(Freedom Trophy - நெல்சன் மண்டேலா - மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தக் கிண்ணத்தை மீட்கும் அணித் தலைவருக்கான சிறைவைக்கப்பட்டிருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ள வடிவம் என்னைக் கவர்ந்துள்ளது) தென் ஆபிரிக்கா தனக்கு சாதகமாக புற்கள் மேவிக்கிடக்கும் ஆடுகளத்தைத் தயார் செய்து, நாணய சுழற்சியிலும் வென்று துடுப்பாட்டத்துக்கு சாதகமான முதல் இரு நாட்கள் துடுப்பெடுத்தாட ...
இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா? என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு... எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. ...
பிலிப் ஹியூஸின் திடீர் மரணம் !!! கிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள். வெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும். ஹியூஸின் ...
முன்னெச்சரிக்கை : மிக நீளமான பதிவு. கிரிக்கெட்டில், அதிலும் இலங்கை கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். குறிப்பு : போட்டி ஆரம்பிக்க முதல் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் கடைசிவரையும் நீடித்த அத்தியாவசியமான கடமைகள் இப்போது தான் வழிவிட்டன. அதுவும் நல்லதுக்குத் தான்.. இப்படிப்பட்ட இலங்கை அணியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ------ வங்கப் புலிகளின் சுழல் ...
நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :) எனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது?? மங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்.. ஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது. ...
ஊடக, இணையப் பேட்டிகளில் அடிக்கடி இயக்குனர் A.R.முருகதாசும், இளைய தளபதி விஜயும் "இது வழக்கத்திலிருந்து வித்தியாசம்; ஒரு முற்றிலும் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்... 'என்னத்த வித்தியாசமா' என்று ஆயாசப் பட்டவர்கள் ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். ஆனால் சொன்னது போலவே செய்து காட்டியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள். வழமையான தமிழ்க் ...
இமானின் இசையில் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு " பாடல் பற்றி சிலாகிக்காதோர் கிடையாது. கடந்த வார இறுதிகளில் தான் இந்தப் பாடலோடு முழுமையாக மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது. கானா.பிரபா அண்ணன் முழுமையாக இந்தப் பாடல் பற்றி முத்துக்குளித்த பிறகு, அந்த ரசனை அப்படியே நான் பெற்ற உணர்வை மொழிபெயர்த்து இருக்கையில் புதுசா என்ன சொல்ல இருக்கு? கேட்டதில் ...
உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்.... கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே என்று கேட்டு ...
'ஐ' பாடல்களின் Track listஐ இயக்குனர் ஷங்கர் வெளியிட்டபோதே நான் Facebook இல் இட்ட பதிவு.. வைரமுத்து இல்லை கார்க்கியின் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' மீதும்,சிட் ஸ்ரீராமின் முன்னைய 'கடல்' ஹிட் 'அடியே'க்காக கபிலன் எழுதியுள்ள என்னோடு நீ இருந்தால் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு..நம்ம A.R. Rahman ஏமாற்றமாட்டார் என்று நம்புவோம்..இது சர்வதேச இசைப்புயலாக இல்லாமல், ஷங்கர் பட ரஹ்மானாக வருவார் ...
இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம். ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஓட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் ...
B பிரிவுகளின் அணிகளின் அலசலாக ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையுடன், மேலதிகமாக சில விடயங்களை சேர்த்து இடும் பதிவு இது. உலகக்கிண்ணத்தில் நான்கு நாட்கள் முடிந்திருக்கின்றன. 6 போட்டிகள் - நியூசீலாந்து மட்டுமே இரு போட்டிகளை விளையாடியிருக்கின்றது. ஒரு டெஸ்ட் விளையாடும் அணி, டெஸ்ட் அந்தஸ்தில்லாத சிறிய அணியிடம் தோல்வியுற்ற அதிர்ச்சி முடிவு. அதுவும் 300க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கைத் துரத்தி ...
எனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.. வானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்.. அதிகமாக சினிமா இசை தான்.. அந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள
உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் 6 வாரங்கள்.. அல்லது மேலும் சரியாக சொல்வதாக இருந்தால் 41 நாட்கள். இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ள 14 அணிகளில் இதுவரை ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளன. இரு பிரிவுகள், தலா ஏழு அணிகள்.. எல்லா அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணிகளை எதிர்வரும் 7ஆம் ...
மோடி அலை இன்னும் ஓயவில்லைத் தான் ;) நமோ சுனாமி அலை அடித்து வென்று, கொண்டாடி, பலரையும் அழைத்து, பதவியும் ஏற்றாச்சு. இந்தியாவில் மோடியின் பெரு வெற்றி இந்தியர்களுக்குக் கொடுத்த உற்சாகத்தை விட எம்மவர்கள் பலருக்குக் கொடுத்த புளகாங்கிதம் பென்னாம்பெரிசு. ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பீலிங்கு. பழிவாங்குதல் பிரதானம்.. ஊழ்வினை உறுத்துது பாருங்கோ. மனதின் அடியில் கிடக்கும் ஒருவித கோபமும் வெறியும் (அது ...
படம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன.. எனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள். கொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்.. அது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு ...
இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்குப் பிறந்த எங்கள் தலைமுறையினர் எல்லாருக்குமே சாதாரண சட்டத்துக்கும் அவசரகால சட்டத்துக்கும் (Emergency Regulations) இடையில் வித்தியாசம் தெரிந்திராது. இதுவே இலங்கையின் சட்டங்களின் நிலையாகிப் போனது. அவசரகால சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவே சர்வதேசத்தில் பிறப்பிக்கப்படும் என்று சட்டங்கள் பற்றி நாம் படித்துள்ளோம்.. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமாக இலங்கை சுதந்திரம் அடையும் போது உருவாக்கப்பட்ட பொதுவான சட்டம் (Public Security Ordinance) 1953இலேயே மக்கள் உள்ளுராட்சி மன்றங்களு
இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்) அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty ...
சில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மித்திச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்.. ராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு. அழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்.. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் ...
முதலாவது அரையிறுதி - நியூ சீலாந்து எதிர் தென் ஆபிரிக்கா என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையினை சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்... எழுதும் நேரம் 24ஆம் திகதி செவ்வாய் அதிகாலை ஆகியிருப்பதால், இன்று, நாளை குழப்பத்தைத் தவிர்க்குகக.. --------------------- உலகக்கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி.. நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா இந்த இரு அணிகளும் ...
என்ன தான் நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் பக்தர்களாக இருந்தாலும், உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடர் ஆரம்பிக்கிறது என்றவுடன் அது ஒரு திருவிழா உணர்வைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது. உலகத்தில் அதிக ரசிகர்கள் கால்பந்துக்குத் தான். இலங்கையைப் பொறுத்தவரை ஏழை மகனின் விளையாட்டு இது. கால்பந்தை விளையாடுவதற்கு சாதாரணமாக ஒருவருக்கு ஒரு பந்து மட்டுமே போதும். ஆனாலும் இலங்கையிலும் இந்தியாவைப் போலவே கால்பந்துக்கு ...