pirates of the caribbean 4மீண்டும் கப்டன் ஜாக்ஸ்பைரோ..pirates of the caribbean 1 ல் நீரில் மூழ்கும் படகிலிருந்து எதுவுமே நடக்காதது போல் இறங்கி வந்து அறிமுகமானார்pirates of the caribbean 2ல் கடலில் மிதக்கும் பிரேதப்பெட்டிக்குள்ளிருந்து பிணம்தின்ன காத்திருக்கும் காக்கையை சுட்டபடிவெளிவந்தார்pirates of the caribbean 3ல் தன்னைப்போலவேயிருக்கும் தன் நினைவு உருவங்களுடன் உரையாடியபடி அறிமுகமானார்pirates of the caribbean 4 குற்றவாளிக்கூண்டிலிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற நீதிபதியாக வேடமிட்டவாறு இன்ரடக்ஷன்...(முன்பு கா
கணினியில் நண்பன் ஒருவரின் ப்ளாக் வலைத்தளத்தை படித்துக்கொண்டிருந்தான் வேணு.படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..செல்போன் நச்சரித்தது அட! நன்பன் சிவா. எடுத்து பேசினான்டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா? நாளைக்குள்ள சொல்லணும்.போன வருசம் வாங்கினதே இங்க போடாம கிடக்கு அதுக்குள்ள எதுக்குடா இன்னொண்டு வேண்டிக
இது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...அவரு பேரு சோபி.ஐடி பணியாளர். போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார். அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது? தங்கிநிற்க நல்ல இடம் எது? எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவ
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.தில்லுமுல்லுயாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரிய
ஆவிகளுடன் பேசுவது எப்படி என்ற என் முதல் கட்டுரையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். வீட்டுக்கு முன்னாலேயே ..
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள். அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.நாம் பஸ் ஏறுவது
இந்த வருடம் அனைவருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...!பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.நன்றி. ...
வெள்ளித்திரையில் பார்த்து ஜொள்ளிய இந்தி நடிகைகளின் மேக்கப் இல்லாத நிஜ முகங்களின் தொகுப்பு.மனதை திடப்படுத்திக்கொண்டு தொடரவும்.மேக்கப் இல்லாத ராணி முகர்ஜி Rani Mukherjeeமேக்கப் இல்லாத வித்யா பாலன் Vidya Balanமேக்கப் இல்லாத சுஷ்மிதா சென் ஊர்மிளாSushmita Sen and Urmila மேக்கப் இல்லாத தனுஸ்ரீ Tanushree Dutta மேக்கப் இல்லாத சுஷ்மிதா ஷென்Sushmita Sen மேக்கப் இல்லாத ப்ரியங்கா கோப்ராPriyanka Chopra மேக்கப் இல்லாத ப்ரீதி ஜிந்தாPreity Zintaமேக்கப் இல்லாத
ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்இப்போ கதை வேணுமே...!யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.லொகேஷன்...!பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூ
(வீழ்வது யாராயினும்.. தொடர்கதை பாகம்-1. இது எம் சக பிரபல பதிவர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.. முழுவதும் படித்தபின் அவர் யாரென கண்டுபிடிக்க கூடியதாக இருக்குமென நினைக்கிறேன்.. அவரது ஆசியுடன் கதை வடிவில் எழுதுகிறேன்...நன்றி.) 24 மணிநேரம் பிடித்தது ரகுக்கு... எதற்கென்றா கேட்கிறீர்கள்? ஒரு கட்டுரை எழுதுவதற்கு... அது சாதாரண கட்டுரையாயிருந்தால் உடனே முடித்துவிடலாம் ஒரு முகந்தெரியாத பெண்ணுக்காக எழுதிக்கொண்டிருக்கிறானே.. பாடசாலை.. வீடு.. டியூசன்.. நண்பர்கள்.. குறும்பு என பள்ளிப்பருவத்து வாழ்க்
