நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? இதென்ன கேள்வி... நிச்சயம் இருப்பீர்கள்! அப்படியென்றால் பார்ன்படி பற்றி உங்களுக்குத் தெரியுமில்லையா? தெரிந்தவர்கள் இனிவரும் வரிகளை ஸ்கிப் பண்ணவும்! பார்ன்படி என்பது பேஸ்புக்கில் விவசாயம் செய்யும் விளையாட்டு. ஃபார்ம் வில்லி போல அத்தனை பிரபலமான விளையாட்டு இல்லாவிட்டாலும் எனக்கென்னவோ அதைவிட இது சுவாரசியமான விளையாட்டு என்றே தோன்றுகிறது! ஏனென்றால் அடுத்தவர்களின் தோட்டத்தில் திருட முடிவதுதான்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்? இந்த ஃபார்ம் வில்லி,
ஹாய் பிரெண்ட்ஸ்! ரிமெம்பர் மீ? ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றோம்ல? பிளாக் பண்ண டைம் இல்லண்ணு சொன்னா நீங்க நம்பிடவா போறீங்க? வேலவெட்டி ஒண்ணுமில்லாம சும்மாதானே இருக்கே நீன்னு பிரிச்சு மேஞ்சிட மாட்டீங்க? உண்மைய சொல்லணும்னா கடந்த சில வாரங்களா பிளாக் பண்ற மனநிலைல நான் இல்லப்பா! சரி அத விடுங்க... அது என்னோட சொந்த சோகம். அத தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க?விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்தேன். எனக்குத்தெரிஞ்சி தமிழ் சினிமாலேயே காதல் கதைகளை ரொம்ப அழகா சொல்லக்கூடியவரு கௌதம் மேனன். வாரணம் ஆயிரம் ...
காதலர் தினம் வந்துச்சு... காதலர் தினம் போயிடுச்சு... ஆனா இந்தத் தடவை காதலர் தினம் சற்றே டல்லடித்தது போல ஒரு பீலிங்! எதிர்பார்த்தது போல யாருமே பெருசா அலப்பறை பண்ணல! சென்ற காதலர் தினத்தில் சிவப்புக் கலர் டிரஸ் போட்டுக் கலக்கித்திரிந்த கூட்டம் இம்முறை மிஸ்ஸிங்! வாட் ஹெப்ன்ட் யூ கைஸ்?எனக்கென்றால் சென்ற காதலர் தினம் போல இம்முறை தனிமை வாட்டவில்லை! இந்த ஒரு வருசத்துல என் லைப் ரொம்பவே சேன்ச் ஆயிடுச்சு... கூடவே மனசும்! ஸோ காதலர் தினத்தன்று வெளியே தலைகாட்டுவதில்லை என்றிருந்தவன் ...
பொன்யோ... சின்னக் குழந்தைகளின் விசித்திரமான கற்பனைக் கதைகளை அனிமேஷன் படங்களில் அப்படியே கொண்டுவருவதில் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் ஹயாயோ மியாசாகியின் மற்றுமொரு டிவைன்! டிஸ்னியின் வெளியீடாக வந்திருக்கும் இந்தப்படம் எனக்குப்பிடித்த மிகச்சிறந்த அனிமேஷன் படங்களில் ஒன்று!கடல் என்பது உலகத்தின் ஒரு பகுதி என்பதைவிட கடலே ஒரு தனி உலகந்தான்! விசித்திரமான அந்த உலகத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் உலவுகின்றன... அப்படியொரு கதைதான் பொன்யோ!பொன்யோவின் கதை ஷோர்ட் அண்ட் ஸ்வீட்டாக இதோ...கடலின் ஆழத்தில் உள்ள ஒரு மந்திர நீர்மூழ்கிக
அடுத்த வாரம் காதலர் தினம் வருது... இங்க இப்பவே அலப்பறை பண்ணத் தொடங்கிட்டானுங்க! சென்ற காதலர் தினமும் இப்பிடித்தான்... அந்த நாளே சிவப்பாத்தான் விடிஞ்சுது! ரோட்ல போறவன் வாறவன்லாம் சிவப்புக் கலர் டிரஸ் போட்டுக்கிட்டுப் போறான்! என்னடான்னு கேட்டா காதலர் தினமாம்! க்ளாஸ்லயும் எல்லாரும் சிவப்பு டிரஸ்! சரியாப்போச்சு! சிவப்பு டிரஸ் போடாத என்ன எல்லாரும் மட்டமாப் பாக்குற மாதிரியே ஒரு பீலிங்! இதாவது பரவால்ல! எல்லாரும் ஜோடி ஜோடியா திர்றாங்களா... அந்த வயித்தெரிச்சல் வேற! ஸோ இந்தக் காதலர் தினத்துக்கு ஊர்சுத்தப் போற ...
