வணக்கம் நண்பர்ஸ்... இந்தப் பக்கம் ஞாபகம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருக்கிறேன். தூசு தட்டாமல் சில மாதம் கிடந்ததனால் உள்ளே நுழையும்போதே தும்மல் தான்... சமாளித்து வாருங்கள்... இதுவரை கடைசியாக எப்போது இடுகை ஒன்றை இட்டிருக்கிறேன் என்று தற்செயலாகக் கடந்த வாரம் பார்த்தபோது தான் என் வாழ்க்கை ஓட்டம் கடந்த மாதங்களாக எப்படி இருக்கிறது என்று உணர முடிந்தது. பல விஷயங்கள் விரைவாக, ...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி. ...
மரியான் - இறப்பு இல்லாதவன் என்று பெயர் வைத்ததிலிருந்து, இந்தியத் தேசிய விருது நடிகர் தனுஷ், இசைப்புயல் என்று ஏக எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இயக்குனர் பரத்பாலா இவ்விருவர் மீதே அதிக பாரத்தை ஏற்றி (குட்டி ரேவதி, ஜோ டீ க்ரூஸ் என்று சில அறிந்த 'சிந்தனையாளர்கள்' வேறு)வெகு சாதாரணமான ஒரு கதையை (சம்பவம் உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?) வெகு வெகு சாதாரணமாக இயக்கி, அறுசுவை விருந்தை ...
நேற்றைய நாள் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இந்த ஆண்டின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே நான் ஆதரிக்கும் அணிகளுக்கு வெற்றியாக முடிந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம். முதலில் ஆஸ்திரேலியா இந்தியாவை உருட்டித் தள்ளியது. அடுத்து இலங்கை தென் ஆபிரிக்காவை சுருட்டி எடுத்தது. இரண்டுமே ஒரு நாள் மீதம் இருக்கப் பெற்ற வெற்றிகள். நேற்று இலங்கைக்கு தென் ...
மார்ச் மாதத்தின் எனது ட்வீட்களின் தொகுப்பு.. ட்விட்டடொயிங் - Twitter Log கிரிக்கெட் சம்பந்தமாக ஆங்கிலத்திலேயே அதிகளவில் அரட்டுவது வழக்கம் என்பதனால் அதையெல்லாம் என் ட்விட்டரைத் தொடர்ந்து அறிந்துகொள்க; அல்லது தொடராமல் கழன்று கொள்க. ;) முற்பகல் செய்ததெல்லாம் பிற்பகலில் விளைகிறது; எந்தவொரு தாக்கத்துக்கும் மறு,எதிர்த் தாக்கம் நிச்சயம் இருக்கிறது. #life #lesson #experience 3 Mar 12 via ...
உலகக்கிண்ண நினைவுகளைப் பகிர்கிற நேரம், இரண்டு உலகக்கிண்ணங்கள் பற்றி மட்டும் நீண்ட, நினைவுகள் இருக்கு. 1996 & 2011. இரண்டும் இலங்கையில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகள். இலங்கை வென்றது ஒன்று, வெல்வதற்குக் கிட்ட வந்து இன்றும் மனம் கொள்ளா சோகம் தரும் 2011 மற்றது. 1996ஆம் ஆண்டின் உலகக்கிண்ணத்தின் பெருமித நினைவுகளைப் பகிர்ந்த தமிழ் விஸ்டன் கட்டுரை இது. 1996 !!! எந்தவொரு இலங்கை ...
'சாதனைகளின் புதிய பெயர் சங்கா' என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையை இன்னும் கொஞ்சம் புதிய மேலதிக சேர்க்கைகளுடன் இங்கே தருகிறேன். --------------------- நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம் சங்கா கிண்ணம் என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம். கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் ...
சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு... இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு... இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன். உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் ...
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு.... ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனி என்று எதிர்வு கூறியிருந்த நான் உட்பட ஏராளமானோருக்கு விக்கிரமாதித்தன் மாபெரும் அதிர்ச்சியை இத்தாலியின் மரியோ பலோடேல்லி கொடுத்திருந்தார். ஜெர்மனியின் வெளியேற்றம் ஒரு மிக வித்தியாசமான இறுதிப் போட்டியைக் கொடுத்துள்ளது. இதுவரை முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டிகள் எவற்றிலும் ஒன்றையொன்று சந்தித்திராத இரு அணிகள் ...
