உன் மடியில் வைத்த தலையில்மலைகளின் பின்னால் எழும்பிடும்சூரியக்கதிர்கள் பட்டே நான்முழித்திட்டேன்என் நெற்றி மீதேகுத்திட்ட வண்ணமாய் பதிருந்தஉன் அழகிய கண்பார்வை கண்டே அடைந்தேன்பரவசம்.என் நெற்றி மீதேறிதலை முடியிநூடு சென்றிடும்உன் மெல்லிய விரல்கள் தருமொருபரவசம்நாம் அமர்ந்திருக்கிறோம்உச்சி மலையில் சரிவொன்றில்சூரியோதயம் நோக்கிப் பார்த்தபடிஇருக்கும் ஒரு பெஞ்சில்உன் கண் பார்த்துநான் புன்னகைக்கும்தருணத்தில் ரசிக்கிறாய், குனிந்துதருகிறாய் முத்தம்உன் கழுத்தில் கை போட்டுஎன் முகம் பக்கம் உன் முகம்கொண்டு வந்தே தருகிறேன்பதில
பொதுவாவே ரீமேக்கும் படங்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். பெரும்பாலான ரீமேக்கிய படங்கள் ஒரிஜினல் படங்களின் நல்ல பெயரைக் கெடுத்த ஹிஸ்டரியே தமிழில் அதிகம். அதையும் மீறி, ஒரு ரீமேக்கிய படம் ஒரிஜினல் படத்தை விட நல்ல பெயர் வாங்குகிறது என்றால், ஒரே ஒரு காரணம்ஒரிஜினல் படம் அல்ட்ரா பிளாப் ஆக இருக்க வேண்டும். இந்த விதி எல்லாவற்றையும் மீறும் வரிசையும் ஒன்று இருக்கிறது. தரமான டைரக்டர் மற்றும் நடிகர் உடன் சிறந்த ஸ்க்ரீன் ப்ளே கலந்து செய்யும் படங்களுக்கான வரிசை. அதில் சமீபமாக வந்த ...
இந்த டிசம்பர் 21இல் உலகம் அழியாவிட்டாலும், இது இன்னுமொரு Winter Solstice நாளாக இருக்கும். Winter Solstice என்பது நண்பகல் நேரத்தில் சூரியன் பூமியின் 0 பாகை அகலாங்கிலிருந்து மிகக் குறைந்த தூரத்திலிருக்கும் அகலாங்குக்கு மேலே வருதல். தெளிவான விளக்கத்துக்கு விக்கிப்பீடியா லிங்கை பார்க்கவும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அதன் படி ஒரு வருடத்தின் நான்காவது நிகழ்வு டிசம்பர் 21 அல்லது 22 இல் வழக்கமாக வரும். இந்த முறை டிசம்பர் 21 இல் வருகிறது.சில கேள்விகள் நாசா விஞ்ஞானிகளிடம் ...
சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த சோப்பா'வும் பைப்பா'வும். சோப்பா'வை தமிழில் "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்" என மொழி பெயர்க்கின்றனர். இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பேசப்பட்ட போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அனைவரும் இதை ஒரு "காப்பிரைட்" போன்ற ஒரு சட்டமாகவே பார்த்தார்கள். கொஞ்ச நாட்களின் பின்னரான அலசலின் விளைவாகவே இது எல்லாவற்றையும் விட காரசாரமான ஒரு சட்டம் என்பது தெரிய வந்தது. விஷயம் காட்டுத்தீ போல பரவி இப்போது உலகெங்கும் அதை எதிர்த்துக் .