இன்று க்ளாஸ் விட்டு 155ம் நம்பர் பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன்... ஹாய் பிரெண்ட்ஸ்! நான் இத சொல்லியே ஆகணும்! 155ம் நம்பர் பஸ் அவ்ளோ க்ரவ்ட்! முன்பெல்லாம் இந்த பஸ்சில்தான் அதிகமா குண்டு வெடிக்கும்! இப்போ அதிகமா செல்போன்கள் திருட்டுப் போகின்றன! (நான் கூட ஒரு செல்போன் தானம் பண்ணியிருக்கேன்!)சரி... நம்ம மேட்டருக்கு வருவோம்! மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்னால ஒருத்தன் ஓடிவந்து 155ல் ஏறினான்! அவன் எப்படியிருந்தான் என்று அவசர அவசரமாக வர்ணித்துவிடுகிறேன்: "அவனுக்கு என் வயசுதானிருக்கும். வெள்ளை ஸ்போர்ட்ஸ் பூட்ஸ், உடம்போடு அ
ஹாலிவூட் ஆக்சன் ஹீரோ வின்டீசல் பேஸ்புக்கில் இருக்கிறார். பொழுதுபோகாவிட்டால் மனுஷன் பேஸ்புக் வந்து ஏதாவது ஸ்டேடஸ் போடுவாரு போல... போட்டு அடுத்த சில செக்கன்களில் அதற்கு பத்துப் பதினோராயிரம் லைக்ஸ் விழுந்துவிடும்!இந்த லைக்ஸில் ஒரு மேட்டர் இருக்கிறது பாருங்கள்... பேஸ்புக்கில் உங்கள் ஸ்டேடஸுக்கு கிடைக்கும் கமெண்ட்சை விட அதற்குக் கிடைக்கும் லைக்சை வைத்துத்தான் உங்கள் மதிப்பு கணக்கிடப்படுகிறது! அதிலும் குறிப்பாக கேர்ள்ஸ் அதிகமாக லைக் பண்ணியிருந்தால் நீங்கள்தான் ஹீரோ! எழுதப்படாத இந்த பேஸ்புக் விதியால் பிரெண்ட்ஸ் மற
உங்களுக்கு இன்டர்நெட் பார்க்கத்தெரியுமா? ஆமென்றால் நான் சத்தியமாகச்சொல்வேன் நீங்கள் பேஸ்புக்கில் இருப்பீர்கள்! இன்று உலகத்தைக் கிறங்கடித்துக்கொண்டிருக்கும் தேவதைத்தொழிநுட்பம் இது! கூகிளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்படும் வெப்சைட். விரைவிலேயே கூகிளையும் பின்னுக்குத்தள்ளக்கூடும்.முன்பெல்லாம் இன்டர்நெட் கனெக்ட் பண்ணியவுடன் ஜிமெயில்தான் செக் பண்ணுவேன். ஆனா இப்பெல்லாம் பேஸ்புக்தான்! என் நண்பர்களில் பலரைத்தொடர்புகொள்வதும் பேஸ்புக்கில்தான்! 2007ல் நான் பேஸ்புக்கில் இணைந்தபோது பேஸ்புக் இவ்வளவு பிஸியாயில்லை! ஆனால் 2
ஹாய் பிரண்ட்ஸ்! இது எனது முதலாவது தமிழ் ப்ளாக். இங்கிலீஷில் மின்னிக்ஸ் என்ற பெயரில் எழுதுகிறேன். வெயிட்...! வெயிட்...! எழுதுகிறேன் என்றா சொன்னேன்? எனக்கு நிறைய எழுதுவது பிடிக்காது (?!). அதுவும் இங்கிலீஷ் வேறா? ஸோ, நீங்களே செக் பண்ணிகோங்க!நமக்கு இந்தக் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் எழுத வராது... ஆனா மத்தவங்க எழுதினத கொப்பி அண்ட் பேஸ்ட் பண்ணமட்டும் நல்லா வரும்! ஸோ, இனிவரும் நாட்களில் எனக்குப்பிடித்த அனைத்தையும் உங்களுடன் ஷேர் பண்ணவிருக்கிறேன். வாட் யூ தின்க்? ...