கோ தந்த பிரமிப்பு + திருப்திக்குப் பிறகு வரும் ஜீவாவின் படம் என்பதால் எதிர்பார்ப்போடு காத்திருந்த படம். பாரதியின் புதிய ஆத்திசூடியின் "ரௌத்திரம் பழகு" என்பது எப்போதும் என மனதுக்கு மிக நெருக்கமான வாசகம் என்பதும் திரைப்படம் பற்றிக் கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.(வேலைப்பளு மிகுந்த கடந்த வாரங்களால் ஒசியாகப் பார்க்கக் கிடைத்தும் பிளையார் தெரு கடைசி வீடு, மார்க்கண்டேயா மிஸ் ஆனதில் ஆறுதல்) தன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவன் பொங்கியெழும் ரௌத்திரம் தேவையானது என்று
மீண்டும் ஒரு தடவை நான் சொன்னது நடந்தது. பாகிஸ்தான் அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டு தோற்கும் ஒரு அணி என்பது மீண்டும் புலனாகியுள்ளது. கஷ்டப்பட்டு பந்துவீச்சாளர்கள் எடுத்துத் தந்த ஒரு அருமையான வாய்ப்பைப் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மூலம் வீணாக்கி, இப்போது அரையிறுதி வாய்ப்பை அநேகமாக இழந்து நிற்கிறது. தென் ஆபிரிக்க அணி தனது முக்கிய, அனுபவம் வாய்ந்த வீரர்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் ...
இதுவரை நடைபெற்ற 10 உலகக்கிண்ணங்களில் நான் பார்த்த, அனுபவரீதியாக கேட்டு, அறிந்த உலகக்கிண்ணத் தொடர்கள் பற்றி நான் தமிழ் விஸ்டன் இணையத்துக்காக எழுதும் தொடர் கட்டுரையின் முதல் பாகம்... ---------------- உலகக்கிண்ணங்கள் என்றவுடனேயே முன்னோட்டங்கள், ஊகங்கள் எப்படியும் எழுதுவதுண்டு. தமிழ் விஸ்டனில் கொஞ்சம் வித்தியாசமாக இம்முறை முயலலாம் என்று எண்ணியபோது ஊக்கம் தந்த நண்பர் - தமிழ் விஸ்டன் ஆசிரியர் ...
மீண்டும் தொடர்ச்சியாக எழுதும் ஒரு உத்வேகம் கிடைத்திருப்பதால் உலக T 20 - அரையிறுதிகளுக்கு முன்பாக... என்ற தலைப்பில் ஒரு வருட இடைவெளியின் பின் மீண்டும் தமிழ் மிரருக்கும், தமிழ் விஸ்டனுக்கும் எழுதியுள்ள கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட இடுகை. போட்டிகளை நடாத்தும் நாடாகவும், இம்முறை உலக T20 கிண்ணத்தை வெல்லக்கூடிய வாய்ப்பை அதிகளவில் கொண்ட நாடாகவும் கருதப்படும் இந்தியாவுடன், தத்தம் ...
இதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி.... இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது. இந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ஐக்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான ...
நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல். இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாரா
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இருக்க, நேற்று நடந்த போட்டி குறைவான ஓட்டங்களை இரு அணிகளும் பெற்று வெற்றிக்காக இழுபறிப்பட்ட போட்டியாக அமைந்தது. ஒரு நாள் போட்டிகளுக்கான தோதான, தரமான, சமயோசிதமான பந்துவீச்சாளர்கள் நிறைந்த இரு அணிகளும் விளையாடிய போட்டி என்பதால் துடுப்பாட்ட வீரர்களுக்கு இத்தகைய சவால் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. ...
அண்மையில் நாம் வாழும் சமூகம் எத்தகையது என்று அருவருப்பும், வெறுப்பும், கொஞ்சம் அச்சமும் கொள்ள வைத்த ஒரு நிகழ்வு கிருலப்பனையில் இடம்பெற்ற சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவும் கொலையும். எதுவும் அறியாத ஏழு வயது சிறுமி.. அதுவும் உறவுக்கார இளைஞர்களால். எப்படிப்பட்ட ஒரு இழிவான, வக்கிரமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அதைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ...
சிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்? இரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான். ஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக. மணிகண்டன் ...
இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட். ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும். (விக்கிரமாதித்தன் இங்கே ...
இன்றைய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தெரிவு தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கரா? இல்லை இரு ஷர்மாக்களில் ஒருவரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் இருந்த நேரம் இந்தியா மூன்று மாற்றங்களை செய்தும் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. புவனேஷ் குமாரின் இடத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா - ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகம் என்பதால் நேரடித் தெரிவாக இருந்தார். ...