"நண்பன்" படத்தில் வரும் ஒரு அழகான பாடலின் அருமையான வரிகள் இவை. எனக்கு ரொம்பவே பிடித்துப் போனாதால் அதை இங்கே பகிர்கிறேன்.நல்ல நண்பன் வேண்டும் என்று,அந்த மரணமும் நினைக்கிறதா?சிறந்தவன் நீதான் என்று,உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா?இறைவனே, இறைவனே, இவனுயிர் வேண்டுமா?எங்கள் உயிர் எடுத்துக்கொள், உனக்கது போதுமா?இவன் எங்கள் ரோஜா செடி,அதை மரணம் தின்பதா?இவன் சிரித்து வீசும் ஒளி,அதை வேண்டினோம் மீண்டும் தா.உன் நினைவின் தாழ்வாரத்தில்,எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா?மனம் என்னும் மேம்பாலத்தில்,எங்கள் ஞாபகங்கள் பூக்கவி
கணங்கள் நத்தைகளாய் நகரும்காத்திருத்தல் ரணங்களாய் வலிக்கும்தருணங்கள் தோன்றிடும் நேரங்களில்ஒலித்திடும் மனது, இது காதெலென...இனிமேலும் வராது என் வாழ்வில் நீ பள்ளிக்கூடம் வரா நேரங்கள்என்றெண்ணுவேன் ஒவ்வோர் இரவும்.தலை குனிந்து நிலம் பார்த்தேஎன் தெரு வழி கடந்திடும்உன் பாதங்களுக்காய் ஏங்கிநிற்கும் என் வாசல் படி.தோழிகள் புடை சூழநடந்தே செல்வாய் ஒரு ராணி போல...காதலால் நீ அழகாய் தோன்றிட்டாயாஇல்லை, உன் அழகால் காதல் வந்ததா...என் வாழ்வில் நீ இல்லை எனில்செத்துப்போவேன் என்றொரு பொய்நான் சொல்லமாட்டேன்நீ எனக்கு வேண்டும் என்றும்
சில பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாமலேயே அதைக் கேட்டவுடனேயே, "அழகு" என்றுதான் இருக்க வேண்டும் என அடித்துக் கூறும் நாமங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்த 'சிதாரா' இருந்து தொலைத்திருக்க வேண்டும். பேஸ்புக்கில் தொடக்கி ஸ்கைப்பில் கண்டினியூ ஆகும் நவீன காலக் காதல் காம லீலைகளில் ஒரு வர்க்கம் தேக்கி நிக்க, மற்றப் பிரிவு கடிதங்களில் இருந்து செல்போனுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி இருந்தது. இந்தப் பிரிவில் வந்தவன்தான் 'அலன்'. தன் மொபைல் நம்பரில் ஒன்று இரண்டை மாற்றி வரும் நம்பருக்கு டயல் செய்யும் வித்தை ...
ஊஞ்சலை ஆட்டிவிட்டால் கொஞ்ச நேரம் வேகமாக ஆடி, அதன் பின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில், புவியீர்ப்பின் ஆர்முடுகலில் பிழைக்கத் தெரியாது ஓய்வுக்கு வரும். இடப்பட்ட நேரத்தில், யார் யாரோ வருவார், ஏறி அமர்வார். தம் விருப்பத்திற்கு ஏற்ப வேகமாய் ஆட்டுவார். விரும்பியவரை அருகில் ஏற்றிக் கொள்வார். முன்னோக்கியும், அகலவாக்கிலும் அமர்ந்து ஆடுவார். எது எப்படியோ யாரும் ஊஞ்சலில் நிரந்தரமில்லை. ஒரு கணத்தில் ஊஞ்சலும் நிரந்தரமில்லை. காலங்கள் வேகமாய் நகர என் கண் முன்னே நான் ஏறி, வேகமாய் ஆடி, அம்மாவைக் கூப்பிட்டு 'ப்ளைட் ...
எனக்கு புரியல. ஏன் எல்லாரும் மன்மதன் அம்பு'வ இந்த காட்டு காட்டறாங்க. கப்பல்ல ஒரு படம் எடுக்கிராங்கன்னா அதுக்காக கப்பலை மையமா வச்சுதான் கதை இருக்கணுமா என்ன. 'வ குவாட்டர் கட்டிங்'ல ஒருத்தர் கேப்பாரே "ஏன்யா எல்லாத்துக்கும் மெஸ்ஸேஜ் தேடிட்டு அலையுறீங்க" அப்படின்னு, அந்த மாதிரி இருக்கு. கமல் ஒரு திறமையான நடிகர். அதுக்காக அவரு பண்ற எல்லாப் படமுமே "ஆர்ட் பிலிம்" மாதிரித்தான் இருக்கணும்னா, பாவம் வயித்துப் பிழைப்புக்கு எங்க போவாரு. நான் அவரது தீவிர ரசிகன். எனக்கு என்னமோ தெரியல கமல் ...
