வெற்றியை தேடி + காமிக்ஸ் கோட்பாடுகள்
Vimalaharanகாமிக்ஸ் ஒன்றை தயாரிப்பது எனது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது . சிறுவயதுகளில் நரி ஒன்று விண்வெளிக்கு போனதாக கதை எழுதி படங்கள் வரைந்தேன். படங்கள் வரைவதற்கு நிறைய பொறுமை + திறமை தேவையிருப்பதாலும் சோம்பேறித்தனத்தினாலும் காமிக்ஸ் தயாரிப்பதை நிரந்தரமாக நிறுத்திவிட்டேன். மேலும் வெகு சுமாராகவே படங்கள் வரைவேன். சமீபத்தில் கன்னா பின்னாவென்று வரைந்த கிராபிக் நாவல்கள் பார்த்தபோது மறுபடியும் பேராசை இந்த வந்தது. ஆனால் அழுத்தமான நல்ல கதை எழுதும் திறமை தேவைப்பட்டதால் மறுபடியும் ஆசையை அணைத்து விட்டேன். இயக்குனர் சிம்புதேவன் ஆ
ஒரு பட்டப்பெயர் படலம் !!
Vimalaharanஅரைநித்திரையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். மணி அதிகாலை பத்தரை மணியிருக்கும். லிப்ட்டில் ஒருவரும் இருக்கவில்லை. ஒரு ஓரத்தில் சாய்ந்து கிடைத்த முப்பது செகண்டில் கண் அயர்ந்தேன். கன நேரமாக கதவு லிப்ட்டிலேயே போவது போன்றதொரு வினோத உணர்வாகவே இருந்தது. அந்த சில வினாடிகளுக்குள் கனவு ஓடியது. லிப்ட் திறந்தபோது வெளியே செல்வதற்காக பரபரத்தேன். ஷைலா உள்ளே வந்தாள். "நிக்கிற லிப்ட் ல என்ன செய்யிற" என்று ஆங்கிலத்தில் புன்முறுவலுடன் கேட்டாள். லிப்ட்டில் அவசர அவசரமாக ஏறிவிட்டு 30 செகண்ட் நித்திரைக்காக, போகவேண்டிய "ப்லோர்" எண்னை ..
Chinaman - ஒரு கிரிக்கெட் படலம்
Vimalaharanஷெஹான் கருணாதிலகவின் Chinaman புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அநேக நேரங்களில் தடித்த புத்தகங்களை வாசிக்கமாட்டேன். சோம்பேறித்தனம்தான் அதற்கான முக்கிய காரணம். எனது சோம்பேறித்தனத்தையும் தாண்டி இப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கு சில காரணங்கள் இருந்தன.* இது முழுமையான கிரிக்கெட் சம்பந்தமான கதை. * ஒரு இலங்கை எழுத்தாளரால் எழுதப்பட்டது. இதுநாள்வரை சிங்கள எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதையுமே வாசிக்க வேண்டும் போல இருந்ததில்லை. இது இலங்கை அரசியல் பற்றி இல்லாமல் இருப்பதால் வாசிக்க வேண்டும் என்று யோசித்தேன் * இந்திய வாசகர்
வெறுங்கால் சுட்டிப்பையன் ஜென் - Barefoot GEN Comics
Vimalaharanபோர் என்பது வெறுப்பான விஷயம். அது துயரம் மிகுந்தது. போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையே இருள் மிகுந்து விடுகிறது. உயிர் மேல் இருக்கும் ஆசை, மற்றைய ஆசைகளை தின்று விடுகிறது. போரில் ஈடுபடுவர்கள் ஒருநாள் சாகிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் சாதாரண மக்கள்தான் நித்தமும் செத்து பிழைக்கிறார்கள். எங்கள் நாட்டின் முப்பது வருட யுத்தத்தின் பெரும்பகுதி எனது சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்தது. யுத்தம் இல்லாத நாடு எப்படியிருக்கும் என்பதே எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு வருடம் தொடர்ச்சியாக பள்ளி
வாசிப்பு என்னும் மிருகம்
Vimalaharan சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எ
ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்
Vimalaharanஎங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த ...
Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்
Vimalaharan சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூக
ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2
Vimalaharanசில வருடங்களுக்கு முன்னராக ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன். ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான்
ஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை
Vimalaharan1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் "தலையில்லா கொலையாளி" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா என்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன்
அமெரிக்க காமிக்ஸ்கள் : சில Batman கதைகள்
Vimalaharanசமீபகாலமாக அமெரிக்கத்தனமான Batman கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சிக்கிறேன். இன்டர்நெட்டில் Batman கதைகளை பற்றி பலர் சிலாகிக்கிறார்கள். Batman மீதான அவர்களின் அபிமானம் அளப்பெரியது. அவ்வாறான விமர்சனங்கள் என்னை Batman காமிக்ஸ்களை வாசிக்கத்தூண்டின. எனக்கு "டிம் பேர்டன்" மற்றும் "கிறிஸ்டோபர் நோலன்" உருவாக்கிய Batman படங்கள் மிகவும் பிடிக்கும். எந்தவித அதிசய சக்திகளும் இல்லாத Batman உடல்பலம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மூலமாக நீதிக்காக போராடுவது சுவாரஸ்யமானது. குறிப்பாக Dark knight திரைப்படத்தில் ஜோக்கருடன் நடை
பிரதீப்!!
Vimalaharanபிரதீப்... இந்த பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன எண்ணம் மனதில் தோன்றுகிறது. எனக்கு இந்த பெயர் பல ஞாபங்களை கொண்டுவருகிறது. பிரதீப் அக்காலத்தில் கொஞ்சம் டிரென்டியான பெயர். பிரதீப் என்ற பெயரையுடைய நபரை சந்திக்கபோகிறேன் என்றால் அந்த பெயரே ஒருவித எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்திவிடும். கொஞ்சம் புத்திசாலியான மாடர்னான ஒரு பயலை சந்திக்கபோகிறோம் என்று நினைத்துகொள்வேன். எனக்கு தெரிந்து பலபேர் அந்த பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் என்ற பெயருடைய ஒருவன் என்னுடன் ஆறாம் ஆண்டுவரை, கிராம பள்ளிகூடத்தில் படித்துவிட்
மறுமலர்ச்சியின் பின்னரான டாப் டென் காமிக்ஸ் இதழ்கள் !!
Vimalaharan2000ம் ஆண்டுகளின் பின்னர் காமிக்ஸ் வறட்சி உருவானது. அது அமெரிக்காவில் ஏற்பட்ட Great Depressionஐ போன்றதொரு தாக்கத்தை தமிழ் காமிக்ஸ் உலகில் உருவாக்கியது. ஆனாலும் 2012 ஜனவரி comeback ஸ்பெஷலின் பின்னரான காலப்பகுதியில் லயன் காமிக்ஸ் மீண்டும் வலிமையாக உயிர்த்தெழுந்திருக்கிறது. மாதத்துக்கு 2-3 என்று இதழ்கள் தவறாமல் கிடைக்கின்றன. கனவிலும் எதிர்பார்த்திராத தரத்தில் கலரில் வந்தது எல்லோரையும் கவர்ந்தது. ஆனாலும் இதனை இலங்கையில் பெற்றுகொள்வது குதிரைகொம்பாக இருந்தது. இலங்கையில் பல முன்னணி புத்தக இறக்குமதியாளர்களும் காமிக
ஒரு அடையாள அட்டை படலம்!
Vimalaharanமாலை அஞ்சு மணிக்கு வரச்சொன்னவள். இப்போது மணி நாலரை. நூறாம் நம்பர் பஸ். ரோட்டில் கொஞ்சம் டிராபிக் இருந்தது. இன்னும் நாலு பஸ் ஹோல்டை தாண்டினால் வெள்ளவத்தை வந்து விடும். ஒரே படபடப்பாக இருந்தது. ஆனால் அது ஒரு சந்தோசப்படபடப்பு. முதன்முறை அல்லவா, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். மனம் வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. நான் கொழும்புக்கு புதுசு. இறங்க வேண்டிய ஹோல்டை விட்டுவிடபோகிறேனோ என்ற எண்ணம் வந்தது. வெள்ளவத்தை "மார்க்கெட்" ஹோல்ட்டுக்கு வரசொல்லியிருந்தாள். வேறு ஏதாவது ஹோல்டில் மாறி இறங
பிரம்மாஸ்திரம்!!
