுவிலிருந்தேன். அப்போது வீட்டு calling bell அடித்தது. அது அண்ணாதான். அவன் calling bellஐ அடிக்கும்முறையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். வழமையாக பதினோரு மணிக்கு வே
Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்
Vimalaharanஇவங்கதான் Mentors..முதலாம் நாள் நிகழ்வுகள் நினைத்ததைவிட ஒருபடி மேலே போனதை போன்ற சந்தோசம் எல்லோருடைய முகத்திலும் இருந்தது. Smart Friends கடைப்பிடித்த புதுமையான requirements interview நாடகம் போன்ற presentation வழிமுறை எல்லோரையும் கவர்ந்திருந்தது. . எல்லா அணிகளும் Powerpoint presentationகளை பயன்படுத்தியபோது Arimaa அணியினர் Prezi என்ற Tool மூலமாக செய்த presentation அவர்களது வேகமான styleக்கு நன்றாக பொருந்தியிருந்தது. Zeros அணியினர் simulate செய்த ஆடு புலி ஆட்டம் அந்த விளையாட்டை பற்றி அறிந்திராதவர்களிடையேயும் ஆர்
Yarl Geek Challenge: Final போட்டிகள்
Vimalaharanஇப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள்கருமையான மேகங்கள் சூழ்ந்திருந்ததால் ஐந்தரை மணிக்கே நன்றாக இருட்டி விட்டிருந்தது. சுவாரசியமான மூன்றாம் நாள் ஒருவாறாக முடிவுக்கு வந்திருந்தது. எனினும் மூன்றாம் நாள் முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே வெளியேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மூன்று அணிகள்
Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்
Vimalaharanஇப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்சயந்தனிடம் சுட்ட படம்Yarl Geek Challengeஇன் இரண்டாம் நாள் முடிந்திருந்தது. இதுவரை நடைபெற்ற இரண்டு Roundகளும் நிறைய சந்தோசங்களையும் சிலருக்கும் ஏமாற்றத்தினை கொடுத்திருந்தாலும் இரண்டாம் நாள் முடிவில், போட்டியாளர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த நாளுக்குரிய ஆயத்தங்களை செய்வதிலேயே குறியாக இருந்தனர். அடுத்த நாள் Algorithm Round என்ற செய்தி எல்லோருக்கும் ஒருவித மிரட்சியை கொடுத்தது. எல்லா அணி
Yarl Geek Challenge மறுபடியும் வருகிறது... ...
Vimalaharan"போன வருஷம் yarl geek challenge சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அடுத்தமுறை புதிதாக என்ன செய்வதாக உத்தேசம்" என்று எனக்கு தோன்றிய கேள்வியை கேட்டேன். இந்த கேள்வியை நான் கேட்ட இடம் Yarl IT Hub உறுப்பினர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக சந்தித்து கொள்ளும் கூட்டம். அன்று அந்த சந்திப்பு நடந்த மேசையில் ஆறு பேர்கள் இருந்தோம். மேசையின் நடுவில் நாங்கள் ஆர்டர் செய்த "காய்ந்து போன" சாண்ட்விச், ஆறிப்போன capuchino coffee, தேசிக்காய் தண்ணி (விலை 120 ரூபா) போன்றவை எங்களுக்காக ...
ஆல்பியின் கல்யாணம்
Vimalaharanஅல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்துகூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்
ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்
Vimalaharanஎங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த ...
இது ஒரு குளிர் காலம்!
Vimalaharanஉல்லாச பறவைகளாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தோம். மறைக்கப்படாத ஒரே இடமான முகத்தில் குளிர் காற்று அடித்தது. வெளியே பெய்த மழையில் கார் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் கைகளை உரசி சூடேற்றினோம். துருவா வேகமாக ஓடிப்போய் டிரைவர் சீட்டில் இடம் பிடித்து முதல் வேலையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்து ACயை போட்டான். "கதவை பூட்டுங்கடா.. குளிர் வரப்போகுது" என்றான். அவன் ஒருத்தனுக்குத்தான் கார் ஓட்டத்தெரியும். ஆகவே அவனின் கட்டளையை மதித்தோம். ஜோ எப்போதுமே முன் சீட்டில்தான் இருப்பான். துருவாவின் டிரைவிங்க்கு பின் சீட்டுதான
Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்
Vimalaharan சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூக
குட்டிப்புலி
Vimalaharan"டேய் மாமா! பந்து கிணத்தில விழுந்திட்டுது எடுத்துத்தாடா" என்றான் சுவேதன். அந்த "டேய் மாமா" என்ற விளிப்புக்குரியவன் மாரீசன். சுவேதனை முறைத்துபார்த்துக்கொண்டு கிணற்றினை நோக்கி நடை போட்டான். இந்த குட்டிச்சாத்தான் எப்பவுமே இப்படித்தான் உயிரை எடுப்பான் என்று மனதில் திட்டிக்கொண்டு பந்தை எடுப்பதற்காக வாளியை கிணற்றுக்குள் விட்டு கப்பிக்கயிற்றை இழுத்தான். பந்து வாளியில் அகப்படாமல் விளையாட்டு காட்டியது. அந்த பந்துக்குக்காக காத்திருக்கும் சுவேதனுக்கு இந்த ஆவணியுடன் ஏழு வயதுதான் ஆகிறது. ஆனால் வங்காளம் போகுமளவுக்கு வாய்
வடக்கு வீதி ஒபரேசன்
Vimalaharanநான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். "டேய் நண்பா! நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் ...
84th Oscars : I predict based on my gut feeling :)
VimalaharanOscar fever is on yet again. I tried predicting the winners in the last Oscar awards and predicted 5 out of 9 predictions correctly. Let me try my luck for this year once again. I watched highest number films in the last calendar year, when comparing to the other boring years. But still I did not watch any of the ...
நான் கண்ணாடிக்காரன்!
Vimalaharan"இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு
Why this கொலைவெறி -- அடுத்த கட்டம்தான் என்ன?
Vimalaharanதனுஷின் கொலவெறி பாடல் சும்மா பட்டிதொட்டி மட்டுமல்லாது, Youtube, Facebook, Twitter என்று சும்மா வெளுத்து வாங்குகிறது. இந்த பாடல் வந்த 2ம் நாளில் அந்த பாடல் பதிவு வீடியோவை எதேச்சையாக TVஇல் ஒரு நிமிடம் பார்க்க நேரிட்டது. ஏதோ கடனுக்கு பார்ப்பது போல் பார்த்துவிட்டு தலையில் தண்ணீர் எடுத்து தெளித்துவிட்டு மறந்தே போனேன். Facebookஇல் நண்பர்கள் குழாம் அதை share பண்ணி அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியம் சேர்த்து கொண்டார்கள். "இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்" என்று சொல்லிவிட்டு அந்த YouTube வீடியோவையும் ...
அது!
Vimalaharan"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி. "ம்.. ம்.." என்றேன்."இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது."சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் ப