எங்க இருந்து, எப்பிடி தொடங்குவது என்றெல்லாம் தெரியல... நவீன, டெக்னாலஜி உலகின் பிரதான பிறப்புகளில் ஒன்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள். இதில் கெட்டிக்காரப் பிள்ளை 'பேஸ்புக்'. நம்பர் 1 தளமான இது இன்றைய இளைஞர்களின் மிக முக்கியத் தேவை. ஒரு மொபைல் போன், மோட்டர்பைக் கணக்காய் இதுவும் நமது ஐடண்டி. புதிதாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஸிடம் மொபைல் நம்பர் இருக்கா, ஈமெயில் ஐ.டி. இருக்கானு கேட்ட காலம் போய் கொஞ்ச வருஷமாக பேஸ்புக் ஐ.டி. இருக்கானுதான் எல்லாரும் கேட்டிட்டு இருக்காங்க. பேஸ்புக் தொடங்கப்பட்டது உங்களுக்கு ஏற்கனவே ..
'அன்-ப்ரடிக்டபிள்' என எல்லாராலும் வர்ணிக்கப்பட்டவர் செபஸ்டியன். பொதுவாவே அன்-ப்ரடிக்டபிள் என்ற பெயர் அதிகம் கோபம் வருபவர்களுக்கும் திடீர் என ஒரு விஷயத்தை செய்பவர்களுக்கும் சொல்லப்படுவதுண்டு, இவருக்கும் அதே. புரட்சிகரமான எழுத்தாளர் எல்லாம் கிடையாது. ஆனாலும் அவருக்கு மக்களிடம் ஒரு பயம் இருந்தது. ஊர்ப் பிரச்னையை 'நாடோடி' என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்கு கொண்டு வந்திட்டார். அதை தீர்ப்பதற்கான ஆக்ஷன்களை ஒரு சிலர்தான் எடுத்திட்டார்கள். இருந்தாலும் இவரது முயற்சிகேனும் இவருக்கு சுற்றும் ஒரு நல்ல பெயர் இருக்கவில்லை
புரட்சி, அது இதுன்னு எழுத எல்லாம், ஐ ஜஸ்ட் டோன்ட் நோ. கவிதைத்தனமாய் ஒரு ஹெடிங் வச்சிட்டு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிக்கிற கூட்டத்தில லைப் டைம் மெம்பர்ஷிப் வாங்கி வச்சிண்டு இருக்கேன்...லாஸ்ட் போஸ்ட்டை பத்தி பெர்சனல்'ஆ ஒரு கமன்ட் வந்திச்சு, 'வேஸ்ட் ஆப் டைம்'னு. எதைப் பத்தி எழுதறதுன்னு ஒரு வரையறை இருக்கா? தெரில. ஆனா, எல்லாத்தையும் எழுதிட முடியாதுதான். பார் எக்ஸாம்பிள், என் ப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான், 'எல்லார்க்கும் ப்ரைவேட் பார்ட்ஸ் இருக்கு. உனக்கு என்ன இருக்கும்னு எனக்கு தெரியும். எனக்கு ...
ரொம்ப காலத்துக்கு எழுதாமல் விட்டுவிட்டு அப்புறம், சாரி, பிசி, அது இது என்று பீலா விடுவது என் வழக்கமாகிவிட்டது. மெய்யாலுமே பிசி'தாம்ப்பா, நம்புப்பா என்று நானும் ரவுடிதாம்பா என்று நாய் சேகர் போல் புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவரவர்க்கு ஆயிரம் வேலை, அதில் உன் பொழைப்பு ஒரு கேடு என்று சிரிக்கும் ஊர்.9GAG என்று ஒரு தளம். பாழாய்ப்போன ஒரு தளம். கொஞ்ச நாள் அதில்தான் கிடந்து உருண்டேன். பேஸ்புக்கில் ப்ளேர்ட்டிங் பண்ணி மனம் நொந்து போவதை விட, எப்போதும் சிரித்து வாழலாம் ...