Vimalaharan பின்னேரம் நாலு மணி இருக்கும். முன் கேட்டில் மூன்று தரம் டிங்.. டிங்.. என்று சத்தம் கேட்டது. அதுதான் பின்னேர கிரிக்கெட் விளையாட்டுக்கான ரகசிய சமிக்ஞை. முந்தாநாள்தான் ஏழாம் ஆண்டு கடைசி தவணை பரீட்சைகள் முடிந்து ரிப்போர்ட் கார்ட் வந்திருந்தது. ரிப்போர்ட்டில் வந்த மார்க்ஸ் அம்மாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவுகளில் இல்லாததால் லீவு நாட்களிலும் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அதனால் "பின்னேர விளையாட்டு" கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏனைய நாட்களில் "டியூஷன் போகிறேன்"
போர்முலா!!
Vimalaharan"போர்முலாவை கண்டுபிடிச்சிட்டிங்களா" என்றான் சக்கரை. அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம்."இல்லை.. இன்னும் கொஞ்சம் சரிப்படுத்தணும்.. இண்டைக்கு எப்படியும் சரிவரும் எண்டு நினைக்கிறன்" என்றார் மூலவர். மூலவர் ஒரு டைப்பான விஞ்ஞானி.வீட்டுக்கு மூத்தவர் என்பதால் மூலவர் என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. சக்கரை அவருடைய மருமகன்."இது எப்படி சாத்தியம். மூணு வருசமா சோழர் காலத்துக்கு போறதுக்கு மெஷின் கண்டுபிடிக்கிறன் பேர்வழி என்று இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க""கொஞ்சம் விஞ்ஞானம்.. கொஞ்சம் சூனியம்.. கொஞ்சம் நம்பிக்கை போதும். இர
அது!
Vimalaharan"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி. "ம்.. ம்.." என்றேன்."இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது."சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் ப
ஈமெயில் கொலைகள்!!
Vimalaharanஅத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனிஅஞ்சு நாள் லீவுக்கு பிறகு அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்
Software Companyயில அப்படி என்னதான் வேலை செய்றாங்க..?
Vimalaharanகாலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். "நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு ...
155 ஏறுங்கய்யா! ஏறுங்கய்யா!
Vimalaharan155இன் மானசீக தோற்றம்நீங்கள் எப்போதாவது 155 பஸ்ஸில் சாவகாசமாக பயணித்திருக்கிறீர்களா? நீங்கள் கொழும்புக்கு ஒருமுறை வந்திருந்தாலே போதும், 155 என்பது ஒரு பஸ்சின் இலக்கம் என்பது தெரிந்திருக்கும். ஆனாலும் ஏனைய பஸ் எண்களைகாட்டிலும், கூடிய பிரசித்தமானது. பலர் அந்த பஸ்ஸில் போவதையே தவிர்க்க எண்ணுவார்கள். ஆனாலும் அந்த பஸ் கொழும்பில் பிரபலம். ஏனென்றால் அது அவ்வளவு ஸ்லோவா போகும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஐந்து நிமிஷம் நிக்கும். கண்டக்டர் பயல் "பம்பலபிடிய, கம்பஸ், அஸ்வாட்டுவா, மட்டக்குளிய" என்று காது கிழிய கத்துவான்.
ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்
Vimalaharanவருடம் 2005. மணி இரவு 2030. யன்னலை திறந்தாலும் காற்று வரமறுக்கின்ற, வழமைக்கு சற்றும் மாறாத வெக்கையான கொழும்பு இரவு. வெளியே பிரதான வீதியில் செல்லும் வாகனங்களின் ஒலிக்கு எனது மூளை இசைவாக்கமடைந்திருந்ததால் எதையுமே கண்டுகொள்ளாது java notesஐ பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஆங்கிலத்தில் இருக்கும் notesஐ தமிழ்ப்படுத்தி மூளையில் ஏற்றும் போராட்டத்தின் நடுவிலிருந்தேன். அப்போது வீட்டு calling bell அடித்தது. அது அண்ணாதான். அவன் calling bellஐ அடிக்கும்முறையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். வழமையாக பதினோரு மணிக்கு வே