பதிவர் கானா வரோ இயக்கத்தில் உருவாகிக்கொண்ருக்கும் இலவு குறும்படத்தின் ப்ரோமோ பாடல் அண்மையில் வெளியானது.தர்ஷானன் இசையமைக்க பதிவர் இரோஷன் பாடல் வரிகளை தர்ஷானனுடன் இணைந்து எழுதியுள்ளார். வரிகளில் யாழ்ப்பாண பிரதேச வார்த்தைகளை ஹைலைட் செய்துள்ளார்கள்.கவிஷாலினி பாடலை பாடியுள்ளார். ஸரூடியோ வர்ஷனாக வெளியாகியிருக்கும் இப்பாடலில் குறும்படத்தின் சில காட்சிகளும் ஒளிபதிவாளர் நிரோஷ்ன் கைவண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வரோவின் இயக்கத்தில் படம் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு இசை கொழும்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இணையதமிழர் மாநாட்டின் சில சுவாரசியங்கள் புகைப்படங்களுடன்...வருகை தந்தேரில் ஒரு பகுதியினர்இடைவேளைஇனி சரவெடி.....யாழில் இணைய தமிழர் மாநாடு நடத்திமுடித்தது யாழ்ப்பாணத்திலிருக்கும் எழுத்தாளர்களினதும் பதிவர்களினதும் இளைய தலைமுறையினருக்கும் பயனுடையதாக யாத்ரா 2010 அமைந்தது இம்முயற்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி..இங்கு புகைப்படங்களில் முக்கிய நிகழ்வுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் அவற்றை கோபி வெற்றிகரமாக வழங்குவார்...விருந்தோம்பலின் போது பாத்தோம் மருதமூரான் அண்ணாவின் முகத்த
பதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.ஆறுமுகன்ஆறுபடையான்ஆறுனிபெருசா காசு கேக்கலாம்டா என்றான் ஆறுனிஒரு கோடி கேக்லாண்டா அத மூணா பிரிச்சிக்குவோம் என்றான் ஆறுபடையான்கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த ஆறுமுகன் சிறிது நேரத்திலேயே ஆறாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை அ
யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.பாதையின் குண்டுகுழிகள
'முக்கிய விடையம்' பற்றி பேசுவதற்கு முன் ஒரு மூன்று வருடத்திற்கு முந்தய சின்ன ஃப்ளஷ்'back'அப்போது தொழில் நிமிர்த்தமாக குளப்பிட்டி சந்தி பகுதியில் ஓர் வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த காலம்!எனது வீடு அருகிலிருந்ததால் நான் காலை கடன், குழியல் என்பவற்றுக்காக வீட்டுக்கு சென்று வருவதால் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தண்ணிவசதி செய்திருக்கவில்லை.வேலை முடிந்த மாலை வேளைகளில் அரட்டையடிப்போம் நமது அரட்டை குழுவில் இருந்த செந்தூரன் என்ற நண்பனால் அவனது நண்பன் 'சிவா' அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.சிவா வவுனியாவை சேர்
இயக்குனர் மெண்டிஸ் இயக்கத்தில் கவிமாறன் மற்றும் பலரது நடிப்பில் எனது எடிட்டிங் அன்ட் பின்னணி இசையில் உருவான குறும்படம் கரும்பலகை.கன்டிகேம் எனப்படும் கேமராவில் மிக நீ......ண்ட ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டு ஃப்ரேம் பை ஃபரேமாக வெட்டி இருபது நிமிட குறும்படமாக எடிட் செய்தோம். 2010ம் ஆண்டு வெளியவதற்கு சில நாட்களே இருந்தநிலையில் இரவு முழுவதும் சில நாட்கள் எடிட்டிங் அன்ட் பின்னணி இசை வேலைகள் தொடர்ந்தது. இது கவிமாறனின் முதலாவது சினிமா பிரவேசமாக அமைந்தது. (பின்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது திரைப்படத்