அங்கும் இங்கும் என பட்டுத் தெறித்துஉன் நாடு வகிடு வழியே வருகிறதுஉன் பின்னால் உதிக்கும் சூரியன்.அதன் முகம் உன் முதுகு காட்டிநிலம் பார்த்துப் புன்னகைத்துக்கோலம் போடும் உன் கைகளில்ஜொலிக்கும் தங்க வளையல்கள்.கோயில் மணியோசை போல் கேட்கும்தமக்கிடையே வளையல் போடும் சண்டை.உன் கை உதிரும் கோலப்பொடிநிலத்தில் விழுந்து உனை வாழ்த்தும்.எல்லா விடியலிலும் முதல் பக்கத்தில்அச்சிடப்படும் உன் முகம்... ...
இது கார்ட்ஸ் விளையாட்டுக்களில் ஒன்றான '304' என்று எங்கள் வட்டாரத்தில் பிரபல்யமான விளையாட்டை ப்ரோமொட் செய்யும் நோக்கில் எழுதப்படுகிறது. நான்கு அல்லது ஆறு பேராக விளையாடப்படும் இந்த விளையாட்டின் நான்கு பேர் விளையாட்டு பற்றி இப்பதிவு...பாயின்ட் விபரம்:J = 39 = 2A = 1.110 = 1K = 0.3Q = 0.28 = 0 (பெரியது)7 = 0 (சிறியது)பெயர்க்காரணம்: இவ்வாறு 8x4 இனம்=32 கார்ட்டுக்கும் பாயிண்ட்ஸ் கூட்டும் போது 30.4 வரும்.விளையாட்டு முறை:1. மேலே பாயிண்ட்ஸ் தரப்பட்ட கார்டுகளை தவிர ...
மின்னற் பொழுதே தூரம்... நின் கண் இமைத்தலே நேரம்... கணத்தில் தோன்றிடுமே காதல்...ஏன் வந்ததென்று தேடித் தேடி ஒரு 'வைல் லூப்'பில் ஓடிடும் மனது...சரிவான வீதியின் உயரத்தில் நீ...உன் பின்னே கதிர் பரப்பும் சூரியன்...நின் நிழல் என் முகம் விழசுண்டப்படும் என் மனது...ஜாக்கிங் செய்யும் வேளைகள்...காலை அரும்பிய நுனி இலை பனித்துளிகள்...மூக்கினால் சுண்டி சிரிக்கிறாய்...'இன்க்ரிடிபல் ஹல்க்' தூக்கி எறிந்தது போல பறந்து போகிறது மனது...உன் கைகளில் மட்டும் பட்டாம்பூச்சி உறங்கும் மர்மம்...உன் கைகளின் வாசமா இல்லை உன் விரல்களின் மென
அது ஒரு சாக்கடை என்பர்,போக வேண்டாம் என்பர், இல்லாமல் இருக்க முடியாதுஎன்றே நினைத்தும் கொள்வர் பேச்செடுத்தாலே பச்சோந்தியாக்கும்,உமை இரு வேறு கதைபேசவைத்தே அழிக்கும்,சத்தானியத்தின் மறுபிறவி.அது ஒரு அழகாய் இருந்தது ஒருக் கால்.குணம் மாறிப் போனது ரத்தவெறி மனிதர்களால்.மாமன் மச்சான் பங்காளி உறவு,பெட்டி படுக்கை எடுத்தே ஊர் விட்டு ஓடிப் போகும்.அரசியலில் வன்முறை கூடாது என்றதொரு கூட்டம்.அரசில்யலை விட வேறென்ன வன்முறை என்றது மற்றக் கூட்டம்.அவசர அவசரமாய் காசு பணம் சேர்க்கும் ஊடகமாய் மாறிப் போனது, தான் உருவான நோக்கம் இழந்து